Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை தடைசெய்தது மிகப்பெரிய தவறு! என முன்னாள் சமாதான கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார்.

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்த விடயமானது ஒரு மிகப்பெரிய தவறு எனவும், அமெரிக்கா மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடி அழுத்தம் பிரயோகிக்கப் பட்டிருந்ததாகவும் 20;06 ஆம் ஆண்டு இலங்கை கண்காணிப்புக் குழுவுக்கு (ளுடுஆஆ)  தலைமை வகித்த உல்ஃப் ஹென்றிக்சன் அவர்கள் தமிழ்நெற்றுக்காக கடந்த சனிக்கிழமை அன்று சுவீடனில் இருந்து வழங்கிய விசேட நேர்காணலின் போது கூறியுள்ளார். இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியா செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதோடு ஆனால் அதில் தலையிடுவதில் இந்தியா அக்கறை செலுத்தவில்லை எனவும் மேலும், இலங்கைக்குள் சர்வதேச சமூகம் தலையீடு செய்வதை சீனா, இந்தியா மற்றும் பிற நாடுகள் விரும்பவில்லை எனவும் அவர் தனது நேர்காணலில் தெரிவுத்துள்ளார். 
“விடுதலைப் புலிகளை தடைசெய்தமை மிகப்பெரிய தவறு, ஏனெனில் அது பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை எட்டக்கூடிய சாத்தியப்பாட்டை தடுத்துவிட்டது.”

கடந்த ஐந்து வருடங்களாக அறிக்கைகளிலோ, தீர்மானங்களிலோ இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு குறித்து பேசப்படுவதில்லை எனவும் இனப்படுகொலையை நிறைவேற்றுவதற்கு கொழும்புக்கு போதிய காலத்தை வழங்குவதோடு அதற்கான ஒரு வெளியையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது என்ற கேழ்விக்குப் பதிலளித்த ஹென்றிக்சன், “நீங்கள் கூறுவது சரி என்றே நான் சொல்வேன்,” என்றார்.
“சிறீலங்கா ஒரு தீர்வை முன்வைக்க விரும்பவில்லை.”

“சிறீலங்காவில் எனக்குப் பிடித்தமானவர்களுள் கோத்தபாய இராஜபக்சவும் ஒருவர் என்று கூறுவேன். பாதுகாப்பு அமைச்சராக அவர் இருக்கின்ற காலம் வரை நீங்கள் ஒரு தீர்வைக் காணமுடியாது. இந்த மனிதன் எந்த சமாதான தீர்வையும் விரும்பவில்லை,” என மேலும் குறிப்பிட்டார்.
அவர் கடமையாற்றிய நாடுகளான பொஸ்னியாவையும் இலங்கையையும் ஒப்பிட்டு கேழ்வி கேட்டபோது, இந்த இரு நாடுகளும் ஏனைய நாடுகளைக்காட்டிலும் அதிகம் ஒரேமாதிரியான தன்மையைக் கொண்டுள்ளன என்றார். 

சர்வதேச சமூகம் பொஸ்னியா பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க இரண்டு ஆண்டுகள் எடுத்தன.

“ஆனால், அது எமது சொந்த கோடிக்குள் இருக்கின்ற ஒரு நாடு.”

“அரசியல்வாதிகளை ஏதாவது செய்யச் சொல்லி ஒவ்வொரு நாடுகளிலும் அதற்கெதிரான (யூக்கோசுலாவுக்கு) கருத்து உருவாகிய போதுதான் திருப்புமுனை ஏற்பட்டது என நான் கூறுவேன். ஊடகத்திடம் இருந்தும் பொதுமக்களின் கருத்திலிருந்தும் ஒரு வித்தியாசமான அழுத்தம் இருந்தது, அதுவே ஐக்கிய நாடுகிளில் உள்ள அரசாங்கங்களை யூக்கோசுலா மீது நடவடிக்கை எடுக்க வைத்தது.”

