Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கில் கொண்டாட்டம் வடக்கில் கண்ணீர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் கொண்டாட்டம் வடக்கில் கண்ணீர் 

இலங்கையில் எப்பொழுதும் இருவேறு மனநிலைதான் நலவுகின்றது. தற்பொழுது பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு தெற்கில்; கொண்டாட்டமும் வடக்கில் கண்ணீரும் நிலவுகிறது. இலங்கைத் தலைநகர் கொழும்பே கோலாகலமாக உள்ளது. தெருக்களில் எல்லாம் பொதுநலவாய மாநாடு தொடர்பான பதாகைகள். பலர் வாகனங்களில்கூட அதனைப் பொருத்தியுள்ளனர். சிங்கள ஊடகங்கள் எல்லாம் பொதுநலவாய மாநாட்டைக் கொண்டாடுகின்றன. இது சிறிலங்காவின் நேரம் என்றும் இது சிறிலங்காவுக்குப் பெருமை என்றும் கொண்டாடுகின்றது. தமிழ் ஊடகங்களோ கண்ணீரோடு புரண்டழும் தமிழ்ச்சனங்களை காட்டுகின்றன.

பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாதெனவும் இலங்கைக்கு எதிராகவும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்தன. மாநாடிற்கு எதிராக என்று வடக்கு கிழக்கில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. இலங்கை அரசாங்கத்தின் விழாக்களையோ இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் மாநாடுகளையோ எதிர்க்க வேண்டிய தேவை வடக்கு கிழக்கு மக்களுக்கு இல்லை. ஏனெனில் அவை அவர்களுடைய மாநாடு. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழமைபோல கலந்துகொள்வதா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டது. தமிழகம் மாநாட்டிற்கு இந்தியா செல்லக்கூடாது என்று போராடும்பொழுது இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டும் என்று விக்கினேஸ்வரன் அழைப்பு விடுகின்றார். இந்த மாநாட்டை ஈழ மக்களின் பிரச்சினையை கவனப்படுத்தும் வகையில் பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் வழமைபோல கூட்டமைப்பினரிடம் குழப்பமே மிஞ்சியது. இதனாலே கூட்டமைப்புக்கு எதிரான மனநிலையும் எழுந்தன. 

ஆனால் இந்த மாநாட்டை தமிழ் மக்கள் தக்கமுறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த மாநாடு கொண்டாட்டம் என்பது தெற்கிற்கு மாத்திரமே வடக்கிற்கு அல்ல என்பதை இலங்கை அரசும் தனது நடவடிக்கைகளின் மூலம் உணர்த்தியுள்ளது. இந்த நாட்டில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரே விதமாக நடதப்படவில்லை என்பதையும் தமிழ் மக்களிற்கு என்னவெல்லாம் மறுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். வடக்கிலிருந்து சென்ற காணாமல் போனவர்களின் உறவினர்கள் மதவாச்சியில் வைத்து திருப்பி அனுப்பட்டார்கள். அதில் ஒரு சிறுமி கேட்கிறாள். சிங்ளவர்கள் எங்கும் போகலாம்? நாங்கள்தான் போகக்கூடாதா என்று. காணாமல் போனவர்களின் உறவினர்கள் பொதுநலவாய மாநாட்டிற்கும் இலங்கைக்கும் இடைஞ்சல் தரக்கூடும் என்றே அவர்கள் திருப்பி அனுப்பப்ட்டார்கள். அவர்கள் கொழும்புக்குச் சென்ற பொழுது திருப்பி தமது தாயகத்திற்கே அனுப்பி வைக்கப்ட்டார்கள்.

