Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நிலத்தை அபகரிப்புக்க யானைகளைப் பயன்படுத்தும் அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பை அண்டியுள்ள கோணியன் குளம்  கிராம பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சுமார் 20 இற்கும் மேற்பட்ட யானைகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளதாக முசலி பிரதேச சபை உறுப்பினர் மார்க்கஸ் நீக்கிலாஸ் பெனான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பை அண்டியுள்ள கோணியன் குளம் கிராமத்தை அண்டிய காட்டுப்பகுதியில் சுமார் 20 இற்கும் மேற்பட்ட யானைகள் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் என்னிடமும்,அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.

யார் இந்த யானைகளை கொண்டு வந்தது என்ற விடையம் தெரியவில்லை.தற்போது குறித்த கோணியன் குளம் பகுதியில் மக்களின் குடியேற்றம் இடம் பெற்றுள்ள நிலையில் புதிய வீடுகளும் அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த பகுதியில் அந்த மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் முசலியில் யானையின் தாக்குதால்களினால் பலர் உயிரிழந்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக யானையின் நடமாட்டம் குறைந்து கொணப்பட்டது.இதனால் கடந்த பல மாதங்களாக யானையின் அச்சுருத்தல்கள் அற்ற நிலையில் அந்த மக்கள் வாழ்ந்து வந்தனர்.

ஆனால் தற்போது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.விவசாய செய்கைகளையும் தற்போது யானை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் குடியேறியுள்ள மக்கள்,விவசாயம் செய்வோர் என அணைவரும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளனர்.

எனவே இவ்விடையத்தில் உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை யானைகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கோரிக்கை விடுத்துள்ளார்.

1ஆம் இணைப்பு:- நிலத்தை அபகரிப்புக்க யானைகளைப் பயன்படுத்தும் அரசாங்கம் -

02-12-2013 - 01:51am

மன்னார் மாவடட்டம் முசலிப் பிரதேச சபைக்கு உட்பட்ட அரிப்பை அண்டியுள்ள கோணியன்குளம் வயல் காணிகளை அபகரிக்கும் நோக்குடன் கடந்த திங்கட்கிழமை 20 யானைகள் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் சிங்களக்குடியேற்றம் ஒன்றை மேற்கொள்ள முயற்சித்தபொழுது அந்தப் பகுதியில் கிராமசேவையாளராக பணியாற்றிய பெரும்பான்மையினர் ஒருவர் எதிர்த்ததை அடுத்;து அந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த கிராமசேவையாளர் இடமாற்றப்பட்டிரு;தார். கோணியன்குளம் பகுதியில் இம்முறை பயிர்ச்செய்கை நடவடிக்கை தொடங்கப்படடுள்ள நிலையில் இறக்கிவிடப்பட்ட யானைகள் அவற்றை சேதப்படுத்திவருகின்றன.

வேறு பகுதிகளிலிந்து யானைகள் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டதை அப்பகுதி மக்கள் பார்வையிட்டுள்ளனர். இதனை தாம் எங்கு வேண்டுமானாலும் கூறத் தயங்கப்போவதில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த பல வருடங்களாக பல்வேறு பாதிப்புக்களை சுமந்து சொந்த இடத்தில் மீள்குடியேறிய தமது வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாக உள்ளதாக கோணியன்குளம் பகுதி விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

தமது வயல்நிலங்களை சேதப்படுத்தி அப்பகுதியை விட்டு மக்கள் இடம்பெயரச் செய்து நிலத்தை அபகரிக்கும் நோக்கியிலேயே இவ்வாறு மேற்கொள்ளப்படுதாகவும் பிரதேச மக்கள் குளோபல் தமிழ் செய்திகளுக்குத் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாந்தை மேற்குப் பகுதிகளிலும் இவ்வாறு 6 யானைகள் கொண்டுவந்து இறக்கப்பட்டதாக அந்தப் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். யானைளகள் குளக்கட்டுக்களையும் சேதப்படுத்தியுள்ளன.

இதனால் இந்தப் பகுதி மக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்;. இந்த நடவடிக்கைளை தடுத்து நிறுத்த உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோணியன்குளம் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  

குளோபல் தமிழ் செய்தியாளர்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99748/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்  மீது மலத்தையே  கொட்டிய  இனம்

இதுவும்   செய்யும்

 

இதற்கு   மேலையும்................. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.