Jump to content

பெயரும் பெயர்க் காரணமும்...


Recommended Posts

நாம் மகன்/ மகள் வீட்டுப் பிள்ளைகளை பொதுவாக பேரன்... பேரப் பிள்ளைகள் என்று கூறுவோம். உண்மையில் பேரன் என்பது பெயரைத் தாங்கி நிற்பவன் என்பதன் சுருக்கமே ஆகும். போன தலைமுறையில் வைத்த பேர்களை பார்த்தோமானால் பெரும்பாலும் அவர்கள் பரம்பரையில் வந்த பாட்டன் பூட்டன் பெயராகவே இருக்கும். இதைப் போலவே ஊர்ப் பேர்களும் பல வரலாறுச் செய்தியை தாங்கி நிற்பன...

தினம் தினம் எத்தனையோ ஊர்களை கேள்விப்படுகிறோம் / கடந்து செல்கிறோம். ஒவ்வொரு ஊர்ப் பெயரும் ஒரு வரலாறுச் செய்தியை தாங்கி நிற்பதை நாம் அறியோம். சில நேரங்களில் ஒரு மாதிரியாக ஊர்ப்பெயர்கள் இருப்பதை அவதானிக்கலாம். அப்படியெனில் அந்த ஊர்களுக்குள் ஏதோ ஒரு பொதுவான செய்தி ஒளிந்திருக்கும். உங்களுக்கு தெரிந்த பழமையான ஊர்ப்பெயரையும் அந்த ஊர் தாங்கியுள்ள வரலாற்று செய்தியையும் பகிர்ந்து கொள்ளவே இந்த திரி.

ரா. சேதுப்பிள்ளை  எழுதிய ஊரும் பேரும் என்ற நூலில் இருந்த சில தகவல்களுடன் நான் அறிந்த சிலவற்றியும் இணைத்துள்ளேன். முதலில் பொதுவாக ஊர்ப் பெயர்கள் எப்படி வைக்கப்படுகிறது என்று பார்த்து விடுவோம்.

மலை
தமிழில் மலை என்ற சொல் ஓங்கி உயர்ந்த இடத்தையும், அதனின் குறைந்தது குன்று என்றும், அதனினும் குறைந்தது பாறை அல்லது கல் என்று அழைக்கப்படும். குன்றுக்கு அருகே அமைந்துள்ள சில ஊர்கள்

பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையின் அருகே ஆனை மலையும் சிறு மலையும் பசுமலையும் அமைந்திருக்கின்றன. ஆனை மலையில் முற்காலத்தில் சமண முனிவர்கள் பெருந் தொகையினராய் வாழ்ந்தார்கள்.  சென்னைக்கு அருகேயுள்ள பரங்கிமலையில்  இருநூறு ஆண்டுகளுக்கு முன் பரங்கியர் என்னும் போர்ச்சுகீசியர் அங்கே குடியிருப்புக் கொண்டமையால் அப்பெயர் அதற்கு அமைந்ததென்பர்

குன்று
குன்றின் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டிற் பல உண்டு. குன்றை அடுத்துள்ள ஊர் குன்றூர் என்றும், குன்றத்தூர் என்றும்,குன்றக்குடி என்றும் பெயர் பெறும். அப்பெயர்களிலுள்ள குன்றம் பெரும்பாலும் குன்னம் என மருவி வழங்கும். நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும்.
திருப்பரங்குன்றம், நெற்குன்றம், நெடுங்குன்றம், குன்றக்குடி, குன்னூர், கழுங்குன்றம்

கல்
திண்டுக்கல் முன்னாளில் சிறந்ததோர் அரணாக விளங்கிற்று. பாண்டி நாட்டுக்கும், கொங்கு நாட்டுக்கும் இடையேயுள்ள கணவாய்களைப் பாதுகாப்பதற்குத் திண்டுக்கல் கோட்டை பெரிதும் பயன்பட்டதாகத் தெரிகின்றது. சேலம் நாட்டில் நாமக்கல் என்ற ஊர் உள்ளது. ஆரைக்கல் என்பது அதன் பழம் பெயராகும். ஆரை என்ற சொல் கோட்டையின் மதிலைக் குறிக்கும். ஆதலால், அவ்வூரிலுள்ள பாறையின் மீது முற்காலத்தில் ஒரு கோட்டைஇருந்தது எனக் கொள்ளலாம்

--> தட்டப்பாறை, குட்டப்பறை, பேச்சிப்பாறை

காடு
தமிழ் நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களக்காடும் பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். தொண்டை நாட்டில் பழையனூருக்கு அணித்தாக உள்ளது திருவாலங்காடு. பொன்னேரிக்கருகே உள்ளது பழவேற்காடு. கருவேல மரங்கள் நிறைந்திருந்த பழமையான காடு பழவேற்காடு எனப்பட்டது போலும். சோழ நாட்டில் பாண்டியன் நெடுஞ் செழியனுக்கும் ஏனைய தமிழரசர் இருவருக்கும் பெரும் போர் நிகழக் கண்ட காடு தலையாலங்காடாகும். சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து
ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள்.