இதைப்போல பொதுநலவாய மாநாட்டிற்கு வந்த சனல்4 ஊடகவியலாளர்கள் அனுராதபுத்தில் வைத்து இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பட்டத்தினை காரணம் காட்டி திருப்பி அனுப்பட்டார்கள். பொதுநலவாய மாநாட்டின் கொள்கையின் பிரகாரம் மாநாடு நடக்கும் நாட்டின் எந்தவொரு பாகத்திற்கும் ஊடகவியலாளர்கள் செல்ல முடியும். இந்த மாநாட்டின் காரணமாகவே சனல்4 ஊடகவியலாளர்களுக்கு இலங்கைக்கு வர அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் வடக்கிற்கு செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. யுத்தம் நடந்த நிலத்தின் சாட்சியங்களை அவர்கள் திரட்டக்கூடும் என்பதற்காகவே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பொதுநலவாய மாநாட்டு கொள்கைளின் பிரகாரம் மாநாடு நடக்கும் சிறிலங்காவில் ஒரு பகுதியாக வடக்கு இல்லையா என்கிற கேள்வியும் எழுகிறது. அத்துடன் வடக்கில் மனித உரிமை, ஊடக சுகந்திரம், நடமாடும் சுகந்திரம் என்று எல்லாமே மறுக்கப்பட்ட நிலையில் திறந்த ஒரு முள்வேலிச் சிறையிலேயே தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற உண்மையும் அம்பலமாகியுள்ளது. இலங்கைக்கு கெலம் மக்ரே வரலாம் என்றும் இதுவரை பொய் பேசி வந்த அவர் இனி நிலமையைப் பார்த்துவிட்டு உண்மையைப் பேசலாம் என்றும் இலங்கை அரசு சொன்னது. ஆனால் தனது தொலைக்காட்சிகளுக்கு கிடைக்கப்பெற்ற காணொளிகளின் பார்த்த சனல்4 ஊடகவியலாளர்கள் வடக்கு இன்னமும் துயரங்கள் நீங்காத ஒரு நிலமாகவே இருக்கிறது என்ற உண்மையை இந்த சந்தர்பத்தில் உணரக்கூடும்.

இலங்கை அரசு தனது இன அழிப்புக்கும் உரிமை மறுப்புக்கும் அவ்வப்போது பல போலி முகங்களைப் பயன்படுத்துவண்டு. சனல்4க்கு எதிராக தமிழ் மக்கள் என்ற பெயரில் இராணுவம் எங்கிருந்தோ கொண்டு வந்த மக்களை இறக்கி எழுத்துப் பிழைகள் மிகுந்த இராணுவ மொழியிலான பதாகைகளுடன் போலி ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தது. இவற்றை இராணுவத்தினர்தான் நடத்துகின்றனர் என்பததைத் தெரியாத யாரும் இல்லை. ஆனால் இவ்வாறான போராட்டங்களை நடத்துவது தமிழ் மக்கள் என்று எல்லோரும் நினைப்பார்கள் என்று இராணுவத்தினர் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பதூன் வேடிக்கையானது.

வடக்கிற்கு வருகை தந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் நேரடியாகக் கண்டுள்ளார். வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதைப்போல இன்று வீட்டுக்கு வீடு புகைப்படங்களை ஏந்தியபடி காணாமல் போனவர்களின் உறவினர்கள் அலைகின்றார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த டேவிட் கமரூனை சந்திக்க முற்பட்டனர். கமரூனைப் பார்த்து தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோர வேண்டும் என்பதற்காக காணாமல் போனவர்களை தேடும் உறவினர்கள் எழுப்பிய அழுகையால் யாழ் நகரமே அதிர்ந்தது. நல்லூர்த் தெருவிலும் யாழ் நூலகம் முன்பாகவும் மக்கள் கண்ணீர் பொங்கத் திரண்டார்கள். 'கொழும்பில சந்தோசமாய் பொதுநலவாய மாநாடு நடத்திக் கொண்டிருக்கினம். நாங்கள் இஞ்ச கண்ணீரோடு தெருத்தெருவா திரியிறம்' என்று ஒரு ஈழத் தாய் இந்தப் போராட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரசு இந்த சாட்சியங்களையும் நிலமைகளையும் தனது ஒடுக்குமுறையின் மூலம் மறைக்கிறது என்பதும் இங்கு அமம்பலமாகியுள்ளது. ஈழமண்ணின் நிலவரம் தொடர்பிலும் அத்தாய் கொந்தளிப்போடு சொன்னாள்.

