Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கடற்படைத் தளபதியின் இலங்கை பயணம், மத்திய அரசின் ரகசிய சதி வேலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

554274440viko4.jpg

இந்திய கடற்படைத் தளபதியின் இலங்கை பயணம், மத்திய அரசின் ரகசிய சதி வேலை

இந்திய கடற்படைத் தளபதியின் இலங்கை பயணம், மத்திய அரசின் ரகசிய சதி வேலை என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார். 

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், 

´´இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்த இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசுதான் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயுதங்கள் தந்தும், இந்தியாவின் முப்படைத் தளபதிகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இயக்கியும், மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தது. 

2007 ஆம் ஆண்டில், இந்திய-இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கைக்கு தகவல்கள் தந்தும், புலிகளுக்கு வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடிக்கச் செய்தும், அப்போரில் உதவியது. அதனால்தான், யுத்தத்தில் தாங்கள் வெல்ல முடிந்தது என்றும், இப்போரை இயக்கியதே இந்தியாதான் என்றும் இலங்கை ஜனாதிபதியும் இலங்கை அமைச்சர்களும் கூறினர். 

இந்த வாரத்தில், இந்தியக் கடற்படைத் தளபதி டி.கே.ஜோஷி இலங்கைக்கு ஐந்து நாள் பயணமாகச் சென்று, அந்நாட்டின் தலைமைத் தளபதி ஜெகத் ஜெகசூரியவையும், கடற்படைத் தளபதி ஜெயநாத் கோலம்ககே இருவரையும் சந்தித்தார். 

இருநாட்டு கடற்படைத் தளபதிகள் கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில், இருநாட்டு கடற்படையும் அனைத்து பிரச்சினைகளிலும் இணைந்தே சிறப்பாகச் செயல்படுகிறது என்றும், கடலில் மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட அனைத்தையும் திறமையாகக் கையாள்வதாகவும் தெரிவித்தனர். 

அப்படியானால், தாய்த் தமிழகத்து மீனவர்கள் 578 பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதற்கு இந்தியக் கடற்படையும் கூட்டுக் குற்றவாளி என்பது நிரூபணமாகிறது. 

இந்தியாவில் நான்கு ஆண்டு கால கடல்சார் பயிற்சிப் படிப்புக்கு, இலங்கை கடற்படையினருக்கு மட்டும்தான் மற்ற நாடுகளைவிட முன்னுரிமை கொடுக்கப்படும் என்று இந்தியத் தளபதி ஜோஷி கூறியுள்ளார். 

இதற்கு இடையில், இந்த வாரம் வியாழன், வெள்ளி இரு நாட்களிலும் இலங்கை பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ இரகசியமாக டெல்லிக்கு வந்து, இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும், அவரது துறையின் உயர் அதிகாரிகளையும், இராணுவ அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசி, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

இந்த வருகையை பத்திரிகையாளர்களுக்குக்கூட தெரிவிக்காமல், மத்திய அரசு பரம இரகசியமாக மூடி மறைத்த மர்மம் என்ன? 

ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகத்தைத் தொடர்ந்து செய்து வருகிற இந்திய அரசு, சிங்களவர்களின் பலி பீடத்தில் தமிழ் இனத்தின் உயிர்களைக் காவு கொடுக்கும் கொடிய வஞ்சகத்தை மூடி மறைக்க முடியாது. 

வேதனையால் வெந்துபோன தமிழர் இதயத்தில் சூட்டுக்கோலைத் திணிக்கும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு தக்கபாடத்தைத் தமிழ்ச் சமூகமும், வரலாறும் நிச்சயமாகக் கற்பிக்கும் என எச்சரிக்கிறேன்" என்று கூறியுள்ளார். 

 

இலங்கை படைக்கு பட்டப் படிப்பை வழங்க முன்வந்த இந்தியக் கடற்படை

இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு ''பிடெக்'' எனப்படும் நான்கு வருடகாலத்துக்கான தொழில்நுட்ப பட்டப் படிப்பை வழங்க இந்தியக் கடற்படை முன்வந்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய கடற்படையின் தலைமைப் படை அதிகாரியான அட்மிரல் டி. கே. ஜோஷி அவர்கள், இலங்கை அதிகாரிகளுக்கு இந்தக் கல்விப் பயிற்சி வாய்ப்பை முன்னுரிமை அடிப்படையில் வழங்க இந்தியக் கடற்படை தயாராக இருப்பதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கூறியுள்ளார்.

இந்த பட்டக் கல்வித் திட்டத்தில் இணைய உலக நாடுகளில் இருந்து கடுமையான போட்டி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை படை அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் ஏற்கனவே தமிழகத்தில் எதிர்ப்பு இருந்துவரும் நிலையில், இந்தியக் கடற்படை தலைமை அதிகாரியின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்திய கடற்படையின் தலைமை அதிகாரியான அட்மிரல் ஜோஷி அவர்கள், இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தது தொடர்பாக, இலங்கை ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை - இந்தியக் கடற்பரப்பில் கடற்கொள்ளையை தடுப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் உரையாடப்பட்டுள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் குறைந்திருக்கின்ற போதிலும், இது தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியப் படைகள் கணிசமான அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் இந்தியக் கடற்படை அதிகாரி கூறியுள்ளார்.

130815053110_india_navy_chief_admiral_dk

 

இந்தியக் கடற்படையின் தலைமைப் படை அதிகாரியான அட்மிரல் டி. கே. ஜோஷி

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/11/131130_indolankanavy.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.