Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போன தனது கணவன் இராணுவமுகாம்களில் வேலை செய்வதனை தனது உறவினர் நண்பர்கள் கண்ணுற்றனர் –

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி சாட்சியம்-

GTN%20Flash%20News_CI.jpg

காணாமல் போன நபர் ஒருவரை இராணுவத்தினர் இராணுவ முகாம்களின் வேலைகளுக்காக பயன்படுத்திவந்தமை தொடர்பிலான சாட்சியம் ஒன்று இன்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அளிக்கப்பட்டுள்ளது.

வாகனச் சாரதியாகச் செயற்பட்ட சாவக்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த தம்பையா தர்மராஜன் என்பவர் கடந்த 2006-08-08 அன்று சிற்றூர்தி ஒன்றில் பருத்தித்துறை கனகம்புளியடிப் பகுதிக்கு சென்றிருக்கின்றார். இந்நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார். 

அவர் தனது சாட்சியத்தில், 2006-08-08 அன்று பருத்தித்துறை கனகம்புளியடிக்குச் சென்ற கணவரை மணற்காடு இராணுவ முகாமுக்கு முன்பாக பிற்பகல் 3மணி முதல் மாலை 6 மணிவரையில் தமக்குத் தெரிந்தவர்கள் கண்ணுற்றிருந்ததாக தெரிவித்திருக்கின்றார். அதன் பின்னர மூன்று மாதம் கழித்து தன்னுடைய உறவினர் ஒருவர் காங்கேசன் துறை துறைமுகம் ஊடாக கொழும்பு செல்ல முற்பட்ட வேளை தன்னுடைய கணவனான தர்மராஜன் பலாலி இராணுவ முகாமில் வேலை செய்து கொண்டிருப்பதை அவதானித்து தனக்கு தகவல் வழங்கியதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். 

அதேவேளை அரியாலை இராணுவமுகாமிலும் தன்னுடைய கணவர் வேலை செய்து கொண்டிருப்பதை தமக்குத் தெரிந்தவர்கள் கண்டதாகவும் தன்னுடைய கணவனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவினரிடம் குறித்த பெண் மன்றாட்டமாக கேட்டிருக்கின்றார்.

 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103082/language/ta-IN/article.aspx

 

 

அடிமை தேசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.