Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோதல் தவிர்ப்பு - சர்வதேச சமூகத்திற்கு புலிகள் செய்தி

Featured Replies

வடபோர் முனையில் சிறீலங்கா இராணுவத்தினரால் வலிந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதனை புலிகள் முறியடித்து இராவத்தினரின் முன்னணி நிலைகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

தற்பொழுது மோதல்கள் தணிந்திருப்பதாகக் கூறப்படுகின்றபோதும் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளிடம் இழந்த பகுதிகளை மீளக் கைப்பற்றுவதற்கு தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப் போவதாக சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது.

53..54... சிறப்பு படையணி...

பல்குழல் எறிகணை....கிபீர்..

எல்லாமும் இருக்கிறது...

ஆனால்...அதிகாரிகள் விட்டால் ஓடி ஒளிந்துவிடும் நிலமையில்...

மகிந்த விட்டால்

அதிகாரிகளே ஓடிவிடுவார்கள்....

காசுக்கும்..பதவிக்கும்...ஆசை

காடாறு மாதம்...வீடாறு மாதம்

நம் வாழ்க்கை

பலி கொள்ளல் தானே நம் வேலை -புலி

யாலேதான் சாப்போறோம் நாளை

கொட்டியா கொட்டியா கொட்டியா-பாவி

மகிந்தா புடிச்சுருக்கானே கெட்டியா...

வடக்கு கிழக்கில் அரச படைகளிற்கும் விடுதலைப் புலிகளிற்கும் இடையே தீவிரமாக இடம்பெற்றுவரும் மோதல்களினால் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கொழும்பிலுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளிற்கு இன்று விரிவான விளக்கத்தினை அளித்திருக்கிறார்.

இது குறித்து ஜனாதிபதி அலுவலகம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இன்றைய தினம் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பின் போது ஜனாதிபதி ராஜபக்க்ஷவின் அரசாங்கமானது வலிந்து எவ்விதமான தாக்குதலில் ஈடுபடவில்லை என்றும் மாறாக விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களிற்கு எதிராகத் தற்காப்புத் தாக்குதல்களில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றது என்றும் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

தனது அரசானது யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கும், சமாதானப் பேச்சுக்களுக்கும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்தும், ஏனைய அடிப்படைவிடயங்கள் குறித்தும் கலந்துரையாட விடுதலைப் புலிகள் பேச்சுக்களிற்குத் திரும்பும் வரைக்கும் காத்திருப்பதாகவும், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் முன்வைக்கப்படக்கூடிய ஒரு உறுதியான, தெளிவான, அர்ப்பணிப்புடனான மோதல் தவிர்ப்பினை தனது அரசு சிரத்தையுடன் பரிசீலிக்கத்தயாராக இருப்பதாகவும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் அவ்வாறானதொரு மோதல் தவிர்ப்பானது யுத்த நிறுத்ததிற்கு முரணாக சம்பூர்ப் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் பிரசன்னத்தினால் திருகோணமலைத் துறைமுகத்திற்கும் அதனைச்சூழவுள்ள பகுதிகளிற்கும் அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்பதனைத் தெளிவாக விளக்கக்கூடிய செயற்பாட்டினைக் கொண்டிருப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி ராஜபக்க்ஷ இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச சமூகத்திடம் விடுதலைப் புலிகள் முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளனதாக கொழும்புச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் நோர்வே ஊடாக இத்தகவலை அனுப்பியுள்ளதாக அறியமுடிகிறது.

வடக்கு கிழக்கில் தற்காப்பின் நிமிர்த்தம் விடுதலைப் புலிகள் சில தாக்குதல்களை நடத்தியதாகவும் சிறீலங்கா படையினர் அனைத்து வலிந்த தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்படுமாயின் தாமும் தாக்குதல்களை நிறுத்தத் தயார் என விடுதலை புலிகள் தெரிவித்துள்ளதாகவும் அத்தகவல் தெரிவிக்கின்றது. எனினும் இதனை சுயாதீமாக உறுதி செய்யமுடியவில்லை.

pathivu.com

சமாதானத்தில் அரசு கொண்டிருக்கும் நம்பிக்கையில் கடுகளவும் மாற்றம் இல்லை

சமாதானத்திற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. சமாதானம் மீதான அரசாங்கத்தின் நம்பிக்கை சற்றும் குறைவடையவில்லை.

