Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா தீர்மானம் நாட்டுக்கு எதிரானதல்ல – மங்கள சமரவீர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா தீர்மானம் நாட்டுக்கு எதிரானதல்ல – மங்கள சமரவீர:-

 

 

mangala_CI.jpg

 ஜெனீவா தீர்மானத்தை அரசாங்கம் மக்களின் கவனத்தை திசை திருப்ப பயன்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஊழல் மோசடிகள் மற்றும் அரசாங்கத்தின் இயலமை போன்றவற்றை மூடி மறைக்கவே இவ்வாறு முயற்சிக்கப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவா தீர்மானம் நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ எதிரானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கோ அல்லது இராணுவத்திற்கோ எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ஷ அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு சில உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் புத்திசாதூரியத்துடன் செயற்படாவிட்டால் அதனால் மக்களே பாதிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் இவ்வாறான அழுத்தங்களை நாடு எதிர்நோக்கிய போது சரியான ராஜதந்திர அணுகுமுறைகளை பயன்படுத்தி கடந்த காலத் தலைவர்கள் நாட்டை பாதுகாத்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1987ம் ஆண்டு ஆர்ஜன்டீனா, கனடா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இதே விதமான தீர்மானமொன்றை முன்வைத்தாகத் தெரிவித்துள்ளார்.

அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ஒர் தொலைபேசி அழைப்பின் மூலம் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வினை எட்டினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் ஆற்றிய உரைக்கு எந்தவொரு உறுப்பு நாடும் ஆதரளிக்கவில்லை எனவும், சீனா, கியூபா போன்ற நாடுகள் கூட அமைச்சரின் உரையை வரவேற்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சார நாற்காலி பீதியை ஏற்படுத்தி மேல் மற்றும் தென் மாகாணசபை தேர்தல்களை வெற்றியீட்டுவதே அரசாங்கத்தின் தேர்தல் தந்திரோபாயமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103929/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.