Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2014 IPL 7 செய்திகளும்... கருத்துக்களும்

Featured Replies

ஐபிஎல் கிரிக்கெட்டில் வர்ணனைகளை உற்று நோக்கினால், அதன் மிகைத் தன்மைகள் புரியவரும். அதாவது, அளவுக்கதிகமாக பாராட்டி வர்ணிப்பது தெளிவாகத் தெரியும்.

ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு ஒரு வீரரின் கடந்த கால ஃபார்ம், அவரது எதிர்கால ஃபார்ம் பற்றியெல்லாம் கவலையில்லை. மாறாக நிகழ்காலம்தான் முக்கியம்.

யுவ்ராஜ் சிங் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தடவு தடவென்று தடவி தோல்விக்கு இட்டுச் சென்றார்.

ஆனால், ஐபிஎல். கிரிக்கெட்டில் அது பற்றியெல்லாம் கவலையில்லை. அவர் வந்து நின்று முதல் பந்தை சாதாரணமாக மிட்விக்கெட்டில் தட்டி விட்டு ஒரு ரன் எடுத்தால்கூட 'ப்ரில்லியன்ட் ஷாட்' என்று வர்ணிப்பார்கள்.

மேலும், எப்போதும் பவுண்டரி அடித்தால் அது 'அபாரமான ஷாட்'தான். அது மோசமான பந்து என்ற கருத்தை வர்ணனையாளர்கள் கூறுவதில்லை.

அதே போல்தான் கெவின் பீட்டர்சன் ஆஷஸ் தொடரில் சரியாக விளையாடவில்லை. இதனால் இங்கிலாந்து கடுமையான தோல்வியை சந்தித்தது.

ஆனால் ஐபிஎல். கிரிக்கெட்டில் இவர் வந்தவுடன் ஒரு ரன் எடுத்து விட்டால் போதும் உடனே வர்ணனையாளர் இயன் பிஷப், 'கணக்கைத் துவங்க அற்புதமான ஷாட்டை ஆடினார் பீட்டர்சன்' என்று கூறுவார். ரமீஸ் ராஜாவோ இன்னும் ஒரு படிமேலே போய், 'அவர் சரியான பார்மில் உள்ளார்' என்பார். எதற்கு? ஒரு ரன்னிற்கு!

கேட்ச் கோட்டை விடப்பட்டால் அது மோசமான பீல்டிங் என்று கூறப்படமாட்டாது. மாறாக, பந்து வீச்சாளரின் துரதிர்ஷ்டம் அல்லது பேட்ஸ்மெனின் அதிர்ஷ்டம் என்று வர்ணிக்கப்படும்.

நடுவரின் கோளாறான தீர்ப்பு பற்றியும் அவ்வாறே இனிமையான வர்ணனைகளே வழங்கப்படும். விமர்சனம் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றே தெரிகிறது.

சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது வர்ணனையாளராக இயன் சாப்பல் பணியாற்றவேண்டும் என்று அவரை அணுகியுள்ளனர். ஆனால் விமர்சனம் செய்யக்கூடாது என்ற அன்புக் கட்டளையையும் அவருக்கு இட்டதாக கூறப்படுகிறது. கடைசியில் அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் வர்ணனைக்கு வரவில்லை.

இந்த பின்புலத்தில்தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் வர்ணனைகள் விமர்சனமற்ற இனிமையான மிகை வர்ணனையாக மாறியுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6004953.ece?homepage=true

  • Replies 147
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கேவலத்தினாலதான் உதையெல்லாம் இப்ப பார்க்கிறேல்ல.. :D

  • தொடங்கியவர்

கோல்கட்டா கலக்கல் வெற்றி: உத்தப்பா அபாரம்

மே 14, 2014.

கட்டாக்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் உத்தப்பா 80 ரன்கள் விளாச, கோல்கட்டா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி மீண்டும் ஏமாற்றம் அளித்தது.

ஒடிசாவின் கட்டாக்கில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை, கோல்கட்டா அணிகள் மோதின. கோல்கட்டா அணியில் காலிசுக்கு பதில் சாகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

துவக்கம் மோசம்: மும்பை அணிக்கு கவுதம்(8), லெண்டில் சிம்மன்ஸ்(12) ஏமாற்றினர். பின் பொறுப்பாக ஆடிய அம்பதி ராயுடு 33 ரன்கள் எடுத்தார்.

