Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா: ஆறாத காயங்களை விட்டுச் சென்றுள்ள உள்நாட்டுப் போர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mullivaikkal.jpg

வங்காள விரிகுடாவிலிருந்து கடலலைகள் அடித்துக் கொண்டிருக்கின்ற முள்ளிவாய்க்கால் என்கின்ற வடக்கு மாகாணத்தின் அழகிய கடற்கரையில் இரத்தம் தோய்ந்த துன்பியல் சம்பவங்கள் நிறைந்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்தது. 

இவ்வாறு Al Jazeera ஊடகத் தளத்தில் Amarnath Amarasingam* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

"எறிகணைகள் மழை போல பொழிந்துகொண்டிருந்தன" என அஜந்தன் என்னிடம் தெரிவித்தார். இது தொடர்பாகத் தற்போது கூறும்போது அஜந்தன் சிரித்தார். ஆனால் இந்த உண்மையைச் சொல்வதற்கு இவர் உயிருடன் இருக்கிறார் என நான் நினைத்தேன். அஜந்தன் 2006ல் புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டார். அதாவது தமிழ்ப் புலிகள் குடும்பத்திற்கு ஒருவரை தமது அமைப்பில் இணைத்துக் கொண்ட போது அஜந்தன் புலிகள் அமைப்பில் இணைந்தார். "எனது இளைய சகோதரர்கள் அனைவரும் அப்போது கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள். எனது மூத்த சகோதரன் 1990களில் புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார். அவர் தற்போது திருமணம் செய்துவிட்டார். ஆகவே நான் இந்த அமைப்பில் இணைந்து கொண்டேன்" என அஜந்தன் என்னிடம் கூறினார். 

உள்நாட்டுப் போர் முடியும் வரை அஜந்தன் புலிகள் அமைப்பிலேயே இருந்தார். இவர் புலிகள் அமைப்பில் போராடி இறுதிக் கட்ட யுத்தத்தில் தமது உயிர்களை நீத்த புலி வீரர்கள் தொடர்பாக மிகவும் கவலையுடன் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். ஏப்ரல் 2009ல் இவர் புலிகள் அமைப்பின் சீருடையைக் கழற்றி விட்டு, சிவில் உடையை அணிந்து கொண்டார். அதன் பின்னர் இவர் தனது குடும்பத்தவருடன் இணைந்து சிறிலங்கா அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றார். இதற்கு ஒரு சில வாரங்களின் பின்னர் யுத்தம் முடிவடைந்திருந்தது. 

சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து தற்போது ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. 1980களிலிருந்து தனிநாடு கோரிப் போராடிய புலிகள் அமைப்பு போரின் இறுதிக்கட்டத்தில் தோற்கடிக்கப்பட்டனர். வங்காள விரிகுடாவிலிருந்து கடலலைகள் அடித்துக் கொண்டிருக்கின்ற முள்ளிவாய்க்கால் என்கின்ற வடக்கு மாகாணத்தின் அழகிய கடற்கரையில் இரத்தம் தோய்ந்த துன்பியல் சம்பவங்கள் நிறைந்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்தது. 

சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆண்டு மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ளது. சிறிலங்கா மீது அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் பல்வேறு அழுத்தங்களை வழங்கியுள்ளன. சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் அனைத்துலக சமூகத்தை ஓரங்கட்டினால் மனித உரிமை அமைப்புக்கள் என்ன செய்யும் என்பது தெளிவற்றதாகும். நாட்டில் நிலையான தீர்வை எட்டுவதில் ராஜபக்ச அரசாங்கம் தயக்கம் காண்பித்து வருகின்றது என்பதை இலங்கையர்கள் பலர் உணர்ந்து கொள்கின்றனர். 

போரின் இறுதி மாதங்களில் புலிகள் தலைமையானது கட்டாய ஆட்சேர்ப்பை வலுப்படுத்தியது. புலிகள் அமைப்பின் இலக்கை அடைந்து கொள்வதற்காகத் தமது உயிரை தியாகம் செய்ய விரும்பாத புலி வீரர்கள் யுத்தத்தில் அதிகம் ஈடுபடுத்தப்பட்டதால் இவர்கள் போரில் பங்குபற்றுவதை விடுத்து அங்கிருந்து தப்பிச் செல்வதையே அதிகம் எதிர்பார்த்ததாகவும் முன்னால் புலி வீரர்கள் பலர் என்னிடம் தெரிவித்தனர். 

2009ல் புலிகளின் முக்கிய நிலைகள் சில இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகரில் புலிகள் தமது தளத்தைப் பலப்படுத்தினர். 2009 ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் புதுக்குடியிருப்பும் அதற்குச் சூழவிருந்த பகுதிகளும் போரின் மிக முக்கிய களமாக மாறின. 

போரில் அகப்பட்ட பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ஜனவரி 21,2009லிருந்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் 'பாதுகாப்பு வலயங்களை' அறிவித்தனர். இருந்த போதிலும், இவ்வாறான பாதுகாப்பு வலயங்களைக் குறிவைத்தும் வைத்தியசாலைகளைக் குறிவைத்தும் பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் செறிவாக மேற்கொள்ளப்பட்டன. 

போரின் இறுதியில் பல நூற்றுக்கணக்கான நோயாளிகள் மரங்களின் கீழ் வைத்து பராமரிக்கப்பட்டு அவர்களது காயங்களுக்கு மருந்திடப்பட்டனர். ஏனையோர் பாரிய காயங்களால் இரத்தம் வெளியேறி இறந்தனர். 

