Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகசீன் சிறையினில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் மர்மமான முறையினில் மரணம் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல்தமிழ்ச்செய்தியாளர்

 

இலங்கையின் மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் மர்மமான முறையில் இன்று சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். பிரிட்டிஸ் பிரஜையான 43 வயதுடைய விசுவலிங்கம் கோபிதாஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சியின் மந்திகையினை சொந்த இடமாக கொண்ட அவர், பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்றிருந்த வேளை,    விடுதலைப் புலிகளிற்கு நிதி உதவி வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 2007 ம் ஆண்டின் மார்ச் மாதம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதாகியிருந்தார். இவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தொடர்ந்தும் பிரிட்டனிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த ஏழு வருடங்களாக குற்றச்சாட்டுக்கள் ஏதும் முன்னிறுத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டிருந்த  விசுவலிங்கம் கோபிதாஸ் இன்று சி பிரிவின் மலசலகூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் சக அரசியல் கைதிகள் தன்னிடம் கோரியிருப்பதாக வடமாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

கடந்த 2011ம் ஆண்டின் நவம்பர் இச்சிறையியில் இடம்பெற்ற கலவரத்தில் சிங்கள தண்டனை கைதிகளால் நிர்வாணமாக்கப்பட்டு கோரமாக சித்திரவதைகளிற்கு உள்ளான அவர் அப்போது படுகாயமடைந்து உயிர் தப்பியிருந்தார். அதே போன்று 2012 ஜனவரியில் இடம்பெற்ற மற்றொரு கொலை முயற்சியிலும் அவர் உயிர் தப்பியுள்ளார். தற்போது இவரது சடலம் வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103456/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.