அடுத்து வந்த கோரி ஆண்டர்சன், பியுஸ் சாவ்லா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். கேப்டன் ரோகித் சர்மா தன்பங்கிற்கு ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 17 ரன்கள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து மார்னே மார்கல் ஓவரில் ரோகித் வரிசையாக இரண்டு சிக்சர் அடித்தார். ஆண்டர்சன் 18 ரன்களுக்கு வெளியேற, ரன் வேகம் குறைந்தது. அரைசதம் கடந்த ரோகித்(51), சுனில் நரைன் ‘சுழலில்’ போல்டானார். ‘அதிரடி’ போலார்டு இம்முறை மந்தமாக ஆடி ஏமாற்றினார். மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. போலார்டு(10), ஆதித்ய தாரே(2) அவுட்டாகாமல் இருந்தனர்.

நல்ல துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு உத்தப்பா, காம்பிர் சேர்ந்து வலுவான அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், ஹர்பஜன் ‘சுழலில்’ காம்பிர்(14) சிக்கினார். அடுத்து வந்த மனிஷ் பாண்டேவும்(14), ஹர்பஜன் வலையில் வீழ்ந்தார். தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த உத்தப்பா அரைசதம் கடந்தார். சிம்மன்ஸ் வீசிய போட்டியின் 16வது ஓவரில் வரிசையாக இரண்டு சிக்சர் அடித்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் உத்தப்பா(80 ரன், 52 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) போல்டானார். சாகிப் அல் ஹசன்(9) நிலைக்கவில்லை.

யூசுப் பதான் ‘100’: தனது 100வது ஐ.பி.எல்., போட்டியில் விளையாடிய யூசுப் பதான், மலிங்கா பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தனர். கோல்கட்டா அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. யூசுப்(20) அவுட்டாகாமல் இருந்தார்.

ஆட்டநாயகன் விருதை உத்தப்பா வென்றார்.

சிக்கலில் மும்பை

மும்பை அணியின் ‘பிளே–ஆப்’ சுற்று அனேகமாக முடிவுக்கு வந்தது. இதுவரை விளையாடிய 10 போட்டியில், மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. ஏழு போட்டிகளில் தோல்வி அடைந்தது. ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேற, மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் சிறந்த வெற்றியை பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை மீதமுள்ள 4 போட்டியிலும் வெற்றி பெற்றால் கூட, மற்ற அணிகள் பங்கேற்கும் போட்டிகளின் முடிவைப் பொறுத்து தான் மும்பை அணியின் வாய்ப்பு முடிவு செய்யப்படும்.

http://sports.dinamalar.com/2014/05/1400086424/MumbaiKolkataIPLCricketRohit.html

மும்பை வங்கடேயில் ஐ.பி.எல் இறுதிப் போட்டி?

 

மும்பை வங்கடே மைதனத்தில் ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியை நடத்துவதாக இருந்தால் தாங்கள் முன் வைக்கும் 15 கோரிக்கைகளையும் ஏற்றால் மாத்திரமே அதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும் என ஐ.பி.எல் தலைவர் ரஞ்சித் பிஸ்வால் தெரிவித்துள்ளார். 

மும்பை கிரிக்கெட் சம்மேளனம் இறுதிப் போட்டி மைதானம் மாற்றப்பட்டமை தொடர்பில் எழுத்து மூலமான தமது கண்டனத்தை தெரிவித்த அதேவேளை காரணத்தையும் கோரியிருந்தது. அதற்க்கான பதில்க் கடித்ததில் மேற்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி அனைத்து அணிகளது உரிமையாளர்களும் மைதானத்திற்குள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும். வாகன தரிப்பிடத்தில் 85% இடம் அதி முக்கிய பிரமுகர்கள், ஐ.பி.எல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிகாரிகள் மற்றும் அணி உரிமை நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் ஆகியோருடைய வாகனங்களுக்கு வழங்கப்பட வேண்டும். உதவியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். மும்பை காவற்றுறைக்கு வழங்கப்படும் தொகையான 50 லட்சம் ரூபா குறைக்கப்பட வேண்டும். அதிகமான வசதிகள் கொண்ட பிரத்தியோக பெட்டிகள் அதிகரிக்கப்பட வேண்டும். போட்டி நடைபெறும் மைதானத்தில் அதிக விளம்பர வசதிகள் வழங்கப்பட வேண்டும். இவை அடங்கலாக 15 கோரிக்கைகளும் ஏற்க்கப்படின், வங்கடே மைதானத்தில் இந்த வருட இறுதிப் போட்டி நடைபெறும் என மும்பை கிரிக்கெட் சம்மேளனத்திற்கு ஐ.பி.எல் தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார். 

