Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசின் நிறைவேற்றுச் செயலக நியமனங்கள் : உருத்திரகுமாரன் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Rudrakumran-13.jpg

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது ஆளுகைக் காலத்திற்கான நிர்வாகக் கட்டமைப்பினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 

பிரதமர் செயலகத்தினை வலுப்படுத்தும் நோக்கில் தலைமைச் செயலர், அமைச்சரவை, துறைசார் நிறுவனங்கள் என பல்வேறு நிர்வாக கட்டமைப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இப் புதிய கட்டமைப்பு கடந்த மூன்றாண்டு காலப்பட்டறிவினை அடிப்படையாகக் கொண்டும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் உறுப்பினர்களுடன் மேற்கொள்ளப்பட்ட செயலமர்வு மற்றும் அவர்களது நேரடிக் கருத்துக்கள் என்பவற்றை உள்வாங்கியும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைத் தமது தோள்களில் தாங்கி நிற்கும் எமது மக்கள் மற்றும் துறைசார் அறிஞர்களின் ஆலோசனைகளைக் கவனத்திற் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரவித்துள்ளார். 

அறிக்கையின் முழுவிபரம்: 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருநிறைவடைகிறேன். 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் தமது வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ளும் காலமாக அமையும் தைத்திருநாளில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது ஆளுகைக் காலத்தின் நிர்வாகக் கட்டமைப்பை, மக்களுக்கு வெளிப்படுத்துவதில் நான் மகிழ்வடைகிறேன். 

இப் புதிய கட்டமைப்பு கடந்த மூன்றாண்டு காலப்பட்டறிவினை அடிப்படையாகக் கொண்டும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் உறுப்பினர்களுடன் மேற்கொள்ளப்பட்ட செயலமர்வு மற்றும் அவர்களது நேரடிக் கருத்துக்கள் என்பவற்றை உள்வாங்கியும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைத் தமது தோள்களில் தாங்கி நிற்கும் எமது மக்கள் மற்றும் துறைசார் அறிஞர்களின் ஆலோசனைகளைக் கவனத்திற் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது ஆளுகைக்காலம் ஐந்து வருடங்களைக் கொண்டதாக அமைகிறது. எமது அரசியலமைப்பு விதிகளின்படி இதுவே நான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராகப் பணியாற்றும் இறுதித் தவணையாகவும் இருக்கும். ஏதிர்வரும் ஐந்து ஆண்டுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான காலகட்டமாக அமையவுள்ளன. தமிழீழ அரசு என்ற குழந்தை பிரசவிப்பதற்கான வாய்ப்புக்களைத் தன்னகத்தே கொண்டதாகவும் இக்காலம் இருக்கிறது. 

இத்தகையதொரு சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை மிகுந்த செயல்முனைப்பு கொண்ட அமைப்பாக நாம் வளர்த்தெடுப்பது மிகவும் அவசியமானதாக அமைகிறது. 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பை வீச்சாக்குவதற்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களின் பங்களிப்புக்கும் அப்பால் சென்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்கமாக நீடித்து நிலைக்கக்கூடிய பல்வேறு புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டியதும் இன்று அவசியமாக உள்ளது. 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களாக இல்லாத பல்வேறு துறைசார் நிபுணர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கட்டமைப்புகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக இன்று உள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறப்பான செயற்பாட்டை வழிநடாத்த பிரதமர் பணிமனையினைப் பலப்படுத்தி விரிவுபடுத்துவதும் முக்கியமான தேவையாக இருக்கிறது. 

இவற்றையெல்லாம் கவனத்திற் கொண்டுதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்கான கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதனை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

எனவே இத்தவணையின்போது நாடுகடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையினை எண்ணிக்கையில் குறைத்துக்கொண்டு, கடந்த தவணையின்போது அமைச்சுக்களாக இருந்த சில துறைகளைத் துறைசார் நிறுவனங்களாக மாற்றியமைப்பது எனவும் நான் முடிவு செய்திருக்கிறேன். 

