Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சக்கரவியூகத்தை உடைத்தெறிய புலம்பெயர்ந்த தமிழர்கள் தயாரா..?

Featured Replies

ஐ.நா வில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டுவரப்படவுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்காக மகிந்த ராஜபக்ச அமைத்த உள்நாட்டு சக்கர வியூகத்தை தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் உடைத்தெறிந்துவிட்டனர். இதனால் மகிந்த குடும்பம் செய்வதறியாத நிலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. எதிர்பார்க்காத வகையில் மகிந்த ராஜபக்ச அரசு தமிழர் தாயகத்தில் மண் கௌவியிருக்கின்றது. இந்த வேதனையால் மகிந்த மனமுடைந்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டுப் பொறிமுறை தோல்வி கண்டதால் சர்வதேச பொறிமுறையன்றை ஏற்படுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச கடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார். இந்தச் சர்வதேச சக்கர வியூகத்தையும் உடைத்தெறிய வேண்டும். அதற்கான பெரும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது. என்ன இந்த உள்நாட்டுப் பொறிமுறை என்று நீங்கள் சிந்திப்பது தெரிகிறது. அதுதான் காணாமற்போனோரைக் கண்டறிவதற்காக மகிந்த நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு. இந்த ஆணைக்குழு என்ன தேவைக்கு உருவாக்கப்பட்டதோ அந்த தேவையை தமிழ் மக்கள் இன்று தலை கீழாக்கியிருக்கின்றனர். ஆணைக்குழுவை அவர்கள் தங்கள் பக்கம் மாற்றியமைத்திருக்கின்றார்கள். போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து தன்னை விடுவிப்பதற்காக மகிந்த உருவாக்கிய இந்த ஆணைக்குழு இன்று போர்க்குற்றச்சாட்டை வலியுறுத்தும் ஆதாரமாக மாறியிருக்கின்றது. வழமையாக கடந்த இரு வருடங்களும் ஜெனீவா அமர்வு தொடங்கும் போது சிறீலங்கா அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் வடக்கு, கிழக்கில் நடைபெறும். அரசாங்கம் தமிழ் மக்களை நன்றாக பராமரிக்கின்றது. இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்கு நடைபெற்றது பயங்கரவாத அழிப்பு யுத்தம் மட்டுமே என்று மகிந்தவின் அடியாட்கள் மக்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். ஆனால், ஈழத்தில் நடைபெற்றது இனஅழிப்பு மட்டுமே என்ற உண்மையை சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் எடுத்துரைப்பதற்கு இந்தத் தடவை மகிந்த ராஜபக்சவே களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றார். ஜெனீவா அமர்வு நடைபெறவுள்ள இந்த நேரத்தில் எமது குரல்களை எப்படி சர்வதேசத்திற்கு எடுத்துரைப்பது என்று வெம்பி வெதும்பிக்கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு ஜனாதிபதியே ஒரு ஆணைக்குழுவை அமைத்துக் கொடுத்திருக்கின்றார். தமிழ் மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற உண்மையான துயரங்களும் அந்த துயரங்களுக்கு காரணமானவர்கள் சிறீலங்கா அரசாங்கமும் படைகளும் மட்டுமே என்று தமிழ் மக்கள் மிகத் தெளிவாகவே இந்த ஆணைக்குழுவிற்கு முன்பாக சாட்சியமளித்திருக்கின்றார்கள். இதன் மூலமாக தமிழ் மக்கள் பல உண்மைகளை உலகத்திற்கு வெளிக்காட்டியிருக்கின்றார்கள். தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தால் எவ்வாறெல்லாம் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் சரணடைந்த தமிழ் மக்களையும் படையினர் விட்டுவைக்கவில்லை என்று தமிழ் மக்கள் நேரடியாகவே வெளிப்படுத்தியிருக்கின்றனர். இந்த உண்மை பாதிக்கப்பட்டவர்களின் வாயாலேயே வெளிவந்து இன்று சர்வதேச ரீதியாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. மகிந்த அரசாங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வன்னியில் சாட்சியமற்ற யுத்தமொன்றை நடத்தியது என்பதை அனைவரும் அறிவார்கள். எமது மக்கள் கொத்துக்கொத்தாக கொன்றுகுவிக்கப்பட்டனர். இறுதி யுத்த காலத்தில் வன்னியில் வாழ்ந்தவர்களில் ஒரு இலட்சம் பேர் வரையானோர் கொல்லப்பட்டனர். எஞ்சிவர்களில் இலட்சக்கணக்கானோர் இன்றுவரை நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒரு இழப்பாவது இல்லாமலில்லை. இவர்கள் தினமும் கண்ணீருடன் வாழ வேண்டிய நிலைக்கு மகிந்த அரசாங்கமும் படைகளுமே காரணமாகியிருக்கின்றனர். வன்னியில் இடம்பெற்ற கொடுமைகளை எழுத்திலோ வாய்மூலமாகவோ வெளிப்படுத்துவதற்கு வன்னி மக்கள் இன்றும் தயாராகவே உள்ளனர். அதேபோன்று, யாழ்ப்பாண மக்களும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்வதற்கு தயாராகவே இருக்கின்றனர். ஆனால், இவைகளை எடுத்துச் சொல்லிவிட்டு வெளியே வந்தால் தாங்கள் உயிரோடு இருக்கமாட்டோம் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அன்றிரவே சிறீலங்கா படைப்புலனாய்வுத்துறை தங்கள் கதவுகளைத் தட்டும் என்பதை அவர்கள் யதார்த்தத்திலேயே உணர்ந்திருக்கின்றனர். ஊடகவியலாளர்களோ, வெளிநாட்டுப் பிரதிநிதிகளோ இங்கு வந்து வன்னியில் நடைபெற்ற அழிவின் காட்சிகளைச் சாட்சியமாக்குங்கள், உண்மைகளைக் கூறுங்கள் என்றால் அவர்கள் கூறியதில்லை. தமிழ் மக்களின் இந்த அச்சத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியதால்தான் கடந்த இரண்டு வருடங்களாக மகிந்த குடும்பம் ஜெனீவாவுக்குச் சென்று வெற்றிக்கனியுடன் திரும்பியது. ஆனால், இந்த வருடம் மகிந்த குடும்பம் அந்த நிலையை அடைவது என்பது கேள்விக்குறியாகவே மாறியிருக்கின்றது. ஏனெனில், கடந்த இரண்டு வருடங்களைப் போன்று இந்த வருடம் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினை தற்போது என்றுமில்லாதவாறு சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. உலகின் மிகவும் பலம்மிக்க தலைவர்களில் ஒருவரான பிரித்தானியப் பிரதமர் டேவிற் கமரூன் வடபகுதியில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற யாழ்ப்பாணத்திற்கு வந்து நேரடியாகவே தமிழ் மக்களின் துன்ப துயரங்ளைப் பதிவுசெய்துகொண்டு சென்றிருக்கின்றார். இதைவிட, சிறீலங்காவிற்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கின்ற சனல்-4 ஊடகவியலாளர் குழு நேரடியாகவே இங்கு வந்து தமிழ் மக்களின் வேதனைகளையும் விரக்தியையும் அவர்களின் உண்மையான தேவையையும் பதிவுசெய்துகொண்டு சென்றுள்ளது. அதற்கு அப்பால் ஐ.