கடிதம் தமக்கு கிடைதுள்ளது என்பதனை உறுதி செய்துள்ள மும்பை கிரிக்கெட் சம்மேளனம், நாளை (15) உடனடிக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கோரப்பட்ட விடயங்களை வழங்க முடியுமா இல்லையா என்பதை கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இந்த வங்கடே மைதானத்தின் பாதுகாப்பு ஊழியர்களை தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் உரிமையாளர் ஷாருக்கான் 5 வருடத்திற்கு இந்த மைதானத்துக்குள் செல்ல முடியாதபடி மும்பை கிரிக்கெட் சம்மேளனம் அவருக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிர்வாக சபைக் கூடத்திலேயே இறுதிப் போட்டி வங்கடே மைதானத்தில் நடாத்துவதா இல்லையா என்ற முடிவு எடுக்கப்படும் என தெரிவித்த ஐ.பி.எல் தலைவர் பிஸ்வால், நிர்வாக சபை உறுப்பினர்கள் உடனடிக் கூட்டத்திற்கு பங்கு பற்றும் நிலையில் உள்ளார்களா என்பது சந்தேகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/110520-2014-05-14-16-20-08.html

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

எழுச்சி பெறுமா ராஜஸ்தான்: இன்று டில்லியுடன் மோதல்

மே 14, 2014.

ஆமதாபாத்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான், டில்லி அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணி காத்திருக்கிறது.

ஆமதாபாத்தில் இன்று நடக்கும் ஏழாவது ஐ.பி.எல்., தொடருக்கான லீக் போட்டியில், ராஜஸ்தான் அணி, டில்லியை சந்திக்கிறது. இதுவரை விளையாடிய 10 போட்டியில் 6 வெற்றி, 4 தோல்வி உட்பட 12 புள்ளிகள் பெற்றுள்ள ராஜஸ்தான் அணி, ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறுவதில் எவ்வித சிக்கலும் இருப்பதாக தெரியவில்லை. பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி அளித்த ராஜஸ்தான் அணி, கடைசியாக சென்னையிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

வாட்சன் நம்பிக்கை: சென்னைக்கு எதிராக ‘ஆல்–ரவுண்டராக’ அசத்திய அன்கித் சர்மா (30 ரன், 2 விக்கெட்) இன்றும் கைகொடுக்கலாம். அரைசதம் அடித்த கேப்டன் ஷேன் வாட்சன், மீண்டும் சாதிக்கலாம். ‘மிடில்–ஆர்டரில்’ பலம் சேர்க்க, சஞ்சு சாம்சன் இன்று தேர்வு செய்யப்படலாம். அஜின்கியா ரகானே, கருண் நாயர் பொறுப்பாக விளையாட வேண்டும். பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடி காட்டிய ஸ்டீவன் ஸ்மித், பால்க்னர் ஜோடி, சென்னையிடம் சோபிக்கவில்லை. இவர்கள் இன்று எழுச்சி காணும் பட்சத்தில் வலுவான இலக்கை பதிவு செய்யலாம்.

‘சுழலில்’ பிரவிண் தாம்பே (14 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். இவருக்கு அன்கித் சர்மா, ரஜத் பாட்யா ஒத்துழைப்பு தந்தால் சுழலின் பலம் அதிகரிக்கும். வேகப்பந்துவீச்சில் பால்க்னர், ரிச்சர்ட்சன் கைகொடுத்தால் நல்லது.

ஆறுதல் வெற்றி: ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடந்த முதற்கட்டப் போட்டியில் இரண்டு வெற்றியை பெற்ற டில்லி அணி, இந்திய மண்ணில் விளையாடிய 5 போட்டியிலும் தொடர்ச்சியாக தோல்வி கண்டது. இதனையடுத்து டில்லி அணியின் ‘பிளே–ஆப்’ வாய்ப்பு முடிவுக்கு வந்தது. இருப்பினும் மீதமுள்ள போட்டிகளில் ஆறுதல் தேட முயற்சிக்கலாம்.