ஆனால் அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பாக கிடைக்கும் பதில்கள் திருப்திகரமானதாக இல்லை என்று அரச சமாதான செயலகத்தின் செயலாளர் பாலித கோஹன தெரிவித்தார். சமாதான செயற்பாடுகளின் எதிர்காலம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது.

சமாதான செயற்பாடுகளில் அரசாங்கம் முழுமையான நம்பிக்கையை வைத்துள்ளது. அது எப்போதும் மாறாது. பேச்சுவார்த்தைகளை எந்த நிமிடத்திலும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

:):D :P :P :P என்ன நக்கலா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது நடைபெற்றுவரும் சண்டையை நிறுத்துவதற்கு விடுதலைப் புலிகளால் முன்வைக் கப் படக்கூடிய மோதல் தவிர்ப்பு யோசனை எத னையும் சிரத்தையுடன் பரிசீலிக்கத் தமது அரசு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தெரிவித்திருக்கிறார்.

அத்தகைய யோசனை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் உறுதி யான தெளிவான அர்ப்பணிப்புடன் கூடிய வகையில் முன்வைக்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

நேற்று தம்மைச் சந்தித்த இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளிடமே ஜனாதிபதி இத னைத் தெரிவித்தார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கின்றது.

இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப் பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளே நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித் தனர்.

நாட்டின் வடபகுதியில் நடைபெற்றுவரும் மோதல்களால், அந்தப் பகுதி நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பது குறித்தும், அங்கு உருவாகிவரும் மனிதாபிமான நெருக்கடி நிலைமை பற்றி

யும் அவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையா டினர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச் சர் மங்கள சமரவீரவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இந்தச் சந்திப்பின்போது இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி வலியுறுத்திக் கூறிய விடயங்களை ஜனாதி பதி செயலகம் வெளியிட்டுள்ளது. நேற்று மாலை விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரி விக்கப்பட்டிருப்பதாவது:

அரசாங்கம் வலிந்து எந்தவிதமான தாக்குதல்களிலும் ஈடுபடவில்லை. விடு தலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக் குதல்களுக்கு எதிராக தற்காப்புத் தாக்குதல்களிலேயே அரச படைகள் ஈடுபட்டு வருகின்றன.

அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக் கைக்கும், சமாதானப் பேச்சுக்கும் அர்ப் பணிப்புடன் உள்ளது. யுத்த நிறுத்த உடன் படிக்கை குறித்தும் எனைய அடிப்படை விடயங்கள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக விடுதலைப் புலிகள் பேச்சுக்குத் திரும் பும்வரை காத்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனால் முன்வைக்கக்கூடிய ஓர் உறுதியான தெளிவான அர்ப்பணிப்புடனான மோதல் தவிர்ப்பினை அரசு சிரத் தையுடன் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது.

இவ்வாறான ஒரு மோதல் தவிர்ப்பானது யுத்த நிறுத்தத்துக்கு முரணாக சம்பூர் பகுதி களில் விடுதலைப் புலிகளின் பிரசன்னத் தால் திருகோணமலைத் துறைமுகத்துக்கும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் அச்சுறுத் தல் ஏதும் இல்லை என்பதனைத் தெளிவாக விளக்கக்கூடிய செயற்பாட்டினைக் கொண்டிருப்பது அவசியம் என்று இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவித்தார் என ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு : newstamilnet.com

வாவ்..வொணடர்ஃபுள் நியூஸ்.. சமாதானத்துக்கான பாதை திறந்திருக்கு எண்ட பதில் நியூஸ்தானே..

ஏ9 திறக்கிறதா தெரியேல்லை.. உணவு அத்தியாவசிய பொருட்கள் கப்பலிலை போகுது.. பத்தாததுக்கு இந்தியாவிலையிருந்து இறக்குமதிசெய்ய அனுமதியும் வழங்கப்பட்டிருக்கு.. போற போக்கைப்பார்த்தால் சமாதானம் தூரத்திலை இல்லை..

:idea:

பளைப் பகுதியில் கிபிர் விமானங்கள் குண்டு வீச்சு.

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான பளைப் பகுதியில் சிறீலங்கா விமானப் படையினரின் கிபிர் விமானங்கள் குண்டு வீசியுள்ளன.

