Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊமைகளையா நாடாளுமன்றுக்கு அனுப்புகின்றோம்: மனோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

221(10).jpg

மாயாவிகளையும், பேசாமடந்தைகளையும் புறந்தள்ளி ஆளுமையுள்ள தலைமைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் மேல் மாகாண சபையின் வேட்பாளருமான மனோ கணேசன் எமது சமூகம் சார்பில் ஊமைகளையா நாடாளுமன்றுக்கு அனுப்புகின்றோம் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

எம்மால் இந்த நாட்டில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ ஆகி விட முடியாது. இந்த பதவிகளை வகிக்க எமக்கு தகைமை இல்லை என்றோ, சட்டத்தில் இடமில்லை என்றோ அர்த்தம் கிடையாது. ஆனால், இந்த பதவிகளை ஒரு தமிழரோ, முஸ்லிமோ அல்ல, ஒரு சிங்கள கிறிஸ்தவர் கூட வகிக்க முடியாது. இதன் காரணம், இங்கே அந்தளவுக்கு  எல்லா பெரும்பான்மை கட்சிகளுக்குள்ளும்  இனவாதம் புரையோடி போய் இருக்கின்றது. இதன் காரணம் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்று விட்டோம்; தமிழர், முஸ்லிம்களை தோல்வியடைந்துவிட்டர்கள் என இவர்கள் அனைவரும் நினைக்கிறார்கள். இதுதான் இன்றைய புது விதி. இதை எக்காரணம் கொண்டும் மறந்துவிடாதீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னணியின் பிரசார செயலாளரும், மேல்மாகாணசபை வேட்பாளருமான கே.ரீ. குருசாமியின் ஏற்பாட்டில் தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பு பிரைட்டன் ஹோட்டல் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினரும், கொள்கை பரப்பு செயலாளருமான வேலுகுமார், உப செயலாளர் சண். குகவரதன் உட்பட கட்சி முக்கியஸ்தர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் மனோ கணேசன் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த காலகட்டத்தில், நாம் எம் சொந்த காலில் அரசியல் பலத்துடன் இருக்க வேண்டும். அது அவர்கள் விதி என்றால் இதுதான் எங்கள் விதி. அரசியல் பலத்துடன் இந்த நாட்டின் சிங்கள ஜனாதிபதிகளுடனும், சிங்கள பிரதமர்களுடனும், சிங்கள அரசாங்கங்களுடனும் பேரம் பேசி எம் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளை பெற வேண்டும். இந்த அரசியல் பலத்தை பெற கடந்த காலங்களில் தமிழருக்கு  ஆயுதங்கள் இருந்தன. இன்று எம்மிடம் இருப்பது வாக்கு சீட்டு என்ற ஒரேயொரு ஆயுதம் மட்டுமேயாகும்.

ஆகவே வாக்குசீட்டு என்ற இந்த ஆயுதத்தை முழுமையாக பயன்படுத்தி மேல்மாகாணத்திலே, அரசியல் பலத்தை உறுதிபடுத்த தயாராகுங்கள். இந்த அரசியல் பலத்தை எனக்கு வழங்கி என் கரங்களை பலப்படுத்துங்கள். நம் வாக்குகளை சிதறடித்து என்னை பலவீனப்படுத்தி விடாதீர்கள். வாக்குரிமையுள்ள உங்களில் ஒவ்வொருவரும் வாக்குசாவடிக்கு சென்று வாக்களியுங்கள் என இரு கரங்கூப்பி கேட்டு கொள்கிறேன் என்றும் அவர் கொழும்பு கம்பஹா மாவட்ட தமிழ் பேசும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவை பாருங்கள். அங்கேயும் எவ்வளவோ இன, மத, மொழி பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் மீறி அங்கு 'நாம் இந்தியர்கள்' என்ற உணர்வு இருக்கின்றது. ஆனால் 'நாம் இலங்கையர்கள்' என்ற உணர்வு இங்கு கிடையாது. அதை பெரும்பான்மை சிங்கள இனத்தவர் உணரும்வரைக்கும் மேல்மாகாணத்தில் வாழும் சிறுபான்மையினராகிய நாம் எம் சொந்த பலத்தை ஒருமுகப்படுத்தி உறுதி செய்துகொள்ள வேண்டும். இது காலத்தின் முதல் கட்டாயம்  என்றார் அவர்.
காலத்தின் அடுத்த கட்டாயம் என்ன? இந்த அரசியல் பலம், தமது அதிகாரத்தை முறையாக பயன்படுத்த கூடிய ஆளுமையுள்ள தலைமையிடம், கட்சியிடம் இருக்க வேண்டும் என்பதுதான் அந்த அடுத்த கட்டாயம்.  நாடாளுமன்றத்தில் சபை கூட்டங்களிலும், குழு கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொண்டு பேசி, கருத்து தெரிவித்து, வாதத்திற்கு எதிர்வாதம் செய்து, எங்கள் மக்கள் பிரச்சினைகளை தேசிய மக்கள் மன்றங்களில் எடுத்து வைப்பவர்களிடம் இந்த அதிகாரம் இருக்க வேண்டும்.
  