பேட்டிங்கில் டுமினி மட்டும் ஆறுதல் அளிக்கிறார். குயின்டன் டி காக், கேப்டன் கெவின் பீட்டர்சன், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் இதுவரை பெரிய அளவில் சோபிக்காதது பின்னடைவு. வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி ஆறுதல் அளிக்கிறார். பெங்களூரு அணிக்கு எதிராக ரன்களை வாரி வழங்கிய இம்ரான் தாகிர், துல்லியமாக பந்துவீச முயற்சிக்க வேண்டும். இன்று டில்லி அணி வீரர்கள் எழுச்சி காணும் பட்சத்தில், முன்னதாக பெரோஷா கோட்லா மைதானத்தில் ராஜஸ்தானிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கலாம்.

http://sports.dinamalar.com/2014/05/1400086162/RajasthanDelhiIPLCricketWatson.html

  • தொடங்கியவர்

ராஜஸ்தான் அசத்தல் வெற்றி: ரகானே அரைசதம்
மே 14, 2014.

ஆமதாபாத்: ஐ.பி.எல்., லீக் போட்டியில், அஜின்கியா ரகானே அரைசதம் அடித்து கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டில்லி அணி தொடர்ந்து 6வது தோல்வியை பெற்றது.

 

ஆமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில், டில்லி, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் கெவின் பீட்டர்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். மழை காரணமாக 15 நிமிடங்கள் தாமதமாக போட்டி துவங்கியது.

 

ரகானே அரைசதம்:

ராஜஸ்தான் அணிக்கு கருண் நாயர் (19) ஏமாற்றினார். கெவான் கூப்பர் (32) நம்பிக்கை தந்தார். அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன், சித்தார்த் கவுல் வீசிய 15வது ஓவரில்  இரண்டு சிக்சர் விளாசினார். ராகுல் சுக்லா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரகானே, ஐ.பி.எல்., அரங்கில் தனது 13வது அரைசதத்தை பதிவு செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த போது, நதீம் ‘சுழலில்’ ரகானே (64) போல்டானார். இம்ரான் தாகிர் பந்தில் ஸ்டூவர்ட் பின்னி (0), சஞ்சு சாம்சன் (40) அவுட்டானார்கள். ராகுல் சுக்லாவின் 20வது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர் அடித்தார் பால்க்னர். கடைசி பந்தில் பென் கட்டிங் (8) ‘ரன்–அவுட்’ ஆனார்.

 

ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. பால்க்னர் 8 பந்தில் 23 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். டில்லி அணி சார்பில் நதீம், தாகிர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

திவாரி ஆறுதல்:

சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு மயாங்க் அகர்வால் (17) நிலைக்கவில்லை. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் (3), டுமினி (8) ஏமாற்றினர். ரஜத் பாட்யா ‘சுழலில்’ கேப்டன் கெவின் பீட்டர்சன் (12), ராஸ் டெய்லர் (4) அவுட்டானார்கள். கேதர் ஜாதவ் (3) ‘ரன்–அவுட்’ ஆனார்.  நதீம் (1), இம்ரான் தாகிர் (4) சொற்ப ரன்னில் வௌியேறினர். கெவான் கூப்பர் பந்தில் ராகுல் சுக்லா (14) சரணடைந்தார். தனிநபராக போராடிய மனோஜ் திவாரி அரைசதம் அடித்தார்.

 

டில்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. மனோஜ் திவாரி (61), சித்தார்த் கவுல் (2) அவுட்டாகாமல் இருந்தனர். ராஜஸ்தான் சார்பில் ரஜத் பாட்யா 2 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் 7வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான் அணி ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.

கலக்கல் கட்டிங்

மனோஜ் திவாரி வீசிய 19வது ஓவரில் பென் கட்டிங் அடித்த சிக்சரில், 101 மீ., துாரம் சென்ற பந்து மைதானத்தின் மேற்கூரையில் பட்டு வௌியேறியது. இதன்மூலம் இத்தொடரில் அதிக துாரம் சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் 102 மீ., துாரம் அடித்த பஞ்சாப் அணியின் டேவிட் மில்லர் உள்ளார்.

