Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழாராய்ச்சி மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் 40 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி.

Featured Replies

DSC_0171%283%29.JPG
-எஸ்.கே.பிரசாத்,நா.நவரத்தினராசா

1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்.முற்றவெளி திறந்த வெளியரங்கில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் 40 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வு யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் அமைந்துள்ள நினைவு தூபிக்கு முன்பாக இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான கனகலிங்கம் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், வேலுப்பிள்ளை சிவயோகன், அரியகுட்டி பரஞ்சோதி, பாலச்சந்திரன் கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1974 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளான ஜனவரி 10 ஆம் திகதி தமிழின் பெருமைகளையும் பண்பாட்டின் பெருமைகளையும் பற்றி அறிஞர்கள் பேசினார்கள்.

குழுமியிருந்த இலட்சகணக்கானோர் உணர்வோடு கைதட்டி உட்சாகப்படுத்தினர். இறுதியாக  தமிழக பேராசிரியர் 'நைனா முகமது' பேசிக் கொண்டிருக்கும் போது யாழ் .  பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகரா தலைமையிலான காவற்றுறை மாநாட்டில் கலந்து கொண்ட மக்களைத் தாக்கியதுடன் துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் 09 பொதுமக்கள் உயிரிழந்தார்கள் பலர் காயமடைந்தனர். அரங்குகள் சேதமடைந்தன. இம்மாநாட்டினைக் குழப்பிய யாழ் உதவி காவற்றுறை அதிதியட்சகர் சந்திரசேகரா பின்னர் ஜனாதிபதி சிறிமாவே பண்டார நாயக்காவினால்  பொலிஸ் அத்தியட்சகராக பதவியுயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சம்பவத்தில், வேலுப்பிள்ளை கேசவராஜன்  (வயது 15),பரஞ்சோதி சரவனபவன் (வயது 26),வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32),யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52),குலேந்திரன் அருளப்பு (வயது 53),இராசதுரை சிவாநந்தம் (வயது 21),இராஜன் தேவரட்னம் (வயது 26),சின்னத்துரை பொன்னுத்துரை(வயது 56) ,சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

DSC_0147%283%29.JPG
DSC_0149%286%29.JPG
DSC_0151%281%29.JPG
DSC_0181%281%29.JPG
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.