Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தாண்டிலும் சிறிலங்கா எதிர்கொள்ளும் மனிதஉரிமை மீறல் பிரச்சனையும் அழுத்தங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

UN%20Human_Rights_Council.jpg

சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் இவ்வாறான அழுத்தங்களைத் தட்டிக்கழித்தால், வரும் மார்ச்சில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் மிகக் கடுமையான நிலையை எதிர்நோக்க வேண்டிவரும் என பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

இவ்வாறு IPS Inter Press Service செய்தி நிறுவனத்திற்காக ஆய்வாளர் Amantha Perera எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

அந்த ஆய்வின் முழுவிபரமாவது: 

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமானது டிசம்பர் 20 அன்று, மறைந்த முன்னாள் தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவை நினைவுகூரும் முகமாக சந்திப்பொன்றை ஒழுங்குபடுத்தியிருந்தது. இந்த நினைவு வணக்க நிகழ்வில் மறைந்த நெல்சன் மண்டேலாவைப் பற்றி அதிகம் பேசப்படவில்லை. ஆனால் சிறிலங்காவானது தனது நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் வடுக்களை ஆற்றுவதற்கான பொறிமுறையைக் கட்டியெழுப்புவதில் தென்னாபிரிக்கா எவ்வாறு சிறிலங்காவுக்கு உதவுகிறது என கேள்வியெழுப்பப்பட்டது. 

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவை ஒத்ததாக சிறிலங்காவில் சாத்தியமான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான உதவியைப் பெறுவதற்காக நவம்பரில் சிறிலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தென்னாபிரிக்க அரசை நாடியிருந்தது. 

பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு இடம்பெற்ற போது தென்னாபிரிக்க அதிபர் ஜக்கோப் சூமாவிடம் சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்ததாக சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ஜியோப் டொய்ட்ஜ் தெரிவித்தார். "சிறிலங்காவில் தென்னாபிரிக்காவின் உண்மையான மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு போன்ற ஒரு பொறிமுறை உருவாக்கப்படாவிட்டால், நீங்கள் எவ்வளவு தான் முன்னோக்கிச் சென்றாலும் கடந்த காலம் எப்போதும் உங்களுக்குப் பிரச்சினையாகவே இருக்கும்" என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்ற நெல்சன் மண்டேலாவின் நினைவு வணக்க நிகழ்வின் கேள்வி-பதில் நேரத்தின் போது தென்னாபிரிக்கத் தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்ததிலிருந்து, இங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பளித்து சிறிலங்கா அரசாங்கமானது தனது தவறுகளைத் திருத்துவதற்கு தென்னாபிரிக்காவின் உண்மையான மீளிணக்க ஆணைக்குழு போன்ற சாத்தியமான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனக் கேள்வியெழுப்பப்படுகிறது. இது சிறிலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை முதன்மைப்படுத்துவதற்கான ஒரு குறியீடாகக் காணப்படுகிறது. 

சிறிலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாடானது சிறிலங்கா மீதான மனித உரிமை மீறல் தொடர்பில் மீண்டும் அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. இந்த உச்சிமாநடாட்டில் கலந்து கொள்வதற்காக சிறிலங்காவுக்குச் சென்றிருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் முன்னாள் போர் வலயம் அமைந்துள்ள நாட்டின் வடபகுதிக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர் குழுவுடன் சென்றிருந்தார். வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்தப் பயணத்தின் பின்னர், சிறிலங்காவானது தன்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்கத் தவறினால் அனைத்துலக விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என டேவிட கமறூன் குற்றம்சுமத்தியிருந்தார். 

"சிறிலங்காவானது பொதுநலவாய அமைப்பின் விழுமியங்களை மதித்து தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவே பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு அமைந்திருக்கும்" என சிறிலங்காவுக்கான பிரித்தானிய உயர் ஆணையாளர் ஜோன் றன்கின், உச்சி மாநாடு இடம்பெறுவதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். 

"சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணைக்கான தேவையை இந்த உச்சி மாநாடானது மீண்டும் வலியுறுத்தியுள்ளது" என அனைத்துலக மன்னிப்புச் சபையின் பொதுச் செயலர் அலுவலகத்தின் இயக்குனர் ஸ்ரீவ் கிரசோ தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா விடயத்தின் கமறூன் அறிவித்துள்ளதை அனைத்து நாட்டுத் தலைவர்களும் பின்பற்ற வேண்டும் எனவும் இந்தச் செய்திகள் ஊடகங்களில் தணிக்கை செய்யப்படக் கூடாது எனவும் கிரசோ மேலும் தெரிவித்துள்ளார். போரின் போது மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக குறிப்பாக பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணாமற் போனமை தொடர்பாக சிறிலங்காவானது மேலும் விசாரணை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. சிறிலங்கா அரசாங்கம் மீது அமெரிக்க அரசாங்கமானது தற்போது தீவிர அழுத்தத்தை இட்டுவருகிறது. 