 

 

http://sports.dinamalar.com/2014/05/1400086162/RajasthanDelhiIPLCricketWatson.html

இந்தியாவின் துவக்க வீரர் பிரச்சினைக்கு நானே தீர்வு: ராபின் உத்தப்பா

நடப்பு ஐபிஎல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக துவக்க வீரராக களமிறங்கி மிகச ்சிறப்பாக ஆடிவரும் ராபின் உத்தப்பா, இந்தியாவின் துவக்க வீரர் பிரச்சினைக்கு தானே சரியான தீர்வு என்று கூறியுள்ளார்.

தனது உத்திகளில் பயிற்சியாளர் பிரவீண் ஆம்ரே சில திருத்தங்களைச் செய்து கொடுத்தது தனது ஆட்டத்தை வேறு மட்டத்திற்கு உயர்த்தியுள்ளது என்று கூறினார் அவர்.

"நான் பேட்டிங் செய்யும் போது பந்து வீச்சை எதிர்கொள்ளும் முன்பு சில நகர்வுகளை மேம்படுத்தினேன், இதனால் எனது ஷாட் தேர்வு சரியாக அமைந்துள்ளது. மேலும் நான் கால்களை நகர்த்துவதிலும் சில மாற்றங்களைச் செய்துள்ளேன்.

எனது ஆட்டத்தில் பிரவீண் ஆம்ரேயின் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் தாக்கம் செலுத்தி வருகிறது. நிறைய மாற்றங்களைச் செய்துள்ளேன் இதனால் நிறைய ரன்கள் எடுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. விளைவுகளை அனைவரும் இப்போது பார்த்து வருகிறீர்கள்.

இந்தியாவுக்காக நான் பங்களிப்பு செய்யாதது வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்ற தாகம் இன்னும் அதிகமாகவே உள்ளது. எனக்காக எனது ஆட்டம் பேசும் என்றே கருதுகிறேன்.

நம் அணி எதிர்பார்க்கும் துவக்க வீரர் நானாகவே இருப்பேன் என்று கருதுகிறேன். இந்திய அணிக்காக எதிர்காலத்தில் நிறைய பங்களிப்பு செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார் ராபின் உத்தப்பா.

நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் 302 ரன்கள் எடுத்து, இந்திய வீரர்களில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சிறப்பை ராபின் உத்தப்பா பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/article6012105.ece?homepage=true

  • தொடங்கியவர்

இரண்டு நாள் ஓய்வுக்கு பின்னர் நாளை   சென்னையை  எதிர்த்து  பெங்களூரும்  மற்றய போட்டியில்  ஹைதராபாத்தை எதிர்த்து  கொல்கத்தாவும் விளையாடுகின்றன.

  • தொடங்கியவர்

தொடருமா தோனி அலை.: இன்று சென்னை,பெங்களூரு மோதல்
மே 17, 2014.

 

ராஞ்சி: சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் ஐ.பி.எல்., லீக் போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது. இதில், கேப்டன் தோனி மீண்டும் அசத்தும்பட்சத்தில் சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற காத்திருக்கிறது.

 

இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின் ஐ.பி.எல்., போட்டிகள் மீண்டும் துவங்குகின்றன. இன்று ராஞ்சியில் நடக்கும் 42வது லீக் போட்டியில் ஏற்கனவே ‘பிளே– ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்ற சென்னை அணி, பெங்களூருவை சந்திக்கிறது.

 

சென்னை அணி, இம்முறை பங்கேற்ற 10 போட்டிகளில் 8 வெற்றியுடன், 16 புள்ளிகள் பெற்று, பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் 2 முறை தோற்றது.

இன்று வெற்றி பெறும்பட்சத்தில் முதலிடத்துக்கு முன்னேறலாம். வழக்கம் போல, டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம், டுபிளசி இணைந்து கைகொடுக்க காத்திருக்கின்றனர். ‘பினிஷிங்’ மன்னன் தோனி, தன்பங்கிற்கு உதவத்தயாராக உள்ளார்.

