Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுடெல்லிக்கு விரைகிறார் நிஷா பிஸ்வால் – தீர்மானத்துக்கு ஆதரவு கோருவார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

nisha-bishwal-colombo.jpg

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், அடுத்தவாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

வரும் 4ம் நாள் தொடக்கம், 6ம் நாள் வரை, நிஷா பிஸ்வால், பெங்களூர் மற்றும் புதுடெல்லியில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

முன்னதாக, நிஷா பிஸ்வால், கடந்த ஜனவரி மாதம், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். 

எனினும், இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகடே, அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட விகாரத்தை அடுத்து, ஏற்பட்ட சுமுகமற்ற சூழலால் அவரது பயணம் பிற்போடப்பட்டது. 

கடந்த ஆண்டு தெற்கு, மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலராக பதவியேற்ற பின்னர் நிஷா பிஸ்வால் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதற்பயணம் இதுவாகும். 

இந்தப் பயணத்தின் போது. அவர், இருதரப்பு விவகாரங்கள் குறித்து இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். 

இதன்போது சிறிலங்கா விவகாரமும், முக்கியமாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தமாதம், ஐ,நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரவுள்ளது. 

இதற்கு இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இந்தப் பயணத்தை நிஷா பிஸ்வால் பயன்படுத்திக் கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்தமாத முற்பகுதியில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு விட்டு, ஜெனிவா சென்றிருந்த நிஷா தேசாய் பிஸ்வால், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்து ஜெனிவாவுக்கான இந்தியத் தூதுவர் திலிப் சின்ஹாவுடன் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140301110055

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.