Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயின் முன்னணி வெளிநாட்டவர்களில் ஒருவராகத் ஈழத்தமிழர் தெரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sarvendra-Tharmalingam.jpg

நோர்வே நாட்டில், 2013ம் ஆண்டுக்கான 'முதன்மை 10' [Top 10] பட்டியலில் ஈழத்தமிழரான கலாநிதி சர்வேந்திரா தெரிவாகியுள்ளார். 

நோர்வேயில் சமூக - தொழில் - கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களில் முன்னணியில் திகழ்கின்ற தகமையுடைய 5 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் உள்ளடங்கலான 10 வெளிநாட்டவர்களைத் தெரிவுசெய்து அடையாளப்படுத்துகின்ற நடைமுறை நிலவுகின்றது. கடந்த 2004ம் ஆண்டிலிருந்து ஒவ்வோராண்டும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அத்தோடு சிறுபான்மை இனக்குழுமங்கள் மத்தியில், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு சிறந்த முன்மாதிரியானவர்களை [role models] அறிமுகப்படுத்தி, அவர்களின் மேம்பாட்டுக்குரிய உந்துதலை வழங்குவதும் இத்தெரிவின் மற்றுமோர் நோக்கமென்பது சுட்டிக்காட்டத்தக்கது. நோர்வே பெருஞ்சமூகத்தின் மத்தியில் பல்லினக் கலாச்சார, இணைவாக்க மற்றும் சகிப்புத் தன்மை போன்ற சிந்தனைகளை மேம்படுத்துவதும் இவ்விருதின் நோக்கங்களில் ஒன்றாகும். 

2013ம் ஆண்டுக்கான முதன்மையான 10 வெளிநாட்டவர்களின் தெரிவு நேற்று [07.03.14] வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஈழத்தமிழரான கலாநிதி சர்வேந்திராவும் ஒருவராவர். அவர் நோர்வேயின் ஒஸ்லோ பல்கலைக் கழகத்தில் சமூக மானிடவியல் பீடத்தில் புலப்பெயர்வு மற்றும் நாடு கடந்த வாழ்வியல் [Migration and Transnationalism] துறையில் பின்-கலாநிதி ஆய்வினை [Postdoctoral research] முன்னெடுத்து வருகின்றார். 

தாயகத்தில் ஊடகத்துறையில் பணியாற்றிய சர்வேந்திரா நோர்வேக்கு புலம்பெயர்ந்த பின்னர் அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வகையில் சவால்கள், தடைகளை எதிர்கொண்டு முன்னேற்றம் அடைந்துள்ளார். நோர்வேயில் இயங்குகின்ற தமிழர் வள ஆலோசனை மையத்தினை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். புலப்பெயர்வு மற்றும் நாடுகடந்த வாழ்வியல் சார்ந்த ஆய்வில் காத்திரமான பங்களிப்பினை வழங்கியுள்ளார் என ’Top 10’ நடுவர் குழு இவரைத் தெரிவு செய்தமை பற்றிய குறிப்பில் தெரிவித்துள்ளது. 

சமூக ஆய்வுத் துறையில் உச்சத்தை அடைந்துள்ள வெளிநாட்டுச் சமூகத்தின் முதலாவது தலைமுறையைச் சேர்ந்த மிகச் சிலரில் கலாநிதி சர்வேந்திரா ஒருவர் எனவும் நடுவர் குழுவின் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2013ம் ஆண்டு வெளிநாட்டவர் மத்தியில் ’முன்னணியில் 10’ விருதுக்குத் தெரிவாகியமையை முன்னிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் சர்வேந்திரா அவர்கள், ஒரு அரசியல் செயற்பாட்டாளனாக நீண்ட காலம் இயங்கியதன் தொடர்ச்சியாக், ஒரு கல்வியாளராக சமூக அறிவியல் ஆய்வுத் தளத்தில் ஈடுபட்டுள்ள தனக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை மேலும் அத்துறையில் பங்களிப்புச் செய்வதற்கான ஒரு உந்துதலை வழங்கியுள்ளது என தெரிவித்தார். 

சர்வேநதிரா கூறுகையில், 

தமிழ் மற்றும் வெளிநாட்டுச் சமூகங்களில் மத்தியில் சமூக அறிவியல் சார்ந்த சார்ந்த கல்வி மற்றும் ஆய்வுச் செயற்பாடுகளில் அரிதானவர்களே ஈடுபடுகின்றனர். இத்துறையில் மேலும் பல தமிழ் இளையவர்கள் மற்றும் வெளிநாட்டுச் சமூகத்தவர்கள் ஈடுபட வேண்டுமென்ற தனது விருப்பினையும் பகிர்ந்து கொண்டார். 

சர்வேந்திரா அவர்கள், 1990களின் ஆரம்பத்தில் நோர்வேக்கு புலம்பெயர்ந்தவர். 2000களின் ஆரம்பம் வரை நோர்வே மற்றும் ஏனைய புலம்பெயர் நாடுகளில் தாயகம் நோக்கிய செயற்பாடுகளை ஒருங்கிணைத்து வழிநடத்தியவர். புலம்பெயர் நாடுகளில் பல்வேறு சமூக நலன் சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் வளர்த்தெடுப்பதிலும் முன்னின்று உழைத்தவர். கலை இலக்கிய மற்றும் ஊடகத் தளங்களிலும் இயங்கிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாயகத்தில் ஒரு ஊடகவியலாளராகவும், யாழ் பல்கலைக் கழகத்தில் சில காலம் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டுகளிலும் வேறுசில தமிழர்களும் நோர்வேயின் இந்த ’முதன்மை 10’ விருதினைப் பெற்றுள்ளனர். 2007ம் ஆண்டு ஊடகவியலாளர் ராஜன் செல்லையா, 2009ல் பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை, 2010ல் தொழில்நுட்பவியலாளர் ஸ்ரீபன் புஸ்பராஜா, 2011ல் தொழில்நுட்பவியலாளர் தம்பா ரஜீவன் ஆகியோர் இப்பட்டியலில் தெரிவான தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140308110099

நல்லவிடயம். கலாநிதிக்கு வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.