 

யார் ‘ஸ்டார்’:

பவுலிங்கை பொறுத்தவரையில் ‘ஸ்டார்’ பந்துவீச்சாளர்கள் சென்னை அணிக்கு இல்லை. எனினும், 18 விக்கெட் வீழ்த்தியுள்ள மோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா (13 விக்.,) அஷ்வின் மற்றும் புதியதாக வந்துள்ள பத்ரீ உள்ளிட்டோர், தங்கள் பணியை சரியாக செய்வதால், அணியின் வெற்றி எளிதாகிறது.

 

யுவராஜ் எழுச்சி:

பெங்களூரு அணி இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 4ல் மட்டும் வென்றது. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வென்றால் தான் 16 புள்ளிகள் பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

இதனால், இன்று அவ்வளவு எளிதில் வீழ்ந்து விடாது என்பது நிச்சயம். ஏனெனில், அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் யுவராஜ் சிங், கடந்த இரு போட்டிகளில் 83, 68 என, ரன்கள் குவித்து மிரட்டுகிறார்.

இது கேப்டன் கோஹ்லிக்கு உதவலாம். தவிர, டிவிலியர்ஸ், பார்த்திவ் படேலும் கைகொடுக்கின்றனர். அதேநேரம், கெய்ல் முழு ‘பார்முக்கு’ திரும்பாதது ஏமாற்றம் தான்.

பவுலிலிங்கில் மிட்சல் ஸ்டார்க் அணிக்கு முதுகெலும்பாக உள்ளார். இவருடன் சுழற்பந்துவீச்சாளர் சாகல், ‘சீனியர்’ முரளிதரன், யுவராஜ் சிங்கும்

இணைவது கூடுதல் பலம் தான். வருண் ஆரோன் மீண்டும் இடம் பெறுவாரா என்பது இன்று தான் தெரியும்.

வெற்றி அதிகம் தான்

சென்னை, பெங்களூரு அணிகள் இதுவரை மொத்தம் 15 போட்டிகளில் மோதின. இதில் சென்னை அணி 8ல் வெற்றி பெற்றது. பெங்களூரு 6ல் வென்றது. ஒரு போட்டிக்கு முடிவில்லை

 

 

ஜொலிப்பாரா காம்பிர்

ஐதராபாத்: இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் காம்பிரின் கோல்கட்டா, ஷிகர் தவானின் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதுவரை தலா 10 போட்டிகளில் பங்கேற்ற கோல்கட்டா 10 புள்ளி (5 வெற்றி), ஐதராபாத் 8 புள்ளியுடன் (4 வெற்றி), பட்டியலில் 4, 5 வது இடத்தில் உள்ளன.

இன்று வெற்றி பெறும் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசம் என்பதால் காம்பிர், மணிஷ் பாண்டே, உத்தப்பா என, கோல்கட்டா பேட்ஸ்மேன்கள் ஜொலிக்க முயற்சிக்கலாம்.

இதேபோல, ஸ்டைன், புவனேஷ்வர் குமார், டேரன் சமி என, உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் உள்ள ஐதராபாத் அணியும் வெற்றிக்கு போராட தயாராக உள்ளது.

 

 

http://sports.dinamalar.com/2014/05/1400341994/dhoniindiacricket.html

  • தொடங்கியவர்

பெங்களூரு அணி வெற்றி
மே 17, 2014.

ராஞ்சி: சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏழாவது ஐ.பி.எல்., லீக் தொடர் இந்தியாவில் நடக்கிறது. ராஞ்சியில் நடந்த லீக் போட்டியில், சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. சென்னை அணியில் டுபிளசி, விஜய் சங்கர் நீக்கப்பட்டு டேவிட் ஹசி, மிதுன் மன்ஹாஸ் சேர்க்கப்பட்டனர். பெங்களூரு அணியில் விஜய் ஜோலுக்கு பதிலாக வருண் ஆரோன் இடம் பிடித்தார். ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

சென்னை அணியில் டுவைன் ஸ்மித் (9) ஏமாற்றினார். பிரண்டன் மெக்கலம் 19 ரன்கள் எடுத்தார். டேவிட் ஹசி (25) முரளிதரன் சுழலில் அவுட்டானார். ரெய்னா அரை சதம் அடித்தார். கேப்டன் தோனி (7) நிலைக்கவில்லை. சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. ரெய்னா (62), ஜடேஜா (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

எளிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கெய்ல் (46) அசத்தினார். பார்த்திவ் (10), கேப்டன் கோஹ்லி (27) ஓரளவுக்கு கைகொடுத்தனர். டிவிலியர்ஸ் 28 ரன்கள் எடுத்தார். ரானா (1) சொதப்பினார். பெங்களூரு அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://sports.dinamalar.com/2014/05/1400341994/dhoniindiacricket.html

  • தொடங்கியவர்

சறுக்கியது சென்னை கிங்ஸ்:: ரெய்னா அரைசதம் வீண்
மே 18, 2014.