அத்துடன் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர் உணவுத் தவிப்புப் போராட்டம் நடத்தி தமது சொந்த நிலத்தில் மீள்குடியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்கள். நேற்றைய தினம் வலிகாமம் வடக்கு மக்கள் தங்கியுள்ள முகாம் ஒன்றுக்கும் கமரூன் சென்றிருந்தார். அங்குள்ள மக்களின் நிலமைகளைப் பார்த்தார். பொய்க்காலுடன் இருந்த ஒரு மூதாட்டியின் காலை அவர் தொட்;டுப் பார்த்தார். எங்கள் துயரங்களை தொட்டுப் பார்ப்பதாகவே அந்த முகாம் மக்கள் ஆறுதல் அடைந்தனர். ஈழத் தமிழ் மக்கள் இன்று எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரசசினை நிலம். ஈழத் தமிழர்கள் தமது நிலம் மறுக்கப்பட்டவர்களாவும் நிலத்திற்குப் போராடுபவர்களாகவும் இருப்பதை கமரூன் நேரடியாக அறிந்துகொண்டுள்ளதுடன் தமிழ் பத்திரிகை அலுவலகம் ஒன்றிற்குச் சென்று தமிழர் ஊடக சுகந்திரத்தின் நிலவரத்தையும் பார்த்தார்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு கமரூன் காலக்கெடு ஒன்றை விடுத்துள்ளார். ஆனால் உடனடியாகவே மகிந்த ராஜபக்ச கமரூனின் கோரிக்கயை நிராகரித்தது மட்டுமன்றி தன்னை எச்சரித்த கமரூனுக்கு கண்ணாடி வீடடுக்குள்ளிலிருந்து கல்லெறிய வேண்டாமென' எச்சரிப்புத் தெனியில் பதில் அளித்துள்ளார். பொதுநலவாய மாநாடு இலங்கைக்கு வரப்பிரசாதமாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் அதுவே ஈழத் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு தேசத்தில் எந்த நிலையில் வாழ்கின்றார்கள் என்பதை இலங்கைக்கு வந்த அத்தனை தலைவர்களுக்கும் காட்டியிருக்கும். அவர்கள் எவ்வாறானவர்களாக இருப்பினும் எவ்வாறான பார்வையுடன் பார்ப்பினும் இங்கு தமிழர்கள் இப்படித்தான் வாழ்கிகிறார்கள் என்பதை பார்க்க நேரிட்டுள்ளது. அந்த வகையில் பொதுநலவாய மாநாடு இலங்கையை சிக்கலில் மாட்டிவிடும் சந்தர்ப்பத்திற்கு தள்ளியிருக்கிறது.

மாநாடு நடைபெற்றிருந்த சந்தர்ப்பில் ஈழத் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட மாபெரும் அநீதி வெளிக்கிளம்பியிருக்கிறது. பிரித்தானிய இளவரசி எலிசபத் பொதுநலவாய நாடுகளின் அரசியாக உள்ளார். கமரூன் அந்த நாட்டின் பிரதம அமைச்சர். இலங்கையை இறுதியாக ஆண்டவர்கள் கமரூனின் முன்னோர்கள். இலங்கையை விட்டுச் செல்லும்பொழுது இந்த நாட்டை பிரிக்க வேண்டாம் என்றது தமிழர்கள். அதனால் இன்று தமிழர்களின் நிலை என்ன கட்டத்தை எட்டியிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளக்கூடும். அன்று பிரிவினை வாதத்தை எதிர்த்த தமிழர்கள் பின்னர் பிரிவினை கோர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 

