Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமலேஷ் சர்மாவின் கருத்துக்கு கனடா கடும் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கமலேஷ் சர்மாவின் கருத்துக்கு கனடா கடும் கண்டனம்:-
17 நவம்பர் 2013

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மாவின் கருத்துக்கு கனடா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க இலங்கை உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கமலேஷ் சர்மா அண்மையில் தெரிவித்திருந்தார்.

சர்மாவின் இலங்கை குறித்த கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கனடா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என கனடா தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல எனக் குறிப்பி;ட்டுள்ளது.

வடக்கில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சின் மனித உரிமை விவகாரச் செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம், நல்லாட்சி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பு கடமை தவறிச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகள் பின்பற்றப்படுகின்றனவா இல்லையா என்பதனை அமைப்பு உன்னிப்பாக கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பொதுநலவாய நாடுகள் அமைப்பு கடுமையான தீர்மானத்தை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கனடா புலிகளுக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99115/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.