ராஞ்சி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சொதப்பிய சென்னை அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தது. ரெய்னாவின் அரைசதம் வீணானது.

ராஞ்சியில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு அணிகள் மோதின. சென்னை அணியில் டுபிளசி, விஜய் சங்கர் நீக்கப்பட்டு டேவிட் ஹசி, மிதுன் மன்ஹாஸ் சேர்க்கப்பட்டனர். பெங்களூரு அணியில் விஜய் ஜோலுக்கு பதிலாக வருண் ஆரோன் இடம் பிடித்தார். ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

ஆரோன் அசத்தல்:

சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. முரளிதரன் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் சிக்சர் அடித்து தனது ரன் கணக்கை துவக்கிய மெக்கலம், வருண் ஆரோன் ‘வேகத்தில்’ ஒரு சிக்சர் விளாசினார். பின், 5வது ஓவரை வீசிய ஆரோன், மெக்கலம் (19), ஸ்மித் (9) ஆகியோரை அவுட்டாக்கி ‘இரட்டை அடி’ கொடுத்தார்.

 

ரெய்னா அபாரம்:

பின் இணைந்த சுரேஷ் ரெய்னா, டேவிட் ஹசி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. மிட்சல் ஸ்டார்க், ஆரோன் பந்தில் தலா 2 பவுண்டரி அடித்த ரெய்னா, சாஹல் ‘சுழலில்’ ஒரு சிக்சர் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டேவிட் ஹசி, தன்பங்கிற்கு சாஹல் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த போது, முரளிதரன் பந்தில் டேவிட் ஹசி (25) வௌியேறினார். அடுத்து வந்த கேப்டன் தோனி (7), அபு நேசிம் பந்தில் அவுட்டானார். அபாரமாக ஆடிய ரெய்னா, ஐ.பி.எல்., அரங்கில் தனது 20வது அரைசதத்தை பதிவு செய்தார்.

 

சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. ரெய்னா (62), ரவிந்திர ஜடேஜா (10) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு அணி சார்பில் வருண் ஆரோன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

கோஹ்லி ஏமாற்றம்:

சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு பார்த்திவ் படேல், கிறிஸ் கெய்ல் ஜோடி துவக்கம் கொடுத்தது. மோகித் சர்மா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த பார்த்திவ் (10), அஷ்வின் ‘சுழலில்’ சிக்கினார். பின் கேப்டன் விராத் கோஹ்லி, கெய்ல் ஜோடி இணைந்து போராடியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த போது ஜடேஜா பந்தில் கோஹ்லி (27) அவுட்டானார்.

 

கெய்ல் நம்பிக்கை:

பொறுப்பாக ஆடிய கெய்ல், சாமுவேல் பத்ரீ, ஜடேஜா, அஷ்வின் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். இவர், 50 பந்தில் 46 ரன்கள் எடுத்து அஷ்வின் பந்தில் போல்டானார். துவக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய டிவிலியர்ஸ், டேவிட் ஹசி, அஷ்வின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இவர், 14 பந்தில் 28 ரன்கள் (3 சிக்சர்) எடுத்த போது டேவிட் ஹசியிடம் சரணடைந்தார்.

 

கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. டேவிட் ஹசி வீசிய 20வது ஓவரின் முதல் பந்தை யுவராஜ் சிங் சிக்சருக்கு அனுப்பினார். நான்காவது பந்தில் சச்சின் ராணா (1) அவுட்டானார். பின், ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அபு நேசிம் வெற்றியை உறுதி செய்தார்.

 

பெங்களூரு அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. யுவராஜ் (13), அபு நேசிம் (4) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் அஷ்வின், டேவிட் ஹசி தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம், பெங்களூரு அணி ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. ஆட்ட நாயகன் விருதை பெங்களூரு அணியின் டிவிலியர்ஸ் வென்றார்.

