Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டு அரசாங்கத்தின் தீர்மானம் நீதியின் அடிப்படையிலானது - ராம் ஜெத்மலானி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ramjethmalani.jpg

ராஜீவ் காந்தி படுகொலை வழக்குடன் தொடர்புடைய ஏழு குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானது என விவாதங்கள் மேற்கொள்ளப்படுவதை ஏற்கமுடியாது என பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார். 

"இவர்களை விடுவிப்பது தவறானது என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இது நீதியின் பாற்பட்டதல்ல. நீதியின் அடிப்படையிலேயே இவர்களை விடுவிப்பதென தமிழ்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது" என ராம் ஜெத்மலானி ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். 

"இவர்கள் அனைவரும் நீண்ட ஆண்டுகளை சிறைகளில் அனுபவித்துள்ளனர். இது சாதாரணமானதல்ல. இது ஆயுட் தண்டனையாகும். இவர்கள் தமது ஒவ்வொரு நாளையும் சாவின் நிழலின் கீழ் கழித்துள்ளனர். இது மேலதிக தண்டனையாகும். இது மரண தண்டனையை நீக்கப்பட வேண்டும் என்பதை அபிவிருத்தியடைந்த நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தவகையில் இந்தியா இதற்கு மாறாக நடக்கமாட்டாது என நான் நம்புகிறேன்" என ம.தி.மு.க தலைவர் வைகோவுடன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே ராம் ஜெத்மலானி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

"ஒவ்வொரு நாளையும் சாவின் நிழலில் கழிக்கும் கைதிகள் தாம் அனுபவித்த ஆயுட் தண்டனைக் காலத்தின் ஐந்து மடங்கு காலத் தண்டனையை மனதளவில் அனுபவிப்பார்கள். இந்த வகையில் எனது தனிப்பட்ட கருத்தின் பிரகாரம் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளிகள் மேலதிக தண்டனைகள் அனுபவிக்காது விடுவிக்கப்பட வேண்டும்" என வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

"ஜெயலலிதா இதுவரை இந்தக் குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பில் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாரோ அதனை அவர் தொடர்ந்தும் மேற்கொள்வார் என நான் நம்புகிறேன். இந்த வெற்றி உச்ச நீதிமன்றில் எங்களுடையதாகும். எல்லாம் சரிவர இடம்பெறும்" என ராம் ஜெத்மலானி மேலும் குறிப்பிட்டுள்ளார். 

"நாங்கள் எமது வாதங்களை உச்ச நீதிமன்றில் முன்வைப்போம்" என ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிப்பதற்கான பரப்புரையில் ஈடுபடும் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக வழக்கை உச்ச நீதிமன்றம் மார்ச் 06 இற்குப் தள்ளிவைத்துள்ளது. 

இந்த வழக்குடன் தொடர்புபட்ட ஏழு குற்றவாளிகளையும் பெப்ரவரி 19 அன்று, அதாவது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று கைதிகளுக்கும் ஆயுட் தண்டனை வழங்கப்படுவதாக இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்த மறுநாள், ஜெயலலிதா அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தி.மு.க உட்பட பல்வேறு கட்சிகள் வரவேற்றுள்ளன. 

செய்தி வழிமூலம் : FIRSTPOST

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140222110010

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடும்பத்தின் விருப்பு வெறுப்புக்காக, அது தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியும், அந்த கட்சியின் பொறுப்பில் இருக்கும் மத்திய அரசும், சட்டத்திற்கும், மனதாபிமானத்திற்கும் பெருந்தன்மைக்கும் அப்பாற்பட்டு நடக்க தூண்டப் பட்டு உள்ளனர்.

இவர்கள் விடுதலை அரசியல்வாதிகளால் அல்ல, நீதித்துறையால் மட்டுமே சாத்தியமாகும்.

எவரையும் தண்டிக்க எவருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொருவருடைய செயலும் அடுத்தவரின் செயலின் விளைவால் ஏற்படுவதே. ஆனால் யாழ்பாண தமிழர்கள் புலிகளுக்கு மட்டும்தான் தண்டனை வழங்கும் உரிமை உண்டு என நினைக்கின்றார்கள். அதனால் அவர்களே மோசமாக பாதிப்படைகிறார்கள். அதை புரிந்து கொள்கிறார்களுமில்லை. தீதும் நன்றும் பிறர் தர வாரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.