ஆறு
ஆறில்லா ஊருக்கு அழகில்லை என்ற பழமொழிக்கேற்ப நெய்தல் நில மக்கள் வாழும் ஆற்றங்கரையோர அழகான ஊர்கள் ஆறு என்று முடியும். 
அடையாறு (சென்னையில் உள்ளது), திருவையாறு, மணிமுத்தாறு, செய்யாறு

ஆறுகளில் மக்கள் இறங்கி நீராடுவதற்கேற்ற  இடம் துறை எனப்படும். சில துறைகளின் இயற்கை அழகு அவற்றின் பெயரால் அழைக்கப்படும்.  
மயில்கள் ஆடும் துறை "மயிலாடுதுறை" மந்திகள் கொஞ்சி குலவும் துறை "குரங்காடு" எனவும் அழைக்கப்படுகிறது. அதேபோல் ஆடுதுறை, கடம்பந்துறை, மாந்துறை, பூந்துறை, குறுக்குதுறை என்னும் பல ஊர்கள் உள்ளன.

கூடல்
ஆறுகள் கூடுந் துறைகளைப்  கூடல் என்று அழைத்தார்கள். தொண்டை நாட்டில் பாலாறும், சேயாறும், கம்பையாறும் சேருகின்ற இடத்தில் அமைந்த ஊர் திருமுக்கூடல் என்று பெயர் பெற்றது. நெல்லை நாட்டில் தாமிரவருணியும், சித்திரா நதியும், கோதண்டராம நதி என்னும் கயத்தாறும் ஒன்றுசேர்கின்ற இடம் முக்கூடல் என முற்காலத்தில் சிறந்திருக்கிறது. முக்கூடற் பள்ளு என்னும் சிறந்த நாடகம் அவ்வூரைப்பற்றி எழுந்ததேயாகும். சோழநாட்டில் கெடில நதியும் உப்பனாறும் கலக்கின்ற இடத்திற்கு அருகேயமைந்த ஊர் கூடலூர் என்று பெயர் பெற்றது. தென்னார்க்காட்டில் வெள்ளாறும், முத்தாறும் கூடுகின்ற இடத்தில் கூடலையாற்றூர் என்ற ஊர் அமைந்திருக்கின்றது.

பட்டி
பட்டி என்னும் சொல் முல்லை நிலத்து ஊர்களை குறிக்கும். தமிழகத்தில் பெரும்பாலும் இவ்வகையான ஊர்கள் பாண்டிய நாட்டில் தான் அதிகமாக உள்ளது. பட்டி என்னும் சொல்லுக்கு தொழுவம், ஆட்டுக்கிடை, பசுக்கொட்டில் என்ற பொருள்களை தருகின்றன. முல்லை நிலத்து மக்கள் ஆயன், ஆச்சியர் அவரகளது தொழில் ஆநிரைகளை மேய்ப்பதுதானே??
(எ. கா) ஆண்டிப்பட்டி, உசிலம்ப்பட்டி, கோவில்பட்டி, கல்லுப்பட்டி இன்னும் ஆயிரக்கணக்கான ஊர்கள் பட்டியில் உள்ளன.

குடி
உறவு முறையுடைய பல குடும்பத்தார் ஒரு குடியினராக கொள்ளப்படுவர். இத்தகைய குடும்பத்தினர் சேர்ந்து வாழுமிடம் குடியிருப்பு அல்லது குடி என்று அழைக்கப்படும்.
(எ. கா) கற்குடி, விற்குடி, இளையான்குடி, செங்குடி, வேள்விக்குடி .... 