இலங்கை மீது ஒரு நடவடிக்கை எடுக்கவேண்டுமானால், அதில் செயற்படவேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது அத்துடன், இந்தியாவில் உள்ள ஊடகங்களிலிருந்தும் பொதுமக்களின் கருத்திலிருந்தும் பலமான அழுத்தம் கிடைக்க வேண்டும் என்ற கருத்தையும் ஹென்றிக்சன் அவர்கள் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

நேர்காணலின் முழுமையான தொகுப்பு:

தமிழ்நெற்: வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தின் போது, அன்று உலகெங்கும் பெருந் தொகையான தமிழ் மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி போரை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். ஆனால், சர்வதேச சமூகம் அதைச் செய்யவில்லை. தற்பொழுது பல்வேறு அறிக்கைகள் வாயிலாக இந்தத் தவறு இழைத்தமைக்காக சர்வதேச சமூகத்தின் மீது குற்றச் சாட்டுக்கள் பரவலாக எழுகின்றன. தற்பொழுது, அங்கு தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துமாறு தமிழர்கள் கோரிவருகிறார்கள். ஆனால்,  அதைக் கூட இந்த சர்வதேசம் தடுத்து நிறுத்த தயாராகவில்லை. அது அதை இனப்படுகொலை என அங்கீகரிக்கக் கூட இல்லை. இது அதன் தொடர்ச்சியான தவறாகப் பார்க்கிறீர்களா?  

உல்ஃப் ஹென்றிக்சன்: ஆம். நீங்கள் சொல்வது சரியென்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். ஓர் எடுத்துக்காட்டுக்கு, இன்று சிரியாவில் உள்ள பிரச்சினையைப் பார்க்கலாம். சர்வதேச சமூகம் எல்லா மோதல்களிலும் தலையிட விரும்பவில்லை அல்லது அதனால் தலையிட முடியவில்லை. அவர்களிடம் அதற்கான பலம் இல்லை அல்லது அதற்காக அவர்கள் பலத்தை பிரயோகிக்க விரும்பவில்லை. பெருமளவு நாடுகளில் அவ்வாறான தலையீட்டுக்கு எதிரான கருத்து எழுகின்றது.

சொல்வதற்கு வருத்தமாக உள்ளது, ஆனால் சிறீலங்கா மேற்கு ஐரோப்பாவிலிருந்தும் வட அமெரிக்காவிலிருந்தும் மிக அதிக தொலைவில் இருக்கிறது.

கருத்தியல் ரீதியாகவும் ஊடக வாயிலாகவும் போதிய அழுத்தம் பிரயோகிக்கப் படவில்லையாயின், எதுவும் நடக்காது. போதிய அழுத்தம் ஏற்படுத்துவது என்பது ஒரு சிக்கலான விடயம். வேறு பல இடங்களில் நிலவுவது போலவே சிறீலங்காவுக்கும் இந்த சிக்கல் நிலவுகிறது. 

பெரும்பாலான நாடுகள் இவ்வாறான முன்னெடுப்புக்களில் ஈடுபட விரும்புவதில்லை. சுவீடனைப் பொறுத்தவரை இந்த விடயத்தில் எட்டாத தொலைவில் உள்ளது. அதை புறக்கணிப்பது எளிது. ஒரு மோதல் ஏற்பட்டுவிட்டால், அதில் தலையிட்டு தீர்ப்பதுதான் நல்லது.

உங்களுக்கு வடக்கில் ஒரு மிகப்பெரிய போட்டியாளன் (pடயலநச) உங்களுக்கு இருப்பது மேலும் ஒரு முக்கிய சிக்கல்: அது இந்தியா. அந்தப் பிராந்தியத்துக்காக இந்தியா என்ன கூறுகின்றது என்பது மிகவும் முக்கியமான விடயம். இந்தியா இந்தப் பிரச்சனையில் தலையிட ஆர்வப்படும் என்று நான் நினைக்கவில்லை, அவ்வாறு கூறுவதற்கு மன்னிக்கவும். ஆனால், பிராந்திய நலன் சார்ந்து தலையிடுகிறதா என்றால் ஆம் என்று நான் திட்டவட்டமாகக் கருதுகிறேன், ஆனால் அது ஒருவகையான தலையீடுதான்.