இன்று முற்பகல் 11 மணியளவில் இக்குண்டு வீச்சுகள் கிபிர் விமானங்கள் நடத்தியுள்ளன. இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

pathivu.com

சிறீலங்கா அரசு தொடர்ந்து யுத்தத்தை முன்னெடுக்க...புலிகளை மட்டும் சர்வதேசமும்...இராஜதந்திரமும்..

யுத்த நிறுத்ததுக்கு வற்புறுத்துவதன் நோக்கம் தான் என்ன..?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

`இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதால் கொதித்துப் போயிருக்கும் தமிழகச் சூழ்நிலை அறிந்து செயற்படுங்கள்'

[22 - ஆஉகுச்ட் - 2006] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

தமிழக சட்டசபை இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்து வரும் இலங்கை அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்காக தமிழக முதல்வரையும் அனைத்துக் கட்சியினரையும் உலகத் தமிழர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வேளை இத்தீர்மானத்தைக் கண்டித்து நீங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை தேவையற்றதாகும். ஷ்ரீலங்கா அரசு நடத்தி வரும் பயங்கரவாதச் செயல்களை மறைக்க முற்பட்டிருப்பதையுமே காட்டுகிறது.

இதுகாலம் எந்த ஒரு சூழ்நிலையிலும் இப்படி சென்னைத் தூதரகம் அறிக்கை வெளியிட்டதில்லை. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நீங்கள் உங்கள் தூதரகப் பழைய குறிப்புகளைக் கண்டு தெளிவடையலாம்.

எனினும், உங்கள் அரசின் சார்பில் நீங்கள் வெளியிட்டுள்ள தவறான கருத்துகளைக் கண்டித்து கீழ்க்காணும் விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

இத்தீர்மானம் ஊகங்களின் திருத்திக் கூறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் அமைந்ததாக தெரிவிப்பது தவறாகும். இன்று இலங்கையில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (ஊணீCஏF) போன்ற பல உதவி அமைப்புகளும், நோர்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் அடங்கிய ஷ்ரீலங்கா பார்வையாளர் குழுவும் (ஸ்ள்MM) மற்றும் உலக பத்திரிகையாளர்கள், பல நாட்டுத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அவைகள் மூலம் உண்மை நிலையினை கண்டறிந்தே ஐ.நா.பொதுச் செயலாளர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அனாதைக் காப்பகம், ஆயுதப் பயிற்சி இடம் என்பது வடிகட்டிய பொய்யாகும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நேரடிப் பார்வையில், 15 ஆண்டுகாலப் போரினால் அநாதையாக்கப்பட்டிருக்கும் ஆண்கள் காப்பகமான காந்தரூபன் அறிவுச்சோலையும் பெண்கள் இருக்கும் காப்பகமான செஞ்சோலையும் உள்ளன. முழுக்க, முழுக்க பெண்கள், அதுவும் 1 வயது முதல் 15 வரை எட்டியுள்ளவர்களான 100 பெண்கள் தான் செஞ்சோலையில் இருந்து வந்தனர். அங்கு நடந்த முதல் உதவி முகாமிற்கு 500 பெண்கள் வந்துள்ளதை, ஆளில்லாமல் படம் எடுத்துத் தரும் விமானம் மூலம் அறிந்து, திட்டமிட்டே ஷ்ரீலங்கா இராணுவம் இத்தாக்குதலை நடத்தியுள்ளது. அது குறிப்பாக தலைவர் பிரபாகரனுடன் அன்புடன் பழகிய குழந்தைகளைக் கொன்று வெறிபிடித்த இனவெறியை வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்தக் காப்பகம் இராணுவ பயிற்சியிடம் அல்ல என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமும் (ஊணீCஏF), ஷ்ரீலங்கா பார்வையாளர் குழு (ஸ்ரி ளன்கன் Mஒனிடொரிங் Mஇச்சிஒன்) (ஸ்ள்MM) ஆகியவை தெளிவாகத் தெரிவித்துள்ளன. "அதுமட்டுமல்ல அந்தப் பகுதி மாவட்ட ஆட்சியர் கீழ் பணியாற்றும் உங்கள் அரசின் கிராமசேவகரே பயிற்சி முகாம் அல்ல என்று தெரிவித்ததோடு "ஐ.நா. அமைப்புகளின் பல்வேறு பயிற்சி முகாம்கள் இந்த காப்பகத்தில் நடந்துள்ளன" என்றும் குறிப்பிட்டுள்ளார். தங்கள் அரசின் ஒளிநாடாவைப் பார்த்தவர்கள் "அது பல மைல்கள் உயரத்தில் பறந்த விமானத்தில், எந்த இடத்தையோ படம் எடுத்துக் காட்டுகிறது" என்கிறார்கள். அதுமட்டுமல்ல, நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹேய்ம் ஒளிநாடாவை நிராகரித்துள்ளார்கள்.