இனிமேல் சுவாரஸ்யமான சில பழமையான ஊர்ப் பெயர்களையும் அது தாங்கிய வரலாற்றுச் செய்திகளையும் பார்ப்போம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஈரத்தீ" திரைப்பட வெளியீட்டின் போது   05/09/2005   நிதர்சனப் போராளியும் தமிழீழ நுண்கலைக் கல்லூரி மாணவியுமான (??) புகழினியின் பரத நாட்டிய நடன நிகழ்ச்சியும் இதே நிகழ்வின் போது இடம்பெற்றது.     "அம்மா! நலமா?" திரைப்படம் திருமலையில் வெளியிடப்பட்ட போது 10/04/2004     தமிழீழ பொருளாதார மேம்பாட்டு அமைப்பின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் திரு.தர்மன் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்   '(இடது-வலது) திரு.தர்மன், திரு.ராதா, திரு.கே.சிவபாலன், திரு.எஸ்.வில்வரெட்ணம், திரு.நிலத்தமிழின்தாசன் மற்றும் திரு.நந்தினி சேவியர் ஆகியோர் காணப்படுகின்றனர்.'     'இந்நிகழ்வில் சட்டத்தரணி திரு.கே.சிவபாலன் உரையாற்றுகிறார்'   'இந்து தலைமை குரு பிரமசிறி ரவிச்சந்திரகுருக்களுக்கு "அம்மா நலமா?" படத்தின் முதல் பிரதியை திரு.ராதா வழங்குகிறார். '   'விழாவில் பேசிய தமிழீழத் திரைப்பட வழங்கல் பிரிவுப் பொறுப்பாளர் திரு.ராதா '       திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் முகப்பில் தமிழீழ வரைபட நிழலுருப்படம் வைக்கப்பட்டுள்ளது   மாவீரர் வாரம், 2004         தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்  திறந்து வைக்கப்பட்டது: 26/11/2005                       தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2004/10         அக்கினிப்பறவைகள் பாகம் 02 வெளியீட்டு விழா 01/10/2004     'மாவீரர் ஒருவரின் தாயாரிற்கு முதலாவது CD வழங்கப்படுகிறது, எழிலனால்'         தலைநகரின் தம்பலகாமம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக பேரணி செய்த போது 28/03/2004     இதைச் "சிறு பொங்கு தமிழ்" என்றும் அக்காலத்தில் அழைத்தனராம்.     லான்ட்மாஸ்டரில் சின்னச்சிறுசுகள்         கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி தாக்கிய 9 கடற்கரும்புலிகளுள் ஒருவரான தம்பலகாமத்தைச் சேர்ந்த கடற்கரும்புலி கப்டன் சுபாஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார், சம்பந்தன் அவர்கள்.     தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது மாவீரரான புலிவீரர்களுக்கு வீரவணக்கம் செய்யும் சிங்கள வன்வளைப்பு வாழ் தமிழீழ மக்கள்  
    • புலிகளின் குரல் வானொலியின் செய்மதி பரப்பலை தொடக்க விழா   04/03/2007   "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களே இதற்கான தொலைநோக்கு பார்வையை வழங்குவதிலும், இயக்கத்திற்கான நவீன தகவல் தொடர்பு வலையமைப்புகளை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதிலும் முக்கிய பங்காற்றினார் என்று இதன் தொடக்க விழாவில் பிரி. தமிழ்ச்செல்வன் கூறினார். வானொலி சேவையானது யூரோஸ்டாரைப் பயன்படுத்தி 11.506 GHz குறியீட்டு வீதம் 2894, செங்குத்து முனைவாக்கல் (Vertical Polarization), அதாவது தமிழீழத் தேசிய தொலைக்காட்சி (NTT) பயன்படுத்தும் அதே அதிர்வெண்களைப் பயன்படுத்தியிருந்தது, தொடக்கத்தில்.  உள்ளூர் நேரப்படி காலை 6:30 மணி முதல் 9:00 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் 9:30 மணி வரை இரண்டு பிரிவுகளாக ஒளிபரப்பாகியது. தகவல் மூலம்: தமிழ்நெற் இளங்குமரன் (பேபி) குத்துவிளக்கு ஏற்றுகிறார்               07/08/2006   தவிபு கட்டுப்பாட்டிலிருந்த மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்றுக் கோட்டங்களில் இடம்பெயர்ந்து வசித்து வரும் இலட்சக்கணக்கான தமிழ் & தமிழ் பேசும் முஸ்லீம்கள் (அ சோனகர்) மக்களுக்கு சமைத்த உணவுகள், உலர் உணவுகள், பால் உணவுகள் மற்றும் மனிதநேய உதவிகளை வழங்குவதில் தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (ரி.ஆர்.ஓ) ஈடுபட்டிருந்தது. இம்மக்கள் ஓகஸ்ட் மாதம் (1-5) தவிபு மற்றும் சிறிலங்கா படைத்துறைக்கு இடையிலான சமரால் இடம்பெயர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழ் மக்கள் புனித வளனார் வித்தியாலயத்திலும் சோனகர் சகிரா கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.   