Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சலுகை அரசியலை நம்பும் இந்தியா!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சலுகை அரசியலை நம்பும் இந்தியா!!

 

ஈழப்போராட்டத்தில் முடிவில்லாத துரோகங்களைச் செய்து கொண்டிருக்கின்ற இந்திய மத்திய அரசு சலுகைகள் மூலம் மீண்டும் மீண்டும் தமிழ் மக்களது மனங்களை வென்றுவிடலாமென நம்புகின்றது. ஆனால் சலுகை அரசியலை நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் நிராகரித்து விட்ட போதும் அதனையே இந்திய அரசு முன்னெடுத்து செல்கின்றது.

jaffna_indian_cons_20141.jpg

இந்திய குடியரசு நிகழ்வு யாழ்பபாணத்தினில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை துணை தூதுவரலாயத்திலும் மாலை விடுதி ஒன்றிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மாலை நிகழ்வில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் மற்றும் ஆளுநர் சந்திரசிறி ஆகியோருடன் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். வருகை தந்திருந்த ஆளுநரைத் தர்மசங்கடத்துடன் வரவேற்றிருந்தார் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன். எனினும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற அங்கத்தவர்களை காணமுடியவில்லை.

jaffna_indian_cons_20142.jpg
நிகழ்வில் துணைத் தூதர் மகாலிங்கம் தனதுரையில் யாழ்ப்பாணத்தில் இத்துணைத் தூதரகத்தை ஆரம்பித்து மூன்று வருடங்களுக்கு அதிகமாகக் கடந்துவிட்டது. இது நாம் கொண்டாடும் 4ஆவது குடியரசு தினமாகும். நாம் குறுகிய காலத்தில் எமது அடைவுகளை நிச்சயமாக பெருமையுடன் திரும்பிப் பார்க்க முடியும். நான் உள்ளிட்ட மூன்று அலுவலர்களுடனேயே இது ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் முழுமையான அனுமதியளிக்கப்பட்ட மனிதவளத்தைப் பெற இரண்டு வருடங்களுக்கு அதிகமான காலத்தை எடுத்துக்கொண்டது. ஆனால் அதிகாரிகளின் பற்றாக்குறை பற்றிக் குறை கூறிக்கொண்டிருக்கவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு தணிக்கமுடியாத ஆர்வத்துடன் சேவைகளைத் தொடர்ந்தோம். ஒருபக்கத்தில் விளைதிறனுடனும் வினைத்திறனுடனும் செயற்பட அலுவலகத்துக்கு உட்கட்டுமானத்தைச் சேர்க்கவேண்டியிருந்தது. மறுபக்கம் பல்வேறு அபிவிருத்திச் செயற்றிட்டங்களை விரும்பத்தக்க விதத்திலும் விரைவாகவும் செய்வதற்கு பொறுப்பெடுக்கவேண்டி இருந்தது.
அனைத்துச் செயற்றிட்டங்களிலும் மிகமுக்கியமானதாக இந்திய வீட்டுத்திட்டம் அமைகிறது. முழு வட மாகாணத்திலும் 25 பிரதேசங்களில் பரந்து காணப்பட்டதாலேற்பட்ட கஷ்டங்களிருந்தபோதும் முதல் கட்ட 1000 வீடுகள் எனும் திட்டமானது ஜூலை 2012 இல் பூர்த்திசெய்யப்பட்டது. இரண்டாம் கட்டமான 43000 வீடுகள் எனும் திட்டமானது ஒக்டோபர் 2012இல் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரையில் 10250 வீடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

jaffna_indian_cons_20143.jpg
வடக்குப் புகையிரதத் தட மீளமைப்புப் பணிகள் சிறப்பான பொதுத்தறைக் கம்பனியால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் திட்டத்தின் எதிர்பார்ப்புத் திகதிக்கு முன்பாகவே பாரிய முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது. பளை வரையான இரும்புப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்தேவி கடுகதி புகையிரதம் ஒருசில மாதங்களில் யாழ்ப்பாணத்தை வந்தடையும் என ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிஜமாக்கும் பணியில் இங்கு வந்துள்ள இந்திய ரயில்வே கட்டுமான கம்பனியின் அதிகாரிகளுக்கு அவர்களது அர்ப்பணிப்புக்காக பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் 25 ஏக்கர் பகுதியானது தேவையான உட்கட்டமைப்புடன் விரைவில் தொழிற்பாட்டுக்குவரவுள்ளது. இது இந்திய மானிய உதவித்திட்டத்தின் கீழ் கட்;டப்படுகிறது. வடகடல் மீன்வலைத் தொழிற்சாலையானது இந்திய அரசால் வழங்கப்பட்ட இயந்திரத் தொகுதியினால் கடந்தவருடத்திலிருந்து தனது உற்பத்தியை 5 மடங்கால் அதிகரித்துள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்ட்டடிருந்த 1320 சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்கள் தமது வியாபாரத்தை இந்திய அரசின் உதவியுடன் மீள அரம்பித்தன. இந்திய அரசின் நிதியுதவியுடன் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் கட்டப்படும் 200 படுக்கைகளையுடைய மருத்துவ விடுதிக்கட்டுமானம் நிறைவடையும் நிலையிலுள்ளது.

jaffna_indian_cons_20144.jpg
யாழ்ப்பாண கலாச்சார நிலையக் கட்டுமானம், மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயில் புனருத்தாரணம், துரையப்பா விளையாட்டரங்க மறுசீரமைப்பு, மொழி ஆய்வுகூடம் அமைத்தல், கைவினைக் கிராமம் அமைத்தல் போன்ற பல்வேறு செயற்றிட்டங்கள் வௌ;வேறு கட்டங்களிலுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக நூற்றுக்கணக்கான புலமைப்பரிசில்கள் இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் கல்வியைத் தொடரவென வழங்கப்படுகின்றன. இந்தப்பட்டியல் முடிவில்லாதது..

இத்துணைத் தூதரகத்தைப்போலவே யழ்ப்பாணத்தில் 3 வருட சேவையைக் கடந்துள்ள இந்தியன் வங்கியுடன் ஸ்டேட் பாங்க் ஒவ்(க) இந்தியாவும் தனது கிளையை சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்தது என்பதை அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். எல்ஐசி இந்தியாவை தாய் நிறுவனமாகக் கொண்ட எல்ஐசி லங்கா நிறுவனம் அண்மையில் மேலும் இரு கிளைகளை யாழ் மாவட்டத்தில் ஆரப்பித்துள்ளது. இந்திய எண்ணைக் கொம்பனியும் தனது வலையமைப்பை வடமாகாணத்தில் விரிவாக்குகிறது.

ஆயுதப்  பிணக்குகளால் 3 தசாப்தங்கள் நீடித்த வடமாகாண மக்களின் துயரங்களைப்போக்க என்னென்ன புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு செயற்பாடுகளை செய்தோம் என்பதை சக பிரஜைகளுக்கு தெரியப்படுத்துவது எனது கடமை என நான் எண்ணினேன். எதிர்காலத்திலும் இந்திய அரசானது வட மாகாண மக்கள் வாழ்வையும் அவர்கள் வாழ்வாதரத்தையும் மேம்படுத்தும் ஒரு நம்பிக்கையான பங்காளியாகத் தொடர்ந்தும் செயற்பட உறுதிபூண்டுள்ளது எனத்தெரிவித்தார்.

 

நன்றி - பதிவு

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.