பிரதமர் பணிமனையினை வலுப்படுத்தவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பிரதமர் செயலகப்பணிமனை நிர்வாகத்தின் பொறுப்புள்ளவராக ஒரு தலைமைச் செயலரை (Chief Executive Secretary) நியமிப்பது என முடிவு செய்திருக்கிறேன். அத்தலைமைச் செயலர் எனது சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிர்வாக விடயங்களுக்குப் பொறுப்பாக இயங்குவார். அதேபோல நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கட்டமைப்புக்களையும் செயற்பாடுகளையும் நாடுகள் தழுவியரீதியில் வளர்த்தெடுக்கப் பிரதமர் பணிமனைப் பிரதிநிதிகள் பலரை நாடுகள் மட்டத்தில் நியமிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய துறைசார் நிறுவனங்கள் செயற்பாட்டளவில் அமைச்சுகளுக்கு இணையான வகையில் இயங்கும். இந்நிறுவனங்கள் பிரதமர் பணிமனையால் ஒருங்கிணைக்கப்படுவதுடன் இந்நிறுவனங்களின் செவ்வையான செயற்பாட்டுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை பிரதமர் பணிமனை வழங்கிக் கொள்ளும். 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் வடிவடைப்பதற்குத் துணைசெய்யும் முகமாக, கொள்கை வடிவவமைப்புக் குழுக்களையும் பிரதமர் பணிமiனியின் கீழ் உருவாக்கியுள்ளோம். 

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பு தேவையேற்படும் போது, மேலும் விரிவு செய்யப்படும் என்பதனையும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தனித்தனிச் செயற்திட்டங்கள் (Projects) குறித்த விபரங்கள் விரைவில் மக்களுக்கு அறியத் தரப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

தற்போதுள்ள அமைச்சுகளுக்கும், நிறுவனங்களுக்கும் துணையாக, அரசவை உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களும் உருவாக்கப்படும். புதிய அரசவையில் அங்கம் வகிக்கும் அத்தனை உறுப்பினர்களும் அமைச்சர்-உறுப்பினர் என்ற வேறுபாடின்றி ஏதோ ஒரு செயற்திட்டத்தோடு தம்மை இணைத்துக்கொண்டு உற்சாகத்தோடு உழைப்பதற்குத் தம்மைத் தயார்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன். 

இப்போது கட்டமைத்திருக்கும் நிர்வாகக் கட்டமைப்பினை வருடம் தோறும் மீளாய்வு செய்து அதற்கமைய தேவையான மாற்றங்களை மேற்கோண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை செயல்வலுவுடன் முன்னெடுக்க உறுதி பூண்டுள்ளோம்.

2nd%20-TGTE.jpg

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்றுச் செயலகக் கட்டமைப்பு விபரங்கள் : 

பிரதமர்: திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் 

தலைமைச்செயலர்: பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா 

துணைப் பிரதமர்: திரு கனகரட்ணம் மனோரஞ்சன் 

அமைச்சுகள்: 

நிதி (Finance) : திரு கனகரட்ணம் ஐயந்தன் 

அனைத்துலக விவகாரங்கள் (International Affairs) : திரு கனகேந்திரம் மாணிக்கவாசகர் 

தாயக அபிவிருத்தி Homeland Development) : திருமதி பாலாம்பிகை முருகதாஸ் 

புலம்பெயர் சமூக விவகாரங்கள் (Diaspora Affairs) : திரு நிமால் விநாயகமூர்த்தி

ஊடகமும் மக்கள் விவகாரங்களும் (Media and Public Affairs) : திரு சுதர்சன் சிவகுருநாதன் 

இளையோர் மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் (Youth and Cultural Affairs) :செல்வி கார்த்திகா விக்னேஸ்வரன் 

துறைசார் நிறுவனங்கள் : 

இனஅழிப்புத் தடுப்பும் விசாரணை முயற்சிகளும் (Centre for Prevention and Prosecution of Genocide) : பேராசிரியர் முத்துக்குமாரசாமி சொர்ணராஜா 

ஏதிலிகள் நலன் மற்றும் மீள்குடியமர்வு (Center for Refugees Welfare And Resettlement) : திரு ரட்ணா முத்துக்குமாரசாமி 

பெண்கள் சிறுவர் மூத்தோர்(Center for Women, Children and Elderly) : திருமதி ரஜனிதேவி சின்னத்தம்பி 

மாவீரர் மற்றும் போராளிகள் குடும்பநலன் (Centre for Welfare of the Families of Cadres and Martyrs) : திரு செல்வராஜா ஜெயம் 

செயலகம், ஐக்கிய நாடுகள் பிரதிநிதி (Secretariat/United Nation Representative) : திரு.முருகையா சுகிந்தன் 

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- நாதம் ஊடகசேவை

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140116109789

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.