Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்ச்சுக்குப் பின்னர் வடமாகாணத்தை அரசாங்கம் பழிவாங்கும்! – எதையும் எதிர்கொள்ளத் தயார் என்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
மார்ச்சுக்குப் பின்னர் வடமாகாணத்தை அரசாங்கம் பழிவாங்கும்! – எதையும் எதிர்கொள்ளத் தயார் என்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன். 
[Monday, 2014-02-24 18:34:47]
suresh-240214-150.jpg

மார்ச்சின் பின்னர் அரசாங்கம் வட மாகாணத்தை பழிவாங்கும். தனித்தேனும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம். எல்லா சவால்களுக்கும் முகம் கொடுக்க நாம் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்தின் பின்னர் வடமாகாணத்திற்கும் மத்திய அரசுக்குமான உறவில் விரிசல் ஏற்படும் என்ற அரசாங்கத்தின் கருத்து தொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள அவர், இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்-

  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தடைசெய்யக் கோரும் அதிகாரம் எவருக்கும் இல்லை. தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் எம்மை தடைசெய்து சிங்கள ஏகாதிபத்தியத்தினை பரப்பும் சதித்திட்டமே இவை. வட மாகாணசபை உருவாக்கப்பட்டவுடனேயே அரசாங்கம் எம்மீது அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்து விட்டது. மார்ச் மாதத்தின் பின்னர் ஜெனிவா தீர்மானம் கொண்டு வரப்படும் பட்சத்தில் அரசாங்கம் வடக்கைப் பழிவாங்கும் நிலைமை ஏற்படும். இன்றும் ஓரளவு அவ்வாறானதொரு நிலைமையே உள்ளது.

குறிப்பாக, வட மாகாணசபை முதலமைச்சர் தனது பதவிப் பிரமாணத்தினை ஜனாதிபதி முன்னிலையில் பெற்றமையும் பல தடவைகள் அவர் ஜனாதிபதியுடனான சந்திப்புகளை மேற்கொண்டு எமது நல்லிணக்கச் செயற்பாட்டினை வெளிப்படுத்திய போதும் அரசாங்கமோ ஜனாதிபதியோ வடக்கினைப் பொருட்படுத்தவில்லை. எமக்கான சலுகைகளையோ உரிமைகளையோ வழங்கவில்லை. மாகாணசபை உருவாக்கப்பட்டதிலிருந்து வடக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அரசாங்கத்தின் விரோதிகளாகவே எம்மை அவதானித்து விட்டனர்.

இந்நிலையில், எதிர்வரும் மார்ச் ஜெனிவா மாநாட்டின் பின்னர் வடக்கு அரசாங்கத்தினால் கைகழுவி விடப்படும் என்பதே உண்மை. எனினும், நாம் தமிழ் மக்களை கைவிடப் போவதில்லை. எமக்கான பலமே தமிழ் மக்கள் தான். அவர்களுக்காகவே நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம். அரசாங்கம் எம்மைக் கைவிட்டாலும் தனித்-தேனும் போராடத் தயாராகவே உள்ளோம்.

ஜெனிவா மாநாட்டின் முன்னரே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவநீதம்பிள்ளை அறிக்கையினை சமர்ப்பித்துள்ளமையும், தமிழர்கள் விடயத்தில் குரல் கொடுத்தமையும் வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும், இதற்கு கூட்டமைப்பினரே காரணம் என அரசாங்கம் பழி போடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. நவநீதம்பிள்ளை இலங்கை விஜயத்தை மேற்கொண்டு எம்முடன் மட்டும் சந்திப்பினை நடத்தவில்லை. அவர் அரசாங்கத் தரப்பினரையும் பாதிக்கப்பட்ட மக்களையும் ஏனைய அமைப்புக்களையும் பிரமுகர்களையும் சந்தித்தார். இன்று அவரின் அறிக்கையானது பல விசாரணைகளின் பின்னரே ஆதாரங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே, எமது தமிழ் மக்கள் விடயத்தில் ஜெனிவா மாநாட்டில் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதுவே எமது எதிர்பார்ப்பாகும். சர்வதேசம் எமது கஷ்டங்களை உணர்ந்துவிட்டது என்பது சர்வதேச செயற்பாடுகளின் மூலம் தெரியவருகின்றது.

மேலும், இன்று இலங்கையில் சிங்கள இனவாதக் கட்சிகளும் அமைப்புக்களும் எம்மையும் எமது கட்சியையும் அழிப்பதில் மும்முரமாக இயங்குகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தடைசெய்வதனால் தமிழ் மக்களின் குரலை அடக்கி நாட்டில் சிங்கள ஏகாதிபத்தியத்தினை பரப்பும் முயற்சியிலேயே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தடைசெய்யும் நினைப்பினை அனைவரும் கைவிட வேண்டும். அரசாங்கம் எந்த சூழ்ச்சிகளை செய்தாலும் வட மாகாணத்திற்காக நாம் செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=104332&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.