காப்பகத்தில் முழுவதும் சிறுமிகளின் இறந்த பிணக்குவியல் சோகக்காட்சிப் படங்கள் உலகத்தின் கண்ணீர் காட்சியாகி உள்ளது. இவ்வேளை "இராணுவ பயிற்சி பெற்றவர்களில் குறைந்த வயது உடையவர்களும் இருந்திருக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளது. மிகுந்த வேதனையிலும், ஆளாத்துயரிலும் இருக்கும் உலகத் தமிழர் சமுதாயத்தின் ஆழ்ந்த சோகத்தை களங்கப்படுத்தியதாகும்.

இத்தாக்குதல் நிர்ப்பந்தத்தில் நடந்தது என்பது இன்று இலங்கை அரசின் பின் நின்று நடத்தும் சிங்கள இன வெறிக்கட்சி ஜே.வி.பி.யும் பௌத்த பிக்குகளின் அரசியல் கட்சியான ஜாதிக ஹெல உறுமய (JHஊ) ஆகியவற்றைத் திருப்திப்படுத்தும் நிர்ப்பந்தமா? அவர்கள் போர் நடத்தி தமிழர்களை ஒழிக்க நிர்ப்பந்திக்கிறார்களா? அல்லது ஷ்ரீலங்கா அரசைக் கவிழ்க்க சதி செய்கிறார்களா? என்பதை உங்கள் அதிபர் புரிந்து கொள்ளும் காலம் வரும். இத்தீர்மானத்தை விடுதலைப் புலிகள் விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்கிறது உங்கள் அறிக்கை. "தமிழகமும், இந்தியாவும் இலங்கைத் தமிழருக்கு சரியான வகையில் முழு ஆதரவுக் கரம் நீட்டவில்லையே. நியாயமான தீர்வுக்கு இலங்கையை நிர்பந்திக்க வில்லையே" என வருந்தும் அவர்கள், இந்த தீர்மானத்தால் ஆறுதல் அடையலாமே தவிர விளம்பரப்படுத்திக் கொள்வார்கள் என்பது தமிழரை வெறுக்கும் உங்கள் வெளி உணர்வைத் தான் காட்டுகிறது.

நியாயமான பிரச்சினைக்கும், தனிநாட்டு கோரிக்கைக்கும் உள்ள வேற்றுமை பற்றி குறிப்பிடுகிறீர்கள்.

தனிநாட்டுக் கோரிக்கை எப்படி எழுந்தது? தந்தை செல்வா பிரதமர் பண்டார நாயக்கா ஒப்பந்தம் முதற்கொண்டு பிரதமர் ராஜீவ், அதிபர் ஜெயவர்தன ஒப்பந்தம் வரை பல உடன்பாடுகள் ஏற்பட்டு அதை சிங்கள அரசுகள் கிழித்துப் போட்டதாலேயே தான் "தமிழ் ஈழம்" கோரிக்கை தலை தூக்கி நிற்கிறது.

"தந்தை செல்வா - பண்டா ஒப்பந்தத்தை" ரத்து செய்ய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தன கண்டி யாத்திரை நடத்தி ஒப்பந்தத்தை எரித்தார். புத்த பிக்குகள் அந்த நாள் பிரதமர் பண்டார நாயக்கா இல்லம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 1957 ஜூலை 26 இல் கையெழுத்தான ஒப்பந்தம் அதே சிங்கள ஏகாதிபத்திய அரசால் கிழித்தெறியப்பட்டது.

