Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருகன் உள்ளிட்டோருக்கு தற்காலிக தடை மட்டுமே வெற்றி நிச்சயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bgu3wPECMAAj0yJ-300x1561.jpg

ராஜீவ் கொலை வழக்கு கைதி­க­ளான முருகன், பேர­றி­வாளன், சாந்தன் ஆகி­யோ­ருக்கு தற்­கா­லிக தடையே விதிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே, வெற்றி நிச்­சயம் கிடைக்கும் என இவ்­வ­ழக்கில் ஆஜ­ரான பிர­பல வழக்­க­றிஞர் ராம் ஜெத்­ம­லானி தெரி­வித்­துள்ளார்.

இது­கு­றித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், “முன்னாள் பிர­தமர் ராஜீவ்­காந்தி கொலை வழக்கில் தண்­டனை பெற்ற பேர­றி­வாளன், முருகன், சாந்தன் உள்­ளிட்ட 7 பேரை விடு­விக்கும் தமி­ழக முத­ல­மைச்சர் ஜெய­ல­லி­தாவின் நட­வ­டிக்கை பாராட்­டத்­தக்­கது. இவ்­வி­ட­யத்தில், உச்­ச­நீ­தி­மன்றத் தடையை எதிர்த்தும் மத்­திய அரசின் சீராய்வு மனுவை எதிர்த்தும் போராட எல்லா வழி­வ­கை­களும் தமி­ழக அர­சுக்கு உள்­ளன.

அவர்கள் விடு­விக்­கப்­பட்­டதன் காரணம், இரண்டு தண்­ட­னைகள் கூடாது என்­பதன் அடிப்­ப­டை­யில் தான். அவர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்டால் ஆயுள் தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்டும் என்­கிற அவ­சியம் இல்லை. அர­சி யல் சாச­னத்­தி­லேயே அப்­படி இல்லை.

என்னைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­க­ளுக்கு முதல் முறையே மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டாது. உலகில் பல நாடு கள் மரண தண்­ட­னையை ஒழித்­து­விட்­டன. இது­த­விர, அவர்கள் ஏற்­கனவே 23 ஆண்­டுகள் சிறையில் கழித்­து­விட்­டனர். அதுவும் ஆயுள் தண்­ட­னை­யாக அல்ல. ஒவ்­வொரு நாளும் மர­ணத்தை எதிர்­நோக்­கிய தண்­ட­னை­யாக கழித்­துள்­ளனர். இது நான்கு ஆயுள் தண்­ட­னை­க ளுக்கு சமம். ஒரு குற்­றத்­துக்­காக எத்­தனை தண்­ட­னை­களை அவர்கள் அனு­ப­விக்க வேண்டும்? வழக்கில் இவ்­வ­ளவு கால­தா­மதம் ஏன் என்­பதை நான் தெரிந்­து­கொள்ள விரும்­பு­கிறேன்.

விசா­ர­ணை­யின்­போது மொத்தம் 26 பேர் குற்­ற­வா­ளிகள் என்று முத லில் கூறினர். ஆனால், இறு­தியில் 19 பேர் வழக்­கி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்ட னர். வழக்கு அவ்­வ­ளவு பல­வீ­ன­மா­ன­தாக இருந்­தி­ருக்­கி­றது.

கொலை வழக்கு மற்றும் தடா சட்­டத்தின் கீழ் குற்­றம்­சாட்­டு­கி­றீர்கள், அத­ன­டிப்­ப­டையில் மர­ண­தண்­டனை விதி க்­கப்­ப­டு­கி­றது. பிறகு தடா வழக்கிலிருந்து குற்றவாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள். அப்போது, தண்டனை குறைப்பு இருந்திருக்க வேண்டும்தானே? அதனால்தான் உச்சநீதிமன்றம் தொடக்கத்திலேயே மரண தண்டனை விதித்திருக்கக் கூடாது என்று நான் கூறுகிறேன்” என்றார்.

 

 

http://www.akkinikkunchu.com/2014/02/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.