தமிழ்நெற்: பொஸ்னியாவிலும் இலங்கைத் தீவிலும் சமாதானக் கண்காணிப்பில் ஈடுபட்ட அனுபவம் உங்களுக்கு உண்டு. பொஸ்னியாவில் நடைபெற்றது இனப்படுகொலையாக நன்றாக உணரப்பட்டது அத்துடன், சர்வதேச சமூகம் அதற்கு ஒரு பொருத்தமான அரசியல் தீர்வை வழங்கியது. ஆனால், ஈழத்தமிழர்களது விடயத்தில் இனப்படுகொலை குறித்த கேழ்வி தொடர்பாக வல்லாதிக்க நாடுகளால் (வாந றழசடன நுளவயடிடiளாஅநவெள) ஒரு எழுதப்படாத தணிக்கை திணிக்கப்படுகிறது. இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் இரட்டை வேடம் எதுவும் இருப்பதாக காண்கிறீர்களா?   

ஹென்றிக்சன்: நல்லது, முன்னாள் யூக்கோசுலாவில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க சர்வதேச சமூகத்துக்கு இரண்டு ஆண்டுகள் எடுத்தன. யூக்கோசுலவில் கூட பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்காமல் நாம் மோசமாக கையாண்டிருந்தோம்.

இந்த விடயத்தில் ஐரோப்பியர்களுக்கு பெரிய வித்தியாசம் இருந்தது என்னவென்றால், அது எங்களுக்கு மிக அண்மையில் உள்ளது. அது எமது சொந்த கோடிக்குள் இருக்கின்ற ஒரு நாடு.

அரசியல்வாதிகளை ஏதாவது செய்யச் சொல்லி ஒவ்வொரு நாடுகளிலும் அதற்கெதிரான (யூக்கோசுலாவுக்கு) கருத்து உருவாகிய போதுதான் திருப்புமுனை ஏற்பட்டது என நான் கூறுவேன். ஊடகத்திடம் இருந்தும் பொதுமக்களின் கருத்திலிருந்தும் ஒரு வித்தியாசமான அழுத்தம் இருந்தது, அதுவே ஐக்கிய நாடுகிளில் உள்ள அரசாங்கங்களை யூக்கோசுலா மீது நடவடிக்கை எடுக்க வைத்தது.

என்னைப் பொறுத்தவரை பிற நாடுகளை விட இந்த இரு நாடுகளின் பிரச்சினைகளும் பெரும்பாலும் ஒரேமாதிரியானதாகவே உள்ளது.

சிறீலங்காவுக்கு நான் சென்றபோது என்னிடம் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒரு நண்பர் கூறினார், இப்பொழுது நீர் பொஸ்னியாவுக்கு செல்வதாக எண்ணவேண்டாம் என்று. ஆனால், இந்த இரு நாடுகளுக்குமிடையே காலநிலை தான் மிகப்பெரிய வித்தியாசமாகப் பட்டது! போருக்குப் பின்னால் உள்ள இயக்கவியல் (அநஉhயniஉள) ஒரேமாதிரியே இருந்தது - அது என்னவென்றால் பணம், சொத்து மற்றும் ஆட்சியதிகாரம் (pழறநச) என்பன. சிரியாவை எடுத்துக்கொண்டால் அங்கு என்ன நடக்கிறது. அங்கு இனப் பிரச்சினையோ மதப்பிரச்சினையோ காரணம் அல்ல. அது (இன, மதப் பிரச்சினை) அந்த மோதலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒழுக்கமான சமூக, பொருளாதார நீதி இருக்குமானால் மோதல் என்பதே கிடையாது.

தமிழ்நெற்: சிறீலங்கா விடயத்தில் சர்வதேச உடகத்திலிருந்து போதிய அழுத்தம் காணாது என குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்கு என்ன காரணம்?

ஹென்றிக்சன்: முதலாவது, நிச்சியமாக இலங்கையில் வேலைசெய்வதற்ககு ஊடகத்துக்கான சிரமம் இருக்கிறது. ஒரு தனி நாடு மற்றும் அரசாங்கம் என்ற விடயத்தில் உங்களுக்கு தடைகள் உள்ளன. இது ஒரு காரணம். மேற்குலகின் மிகப் பெரிய ஊடகமாக வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் உள்ளது, அந்த மக்கள் அதில் அக்கறை காட்டுவதில்லை. செய்தித்தாழ்களை நீங்கள் அங்கு விற்கமாட்டீர்கள். அது ஒரு வன்மையான உண்மை. 

அதை எப்படி சாதிப்பது என்று எனக்கு தெரியவில்லை. கருத்தியல் (ழிinழைn) ரீதியாக நீங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. சர்வதேச சமூகத்தை செயற்படச் செய்யவேண்டியுள்ளது. எடுத்துக்காட்டுக்கு ஐக்கிய நாடுகளை. 

