Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியும் சிறிலங்காவை நம்ப முடியாது, அனைத்துலக விசாரணையே ஒரே வழி – நிஷாவிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sam-13.jpg

போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் சுதந்திரமானதும், நியாயமானதுமான உள்ளக விசாரணையை நடத்தப் போவதில்லை என்றும், எனவே, அனைத்துலக விசாரணையை நடத்துவதே ஒழி வழி என்றும், அமெரிக்காவிடம் தமிழைத் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

நேற்று இரவு அமெரிக்க உதவி இராஜாங்கச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலுடன், கொழும்பில் நடத்திய சந்திப்பிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இதனை வலியுறுத்தியுள்ளனர். 

அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நேற்று இரவு 7 மணி தொடக்கம் 8 மணி வரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. 

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசனும் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பில், வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலை குறித்தும் தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும், அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஷாவுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. 

“சிறிலங்கா அரசாங்கம், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவோ, போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்தோ உரியவகையில் விசாரணைகளை நடத்தவில்லை. 

சுதந்திரமான- நியாயமான விசாரணையை நடத்தும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. 

இதனால், எதிர்காலத்தில் சிறிலங்கா அரசாங்கம் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ளும் என்று நம்பிக்கை வைக்க முடியாது. 

எனவே அனைத்துலக விசாரணையே தவிர்க்க முடியாதது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் ”என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நிஷா பிஸ்வாலிடம் வலியுறுத்தியுள்ளது. 

இந்தச் சந்திப்புக் குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள, இரா. சம்பந்தன், ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் தொடர்பாக, அமெரிக்கப் பிரதிநிதி நிஷா பிஸ்வால் எம்முடன் பேச்சு நடத்தினார். 

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பின்னர் களநிலவரம் எப்படி உள்ளது என்று நிஷா பிஸ்வால் கேட்டறிந்து கொண்டார். 

சிறலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள், சிறிலங்கா இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், எமது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

அவர் உறுதிமொழி வழங்குவதற்காக இங்கு வரவில்லை, அவர் இங்கு வந்தது விடயங்களை அறிவதற்காக, அவரது பயணத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்யத்தக்க வகையில் சொல்ல வேண்டிய விடயங்கள் அத்தனையையும் சொல்லியிருக்கிறோம். என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140201109880

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.