"நாங்கள் தறப்பால் ஒன்றைப் போட்டு அதன்கீழிருந்து சமைக்கத் தொடங்கினோம். இந்த இடத்தில் கால்வைப்பதற்குக் கூட இடம் இருக்கவில்லை. இந்த வலயத்தில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருந்தனர். எறிகணைகளும் வீழ்ந்து வெடித்தன. இங்கு நிறைய மக்கள் காத்திருந்ததால் இவர்களை விலத்தி எறிகணைகள் வேறிடங்களில் விழுவதற்கு எவ்வித இடைவெளிகளும் காணப்படவில்லை. மக்கள் குழுமியிருந்தனர். ஒரேதடவையில் 20 அல்லது 30 வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்" என புலிகள் முன்னாள் உறுப்பினரான றஞ்சித் என்பவர் தெரிவித்தார். றஞ்சித் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டார். 

"புலிகளின் ஆட்சேர்ப்புப் பிரிவு கிராமங்களில் இறங்கும் போது நாங்கள் வேகமாக அந்தப் பகுதி முழுவதும் இந்தக் கதையைப் பரப்புவோம். இதனால் புலிகள் மக்களின் பிரச்சினைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இளைஞர்கள் தாடி வளர்த்து பார்ப்பதற்கு வயது போனவர்கள் போல் நடித்தனர்.ஆரம்பத்தில் புலிகள், திருமணம் செய்தவர்களைக் கைதுசெய்யவில்லை. இதனால் இளம் பெண்கள் தமது தாய்மாரின் தாலிக் கொடிகளை அணிந்து தாம் திருமணம் செய்தவர்கள் போல் நடந்து கொண்டனர். புலிகளால் படையில் இணைக்கப்பட்டவர்கள் இறந்த போது அவரை இணைத்தவரைத் தாக்குவதற்காக கிராமம் முழுவதும் ஒன்றுசேர்ந்து விடும்" என றஞ்சித் தெரிவித்தார். 

"எனது இளைய சகோதரனை விசாரணைக்காக புலிகள் அழைத்திருந்தனர். தான் தனது மகனுடன் இணைந்து வரவுள்ளதாக எனது தாயார் கூறியபோது அவர்களும் ஏற்றுக் கொண்டனர். கொஞ்சத் தூரம் சென்ற பின்னர் இது தான் நீங்கள் இறங்க வேண்டிய இடம் எனக் கூறித் தாயை மட்டும் இறக்கி விட்டு உடனடியாக கதவை மூடிவவிட்டு வாகனத்தைக் கொண்டு சென்றனர். இதன்பின்னர் எனது அம்மா மீண்டும் தனது கிராமத்திற்குத் திரும்பிச் சென்றார்" என்கிறார் றஞ்சித். 

இறுதி பத்து நாட்களும் தொடர்ச்சியாக எறிகணைகள் வீசப்பட்டன. இதனால் மக்கள் அதிகம் துன்பப்பட்டனர். "இங்கு எல்லா இடமும் இறந்த உடலங்கள் காணப்பட்டன. நீங்கள் தப்பிச் செல்ல வேண்டுமானால் இந்த உடலங்களுக்கு மேலால் கடந்து செல்ல வேண்டியிருந்தது" என போரின் இறுதி வரை வன்னியில் தங்கியிருந்த ஒருவர் இவ்வாறு கூறினார். மே 16 அன்று ஜெனரல் சரத் பொன்சேகா போர் வெற்றியைப் பிரகடனப்படுத்தினார். 

புதிதாக வடிவமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளின் ஊடாகச் சென்ற போது முன்னாள் போர் வலயம் முற்றாக மாறியிருந்தது. நான் இந்த மக்களுடன் கதைத்தவாறு சென்றேன். இராணுமயமாக்கல் என்பது இங்கு எல்லோருடைய மனங்களிலும் உள்ள கேள்வியாகும். போர் முடிவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இங்கு இராணுவமயமாக்கல் நிலைப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம். 

இராணுவமயமாக்கல் மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்றன வடக்கு கிழக்கில் அதிகம் பேசப்படுகின்ற ஒன்றாகக் காணப்படுகிறது. சிறிலங்கா இராணுவத்தினர் மக்கள் பங்கு பற்றவேண்டிய பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் சரியான தொழில்வய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை சிறிலங்காப் படைகள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. ஒரேவிதமான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பேணும் சிறிலங்காவின் வடக்கில் சிங்கள அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் நில அபகரிப்புக்களை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளன. 

சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தம் என்பது மக்களின் மனங்களில் ஆழமாகப் பதியப்பட்டுள்ளன. இந்த யுத்தம் முடிவடைந்து நாட்டில் உண்மை, நீதி, மீளிணக்கப்பாடு போன்றவற்றைக் கட்டியெழுப்புவதற்காக அரிய, பொன்னான வாய்ப்பு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. சிறுபான்மையினர் தொடர்ந்தும் இடம்பெயர்கின்றனர். இராணுவமயமாக்கப்பட்டு, சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு, தமிழர் பகுதிகள் சிங்களமயமாக மாற்றப்படுகின்றன. இவற்றின் மூலம் வடக்கு கிழக்கில் கலாசார சீரழிவுகள் ஏற்படுகின்றன. 

வரும் மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் முன்வைக்கப்பட்ட பின்னர் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் இது சூடான விவாதப் பொருளான பின்னர், சிறிலங்காத் தீவானது தனது எதிர்காலத்தை மீளஎழுத வேண்டும் என்கின்ற தெரிவைத் தெரிவு செய்துகொள்ளும். 

*Amarnath Amarasingam is a Post-Doctoral Fellow in the Centre for Refugee Studies at York University and also teaches at Wilfrid Laurier University and the University of Waterloo. His research interests are in diaspora politics, post-war reconstruction, radicalisation and terrorism, and social movements. He is currently working on several books including, Pain, Pride, and Politics: Sri Lankan Tamil Activism in Canada.

 

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140226110038

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.