இப்போது என்ன நிலைமை. உலக நாடுகள் அளித்த கடல்கோள் நிதி தமிழர் பகுதிகளுக்குப் போய் சேராததால் போராடி "கடல்கோள் பின்னரான நிர்வாக கூட்டமைப்பு" ஏற்பட்டது (PTஓMஸ் - Pஒச்ட் Tசுனமி ஓபெரடிஒன் Mஅனகெமென்ட் ஸ்ட்ருcடுரெ) அதன்மூலம் புலிகள் பிரதிநிதிகள் முக்கியத்துவம் பெற்று, அரசாங்கப் பிரதிநிதிகளுடன் இணைந்து கடல்கோள் நிவர்த்திப் பணி நடத்திட முடிவாகியது. இதை இயங்காமல் செய்ய உங்கள் அரசிற்கு ஆதரவான J.V.P. கட்சி உயர்நீதிமன்றத்தில் அந்த அமைப்பு செயல்படுவதைத் தடுக்கத் தடைவாங்கியது. 2005 ஜூனில் கண்டியில் புத்தபிக்குகள் உண்ணாவிரதம் இருந்தனர். விளைவு, கடல்கோள் பணிகள் தமிழர் பகுதிகளில் நடைபெறுவது தடைப்பட்டது. யுத்த நிறுத்தம் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 இல் ஏற்பட்டது. 2003 அக்டோபர் 31 இல் (ஈன்டெரிம் செல்f கொவெர்னிங் ஆஉதொரிட்ய்) அதிகாரசபை (ஈஸ்Gஆ) எனும் தீர்வுத் திட்டத்தை புலிகள் பிரதமர் ரணிலுக்கு நோர்வே பிரதிநிதிகள் மூலம் முன்வைத்தனர். அதை அளித்த 72 மணிநேரத்தில் ஜனாதிபதி சந்திரிகா, ரணில் ஆட்சியின் மூன்று முக்கிய பொறுப்புகளான இராணுவம், உள்ளாட்சி, ஊடகத்துறை ஆகியவைகளைத் தன்வசப்படுத்தி, அரசை செயலிழக்கச் செய்தார். அத்தோடு 225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 140 பேர் பெரும்பான்மையில் இருந்த ரணில் அரசைக் கலைத்துத் தேர்தலுக்கு உத்தரவிட்டார்.

காலம் காலமாய் சிங்களவர்கள் இரண்டு அணிகளாக இருந்து ஒரு கட்சி தீர்விற்கு ஒப்பந்தம் போடுவதும், மற்ற கட்சி அதை எதிர்த்து அழிப்பதுமான செயற்பாடுகளை அல்லவா சிங்கள ஏகாதிபத்திய ஆட்சிகள் நடத்திக் கொண்டு வருகின்றன.

தலைவர் பழ.நெடுமாறன் உங்களுடன் நடத்திய நேரடி விவாதத்தில் குறிப்பிட்டார். "ஒரு தீர்வை ஏற்க தமிழர்கள் சார்பில் முழு பிரதிநிதியாக தலைவர் பிரபாகரன் இருக்கிறார். சிங்களவர் தரப்பில் அப்படி ஒருவர் இல்லையே" என்றார். அதைத் தனிப்பட்ட முறையில் தாங்கள் "உண்மைதான்" என்று ஒத்துக் கொண்டீர்களே அதுவே போதுமானதாகும்.

நீங்கள் கூறும் இறையாண்மை என்பது பௌத்த சிங்கள ஏகாதிபத்தியத்தை நிறுவுவது தானே. இலங்கையுடன் இந்தியா செய்த ஒப்பந்தத்தால் 18 ஆண்டு காலமாக இலங்கைத் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு இலங்கைத் தமிழ் பகுதிகள் ஒரு பகுதியாக தற்காலிகமாக இயங்கிவருகின்றன. அதைக் கூட ரத்து செய்ய J.V.P. உச்ச நீதிமன்றத்தின் துணையை நாடியுள்ளது.

