Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மகிந்த அருண்தம்பிமுத்து தயாரிக்கும் ஆவணப்படம் ???

Featured Replies

Arun-Tambimuttu-200x300.jpgஎதிர்வரும் மார்ச்மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் அடுத்த கூட்டத்தொடரில் இலங்கையரசிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாமென்ற நம்பிக்கைகள் ஏற்படும் நேரமிது.வளமைபோல இலங்கையரசு உலகின் கவனத்தையும் கருணையையும் பெற்றுக் கொள்வதற்கு பல திருகுதாளங்களைச் செய்து கொண்டிருப்பது போல இம்முறை அருண் தம்பிமுத்துவை பின்னணியாக வைத்து ஆவணப்படமொன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகருமான அருண்தம்பிமுத்துவும் அவரது குழுவினரும் கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அரசால் தயார்படுத்தப்பட்டவர்களைக் கொண்டு இவ் ஆவணப்படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

24.02.2014 தன்னாமுனை ,மயிலம்பாவெளி பகுதிகளில் அருண் தம்பிமுத்து தலமையிலான குழுவினர் இரண்டு வாகனங்களில் படப்பிடிப்பிற்கான ஆட்களையும் ஏற்றிச் சென்றிருந்தனர். விலையுயர்ந்த கமராக்கள் , மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் படப்பிடிப்பாளர்கள் சகிதம் மேற்படி கிராமங்களை வந்தடைந்தார்கள்.

ஆவணப்படம் நடிப்பதற்கு தயார்படுத்தப்பட்டவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் போல ஆடைகள் அணிவித்து ஒப்பனைகள் செய்யப்பட்டு கமரா முன்னால் நிறுத்தி படப்பிடிப்பில் இறங்கியுள்ளனர். இன்னும் இடிந்த வீடுகள் கூட திருத்தியமைக்கப்படாத வீட்டுத்திட்டமே வழங்கப்படாக மக்களின் வீடுகளின் முன்னால் அருண் தம்பிமுத்து குழுவால் தயாரிக்கப்பட்ட நடிகர்களின் நடிப்பில் வெளியாகவுள்ள ஆவணப்படமானது அனைத்துலக சமூகத்திற்கு காண்பிக்கப்படவுள்ளது.

19100-300x175.jpg

போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை நிலையில் எவ்வித மாற்றத்தையும் இதுவரையில் செய்து கொடுக்காத இலங்கையரசை நம்பி அனைத்துலக சமூகம் பல மில்லியன் ரூபாய்களை போரால் பாதிக்கப்பட்ட இடங்களின் மீள் கட்மானத்திற்கு வழங்கியும் வழங்கிக் கொண்டும் இருக்கிறது. ஆனால் அவை உண்மையில் கிடைக்க வேண்டிய மக்களுக்குக் கிடைக்காமல் அரசின் ஆதரவாளர்களுக்கும் அரசியல்வாதிகளின் கைகளிலும் ஒளிந்து கிடக்கிறது.

இது இப்படியிருக்க விரைவில் பிரித்தானியாவிற்கு ஆவணப்படத்தோடு செல்லவிருக்கும் அருண் தம்பிமுத்துவின் பொய்யாக முற்றிலும் அரச மட்ட ஆதரவாளர்களை வைத்து தயார் செய்யப்பட்டு எடுக்கப்படும் ஆவணப்படத்தினை உலகமும் நம்பி மேலும் பலமில்லின் ரூபாய்களை இலங்கையரசுக்கு வழங்கவிருக்கிறது. எனினும் ஏமாற்றப்பட்ட தமிழினம் எந்த உதவிகளையும் பெற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து துன்பங்களோடே வாழப் போகிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் இவ் அநியாயத்திற்கு எதிராக உங்கள் குரல்களை அனைத்துலகத்திற்கு எடுத்துச் சொல்லுங்கள்.