'இடம்பெயர்ந்திருந்த ஒரு சோனக மூதாட்டி ஏதிலிக்கு த.பு.க. மாவட்ட துணைத் தலைவர் திரு. சி. குமரகுருபரன் அவர்கள் இடருதவிப் பொருட்களை வழங்குகிறார்'   'சகிரா கல்லூரியில் தங்கியிருந்த சோனக ஏதிலிகளுக்கு த.பு.க. இடருதவிப் பொருட்களை வழங்குகின்றனர்.'   'பாடசாலையில் இடம்பெயர்ந்திருந்த தமிழ் ஏதிலிகளுக்கு த.பு.க. இடருதவிப் பொருட்களை வழங்குகின்றனர்.'         கடற்புலிகளின் அரசியல்துறை அம்பாறை மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு எட்டு இலட்சம் ரூபாவை வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கியது. திருக்கோவிலில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் காரியாலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி கதிராமன் அவர்களினால் கூட்டமைப்பின் தலைவர் திரு. இளையதம்பி துரைராசா அவர்களிடம் பணம் கையளிக்கப்பட்டது. " இந்தப் பணம் எமது தலைவரின் சிறப்பு தேசிய நிதியிலிருந்ததானது ஆகும். தென்கிழக்கு கரையோரத்தில் மீனவ சங்கங்களை கட்டியெழுப்புவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இந்த நன்கொடை வழங்கப்படுகிறது", என கடற்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறையின் பொறுப்பாளர் திரு. எஸ். இலக்கியன் இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.     'திரு. துரைராசாவிடம் எம்.பி தங்கேஸ்வரி பணத்தை கையளிக்கிறார். (இ-வ) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரான திரு. தி.கனகசபை, கடற்புலி திரு. இலக்கியன், நாடாளுமன்ற உறுப்பினரான திரு. பி. அரியநேந்திரன், திரு. எஸ்.ஜெயானந்தமூர்த்தி.'         திருமலை மாவட்ட திட்டமிடலிற்கும் மேம்பாட்டிற்குமான செயலகம்  திறப்பு விழா 12/04/2006   'தலைநகரின் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன்'   'தலைநகரின் படைத்துறைக் கட்டளையாளர் பிரிகேடியர் சொர்ணம்'         லெப். கேணல் குட்டிசிறியின் சிலை திறக்கிறார்கள்  16/01/2007 பரந்தன் சந்தி, கரைச்சி வடக்கு, கிளிநொச்சி     குத்துவிளக்கேற்றி திறந்துவைப்பவர் செந்தில் (மட்டுவைச் சேர்ந்த கட்டளையாளர் ஒருவர்) ஆவார். பின்னால் வரியில் நிற்பவர் CASR கட்டளையாளர் கேணல் கோபித் ஆவார்.                 சரணடைந்த சிங்களப் போர்க் கைதிகளை சந்திக்கும் பெற்றார் மற்றும் உறவினர்    07/03/2007   சிங்களப் போர்கைதிகள் ஐவரின் பெயர் விரிப்பு: கடற்படையினரான இந்திக்க பிரசாந்த பிட்டியகுபுருவ,சமந்த குமார ஹேவகே, கமல் ஹேமந்த குமாரசிறி, அனில் பிரியங்கே மடதெனிய மற்றும் தரைப்படையினனான சமந்த வீரசிங்கே           தலைநகரின் நடைமுறையரசின் ஆட்புலத்தினுள் அத்துமீறி நுழைந்த இரு முஸ்லிம் ஊர்காவலர்கள் புலிகளால் 14/06/2006 கைதுசெய்யப்பட்டனர்.     உசாவலுக்குப் இன்னர் இருவரும் 22/03/2006 தமிழீழக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.             பின்னர் 23/06/2006 மூதூர், சம்பூரில் வைத்து முஸ்லிம் நிகராளிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். வெள்ளைக்காரர்: இ.போ.க.ச. திருமலை பொறுப்பாளர் திரு. ஓவ் ஜான்சென்       கிளி. நாச்சிக்குடாவில் தமிழ்பேசும் சிறார்களுக்கென திறக்கப்பட்ட முன்பள்ளி 21/03/2006       போரூட் அமைப்பின் நிதியுதவியுடன் திறந்துவைக்கப்பட்ட இக்கட்டிடத்திற்கான நிலத்தை இப்ராகிம் முகமது காசிம் என்பவர் அன்பளிப்பாக வழங்கினார். அவரே கல்வெட்டையும் திரைநீக்கம் செய்தார். நாடாவை போரூட் அமைப்பின் திட்ட முகாமையாளர் ஆறி எரிகசன் வெட்டித் திறந்துவைத்தார்.  
    • பெண் போராளிகளால் இயக்கப்படும் கணையெக்கி ஏவுநிலையினுள் கணையெக்கியை சரிசெய்யும் போராளிகள் 120 மிமீ கணையெக்கி            
    • 120 மிமீ கணையெக்கியுடன் குட்டிசிறி மோட்டார் படையணியின் மகளிர் பிரிவுப் போராளிகள் 16/02/2005            
    • 120 மிமீ கணையெக்கி  குட்டிசிறி மோட்டார் படையணியின் மகளிர் பிரிவு கணையெக்கிக்காரிகள்     "எந்தப் பகைவரும் போரும் புலிகளின் இந்தப்படை கலங்காது தமிழ் ஈழம் வரும்வரை எங்கள் படையணி ஏதும் மயக்கமுறாது "          
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.