Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் அரசாங்கத்தைக் காப்பாற்றத் தயாரில்லை! – கைவிரித்தது ஐதேக.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
wejedasa-310114-150.jpg

போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.'வடக்கு மாகாணசபைக்கு சர்வதேச தலையீட்டை கோருவதற்கான தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற அரசியலமைப்பின்படி அதிகாரம் இல்லை. 'யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்குவதாக அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதபடியாலேயே, வடக்கு மக்கள் தங்களின் கருத்தை தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

  

யுத்தம் முடிந்த பின்னர். வடக்கு மக்களுக்காக அரசு என்ன செய்ய வேண்டும் என்று எமது நாட்டின் எல்எல்ஆர்சி அறிக்கை பரிந்துரை செய்திருக்கும்போது, அவை தொடர்பில் எமது நாட்டின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சர்வதேச சமூகத்துக்கு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கி விட்டு அவற்றை நிறைவேற்றாமல் இருக்கின்றனர். வடக்கின் அபிவிருத்தியே தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு என்று அரசாங்கம் காட்ட முயல்கிறது. 'தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் சிலரை கொண்டு சென்று, வடக்கு மக்கள் அரசாங்கத்துடன் தான் இருக்கிறார்கள்' என்று சர்வதேசத்துக்கு இந்த அரசு காட்டப்பார்க்கிறது.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணையை நடத்த ஐநா தலைமைச் செயலர் பான் கி மூனுக்கு அதிகாரம் அளிப்பதாக அரசாங்கம் ஏற்கனவே உடன்பட்டிருக்கிறது. அதனை பல்வேறு ராஜதந்திர தகவல் பரிமாற்றங்களில் அரசு உறுதிசெய்திருக்கிறது. இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையே நடந்துள்ள நேரடியாக தகவல் பரிமாற்றங்களையும் அரசு வழங்கிய உறுதிமொழிகளையும் அடியொற்றியே இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை ஜெனீவா கவுன்சிலுக்கு வருகிறது,அதில் நாட்டின் எதிர்க்கட்சிகளுக்கு பங்கு இல்லை. எனவே, ஜெனீவாவில் இலங்கை மீது வரவுள்ள புதிய தீர்மானத்தை அரசாங்கம் தனியாகவே எதிர்கொள்ள நேரிடும் என்றும் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=102583&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.