Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநலன் பாராது பிரேரணை மூலம் தமிழருக்கு நீதி கொடுங்கள்: கிருஷ்ணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

1281439962kris.jpg

சுயநலன் பாராது பிரேரணை மூலம் தமிழருக்கு நீதி கொடுங்கள்: கிருஷ்ணா

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையை சர்வதேச சமூகம் தமது சுயநலத்துக்காகப் பயன்படுத்தாது, ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அடித்தளமிடும் தீர்மானமாக அதை மாற்றியமைக்க வேண்டும் என்று நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் சுயேச்சைக்குழு 01 இன் முதன்மை வேட்பாளருமான கலாநிதி எஸ்.கிருஷ்ணா கோரிக்கை விடுத்துள்ளார் 

ஜெனிவா விவகாரம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது- 

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவதுக் கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை விவகாரத்தை தென்னிலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் அரசியல் ஆயுதமாக்கியுள்ளன. 

மேற்படி பிரேரணை மரண ஓலைக்கு ஒப்பானது என்றும், அதை முறியடிக்க மக்கள் தமக்கு ஆணை வழங்க வேண்டும் என்றும்கூறி அதிகாரவர்க்கம் வாக்கு வேட்டையில் இறங்கியுள்ள அதேவேளை, ஏனைய சிலர், ஜெனிவாவில் தமிழருக்கு விடிவு கிடைக்கப்போகின்றது - நீதிதேவதை கண்விழிக்க போகின்றாள் என்றெல்லாம் கூறி வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளும் செயலிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர். 

குறிப்பாக இராஜதந்திர நடவடிக்கையின்போது, மதிநுட்பம் என்ற ஆயுதத்தையே நாம் கையிலெடுத்துச் செயற்படவேண்டும். இதைவிடுத்து, விமர்சனக் கணைகளை தொடுப்பதாலும், மேடைகளில் வீரவசனம் பேசுவதாலும் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. 

வாக்குவேட்டைக்காக ஜெனிவா விவகாரத்தை பயன்படுத்துவதானது, எதிர்கால இலங்கைக்குப் பாதகமான பெறுபேறுகளையே வழங்கும் என்பதை அதிகார வர்க்கம் புரிந்து செயற்பட்டால் மிகவும் நல்லது என்றே கருதுகின்றோம். 

அதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளும், நடுநிலைமையுடன் - பக்கச் சார்பின்றி தீர்மானங்களை எடுக்கின்றனவா என்பதிலும் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு நாட்டுக்கு பிரிதொரு நாட்டை பிடிக்காது என்பதற்காக, அந்நாடு கொண்டுவரும் யோசனைகளை ஆராயாமல் எடுத்த எடுப்பிலேயே நிராகரிப்பது நியாயமா? அது தான் இராஜதந்திர கோட்பாடா? அல்லது உலக நியதியா? 

இலங்கை அரசுக்கு எதிராக மார்ச்சில் வரவுள்ள பிரேரணையின் உள்ளடக்கங்கள் என்னவென்று தெரிவதற்கு முன்னரே - எவ்வித ஆய்வு மின்றி, அதை எதிர்ப்பதற்கு சீனா, ரஷ்யா, கியூபா, அல்ஜிரீயா ஆகிய நாடுகள் முடிவெடுத்துள்ளன. நீதியை பெற்றுதர வேண்டிய சர்வதேச சமூகமே இவ்வாறு பொறுப்பின்றி செயற்பட்டால் நீதியின் வாசல் எப்படி திறக்கும்? 

இம்முறை அமெரிக்காக இலங்கை அரசு மீது பிரேரணையை கொண்டு வருகின்றது. இந்நிலையில், தீபெத்திய ஆன்மிக தலைவரான தலாய்லா மாவை சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க ஜனாதிபதி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இது சீனாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அமெரிக்காவை சீனா கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் என்பது இதன்மூலம் மேலும் உறுதியாகின்றது. 

அதேவேளை, இந்தியத் துணை தூதுவர் தேவயாணி விவகாரத்தால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் இராஜதந்திர பனிப்போர் மூண்டுள்ளது. ஆகவே, ஜெனிவா விடயத்தில் டில்லியின் நிலைப்பாடு எவ்வாறு அமையும் என்பதும் கேள்விக்குறியே. இறுதிவரை மெளனம் காக்கும் இந்தியா இம்முறையும் இலங்கைக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் என்பதில் எமக்கு துளியளவேனும் சந்தேகம் இல்லை. 

இவ்வாறு உலக நாடுகளும், கட்சிகளும் மனித உரிமை விவகாரங்களையும் ஒரு சமூகத்தின் பிரச்சினைகளையும் அரசியலுக்காக பயன்படுத்தாது, பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியைப் பெற்றுதர முன்வரவேண்டும். அப் போதுதான் இந்த பிரபஞ்சம் நீதியான பாதையில் சுழலும். மாறாக அரசியல், பொருளாதார நலன்களுக்காக தீர்மானங்கள் எடுக்கப்படுமானால், உலக அமைதியில் அது தாக்கத்தை செலுத்தும் என்பதை வரலாறு நிச்சயம் எமக்கு உணர்த்தும். 

இவற்றை சபைகளில் சுட்டிக்காட்டு, யதார்த்தத்தைப் புரிய வைப்பதற்கு எமக்கு அரசியல் அதிகாரம் இல்லை. எனவே, இம்முறை அதைப் பெறும் நோக்கில் மக்களின் ஆசியுடன் இரட்டைக்கொடி சின்னத்தில் நாம் களமிறங் கியுள்ளோம். எனவே, எமக்கு ஆணையை வழங்கி புதுயுகம் படைக்க அணிதிரளுங்கள்! 

ஜெனிவா விவகாரத்தில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு, உண்மையை பேசினால், நீதி தேவதை எமக்கு அருள் வழங்கு வாள், ஆனால், இங்கு நடப்பது என்ன? மலையகத் தமிழ் அமைச்சர் ஒருவர் அரசுக்கு அதித விசுவாசத்தை காட்டுவதற்காக மந்திரம் செய்கிறார். வடக்கிலுள்ள தமிழ் அமைச்சரொருவர் வடக்கில் தேனும் பாலும் ஓடுவதாக கூறுகின்றார். இதை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.