சிங்கள அரசின் இனவாத அரசியலின் முதல் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் இந்தியா வம்சாவளித் தமிழர்கள் தானே! இலங்கை 1948 பெப்ரவரி 4 இல் சுதந்திரம் பெற்றது. 1948 ஆகஸ்ட் 20 ஆம் நாள் "இலங்கை குடியுரிமை சட்டம்" என்ற பெயரால் 10 இலட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். உலகில் எங்கும் நடந்திடாத ஜனநாயகப் படுகொலை சிங்கள ஏகாதிபத்திய அரசால் நடத்தப்பட்டது. தமிழர்கள் தாம் வாழ்ந்த நாட்டிலேயே அகதிகள் ஆக்கப்பட்டனர். அந்தத் தமிழர்களின் இதயமான தமிழக சட்டமன்றத்தில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றியது கூட சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு தாங்க முடியவில்லை என்பதைத் தான் உங்கள் தூதரகம் மூலம் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. இன்று போர் எழுந்தது ஏன்? மாவிலாறு மதகை பொதுமக்கள் வேண்டுகோளின் படி புலிகள் பூட்டியதால் தானா?

ஏன் தண்ணீர் திறந்துவிட மறுத்தார்கள்? புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ஆசிஅன் Dஎவெலொப்மென்ட் Bஅன்க்) செயல்படுத்தவிருந்த குடிநீர் திட்டத்தை அனுமதிக்க முடியாது என வடக்கு, கிழக்கு ஆளுநராக தற்போது இருக்கும் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி கூறினார். அதற்கு எதிர்ப்பாகவும், கடந்த ஏப்ரல் 25 முதல் புலிகள் பகுதியில் வாழும் மக்களுக்கு செல்லும் உணவு விநியோகத்தை இராணுவம் தடைப்படுத்தியதாலும், புலிகள் பகுதியில் வாழும் தமிழர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் சென்று திரும்பும் வேளைகளில் இராணுவக் கெடுபிடிகளுக்கு ஆளாவதைத் தடுக்க என மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, பொதுமக்கள் மாவிலாறு மதகை மூட புலிகளை கேட்டுக் கொண்டனர்.

தமிழ் பேசும் இந்துக்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் வாழ்ந்த கிராமங்கள் அடங்கிய இப்பகுதியில் நல்லிணக்கம் ஏற்படுத்த ஒரு புத்தபிக்கு முயன்றார். அவர் ஒரு சமரச தீர்வைத் தெரிவித்தார். அதைக் கண்காணிப்புக்குழு மூலம் அறிவிக்க திட்டமிட்டு, தமிழர் தலைவர்களுடன் வெருகல் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்துவதை மோப்பம் பிடித்து இலங்கை இராணுவம், அவர்கள் இருந்த இடத்தில் குண்டுமழை பொழிந்து அந்த ஏற்பாட்டிற்கு எதிர்ப்பைத் தெரிவித்தது. இதுவொன்றே சிங்கள அரசு அமைதியை விரும்பவில்லை, போர் வெறியில் அலைகிறது என்பதை உலகிற்குக் காட்டுவதாகும்.

உண்மையில், இலங்கைப் பிரச்சினையில் அரசியல் தீர்விற்கு இந்தியாவின் தமிழகத்தின் ஒத்துழைப்பை நாடுவீர்கள் என்றால் இதுபோன்ற அறிக்கையை தங்கள் துணைத் தூதரகம் வெளியிடும் தவறைச் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். முன்னர் மேற்கு வங்க முதல்வருக்கு அமெரிக்கத் தூதரக முதன்மைச் செயலாளர் கண்டனக் கடிதம் ஒன்று அனுப்பியது பெரும் பிரச்சினைக்கு உள்ளானது. தூதரக அதிகாரிகள் எதையும் இந்திய வெளியுறவு துறையிடமே தெரிவிக்க வேண்டும் என்ற அறிவுரை வழங்கப்பட்டது.

நாளும் இராமேஸ்வரத்தில், சிங்கள இராணுவக் கொடுமைகளில் இருந்து தப்பிவரும் அகதிகளைச் சந்தித்து, உங்கள் இராணுவம் செய்யும் அட்டூழியங்களை உங்கள் அரசுக்கு தெரிவிக்கும் தூதரகப் பணிகளைச் செய்யுங்கள். தாங்கள் புதியவர், பொறுப்பேற்றுள்ளீர்கள். உங்கள் அரசின் நிர்ப்பந்தத்தால் இந்த அறிக்கை வந்திருப்பினும் இலங்கை தமிழ்ப் படுகொலையில் கொதித்துப் போயிருக்கும் தமிழர் சூழ்நிலை அறிந்து செயல்படக் கேட்டுக் கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.