Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூர் படுகொலை: கண்காணிப்புக் குழுவின் அறிக்கையால் அதிர்ச்சி

Featured Replies

அரச சார்பற்ற பணியாளர்கள் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம்: கண்காணிப்புக் குழு பகிரங்க குற்றச்சாட்டு

மூதூரில் பிரான்சைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கு சிறிலங்கா இராணுவத்தினரே காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பகிரங்க குற்றம்சாட்டியுள்ளது.

இப்படுகொலை தொடர்பில் இன்று புதன்கிழமை கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் இடம்பெற்றுள்ளவை:

இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பணி விலகிச் செல்லும் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன், "இது படுகொலைச் சம்பவம்' என்றும் "உலக அளவில் மனிதாபிமான பணியாளர்களைப் படுகொலை செய்துள்ள மிக மோசமான செயல்" என்றும் கூறியுள்ளதாக அசோசியேற்றற் பிறஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்த சம்பவங்களில் சிறிலங்கா இராணுவத்தினரைத் தவிர வேறு எந்த ஆயுதக் குழுக்களும் பின்னணியில் இருப்பதாக எமது விசாரணைகளில் தெரியவில்லை" என்று கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

17 பணியாளர்கள் படுகொலை தொடர்பிலான விசாரணைகளைச சிறிலங்கா அரச அதிகாரிகள் தடுக்க முனைந்தனர் என்றும் படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் அனைவருமே இராணுவத்தினர் மீதே குற்றம்சாட்டி வருகின்றனர் என்றும் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

"பால்கன் நாடுகளில் இத்தகைய சம்பவங்களை சந்தித்த அனுபவம் உள்ளது" என்றும் இரு வாரங்களுக்கு முன்னதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் உல்ப் ஹென்றிக்சன் கூறியுள்ளார்.

"மூதூர் பிரதேசம் முழுமைக்கும் எம்மைப் பார்வையிட இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. ஆனால் ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஏன்? பாதுகாப்புக் காரணங்களா? இல்லை. வேறு சில காரணங்கள்" என்றும் உல்ப் ஹென்றிக்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

puthinam.com

--------------------

Military 'killed Lanka aid staff'

The aid workers were found shot dead in Muttur in the north-east

Truce monitors in Sri Lanka have accused the military of killing 17 local employees of a French charity.

The deaths this month of the Action Against Hunger workers were "a gross violation of the ceasefire accord by the security forces", monitors said.

They were "convinced" no other armed group could have been behind the killings near Muttur in the north-east.

A government spokesman angrily rejected the allegation, calling it "pathetic and biased".

Keheliya Rambukwella told AP news agency: "We deny it and it's a totally baseless statement that the head of the [monitoring mission] has made.

"They have no right to make such a statement because they are not professionals in autopsy or post-mortem."

The aid staff - all but one ethnic Tamils - were working on tsunami relief projects in an area that had seen several days of fighting between Tamil Tiger rebels and government troops

bbc.com

  • கருத்துக்கள உறவுகள்

மூதூர் படுகொலை: கண்காணிப்புக் குழுவின் அறிக்கையால் அதிர்ச்சியில் சிறிலங்கா அரசாங்கம்

[வியாழக்கிழமை, 31 ஓகஸ்ட் 2006, 06:58 ஈழம்] [கொழும்பு நிருபர்]

மூதூரில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியிருப்பதையடுத்து சிறிலங்கா அரசாங்கம் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறது.

மூதூர் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையிலே அப்பகுதியில் எவரையும் அனுமதிக்கவில்லை. மூதூர் படுகொலைக்கு இராணுவம்தான் பொறுப்பு என்று அவர் கூறவேண்டியதில்லை. அவருடன் இது தொடர்பில் உரையாட வேண்டியதுள்ளது என்று சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

தற்போது லண்டனில் உள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்ச மங்கள சமரவீர,

சிறிலங்கா காவல்துறையினரது விசாரணை, தடவியல் சோதனை முடிவுகள் வெளிவராத நிலையில் இராணுவத்தினர் மீது கண்காணிப்புக் குழு குற்றம் சுமத்தியுள்ளது.

இதற்காக உல்ப் ஹென்றிக்சன் பொய்யர் என்று சொல்லமாட்டேன். அது பொறுப்பற்ற அறிக்கை. இசைக்கு அப்பால் ஒருவர் பாடுகிறார் என்பதற்காக பாடலை மோசம் என்று கூறமாட்டோம். அதுபோல்தான் கண்காணிப்புக் குழுவும்.

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். தற்போதைய நிலைமைகளில் கண்காணிப்புக் குழுவினரது பங்கு காத்திரமானது. இச்சூழ்நிலையில் கண்காணிப்புக் குழுவினர் பக்கச்சார்பற்று சுயாதீனமான முறையில் செயற்பட வேண்டும் என்றார்.

நீதித்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கண்காணிப்புக் குழுவினரது அறிக்கையானது எமக்கு இடையூறு செய்துள்ளது. நீதித்துறை விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏன் அவசரமாக இந்த முடிவுக்கு கண்காணிப்புக் குழுவினர் வந்தனர் என்று சமதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறுகையில்,

இத்தகைய முடிவுகளை வெளியிட கண்காணிப்புக் குழுத் தலைவர் தகுதியற்றவர்.

படுகொலைச் சம்பவம் நடந்த பிரதேசமானது ஓகஸ்ட் 2 முதல் 5 ஆம் நாள் வரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. படுகொலையானது 3 ஆம் நாள் இரவு அல்லது 4 ஆம் நாள் காலை நடைபெற்றிருக்கக்கூடும் என்றார்.

கண்காணிப்புக் குழுவினரது அறிக்கையை நிராகரிப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தகவல் திணைக்களம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28557

படுகொலைச் சம்பவம் நடந்த பிரதேசமானது ஓகஸ்ட் 2 முதல் 5 ஆம் நாள் வரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. படுகொலையானது 3 ஆம் நாள் இரவு அல்லது 4 ஆம் நாள் காலை நடைபெற்றிருக்கக்கூடும் என்றார்

மூதுரை புலி பிடிக்கவைல்லை என்றார்கள் அப்ப என்னது இது. :lol::lol:

அதிர்ச்சியோ?? யாருக்கு...!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.