Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் எனக் கூறி கப்பம் பெற முயற்சித்த மூவர் வெள்ளவத்தையில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
(எம்.எப்.எம்.பஸீர்)
 
தமிழீழ விடுதலைப் புலிகள் எனக் கூறி  வெள்ளவத்தை பகுதியில் தமிழ் வைத்தியர் ஒருவரிடம் 10 இலட்சம் ரூபா பணத்தினையும் 3 பவுண் தங்க நகையினையும் கப்பமாக பெற முனைந்த மூவர் கொண்ட குழுவினரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Arrest1_10.jpg
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீன்டும் ஸ்தாபிக்கப்பட்டு வருவதாகவும் அதற்குத் தேவையான நிதியினையே தாம் சேகரிப்பதாகவும் கூறி இந்த கப்பம் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியரின் முறைப்பாட்டினைத் தொடர்ந்து கப்பத்தொகையினை குறித்த குழு பெற்றுக்கொள்ள முனைந்த போது அவர்களை கைது செய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
 
குறித்த தமிழ் வைத்தியரை தொடர்பு கொண்டுள்ள இந்த கொள்ளைக் குழு, புலிகள் அமைப்புக்கான நிதி என குறிப்பிட்டு 10 இலட்சம் ரூபாவினையும் 3 பவுண் தங்க நகையினையும் கோரியுள்ளது. இதனை அடுத்தே வைத்தியர் அது தொடர்பில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்ட நகர்வுகளிலேயே குறித்த கப்பம் பெறும் குழுவை சேர்ந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான சில ஆவணங்களையும் இவர்வகள்  இந்த கப்பம் பெறும் நடவடிக்கைக்கு பயன்படுத்தியுள்ளதுடன் இந்த குழுவில் இரு தமிழர்களும் ஒரு சிங்களவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
 
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மொறட்டுவை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மற்றையவர் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸ் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கையடக்கத்தொலைபேசிகள் சில கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய காணொளிகள் சிலவும் இருந்ததாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
 
வைத்தியரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இந்த குழுவை கைது செய்ததாக குறிப்பிடும் பொலிஸார் சந்தேக நபர்கள் இவ்வாறு வேறுயாரிடமாவது கப்பம் பெற்றுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
 
 
 

கொமெடியின் உச்சக்கட்டம்.

வேண்டுமென்றே பிடிபட்டது போல் தெரிகிறது.

கொத்தியின் பெயரை சொல்லி இருந்தால் கேட்டதற்கும் மேலாக கொழும்பு தமிழ் வைத்தியர் கொடுத்திருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.