நா, கனடா, நோர்வே, யப்பான், அவுஸ்திரேலியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் பலம்மிக்க பிரதிநிதிகள் நேரடியாக வடக்கு கிழக்கிற்கு வந்துசென்றிருக்கின்றனர். முன்னைய வரவுகளைப் போலன்றி இவர்கள் பிரித்தானியப் பிரதமர் டேவிற் கமரூனின் நடைமுறையைப் பின்பற்றி தமிழ் மக்கள் வாழ்கின்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் நிலமைகளை அவதானித்துச் செல்கின்றனர். இவையனைத்தும் தமிழ் மக்களுக்கு இம்முறை ஜெனீவாவில் சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றன. வடக்கில் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமற்போனவர்களின் உறவினர்கள் பிரித்தானியப் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது நடத்திய போராட்டமும் அதில் சிறீலங்கா காவல்துறை செயற்பட்ட விதமும் சிறீலங்கா அரசுக்கு சர்வதேசத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தன. இதனால், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் மாநாட்டில் காணாமற்போனோர் விவகாரம் சூடு பிடிக்கும் என்று சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்கு உணர்ந்திருந்தார். இதிலும் வடக்கு மாகாண சபை உறுப்பினரான திருமதி அனந்தி எழிலனின் அரசியல் நோக்கிய வரவும் மகிந்த குடும்பத்திற்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்று ஆகிவிட்டது. எழிலனின் மனைவி என்ற அந்தஸ்தும் கணவனை இழந்தவள் என்ற கருணையும் வடமாகாண சபை உறுப்பினர் என்ற கௌரவமும் சேர்ந்து அனந்தியை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தியிருக்கின்றமையானது மகிந்தவை அச்சப்பட வைத்துள்ளது. மேற்படி காரணங்கள் அனைத்தையும் சிந்தித்த மகிந்த கடந்த காலங்களில் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவைப் போன்று இம்முறை ஜெனீவா மாநாட்டிலிருந்து சிறிதளவேனும் தப்புவதற்காக காணாமற்போனோரைத் தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்தார். இந்த ஆணைக்குழு வடக்கில் காணாமற்போனோரின் உறவுகளிடம் விசாரணை நடத்தியது. முதலில் கிளிநொச்சியிலும் பின்னர் யாழ் மாவட்டத்திலும் விசாரணைகள் நடைபெற்றன. இந்த விசாரணைகளின் போது தமிழ் மக்கள் படையினருக்கு எதிராகவே தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். படையினருடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி மற்றும் கருணா குழு போன்றனவும் படையினருடன் இணைந்து தமது உறவினர்களைக் கடத்திச் சென்றதாக மக்கள் உணர்ச்சிப் பெருக்கோடு சாட்சியமளித்துள்ளனர். மேற்படி ஆணைக்குழுவின் விசாரணை தென்மராட்சியில் இடம்பெற்ற போது, ஏனைய இடங்களை விட இங்குள்ள மக்கள் ஒருபடி மேலே சென்று தமது பிள்ளைகளைப் பிடித்துச் சென்ற படை அதிகாரியின் பெயரையும் வெளிப்படுத்தியிருகின்றனர். துமிந்த என்ற இராணுவத் தளபதியின் தலைமையில் வந்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட 300 வரையான படையினர் தமது பிள்ளைகள் உட்பட 27 இளைஞர்களைக் கடத்திச் சென்றதாகவும் இன்றுவரை அவர்கள் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆணைக்குழு பொழுதுபோக்குக்காக விசாரணையை மேற்கொள்ளும். அது ஐ.நாவை இந்த வருடமும் ஏமாற்ற உதவும் என்று மகிந்த கருதினார். ஆனால், அவரின் அந்த வியூகத்தை மக்கள் உடைத்தெறிந்துவிட்டனர். இதனால், மகிந்த இன்று சர்வதேசத்தை -தனது நேச அணியினரை - நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்த வியூகத்தை உடைத்தெறிய வேண்டிய பெரும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமே இருக்கின்றது. இந்த தடவை ஜெனீவா களமுனை தமிழ் மக்களுக்கு சார்பாக மாறக்கூடிய சூழ்நிலை தென்படுகின்றது. இந்த நிலையில் அந்தச் சூழ்நிலையைத் தக்க வைப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிக முக்கியமான பங்கெடுக்க வேண்டும். புலம்பெயர்ந்த தேசங்களில் நடைபெறுகின்ற போராட்டங்களில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் பங்கெடுத்து சர்வதேச ரீதியாக மகிந்த வகுத்துள்ள சக்கர வியூகத்தை உடைத்தெறிய வேண்டும். இவ்வாறு மகிந்தவின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் முடங்கச் செய்வதன் மூலமே எமது உரிமைகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும். புலம்பெயர்ந்த உறவுகளே தாயகம் உங்கள் மண். இங்கே உங்கள் உரிமையை நிலைநாட்டுவததற்கு அனைவரும் பொறுப்புணர்வோடு செயற்படுங்கள். - தாயகத்தில் இருந்து வீரமணி நன்றி: ஈழமுரசு http://www.sankathi24.com/news/38661/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வழிகாட்டி.. நல்லதொரு இணைப்பு..