ஆனால், ஐ.நா. என்பது எல்லா உறுப்பு நாடுகளையும் கொண்டது, அந்த உறுப்பு நாடுகளில் பல சிறீலங்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விருப்பம் காட்டவில்லை. உதாரணத்துக்கு சீனா, இந்தியா என்பன. 

சீனாவும் இந்தியாவும் மற்றும் ஏனைய சில நாடுகளும் சர்வதேச சமூகம் இலங்கைப் பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை.

ஐ.நா. தலையிடுவதை இந்தியா விரும்பாத காரணத்தாலேயே இலங்கையில் சமாதானக் கண்காணிப்பு நடவடிக்கை நோர்வேயால் நடத்தப்பட்டது. ஏற்கெனெவே அவர்களுக்கு காஸ்மீரில் ஐ.நா.வின் தலையீடு இருந்தது. அவர்கள் தென்னிலங்கையில் ஐ.நா. தலையிடுவதை விரும்பவில்லை. இது மிகவும் சிக்கலானதும் எளிதில் தீர்க்க முடியாததுமான பிரச்சினை.

தமிழ்நெற்: 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர், பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் நோர்வேயிடம் இருந்தும் ஐ.நா. விடமிருந்தும் வந்திருந்தன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டிய அரசியல் தீர்வு குறித்து திட்டவட்டமாக எதுமே கூறப்படவில்லை. ஜெனீவா மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ள அமெரிக்கத் தீர்மானம் கூட போர்க் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையே பரிந்துரைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கான ஒரு சர்வதேசப் பொறிமுறை ஏதும் உள்ளடக்கப் படாமல் இருக்கலாம். கடந்த ஐந்து ஆண்டுகள் நடவடிக்கையானது பல அரசியல் அவதானிகளை சிறீலங்காவுக்கு இனப்படுகொலையை நிறைவேற்றுவதற்காக வழங்கப்படும் “கால அவகாசமும் வெளியும்” என எண்ணவைக்கிறது. வேண்டுமென்றே செய்கின்ற தொடர்ச்சியான அநீதி என்று இதை நீங்கள் கருதுகிறீர்களா?

ஹென்றிக்சன்: கடந்த 2006 இல் இருந்து இலங்கையில் நான் இருக்கவில்லை. ஆனால், நான் வாசித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் கூறுவது சரி என்றே சொல்வேன். நிச்சயமாக, சிறீலங்கா அரசு ஒரு தீர்வை முன்வைக்க விரும்பவில்லை. 

சிறீலங்காவில் எனக்குப் பிடித்தமானவர்களுள் கோத்தபாய இராஜபக்சவும் ஒருவர் என்று கூறுவேன். பாதுகாப்பு அமைச்சராக அவர் இருக்கின்ற காலம் வரை நீங்கள் ஒரு தீர்வையும் காணமுடியாது. இந்த மனிதன் எந்த சமாதான தீர்வையும் விரும்பவில்லை

தமிழ்நெற்: ஆனால், அங்கு நடப்பது இனப்படுகொலை எனவும் அநீதி எனவும் உங்களால் கூறமுடியுமா?

ஹென்றிக்சன்: என்னால் அவ்வாறு கூறமுடியாது. அங்கு மக்கள் கொல்லப்படுதல், காணாமல் போதல் போனற பெருமளவு சம்பவங்களுடன் நிலைமை தொடர்ந்து நீடித்து வருவதாக நான் கூறுவேன். 2006 இல் இருந்த அந்த நிலைமை இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு ஜனநாயக அரசு அமையும் வரை இந்தப் பிரச்சினை ஒருபோதும் தீர்க்கப்படாது. தற்போது இருக்கும் அரசு சமாதானத் தீர்வை முன்வைக்காது.