ஜனவரி மாத நடுப்பகுதியில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிசா டேசை பிஸ்வால் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்காவுக்கான இவரது முதலாவது சுற்றுப்பயணத்தின் போது காணாமற் போனோர் மற்றும் படுகொலை செய்யப்பட்டோர் தொடர்பான விசாரணை பற்றி கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போர்க் காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நவம்பர் மாத இறுதியில் புதிய ஆணைக்குழு ஒன்றை நிறுவினார். இதுதொடர்பாக சிறிலங்கா சனத்தொகை மற்றும் புள்ளிவிபரப்பகுதியால் புதிய கணக்கெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

2005லிருந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 4156 பேர் வரை காணாமற் போயுள்ளதாக சிறிலங்கா சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் 2011ல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் அறியப்பட்டது. ஐ.நா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு உட்பட பல்வேறு அனைத்துலக அமைப்புக்கள் இந்த எண்ணிக்கையின் பத்து மடங்கான பொதுமக்கள் காணாமற் போயுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர். 

தான் ஏற்கனவே காணாமற் போன பொதுமக்கள் தொடர்பான கணக்கெடுப்பை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கட்டுப்படுத்தப்படும் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை அறிவித்திருந்தது. 

பொதுநலவாய உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்குபெற்றாமை மற்றும் பிரித்தானியா, அமெரிக்கா போன்றன சிறிலங்கா மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் போன்றன சிறிலங்கா அரசாங்கமானது குறைந்தது தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தனது கவனத்திற் கொள்வதற்காவது வழிவகுப்பதாக சிறிலங்காவில் செயற்படும் மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

"இவ்வாறான அழுத்தமானது நீதிக்காகவும் உண்மைக்காகவும் தொடர்ந்தும் போராடும் போரால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பங்கள், ஊடகவியலாளர்கள், சட்டவாளர்கள், மதகுருமார்கள் போன்றோருக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் வழங்குகிறது" என சிறிலங்காவின் மனித உரிமைச் செயற்பாட்டு சபையின் உறுப்பினர் றுக்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் இவ்வாறான அழுத்தங்களைத் தட்டிக்கழித்தால், வரும் மார்ச்சில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் மிகக் கடுமையான நிலையை எதிர்நோக்க வேண்டிவரும் என பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த இரு கூட்டத் தொடர்களிலும் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் இவற்றுள் எந்தத் தீர்மானத்திலும் அனைத்துலக விசாரணைக்கான சாத்தியப்பாடு தொடர்பாக குறிப்பிடப்படவில்லை. 

"மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் 2009-2012 மற்றும் 2013களில் சிறிலங்கா மீதான தமது நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்கியுள்ளன. சிறிலங்கா மீது இந்தியா தனது நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்கிக் கொள்வதற்கு இந்தியா தயார் என்பதையே பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை இந்தியப் பிரதமர் புறக்கணித்தமை சுட்டிக்காட்டுகின்றது" என பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடானது கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான அளவு மாற்றமடைந்துள்ளது. 2009ன் மத்தியில், சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை அடைந்த போது சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து ஐரோப்பிய நாடுகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை நீர்த்துப் போகச் செய்வதில் இந்தியாவின் பங்கு மிகமுக்கியமானதாகும். 

2014ல் இந்தியாவானது சிறிலங்கா தொடர்பான தனது நிலைப்பாட்டை முற்றாக மாற்றிக் கொள்வதற்கான சாத்தியத்தை இந்தியாவின் உள்நாட்டு அரசியல் சக்திகள் உருவாக்கலாம் என 1987-1990 காலப்பகுதியில் சிறிலங்காவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வு அதிகாரியாகக் கடமையாற்றியவரும் அரசியல் விமர்சகருமான றமணி ஹரிகரன் குறிப்பிட்டுள்ளார். 

"2014 மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெறுகின்ற போது, இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையும் சூடுபிடித்திருக்கும். தற்போது ஆளும் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. இது திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவேண்டிய நிலையேற்படும்" என ஹரிகரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் தமிழ்நாட்டின் முக்கிய அரசியற் கட்சியாக தி.மு.க உள்ளது. 

தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தமிழ்நாட்டால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தத்தின் விளைவாகவே நவம்பரில் சிறிலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டை இந்தியப் பிரதமர் புறக்கணித்திருந்தார். 

"ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரானது சிறிலங்கா மீது கணிசமானளவு அழுத்தத்தை ஏற்படுத்த முடியும்" என அனைத்துலக மன்னிப்புச் சபையைச் சேர்ந்த கிரசோ சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140103109715

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.