Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரி­மைகள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்­லை­: கனடா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரி­மைகள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்­லை­: கனடா

மனித உரி­மைகள் விவ­கா­ரங்­களைக் கையாள்­வதில் இலங்கை அர­சாங்கம் போது­மா­ன­வற்றைச் செய்­துள்­ள­தா­கக்­கூறும் பொது­ந­ல­வாய செய­லாளர் நாயகம் கமலேஷ் ஷர்­மாவின் கருத்து ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தல்ல என கனடா சாடி­யுள்­ளது.
DeepakObhrai.jpg
கொழும்பில் நடை­பெற்ற பொது­ந­ல­வாய உச்சி மாநாட்டில் கன­டாவைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­யி­ருந்த கனே­டிய வெளி­வி­வ­கார மற்றும் சர்­வ­தேச மனித உரி­மைகள் விவ­கார செய­லாளர் தீபக் ஒப்ராய் கடந்த வாரம் வட­பு­லத்­திற்கு விஜயம் செய்­தி­ருந்­த­துடன் கடந்த கால மற்றும் தற்­கால நிலை­வரம் குறித்து அதி­ருப்தி கொண்­ட­வ­ரா­கவே கொழும்பு திரும்­பினார்.
 
கொழும்பில் இலங்­கைக்­கான கனே­டிய உயர் ஸ்தானி­கரின் வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்ற ஆங்­கில இணை­யத்­த­ள­மொன்­று­ட­னான நேர்­கா­ணலின் போது அவர் கருத்து வெளி­யி­டு­கையில், இலங்­கையில் மனித உரி­மைகள் விவ­கா­ரங்கள் குறித்து கனே­டிய அர­சாங்கம் தெளி­வான பெறு­பே­று­களைக் கண்­டு­கொள்­ளவே விரும்­பு­கின்­ற­தெ­னவும் இலங்கை அர­சினால் இது­வ­ரையில் அழ­கு­ப­டுத்தும் நட­வ­டிக்­கையே எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மனித உரி­மைகள் விவ­காரம் குறித்து போதி­ய­ளவு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்­லை­யெ­னவும் குறிப்­பிட்டார்.
 
இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், வட புலத்தைத் பொறுத்த வரையில் அங்கு ஜன­நா­யகம், சட்­ட­வாட்சி, ஊடக சுதந்­திரம் மற்றும் மத சுதந்­திரம் ஆகி­யவை சீர்­கெட்டுப் போயுள்­ளதை என்னால் தெளி­வாக அவ­தா­னிக்க முடிந்­தது. யாழ்ப்­பா­ணத்தில் உள்ள உதயன் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு நான் சென்­றி­ருந்த போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­ட­தையும் மேற்­படி ஊடக நிறு­வனம் தாக்­கப்­பட்­ட­தையும் காண்­பிக்கும் திகி­லூட்டும் படங்­களைப் பார்த்து அதிர்ச்­சி­ய­டைந்தேன். ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான தாக்­கு­தல்­க­ளுக்கு அப்பால், எம்மை மிகவும் கல­வ­ர­ம­டையச் செய்­வது யாதெனில் மேற்­படி கொலை­க­ளையும் தாக்­கு­தல்­க­ளையும் நிகழ்த்­தி­யோரை கைது செய்­வ­தற்கும் மக்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்­கு­வ­தற்கும் எது­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வே­யில்லை என்­ப­துதான். பொது­ந­ல­வாயக் கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் உண்­மை­யான ெபறு­பே­று­களைக் காண முடி­ய­வில்­லை­யென்­பதை இத்­த­கைய நிகழ்­வு­களே சான்­றுப்­ப­டுத்­து­கின்­றன என நாம் கூறு­கின்றோம் என்றார்.
 
எவ்­வா­றி­ருப்­பினும் பொது­ந­ல­வாய அமைப்பின் செய­லாளர் கமலேஷ் ஷர்மா இதனை வேறு­வி­த­மாக பார்க்­கின்றார். மனித உரிமை விவ­கா­ரத்தில் இலங்கை போதி­ய­ள­வான முன்­னேற்­றத்தை காண்­பித்­துள்­ள­தா­கவும் மேலும் முன்­னேற்­றிட பொது­ந­ல­வாய அமைப்பு இலங்கை அர­சுக்கு உத­வு­வ­தா­க­வுமே அவர் கரு­து­கின்றார்.
 
ஆயினும் இதனை ஏற்க மறுத்­துள்ள ஒப்ராய் ஷர்மா தெரி­வித்­துள்ள கருத்து தவ­றா­ன­தெ­னவும் குழா­மொன்­றாக செயற்­பட்டு வரும் பொது­ந­ல­வாய அமைப்பு தனது அடிப்­படை நோக்­கத்தை நிறை­வேற்­று­வதில் தோல்வி கண்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.
 
வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னு­ட­னான சந்­திப்பு குறித்தும் பிரஸ்­தா­பித்த அவர், கடும் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டு­மென எதிர்­பார்க்­கப்­படும் பொது­ந­ல­வாய அமைப்­பா­னது அத்­த­கைய நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தாக தெரி­ய­வில்லை. ஷர்­மாவின் மேற்­படி கருத்தை நான் முற்று முழு­தா­கவே நிரா­க­ரிக்­கின்றேன். பொது­ந­ல­வாய நாடுகள் அதன் கொள்­கை­களை மதித்து நடக்க வேண்டும். அவ்­வாறு அவை செய்யின், மனித உரி­மைகள் விட­யத்தில் அழ­கு­ப­டுத்தும் வழியை அல்­லாமல் உண்­மை­யான, தெளி­வான பாதையை நோக்கி நகர்­வ­தையே தாங்கள் விரும்­பு­வ­தா­கவும் அவை இலங்­கைக்கு எடுத்­து­ரைக்க கூடி­ய­தா­க­வி­ருக்கும். அது உரத்த தொனி­யி­லான செய்­தி­யொன்றா­கவே அமையும் எனவும் கூறினார்.
 
கமலேஷ் ஷர்­மாவின் கருத்­தா­னது அர்த்­த­மற்­ற­தெனச் சுட்­டி­யு­ரைத்த ஒப்ராய், இலங்கை அரசு அழ­கு­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை கைவிட்டு தான் உண்­மை­யான நட­வ­டிக்­கை­க­ளையே மேற்­கொண்டு வரு­கின்­ற­தென்­பதை எமக்கு காண்­பிக்க வேண்டும். அதன் பின்­னரே முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ள­தாக எம்மால் மகிழ்­வுடன் கூற முடியும். வட­பு­லத்­திற்­கான எனது சுற்­று­லாவின் போது என்னிடம் தங்கள் மனக்குறைகளைச் சொல்லி கதறி அழுதவர்கள் புலம்பெயர் மக்களல்ல. 
 
இலங்கை வாழ் தமிழ் மக்களே. அரசியல் தலையீடுகள் மூலம் அல்லாமல் அபிவிருத்தி செயல்முறைகள் மூலம் இலங்கைக்கு புலம்பெயர் மக்களால் உதவ முடியுமென நான் அவர்களிடம் கூறி யுள்ளேன். நாட்டை தாங்கள் எவ்வாறு கொண்டு நடத்த விரும்புகின்றரென்பதை வட புலத்தமிழர்கள் தீர்மானித்துக் கொள் வார்கள். இதனை உணர்ந்து அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பது சிறந்த பயனை அளிக்குமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.