தமிழ்நெற்: இலங்கைத் தீவில் சமாதான பணிக்கான தலைவர் என்ற முறையில் 2006 இல் மனிதநேய உதவிப் பணியாளர்கள் மீது இடம்பெற்ற மூதூர் படுகொலை விடயம் அத்துடன், போருக்கு தூண்டிய காரணியாகச் சித்தரிக்கப்படும் மாவிலாற்று சம்பவம் போன்றவற்றில்  நீங்கள் ஈடுபட்டிருந்தீர்கள். நீங்கள் அவை தொடர்பில் வாக்குறுதிகளையும் வழங்கியிருந்தீர்கள். போரும் அதன் “முடிவு”வும் நன்றாக முன்னரே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகவோ அல்லது நோர்வே சமாதான ஏற்பாட்டாளர் மற்றும் முன்னாள் அமெரிக்க உதவிச் செயலாளர் றிச்சட் ஆர்மிடேச் போன்ற நட்சத்திரங்களால் தோற்கடிக்கப்பட்டதாக கருதுகிறீர்கள்?

ஹென்றிக்சன்: மாவிலாறு மற்றும் மூதூர் விடயமே இறுதி முடிவுக்குத் தூண்டியதாக நான் கூறுவேன், ஆனால் நான் நினைக்கிறேன் இது ஏற்கெனவே திட்டமிடப்பட்டதாகத்தான். நாங்கள் அதை தடுத்து நிறுத்துவதற்காக நாடினோம்.

அணைகளைத் திறந்துவிடுமாறு நாம் விடுதலைப் புலிகளை நாடினோம், அதற்கு நீண்ட அவகாசம் எடுத்தது அத்துடன், நான் அரசாங்கத்திடம் கூறினேன் போரை தொடங்கவேண்டாம், கண்டிப்பாக நாங்கள் அந்த அணைகளைத் திறப்போம் என்று. ஆனால், அரசாங்கமோ விடுதலைப் புலிகளோ யாரும் நாங்கள் சொல்வதை செவிமடுக்கவில்லை. அரசாங்கம் போரை விரும்பியது அத்துடன், விடுதலைப் புலிகள் தாங்கள் இருந்ததை விட பலமாக இருப்பதாக எண்ணியதன் காரணமாக தவறிழைத்தார்கள்.

இரண்டு தரப்புகளுமே மோதலுக்கான தவறான மனநிலையைக் கொண்டிருந்தன. அது என்னுடைய பார்பை. மூதூர் சம்பவம் அரச படைகளாலோ அல்லது அரச படைகளோடு தொடர்புபட்ட யாரோவொருவரால் மேற்கொள்ளப்பட்டது என்பது வெளிப்படையானது, ஏனெனில் மேற்கொண்டு அந்த நிலைமையைக் கண்காணிப்பதற்காக நாங்கள் அங்கு ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். ஆனால், அதை சோதனை செய்வதற்கு சென்றபோது நாங்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை, என்னைப் பொறுத்தவரை அந்தக் காரணததை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படுகொலை அரசபடைகளால் நிகழ்த்தப்பட்டது என்பதை என்னால் திட்டவட்டமாக கூறமுடியும்.
  
தமிழ்நெற்: விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடையானது ஐரோப்பிய பாராளுமன்றில் நடைபெறவில்லை, ஆனால் அமெரிக்கா மற்றும் பிருத்தானியாவின் மிகக் கடுமையான அழுத்தத்திற்கு உட்பட்டு புரூஸ்லெஸில் உள்ள தேனீர் கடைகளில் வைத்து தடைவிதிக்கப்பட்டது என ஓர் உரையில் பதிவுசெய்திருந்தீர்கள். 2006 இல் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது தடையை அறிவிக்க முன்னர் இந்த விடயம் குறித்து தங்களோடு கலந்தாலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்போது என்ன விடயத்தை சமர்ப்பித்திருந்தீர்கள்?  

ஹென்றிக்சன்: சிறீலங்கா மீதான சர்வதேச சமூகமாகிய, இலங்கை சமாதான கண்காணிப்புக் குழுவாகிய நாம், வேறு தூதரகங்கள் மற்றும் ஐ.நா. ஆகியன விடுதலைப் புலிகளைத் தடை விதிக்கவேண்டாம் என அறிவுறுத்தினோம்.

பேச்சுவார்த்தை மேசைக்கு அவர்களை வருமாறு அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர விடுதலைப் புலிகளைத் தடைசெய்வது இது மிகவும் அவசர முடிவு என்பதை நாங்கள் எடுத்துக் கூறினோம். ஒவ்வொருத்தரும் சிறீலங்காவுக்காக வேலைசெய்தார்கள் அத்துடன், சிறீலங்காவுக்காக வேலை செய்த இராஜதந்திரிகள் கூறிய வார்த்தையை நாங்கள் கேட்டோம்: சரி, நாங்கள் காத்திருப்போம் என்றார்கள்.