தன்னாமுனை ,மயிலம்பாவெளி பகுதிகளில் வாழும் மக்கள் காலம் காலமாக புல்லுமலை ,கோப்பாவெளி ,உறுகாமம் பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இவர்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த பிற்பாடு இன்னும் தங்கள் சொந்தக் கிராமங்களுக்குச் செல்லாமல் வந்த இடத்திலேயே வறுமையோடு வாழ்வை வாழப்பழகிவிட்டார்கள்.

IMG_7943-753475-300x225.jpg

 

இந்த மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டம் கூட இவர்களுக்கு வழங்கப்படாமல் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டது வேதனையான விடயம். கிழக்கின் அபிவிருத்தியில் அக்கறை காட்டுவதாக சொல்லும் அருண் தம்பிமுத்து ஏன் இம்மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டத்தை இதுவரையில் கிடைக்க வழிசெய்யவில்லை ? தனது பிரதேசமான கிழக்கின் தமிழர்களுக்கு ஏன் எவ்வித மாற்றத்தையும் இதுவரையில் செய்யாது ஏன் ?

பலகோடி சொத்துக்களை மக்களுக்கான உதவிகளிலிருந்து கொள்ளையடிக்கும் இலங்கையரசின் பினாமி முகவராக இயங்கும் அருண் தம்பிமுத்துவின் கோடிக்கணக்கு பெறுமதியான சொத்துக்கள் யாவும் வெளிநாடுகள் மக்களின் மீள் கட்டுமானத்திற்காக வழங்கும் பணத்திலிருந்தே சேர்ந்தவை என்பதை அருண் தம்பிமுத்து மறந்தது ஏன் ?

மட்டக்களப்பு பாசிக்குடா பகுதியில் பசில் ராஜபக்சவுடன் இணைந்து பிரமாண்டமான விடுதி கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அருண் தம்பிமுத்துவின் பெயரில் கட்டப்படும் இந்த விடுதிக்கான பணம் வந்த வழியை யார் அறிவார் ?

மகிந்த அரசின் பினாமி ஒப்பந்ததாரராக இயங்கும் அருண் தம்பிமுத்துவின் ஊடாகவே பல கட்டுமானப்பணிகள் நடைபெறுகிறது. வெளிநாடுகள் வழங்கும் கட்டுமானப்பணிகளுக்கான நிதியுதவியை அரசாங்கள் வாயில் போட்டுக் கொள்கிறது. ஒலுவில் துறைமுகம் (அம்பாறை) கட்டுமானப் பணியினை அருண் தம்பிமுத்து மூலமே அரசாங்கம் செய்து முடித்துள்ளது.

இங்கு குறித்தவை சில விடயங்கள் மட்டுமே. இப்படி வெளிநாடுகள் வழங்கும் மீள்கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் பல அருண் தம்பிமுத்துவின் பெயரால் அரசு செய்யும் வியாபாரங்கள் முதலீடுகள் பல. எல்லாவற்றுக்கும் நன்றியாக அரசாங்கம் அருண் தம்பிமுத்துவிற்கு வழங்கும் தரகுப்பணம் சில்லறைகள் அல்ல பெரிய கோடிதொகைகள்.

தற்போது அருண் தம்பிமுத்துவை வைத்து அரசாங்கள் எடுக்கும் பொய்யான ஆவணப்படத்தை வெளிநாடுகள் பார்த்து மேலும் பல மில்லியன்களை மக்களின் மறுவாழ்வுக்கு என வழங்கப்போகிறது. இத்தகைய மோசடிகளை அனைத்து ஊடகங்களும் வெளிப்படுத்துங்கள். இலங்கைவாழ் தமிழர்களின் நலன்களில் அனைத்துலக சமூகத்தினால் வழங்கப்படும் நிதியுதவிகள் சரியாக அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் இவ்விடயங்களில் தங்கள் கவனத்தையும் செலுத்த வேண்டுமென கிழக்குவாழ் தமிழர்கள் சார்பாக வேண்டுகிறோம்.

மட்டக்களப்பிலிருந்து ஆர்த்தி

http://thisaikaddi.com/?p=40761

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.