இன்று கொழும்பிலே எங்களை எதிர்த்து தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கும் புண்ணியவான்கள் எவருக்காவது இந்த தகுதி இருக்கின்றதா? இந்த கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் என்று இவர்களில் எத்தனை பேர் தாங்கள் அங்கம் வகிக்கும் மக்கள் சபைகளுக்கு கிரமமாக செல்கின்றார்கள்? அங்கே எத்தனை பேர் பேசுகிறார்கள்? சிலர் பேசுவதே இல்லை. சிலர் தீபாவளி, பொங்கல் போல் வருடத்துக்கு ஒருமுறை வந்து எழுதி வாசிக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார்.

ஒரு காலத்தில் ஐதேகவில் இருந்து இன்று ஆளும் கட்சியில் மிக பிரபலமாக இருக்கும் ஒரு அமைச்சரை நான் ஒரு நிகழ்வில் சந்தித்தேன். அவர் அப்போது சிரித்துகொண்டே ஒரு கருத்தை சொன்னார்.  அவர் சொன்னது இதுதான். 'மனோ, உங்கள் தமிழ் சமூகம் தென்னிலங்கையிலிருந்து நாடாளுமன்றத்துக்கு பேசா மடந்தைகளையும், மாயாவிகளையும் தான் இப்போது அனுப்பி வைத்துள்ளது. மாயாவிகள் என்றால், எம் கண்களால் அவர்களை சபைகளில் ஒருநாளும் காணவே முடியாது. 

பேசாமடந்தைகள் என்றால், சபைகளுக்கு வரும் அவர்களில் ஒருசிலர்கூட  ஒருபோதும் வாய்களை திறந்து பேசுவதே கிடையாது. கடந்த நாடாளுமன்றத்தில் நீங்கள் எங்களை நிம்மதியாக இருக்க விடவில்லை. இப்போது நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்'. இதைகேட்ட நான் அவர் என்னை புகழ்ந்ததாக நினைத்து மகிழ்ச்சியடையவில்லை. என் தமிழ் சமூகத்தை நினைந்து நான் வெட்கப்பட்டு தலை குனிந்தேன் என்றார்.

சரி, நாடாளுமன்றத்தில்தான் இவர்கள் ஊமைகள் என்றால், இந்த நாட்டின் பொது மேடைகளில், தேசிய தொலைக்காட்சி, வானொலி நிகழ்சிகளில் கலந்துகொண்டு நம் மக்கள் பிரச்சினைகளை தேசிய அரங்கில் எடுத்து வைக்கின்றார்களா ? அதுவும் இல்லை.

இந்த மாயாவிகளும், ஊமைகளும்தான் இப்போது உங்களிடம் வந்து வாக்கு கேட்கிறார்கள்.  உங்கள் முன்னாள் வந்து வாய் திறந்து பேசி வாக்கு கோருகிறார்கள். உள்ளூரிலே மேடை போட்டு, பட்டாசு வெடித்து,  வெளுத்து கட்டும் இவர்கள், அரசாங்கத்துக்குள்ளே பேசாமடந்தையாக அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு கொண்டவர்களாக குனிந்த தலை நிமிராதவர்களாக   இருக்கின்றார்கள்.

மலையக மக்கள் வழங்கிய அதிகாரத்துடன் பேசும் உரிமைகொண்ட எங்கள் மத்திய மாகாணசபை உறுப்பினர் தம்பி வேலுகுமார், மலையகத்தை பற்றி இங்கே கருத்து சொன்னார். அப்பாவி தொழிலாளி குடும்பங்களுக்கு காணி, நிலம், வீடு தருகிறோம் என்று நாட்டின் தலைவரை கொண்டு வாக்குறுதி தந்து ஒரு இலட்சம் வாக்கு வாங்கியவர்கள், இன்று ஒரு சதுர அங்குலம் நிலம் கூட தர மறுத்து,  மலை மீது மாடிமேல் மாடிவீடு கட்டும் முட்டாள் யோசனையை வெட்கமில்லாமல் வரவேற்றுகொண்டு, இங்கு கொழும்பில் வந்து வெட்டுவோம், முறிப்போம், என்கிறார்கள் என வேலுகுமார் சொல்கிறார். முடிந்தால் எவராவது எங்கள் கொள்கை பரப்பு செயலாளர் என் தம்பி வேலுகுமாருக்கு பதில் கூறட்டும் என்றும் அவர் சொன்னார்.   

 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/101094-2014-02-23-14-02-28.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.