Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கைதி கோபிதாசின் மர்மமரணம் குறித்து முழுவிசாரணை நடத்தக் கோருகிறது கூட்டமைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதி கோபிதாசின் மர்மமரணம் குறித்து முழுவிசாரணை நடத்தக் கோருகிறது கூட்டமைப்பு! 

[Tuesday, 2014-02-25 07:20:47]
welikada-prison-250214-150.jpg

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் நேற்றுக்காலை உயிரிழந்த தமிழ்க் கைதியின் மரணம் தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. 2007-ம் ஆண்டில், கொழும்பு சென்றிருந்த போது காவல்துறையால் கைது செய்யப்பட்ட பிரிட்டிஷ் பிரஜையான கோபிதாஸ் என்பவர், மர்மமான முறையில் மகசீன் சிறையில் உயிரிழந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 2012-ம் ஆண்டில் நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் கோபிதாஸுக்கு 5 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

  

ஏற்கனவே நீண்டகாலத்தை இலங்கைச் சிறையில் கழித்துவிட்டிருந்த நிலையில் எஞ்சிய தண்டனைக் காலத்தை பிரிட்டன் சிறையில் கழிப்பதற்கு இடமளிக்குமாறு கோபிதாஸ் விடுத்திருந்த கோரிக்கை பிரிட்டிஷ் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதிலும், இலங்கையின் தரப்பில் அதற்கு சம்மதம் கிடைத்திருக்கவில்லை.இந்த சூழ்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஒழுங்கான முறையில் மருத்துவ வசதிகள் கிடைத்தனவா என்பது தொடர்பில் சந்தேகம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கைச் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் பலர் தாக்கப்பட்டும் உரிய மருத்துவ வசதிகள் இன்றியும் உயிரிழந்துள்ளமையையும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார். இதனால், உரிய விசாரணை நடத்தி கைதியின் மரணத்திற்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கோபிதாஸ் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று இலங்கை சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் ஜீ.பி. குலதுங்க தமிழோசையிடம் கூறினார். கடந்த காலங்களில் உடல்சுகவீனத்திற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்றுக் காலை 7.30 மணியளவில் அவர் சிறைச்சாலைக் கூடத்தில் சுகவீனம் காரணமாக மயங்கி விழுந்திருக்கிறார். இதற்கு முன்னர் அவர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்திருப்பதாகத் தான் நாங்கள் நம்புகிறோம்' என்றார் குலதுங்க.மயங்கிவிழுந்த கோபிதாஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அங்கு மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்ததாகவும் சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் கூறினார்.பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் கோபிதாஸுக்கு சிறந்த அளவில் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் ஒருமாத விடுமுறையில் வீடு செல்வதற்குத் தயாராக இருக்குமளவுக்கு அவரது உடல்நிலை குறித்து சிறந்த மருத்துவச் சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்ததாகவும் ஜீ.பி. குலதுங்க கூறினார்.அவரது மரணத்தில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=104378&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.