Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழப்பத்துடன் முடிந்தது காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம்!

Featured Replies

ஊழலுக்கு எதிராக நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்களை வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவது தொடர்பாக தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், ஒருமித்த கருத்து எட்டப்படாததால், எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்ததாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நிலுவை ஊழல் மசோதாக்கள்: தில்லியில் காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டம் அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சுஷீல் குமார் ஷிண்டே, சிதம்பரம், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். உயர்நிலைக் குழுவில் இடம்பெறாத மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். எதிர்வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள நீதித் துறை பொறுப்புணர்வு மசோதா, ஊழல் பற்றிய தகவல் அளிப்போரை பாதுகாக்கும் மசோதா, குடிமக்கள் சாசனம் மசோதா, ஊழல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் வாய்ப்புகள் குறித்து இக் கூட்டத்தில் குறிப்பாக விவாதிக்கப்பட்டது.

கடைசி கூட்டத்தொடர்: அந்த மசோதாக்கள் சட்டமாக நிறைவேற்றப்பட்ட பிறகு அதன் அமலாக்கத்தை எவ்வளவு விரைவில் மேற்கொள்ள முடியும்? பிப்ரவரி இறுதியிலோ மார்ச் மாத தொடக்கத்திலோ மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டால் அதன் பிறகு புதிய சட்ட மசோதாக்களின் அமலாக்கத்தில் சிக்கல் ஏற்படுமா? என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மசோதாக்களில் சிலவற்றுக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன. இந் நிலையில், எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடர்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி கூட்டத்தொடராகும். அதில் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிறகு தேர்தல் பிரசாரத்தை முறைப்படி தொடங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பிரதமர் மௌனம்: காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுக்களில் மத்திய அமைச்சர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர்.

மக்களவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தவுடன் அவர்களை அமைச்சரவையிலிருந்து விடுவித்து, முழு நேர கட்சிப் பணிக்கு அனுப்புவது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது. ஆனால், அது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்கவில்லை.

இதேபோல, ஊழலுக்கு எதிரான நிலுவை மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற பாஜகவின் ஆதரவு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தேவைப்படும். ஆனால், தேர்தல் நெருங்கும் வேளையில் அதற்கு பாஜக ஒத்துழைக்குமா என்பது குறித்தும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் விவாதித்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், எந்த முடிவும் எடுக்காமல் மீண்டும் கூடிப் பேசலாம் எனக் கூறி கூட்டத்தை சோனியா காந்தி நிறைவு செய்தார்.

பிரதமருடன் ராகுல் சந்திப்பு

உயர்நிலைக் குழு கூடும் முன்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். அப்போது சோனியா காந்தியும் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள ஊழலுக்கு எதிரான மசோதாக்களை திட்டமிட்டபடி நிறைவேற்ற வேண்டிய அவசியம் குறித்து பிரதமரிடமும் சோனியாவிடமும் ராகுல் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கூட்டணியில் ஆர்ஜேடி!

காங்கிரஸ் கூட்டணியில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மீண்டும் இணைவது தொடர்பாக தில்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது 17-ஆம் தேதி கூட்டத்தில் பேசி முடிவு காணலாம் என்று தலைவர்கள் தெரிவித்த கருத்தை சோனியா காந்தி ஏற்றுக் கொண்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
 

http://www.dinamani.com/india/2014/01/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE/article1993798.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.