Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி இலங்கை விஜயம்; வடக்கிற்கும் செல்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

un-flag1.jpg

ஐக்கிய நாடுகளின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி  இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை வருகிறார்.

அவர், நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் ஆராயவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வடக்கிற்கான விஜயத்தை நாளை மறுதினம் மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்து பேசவுள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செல்லும் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் பிராந்திய இராணுவத்தளபதிகள் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அதன்பின்னர் கொழும்பு வரும் அவர், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களையும், அமைச்சக முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேசவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலர் கலாநிதி கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.

மோதல்களுக்கு பின்னரான இலங்கையின் உள்ளக விடயங்களின் முன்னேற்றத்தில் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனாலும், அதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், சர்வதேச அழுத்தங்கள் மெல்ல அதிகரித்ததையடுத்து இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதியை இலங்கைக்குள் வருவதற்கு அனுமதியளித்துள்ளது.  இதனிடையே, கலாநிதி சலோகா பெயானியின்  இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.4tamilmedia.com/newses/srilanka/18992-2013-12-01-09-45-27

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிறப்புப் பிரதிநிதி பெண்ணாக இருந்தால் நவரத்தினக் கற்கள் பரிசாகக் காத்திருக்கின்றன.. :D ஆணாக இருந்தால் வேறு பல ஐட்டங்கள் காத்திருக்கின்றன.. :o:wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பரிசுகளை தாண்டி சர்வதேச நிகழ்ச்சி நிரல் என்ற திட்டத்தின் பிரகாரம் மேற்க்கு நாடுகள் அசைவுகளை மேற் கொள்ளும் கடைசியில் நம்ம கூத்தமைப்பு தலைமைகளிடம் என்ன பிரச்சினை என்று வெள்ளை வந்து கேட்க்க விக்கி,சுமத்திரன்,சம்மந்தன் மூடிய கதவுக்குள் வெள்ளையின் காலில் விழுந்து எதற்க்கும் இந்தியாவை கேட்டு முடிவுகளை எடுக்குமாறு கதறுவினம் பிறகென்ன வந்த வேகத்திலேயே வெள்ளை திரும்பியுடும் சிங்களவன் கொடுப்புக்குள்ள சிரிச்சுகொண்டிருப்பான்.நம்ம தலையெழுத்து இதுதான் என்னவோ இந்த மூன்று அடிமையிலை விக்கியை ரோசமாய் குரைப்பதிற்க்கு அனுமதி கிடைத்துள்ளது போல் உள்ளது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.