ஆனால், அப்போது ஒவ்வொன்றும் மிக வேகமாக நடந்தது. நிச்சயமாக சிறீலங்கா அரசாங்கத்திடமிருந்து தடையை ஏற்படுத்துவதற்காக பெருமளவு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன, அத்துடன் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளும் அழுத்தத்தை பிரயோகித்தன. பின்னர், முல்லைத் தீவுக்கு வெளியே நடைபெற்ற கடற் சம்பவத்தை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்கா அரசு சொல்வதை செவிமடுத்தது. 

என்ன நடந்தது என்பதைக் கேட்பதற்கு அவர்கள் எங்களை அழக்கவில்லை, ஏனெனில் அது குறித்து எங்களிடம் இருந்து வேறுவிதமான பதில் கிடைக்கும் என்பதால். அது வெறும் தாவலாக இருந்தது, பின்னர் அவர்கள் தடையை விதித்தார்கள். பின்னர், அதிகளவிலோ அல்லது குறைந்த அளவிலோ செயலாற்றக் கூடிய துருப்புச் சீட்டை அவர்கள் அரசாங்கத்துக்கு வழங்கினார்கள், ஏனெனில் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்தபடியால்.  

அது பயங்கரவாதத்துக்கு எதிராக உலகெங்கும் மிகப்பெரிய போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டம். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது உலகளாவிய ரீதியில் அப்போது பெரும் வல்லரசுகளின் வெறியாக (றiளா) இருந்தது. இதனால், விடுதலைப் புலிகளும் அந்த கெடுவுக்குள் அகப்பட்டனர். ஆனால், என்னைப் பொறுத்தவரை அது ஒரு தவறு.

விடுதலைப் புலிகளைப் பயங்கர வாதப் பட்டியலில் சேர்ப்பதானால், பின் சிறீலங்கா அரசையும் அந்தப் பட்டியலில் இணைத்துவிடுமாறு நான் கூறினேன். ஏனெனில், சிறீலங்கா அரசும் அதே வழிமுறைகளைத் தான் பயன்படுத்தின. அது வெளிப்படையாகவே தெரிந்த விடயம். ஆகவே, அது ஒரு மிகப்பெரிய தவறு என்றே நான் கூறுவேன், ஏனெனில் அது பேச்சுவார்த்தை மூலம் சமாதானத் தீர்வை எட்டுவதற்கான சாத்தியப்பாட்டை தடுத்து நிறுத்தியது, சமாதானத் தீர்வை அரசு விரம்பவில்லை என்றே நான் கூறுவேன். இந்த நிலைமையில் விடுதலைப் புலிகள் மிகவும் திறமையாகச் செயற்படவில்லை. அத்துடன், அவர்கள் அதிகம் பிடிவாதமாக இருந்தார்கள்.  

தமிழ்நெற்: உலகளாவிய ரீதியில் இன்று, இறுதித் தீர்வாக முழு மனிதகுலத்தையும் பாதிக்கக்கூடிய முடிவுகளானது மிகச் சிலரால் எடுக்கப்படுகின்றன, ஆனால் பெருந்தொகையான மக்கள், படை அதிகாரிகள், பொது ஊழியர்கள், இராஜதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என யாவரும் அந்த முடிவுகளை அமுல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களுள் பலர் மனசாட்சி உள்ளவர்களாக உள்ளனர். எதிர்காலத்தில் மனிதகுல மேம்பாட்டுக்காக, அந்த மனச்சாட்சி உள்ளவர்கள் தங்களை திருத்தி ஒரு புதிய உலகை உருவாக்க வழிவகை செய்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். 

ஹென்றிக்சன்: அதுதான் பத்தாயிரம் டொலர் பெறுமதியான கேழ்வியாக உள்ளது. எனக்கு தெரியாது. மக்களை ஈடுபடுத்த வேண்டியிருக்கும், ஆனால் எப்படி? அது மிகவும் கடினமானது.

