Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓதியமலை சுற்றிவளைப்பு தமிழரின் காணிகளை அபகரிக்க சிங்களவர்கள் முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் ஒதியமலைப் பகுதியல் உள்ள தமிழ் மக்களின் காணிநிலங்களை அபகரிப்பதற்காக அப் பகுதியை சிங்களவர்கள் சுற்றிவளைத்துள்ளனர்.

தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்த பூர்வீக நிலப்பகுதி ஒதியமலை. இந்தப் பகுதியிலிருந்து 1982ஆம் ஆண்டில் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் 2010ஆம் ஆண்டில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர்.

இப் பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டபோதும் சுமார் 200 ஏக்கர் வயல் நிலப்பகுதியை மக்களுக்கு வழங்காமல் இராணுவத்தினர் கையப்படுத்தி வைத்திருந்தனர். தமது வயல் நிலங்களை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து கோரி வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்தப் பகுதியில் குடியேற்றப்படடும் நோக்குடன் சிங்களவர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழ் மக்களின் பூர்வீக வயல்நிலங்களில் இராணுவததின் பாதுகாப்புடன் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர்.

தற்பொழுது அந்த நிலங்களில் குடியேற முற்படுவதனால் இந்த நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நிலங்கள் தமக்குச் சொந்தமானவை என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாம் உற்பத்தியாக்கிய பனை மரங்கள் முதல் தமது உழைப்பால் உருவாக்கப்பட்ட நிலமே அதற்கு ஆதாரம் என்றும் குறிப்பிடும் ஒதியமலை மக்கள் தமது நிலத்தில் யாரும்  குடியேற அனுமதிக்கப் போவதில்லை என்று குறிப்பிடுகின்றனர்.

சிங்கள மக்களுக்கு தெற்கில் நிலங்களும் வளமும் உள்ள பொழுது தமது நிலத்தை ஏன் அபகரிக்க வருகின்றனர் என்று ஒதியமலை மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமது நிலத்தை அபகரிக்க இராணுவத்தினரும் அரசுமே சிங்கள மக்களை இவ்வாறு நில அபகரிப்பு ஊக்கப்படுத்தியிருப்பதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.  

இதனைப் புரிந்துகொண்டு சிங்கள மக்கள் தமது நிலத்தை அபகரிக்காமல் அப்பகுதியை விட்டு வெளியேறி தமது பகுதிகளுக்குச் சென்று வாசிக்க வேண்டும் என்றும் விநயமாகவும் மனிதாபிமானமாகவும் கோருவதாக ஒதியமலை மக்கள் குறிப்பிடுகின்றனர்.

30 வருடங்களுக்கு மேலாக போரினால் இடம்பெயர்ந்து சொல்லணாத் துன்பங்களை அனுபவித்த மீண்டதாகக் குறிப்பிடும் ஒதியமலை மக்கள் தமத்திடம் எஞ்சியுள்ள நிலத்தையும் அபகரிக்க வேண்டாம் என்றும் கோருகின்றனர்.

தமிழ் அரசியல் தலைவர்களும் சர்வதேசமும் தமது நிலத்தை அபகரிக்கும் முயற்சியை தடுக்க வேண்டும் என்றும் ஒதியமலைப் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

ஒதியமலையிலிருந்து குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98687/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.