Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாவது முறையும் சர்வதேசத்தின் முன் தோற்கப் போகிறது அரசாங்கம்! – மாவை சேனாதிராஜா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
மூன்றாவது முறையும் சர்வதேசத்தின் முன் தோற்கப் போகிறது அரசாங்கம்! – மாவை சேனாதிராஜா. 
[Monday, 2014-02-24 18:12:44]
mavai-240214-150.jpg

கடந்த 60 ஆண்டுகளில் இடம்பெற்றதை விட, போருக்குப் பிந்திய நான்கு ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற நில அபகரிப்பே அதிகம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தீவகப்பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பரலோக மாதா கோவிலில் பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழர்கள் தமக்கு சொந்தமான இடங்களை விட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்குச் சொந்தமான நிலங்களில் இராணுவத்தினர் ஆடம்பர விடுதிகளை அமைப்பதும் கோல்ஃப் மைதானம் அமைப்பதிலும் நீச்சல் தடாகங்கள் அமைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு தொடர்பில் பலரிடம் எடுத்துக் கூறியுள்ளோம். சர்வதேச சந்தர்ப்பம் ஒவ்வொரு நாளும் கிடைக்குமென்று நாம் நம்ப முடியாது. அந்த சர்வதேச சந்தர்ப்பம் கிடைக்கும் போது சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்டதன் விளைவே இப்போது இடம்பெறும் காணி அபகரிப்பு உள்ளிட்ட எமது இனத்துக்கெதிரான அடக்குமுறைகளுக்குக் காரணம்.

தமிழர் தாயகத்தில் இழந்த நிலத்தை நாம் மீட்பது அவசியம். தமிழர்களின் நிலம் மீட்கப்பட வேண்டும். அவர்களுக்கென்று ஒரு பிரதேசம் என்று சொல்லும் உரிமை நிலத்தில் தான் தங்கியுள்ளது. எனவே சொந்த நிலம் இருக்க வேண்டும். எமது தமிழினத்தை அழிக்க இராணுவமும் பௌத்த தீவிரவாத அமைப்புக்களின் ஊடாக இந்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதனைத்தடுத்து நிறுத்த நாம் தொடர்ந்து போராடுவோம்.

இங்கு நடைபெற்ற போரினால் மக்கள் இன்று அனைத்தையும் இழந்து விட்டு இடம்பெயர்ந்து அழிவுகளையும் இழப்புக்களையும் இழந்து வாழ்வாதாரத்திற்கே போராடி வருகின்றனர். இந்த மக்களுடைய வாழ்வாதார ரீதியிலான முன்னேற்றத்திற்கே அனைவரும் உழைக்கவேண்டும். இறுதிப்போரில் முள்ளிவாய்க்காலில் எமது இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளே ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நீதி கேட்டும் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் நிற்கிறது. போருக்கான தர்ம நியாயம் இருக்கிறது. ஆனால் அதனை மீறி இரசாயனக் குண்டுகள் பாவிக்கப்பட்டு அரசாங்கம் போர் விதி முறைகளை மீறி செயற்பட்டிருக்கின்றது. இவ்வாறு அந்த தர்மத்தின் வெளிப்பாடாக தர்மம் தான் இன்று ஜெனிவாவில் தலை தூக்கியுள்ளது.

இந்த துன்ப துயரங்கள் இன்றும் தொடர்கின்றது.இந்த இழப்புக்களுக்கு உரிய பதில்கள் இல்லை என்பதுடன் இந்த அரசாங்கத்தினூடாக தீர்வு கிடைக்குமென்று எதிர்பார்க்கவில்லை. தமிழ் மக்கள் உள்நாட்டில் தோற்றுப் போனதாகக் கூறுகின்ற அரசாங்கம் சர்வதேச ரீதியாகவே இரண்டு தடவைகள் தோற்றுப் போயிருக்கின்றது. இந்நிலையில் மூன்றாவது முறையாகவும் தோற்றுப் போய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ளது.

தமிழ் மக்களைத் தோற்றுப் போன இனமாக அரசாங்கம் சித்தரித்து வருகின்ற நிலையில் இங்கு போர் முடிவடைந்து நான்கு வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் ஐனநாயக ரீதியாக தமிழ் மக்கள் பல வெற்றிகளைப் பெற்றிருக்கின்றனர். இந் நிலையில் மூன்றாவது முறையாகவும் சர்வதேச ரீதியாகவும் அரசாங்கமே தோற்கப் போகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=104329&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.