அத்துடன் சரித்திரத்திற்கும் இனங்களுக்கும் பொருத்தமற்ற வகையில் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கும் வகையில் பிரித்தானியர்கள் யாப்புக்களை நடைமுறைப்படுத்தினார்கள். அதுவே தமிழர்களின் உரிமைiயைப் பறித்தது. அதனால் இலங்கைத்தீவில் ஏற்பட்ட அழிவுக்கு பிரித்தானியர்களும் காரணமானவர்கள்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை வேண்டும் என்று கமரூன் சொல்கிறார். இனப்படுகொலை செய்யப்படுவதற்கான போர்க்குற்றங்கள் அவை. எனவே இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை தேவை. அவை நடத்திருக்கின்றன என்பதே எல்லோருக்கும் தெரியும். அதற்கான ஆதாரங்கள் பலவும் வெளியாகியுள்ளன. சாட்சியங்களை மக்கள் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அதற்கான நீதியையே இப்பொழுது வழங்க வேண்டும். அந்த நீதி என்பது தமிழர்களுக்கு பாதுகாப்பான ஒரு தீர்வாக இருக்க வேண்டும். காலனித்துவ ஆட்சிக்கு முந்தைய வரலாற்றின் அடிப்படையிலும் சுகந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றின் அடிப்படையிலும் தமிழர்களை தமிழர்கள் ஆழ்வதே பொருத்தமான தீர்வாக உள்ளது.

பிரித்தானியர்களால் இலங்கைக்கு தேயிலைத் தோட்டத்திற்கு அடிமைகளாக்கி கொண்டுவரப்பட்ட மலையகத்திற்கு முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் சென்றிருக்கிறார். உலகம் எவ்வளவோ வளர்சிசியை எட்டியுள்ள நிலையில் சுமார் 200 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த மக்களின் நிலமையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று பிரித்தானியர்களின் அடிமையான மக்கள் இன்று இலங்கைக்கு அடிமையாகவுள்ளனர். இலங்கைத் தீவிற்கு அழைத்து வரப்பட்ட மக்களையும் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட மக்களையும் இலங்கை அரசு ஒரே அடிமைகளாகவே நடத்துகின்றது என்பது பிரித்தானியாவுக்கான செய்தி மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கானது. 

பிரித்தானியாவை மீட்பராக சித்திரிக்கவில்லை. கேட்க யாருமற்ற நிலையில் ஒடுக்கப்படும் ஈழமக்களுக்கு இந்த மாதிரியான வருகைகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாதது. தவிரவும் இலங்கைத் தீவை இறுதியாக ஆண்டதன் அடிப்படையிலும் தமிழ் மக்களுக்கு விரோமான ஒற்றை ஆட்சி யாப்பை நடைமுறைப்படுத்திய அடிப்படையிலும் தமிழர் உரிமையை சிங்கள அரசியல்வாதிகளிடம் கையளித்த அடிப்படையில் பிரித்தானியா இனப் பிரச்சினையுடன் தொடர்புபடுகின்றது. பிரித்தானியாவின் போர் நடவடிக்கைகள் தொடர்பில் எல்லோருக்கும் விமர்சனம் உண்டு. ஆனால் அதனைப் பயன்படுத்தி இலங்கை தப்பித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பை அளிக்ககூடாது. குற்றங்களுக்கும் தவறுகளுக்குமான தண்டணை என்பது தமிழர்களுக்கு தீர்வை ஏற்படுத்துவதாகவே அமையும். 

link:http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99140/language/ta-IN/article.aspx

01%28906%29.jpg
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது 68ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறார். ஆலரி மாளிகையில் தனது குடும்பத்தாருடன் அவர் கேக் வெட்டி பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார். மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, மகன்களாக நாமல், யோஷித மற்றும் ரோஹித ஆகியோருடன் தனது பிறந்த நாளை ஜனாதிபதி கொண்டாடுவதை படங்களில் காணலாம். இந்த பிறந்த நாள் கொண்டாட்ட படங்களை ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தந்தைக்கு தனது வாழ்த்துக்களையும் அள்ளிக் குவித்துள்ளார்.
02%28725%29.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.