Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.வடக்கில் விரைவில் சில பகுதிகள் விடுவிப்பு; களம் இறங்கியது இராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா.மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு  கடுமையான தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் என எதிர்வு கூறல்கள் சொல்லப்படுகையில், வலிகாமம் வடக்கில் இராணுவத்தினருக்காக அரசு பறிக்க முற்பட்ட நிலப்பகுதியில் சிலவற்றை அது விரைவில் விடுவிக்க உள்ளதாக "உதயன்' அறிகிறான்.
 
இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் விரைவு படுத்தப்படவுள்ளதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் "உதயன்' பத்திரிகையிடம் உறுதிப்படுத்தினர்.
 
முதற்கட்டமாக, வலிவடக்கில் மீளக்குடியமரவெனத் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டவர்களின் விவரங்கள் அனைத்தையும் இராணுவம் பெற்றுக் கொண்டுள்ளது. 
 
அவற்றின் உண்மைத் தன்மை பற்றிக் கடந்த சில தினங்களாக இராணுவத்தினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் தற்போது வதியும் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களுக்கு இடம்பெயர்ந்தோர் விவரங்கள் அனுப்பப்பட்டு அவை ஆராயப்படுகின்றன.
 
திடீர் மாற்றம்
வலி.வடக்கில் முழுமையாகவும், பகுதியளவிலும் 24 கிராம அலுவலர் பிரிவுகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்கள், போர் முடிந்து 4 வருடங்கள் கடந்த நிலையிலும் மீள்குடியமர அனுமதிக்கப்படவில்லை. 
 
அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் நண்பர்கள், உறவினர் வீடுகளிலும், நலன்புரி நிலையங்களிலுமே வாழ்கின்றனர். தமது சொந்த இடங்களுக்குத் திரும்பத் தம்மை அனுமதிக்கும்படி கேட்டு மக்கள் பெரும் போராட்டங்களை நடத்திய போதும் இதற்கு இணங்க அரசு தொடர்ந்தும் மறுத்து வருகிறது.
 
பதிலாக அந்தப் பகுதியில் உள்ள மக்கள் காணிகள் உள்ளிட்ட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணிகளை இராணுவத் தேவைக்காகச் சுவீகரிக்கப் போவதாகவும் அரசு அறிவித்தது. 
 
இதனை எதிர்த்து மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். அரசின் நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் கடுமையான பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 
 
இதற்கான சமிக்ஞையை அமெரிக்கா ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில வாரங்களாக அரசு திடீர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக யாழ்.மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள சிறிய முகாம்கள் மற்றும் காவல் நிலையங்கள் அகற்றப்பட்டுள்ளன.
 
தற்போது வலி.வடக்கில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கையையும் அரசு துரிதப்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்து சென்ற பின்னர் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
ஜனாதிபதி வந்து திரும்பிய கையோடு இராணுவ அதிகாரிகளுக்கும் அரச அதிகாரிகளும் இடையில் கலந்துரையாடல் ஒன்று தெல்லிப்பழையில் இடம்பெற்றுள்ளது. இதில் மக்களின் மீள்குடியமர்வு தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.
 
இந்த கலந்துரையாடலின் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து வாழும் வலி.வடக்கு மக்களது விவரங்கள் இராணுவத்தினரால் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட விவரங்கள் சரியானவையா? குறித்த விவரங்களுக்குரியவர்களுக்கு வலி.வடக்கில் சொந்தக் காணி உள்ளதா? போன்ற விவரங்களை இராணுவத்தினர் கடந்த சில நாள்களாக பரிசீலனை செய்து வருகின்றனர். 
 

இந்தப் பணிகள் முடிவுக்கு வந்ததும் விரைவில் வலி.வடக்கில் சில பகுதிகள் விடுவிக்கப்படும் எனத் தெரிகிறது. எனினும் பலாலி விமானப் படைத்தளம்,  காங்கேசன்துறை துறைமுகம் அதனை அண்டிய பகுதிகளும், புதிதாக இராணுவ முகாம் அமைக்கப்பட்ட பகுதிகளும் விடுவிக்கப்படமாட்டா எனத் தெரிகிறது. 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=548362593923397750#sthash.ERxQ3WGN.dpuf

கொஞ்ச நாட்களுக்கு வடமாகாணச் செயலாளர்கள் தேவதூதர்கள் மாதிரி நடந்து தமது மேல் அதிகாரிகளாகளாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மந்திரிகளை ஒதுக்குவதற்கு ஒரு புதிய திட்டம். இது கன நாள் போக வழியில்லை. அமெரிக்காவின் கோரிக்கைகள் 6. அதில் பிரதானமானது பொறுப்புக் கூறல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.