Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திட்டமிட்ட இன அழிப்பு நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது: கஜேந்திரகுமார்

Featured Replies

DSC03583%20copy.jpg
-எம்.எஸ்.எம்.நூர்தீன்

திட்டமிட்ட இன அழிப்பு நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் யோசப்பரராஜசிங்கத்தின் 08ஆவது வருட நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் யோசப்பரராஜசிங்கத்தின் 08ஆவது வருட நினைவுதின நிகழ்வு மட்டக்களப்பு கோப் இன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முள்ளிவாய்க்காலில் தமிழினம்  படுகொலை செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழ்த் தேசியத்தின் அடையாளத்தை திட்டமிட்டு படிப்படியாக அழித்து வருகின்றனர்.

முல்லைத்தீவிலும் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் என வடக்கு, கிழக்கில் காணி அபகரிப்பு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சிங்களக் குடியேற்றத்தை மேற்கொண்டு சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையை  மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் கடற்றொழில், கமத்தொழில், வியாபாரம் ஆகிய மூன்று தொழில்களுமே அழிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 30 வருடகால யுத்தத்தினால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கடற்றொழில் இருப்பதால் கடற்றொழிலாளர்களினால் தமது தொழிலை முன்னேற்றகரமாக மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களே அவுஸ்திரேலியாவுக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்கின்றனர்.

இராணுவத்தினர் ஆயிரம் ஆயிரம்  ஏக்கர் விவசாய நிலங்களை தமது முகாமுக்காக பிடித்து வைத்திருப்பதால், தமிழ் விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் விவசாயம் செய்யமுடியவில்லை.

வியாபாரத்தில் கூட இராணுவத்தினருடன் போட்டி போட்டுக் கொண்டு தமிழ் வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளது.
மன்னாரில் இராணுவத்தினர் மரக்கறிகளை அரைவாசி விலைக்கு விற்பதாகவும் இதனால் மன்னார் விவசாயிகள் தம்மால் செய்கை பண்ணப்பட்ட மரக்கறிகளை விற்க முடியாதுள்ளதாகவும் மன்னார் விவசாயிகள் தன்னிடம் முறையிட்டதாக மன்னார் ஆயர் என்னிடம் தெரிவித்திருந்தார்.  இவ்வாறு தமிழர்களின் பொருளதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

நிலம் மற்றும் மொழி, தனித்துவமான கலாசாரம், பொருளாதாரம் ஆகியன ஒரு தேசத்தில் தங்கியுள்ளவைகளாகும். தமிழினத்தின் பொருளாதாரம், தனித்துவமான தமிழர்களின் கலாசாரம், தமிழர்களின் நிலம் அழிக்கப்பட்டும் அபகரிக்கப்பட்டும் வருகின்றன.
தமிழ் தேசத்தை அழித்து தமிழினத்தை அழிக்கின்ற கைங்கரியத்தை செய்து கொண்டிருக்கின்றனர். இன்று நினைவுகூறப்படுகின்ற மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் என்னை அரசியலுக்கு கொண்டு வந்தவர். எனக்கு அரசியல் தந்தையாக இருந்து செயற்பட்டவர்' என்றார்.
 
  • தொடங்கியவர்
P1190412.JPG
-தேவ அச்சுதன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஏற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 8வது நினைவுதினம் மட்டக்களப்பு கோப்பின் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா), மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் ஆன்மீகவுரையினை ஆயர் நிகழ்த்தியதுடன் 'பின்-நிலைமாறுகால நீதியும் தமிழின படுகொலையும்' என்ற தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக பகுதி நேர விரிவுரையாளர் அருட்தந்தை எழில் றஜன்; விசேட சொற்பொழிவாற்றினார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்டோர் உரையாற்றியதுடன் கட்சியின் முக்கிஸ்த்தர்களும் உரை நிகழ்த்தினர்.
P1190416.JPG
P1190418.JPG
P1190419.JPG
P1190422.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.