Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவின் கரையோரக் கடல்கொந்தளிப்பு: கடல்நீர் நிலப்பகுதிக்குள் உட்புகுநத்து- மக்கள் இடம்பெயர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முல்லைத்தீவின் கரையோரக் கடல்கொந்தளிப்பு: கடல்நீர் நிலப்பகுதிக்குள் உட்புகுநத்து- மக்கள் இடம்பெயர்வு
05 ஜனவரி 2014
 
வடக்கு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது வளிமண்டளவியல் திணைக்களம்:-
Mullaitivu_CI.jpg
முல்லைத்தீவின் கரையோரக் கடல்கொந்தளிப்பு: கடல்நீர் நிலப்பகுதிக்குள் உட்புகுநத்து-  மக்கள் இடம்பெயர்வு
 
முல்லைத்தீவின் கரையோரக் கடல பகுதி கொந்தளிப்பதுடன், கடல்நீர் 3 அல்லது 4 மீற்றர் தூரத்திற்கு நிலப்பகுதிக்குள் உட்புகுந்துள்ளதாக  அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதனையடுத்து  கள்ளப்பாடு, அலம்பில், செம்மலை, வட்டுவாகல் உள்ளிட்ட கரையோர கிராமங்களின் கரையோரங்களைச் சேர்ந்த மக்கள் மேட்டு பிரதேசங்களிலுள்ள உறவினர்களின் வீடுகளுக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளதை அடுத்தே அந்த பகுதிகளைச்சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்ந்துள்ளனர்.
 
இதேவேளை, யாழ். வடமராட்சி பருத்தித்துறை கரையோரப்பகுதிகளில் கடல் நீர் மட்டம் வழமைக்கு மாறாக நிலப்பகுதிக்குள் உட்புகுந்துள்ளதாக  அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
 
குறித்த பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தியதையடுத்து கரையோரங்களிலுள்ள மக்கள் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் சென்றிருப்பது நல்லதென மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
இதனையடுத்தே கரையோரங்களில் இருக்கும் மக்கள் ஒரு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள தங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
 
வடக்கு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது வளிமண்டளவியல் திணைக்களம்:-
 
மன்னார் கடல் வழியாக உருவாகும் தாழமுக்கம், முல்லைத்தீவு கடல் வழியாக காங்கேசன்துறையை கடக்கவுள்ளமையால் வடக்கு கரையோரத்தைச்சேர்ந்த மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மழையுடன் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசவிருப்பதினால், கடலோர பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.