அது குறித்து நாங்கள் ஏற்கெனவே பேசியிருக்கிறோம், சதாரண மக்கள் தமது பொதுவான நாட்களில் செய்வதற்கு நிறைய உண்டு, அவர்களுக்கு நிறைய ஈடுபாடு உள்ளது: குடும்பம், சிறுவர், கார், வீடு ஆகிய ஒவ்வொன்றிலும்.

எவ்வாறாயினும், சிறீலங்கா அல்லது சிரியா போன்ற நாடுகளில் இவ்வாறான நிலைமை உங்களுடைய வாழ்க்கையின் சிறு பகுதியை அடக்குகிறது. அதில் ஈடுபடுவதற்கான சக்தி உங்களுக்கு இருக்காது. அது மிகவும் கடினமானது. சுவீடன் மக்களுக்கு இலங்கையில் உள்ள பிரச்சனைகளையோ அல்லது வேறு எங்காவது உள்ள பிரச்சினைகளை புரிந்துகொள்வது மிகவும் கடினம். நாங்கள் முற்றிலும் வேறான ஓர் உலகில் வசிக்கிறோம், அதுதான் பிரச்சினை.

எங்களுக்கான மிக முதன்மைத் தேவையானது நாளாந்தம் உணவும் பாதுகாப்பான நிலைமையும் ஆகும். அதே நலைமையே சிறீலங்காவிலும். பெரும்பாலான மக்கள் பிரச்சினையை விரும்புவதில்லை. பெரும்பாலான மக்களுக்கு வெறுமனே நாளாந்தம் பாதுகாப்பும் உணவுமே தேவைப்படுகிறது.

எடுத்துக்காட்டுக்கு, சிறீலங்கா குறித்து ஜனநாயகம் பேசுகிறோம். ஆனால், நீங்கள் பசியோடும் பாதுகாப்பற்றும் இருப்பீர்களானால், நீங்கள் ஜனநாயகத்துக்கு அணை கட்டமாட்டீர்கள். நீங்கள் அதில் அக்கறை எடுக்கமாட்டீர்கள் ஏனென்றால், உங்களுடைய நாள் உயிர்வாழ்வதற்காக கட்டப்படுகிறது.

நீங்கள் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். மக்களை அடக்குவதற்கான சிறந்த வழிமுறை எதுவென்றால், மக்களுக்கு கல்வி கற்பிக்கப்படாமல் விடுதல் என்றே நான் கூறுவேன். உங்களால் கல்வி மட்டத்தை உயர்த்த முடியுமானால், உங்களுக்கு சிறந்த உலகம் இருக்கும், ஆனால் விரைவாக எட்டமுடியாது. அது பல தசாப்தங்கள் ஆகின்றன, சிலவேளை அதைத் தீர்ப்பதற்கு நூற்றாண்டுகள் கூட எடுக்கும். இது தமிழர்களுடைய இனப்பிரச்சினை குறித்து என்னுடைய சாதாரண பார்வை.

தமிழ்நெற்: ஒரு சிறந்த உலகை அமைப்பதற்கு மனித குலத்திடமிருந்து எவ்வாறான ஈடுபாட்டை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

ஹென்றிக்சன்: அந்த வேலைக்காக பெருமளவு ஈடுபாடுள்ள மக்கள் அவசியம். அத்துடன், அதில் வேலைசெய்வதற்கான சக்தி அசவியம். எப்போதும் நாம் சிறிய படிகளை மேற்கொள்கிறோம், ஆனால் அதை விரைவுபடுத்துவதற்காக நாம் மிகவும் ஆர்வமாக இருக்க வேண்டும். உங்களுக்கு பெரிய சோர்வு இருக்குமானால், அது விரைவாக நடைபெறாது. ஆட்சியில் இருப்பவர்களே ஆட்சியில் இருக்க விரும்புகிறார்கள். தற்பொழுது உக்கிரைன் நிலைமையைப் பார்த்தீர்களானால், மக்கள் அதிகாரத்தில் இருக்க விரும்புகிறார்கள். அதேமாதியே சிறீலங்காவிலும். அங்கே ஓர் அரசியல் மேல்வர்கம் (pழடவைiஉயட நடவைந) உள்ளது. அவர்கள் அதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். யாரிடம் பணம், சொத்து என்பன இருக்கிறதோ அவர்கள் தகவலையும் ஊடகத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள்.

 

http://www.pathivu.com/news/29839/57//d,article_full.aspx 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.