  • தொடங்கியவர்

ஆணைக்குழு பொழுதுபோக்குக்காக விசாரணையை மேற்கொள்ளும். அது ஐ.நாவை இந்த வருடமும் ஏமாற்ற உதவும் என்று மகிந்த கருதினார். ஆனால், அவரின் அந்த வியூகத்தை மக்கள் உடைத்தெறிந்துவிட்டனர். இதனால், மகிந்த இன்று சர்வதேசத்தை -தனது நேச அணியினரை - நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்த வியூகத்தை உடைத்தெறிய வேண்டிய பெரும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமே இருக்கின்றது. இந்த தடவை ஜெனீவா களமுனை தமிழ் மக்களுக்கு சார்பாக மாறக்கூடிய சூழ்நிலை தென்படுகின்றது. இந்த நிலையில் அந்தச் சூழ்நிலையைத் தக்க வைப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிக முக்கியமான பங்கெடுக்க வேண்டும். புலம்பெயர்ந்த தேசங்களில் நடைபெறுகின்ற போராட்டங்களில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் பங்கெடுத்து சர்வதேச ரீதியாக மகிந்த வகுத்துள்ள சக்கர வியூகத்தை உடைத்தெறிய வேண்டும். இவ்வாறு மகிந்தவின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் முடங்கச் செய்வதன் மூலமே எமது உரிமைகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும். புலம்பெயர்ந்த உறவுகளே தாயகம் உங்கள் மண். இங்கே உங்கள் உரிமையை நிலைநாட்டுவததற்கு அனைவரும் பொறுப்புணர்வோடு செயற்படுங்கள்.

 

 

உயிர் ஆபத்தில் எப்போதும் இருக்கும் தாயகமக்களே பயப்படமால் துணிவாக செயல்படும்போது.. புலம் பெயர் மக்கள் இப்போதும் சிலர் அலட்சியமாகவும் தொடை நடிங்கிகளாகவும் பூசாண்டிகளுக்கு எடுபடுவர்களாகவும் ஏன் இன்னும் இருக்கிறார்கள்? தாங்கள் தப்பிவிட்டோம் என்னும் சுய நலமா? அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் நாதியற்று கேட்பாரில்லாத இனமாக மாறும்.. கனடாவில் தமிழ்மக்கள் அரசினையும், எதிர்கட்சிகளையும் எமக்கு சார்பாக மாற்றியது போல் மற்றைய நாடுகளிலும் உடன் செயல்பட்டு எமது உரிமைகளை மீட்க உடன் செயல்படவேண்டும்..

Edited by வழிகாட்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.