 

தோனி செய்த தவறுபெங்களூரு அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ‘டுவென்டி–20’ போட்டிகளில் ‘நம்பர்–1’ பவுலரான பத்ரீ அல்லது இத்தொடரில் 18 விக்கெட் வீழ்த்திய மோகித் சர்மாவை பந்துவீச, சென்னை கேப்டன் தோனி அழைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறை முதல் போட்டியில் விளையாடிய டேவிட் ஹசிக்கு வாய்ப்பு அளித்து அதிர்ச்சி அளித்தார். இதை பயன்படுத்திய யுவராஜ், முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பி, வெற்றியை உறுதி செய்தார்.

சென்னை அணி ஏற்கனவே ‘பிளே–ஆப்’ வாய்ப்பை உறுதி செய்து விட்டது. பெங்களூரு அணிக்கோ  அடுத்த சுற்றுக்கு முன்னேற வெற்றி அவசியம். இந்நிலையில் தோனியின் தவறு, பெங்களூருக்கு உதவியாக அமைந்தது.

 

http://sports.dinamalar.com/2014/05/1400430030/rainaiplchennai.html

  • தொடங்கியவர்

கோல்கட்டா அணி வெற்றி
மே 18, 2014.

 

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதின.

 

சமி கேப்டன்:

ஐதராபாத் அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக  டேரன் சமி, கேப்டனாக நியமிக்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற சமி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

உமேஷ் அசத்தல்:

ஐதராபாத் அணியின் பின்ச் (8) உமேஷ் ‘வேகத்தில்’ அவுட்டானார். நரைன் ‘சுழலில்’ தவான் (19)  சிக்கினார். நமன் ஓஜா 22 ரன்களில் ஆட்டமிழந்தார். உமேஷ் பந்தில் வார்னர்(34) கிளம்பினார். சமி (7), கரண் சர்மா (4), ஸ்டைன்(1) நிலைக்கவில்லை. ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது.

 

காம்பிர் கோபம்:

கோல்கட்டா அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டைன் வீசிய பந்து, காம்பிரின்  பேட்டை உரசிச் சென்றது. இதை பிடித்த விக்கெட் கீப்பர், நமன் ஓஜா ‘அப்பீல்’ செய்தார். அம்பயரும் கையை உயர்த்த, விரக்தியில் பேட்டை துாக்கி எறிந்தவாறு ‘பெவிலியன்’ திரும்பினார் காம்பிர்(6). ‘ரீப்ளேயில்’ பேட்டில், பந்து படாதது தெரிந்தது.   பின் உத்தப்பா, மணீஷ் பாண்டே இணைந்து வெற்றிக்கு உதவினர். உத்தப்பா 40 ரன்களில் ரன்–அவுட்டானார். கரண் சர்மா ‘சுழலில்’ பாண்டே (35) சிக்கினார்.

 

யூசுப் அதிரடி:

புவனேஷ்வர் வீசிய 18வது ஓவரில் யூசுப் பதான் இரண்டு சிக்சர் விளாசினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. புவனேஷ்வர் வீசிய முதல் பந்தில் 1 ரன் கிடைத்தது. இரண்டாவது பந்தை டெஸ்காட்டே சிக்சருக்கு பறக்கவிட்டார். மூன்றாவது பந்தில் 2 ரன்கள் கிடைக்க, அடுத்த பந்தை டெஸ்காட்டே பவுண்டரிக்கு விரட்டி வெற்றித்தேடிந்தந்தார். கோல்கட்டா அணி 19.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ‘பிளே–ஆப்’ வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. யூசுப் பதான் (39), டெஸ்காட்டே (25) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை உமேஷ் யாதவ் வென்றார்.

 

http://sports.dinamalar.com/2014/05/1400434690/gambhircricketipl.html

  • தொடங்கியவர்

மும்பை அணிக்கு நான்காவது வெற்றி: மைக் ஹசி திடீர் எழுச்சி

மே 19, 2014.ஆமதாபாத்: ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி தனது நான்காவது வெற்றியை பதிவு செய்தது. பேட்டிங்கில் மைக் ஹசி திடீர் எழுச்சி பெற, ராஜஸ்தானை 25 ரன்கள் வித்தியாசத்தில், மும்பை அணி வீழ்த்தியது.      

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணி தனது 11வது லீக் போட்டியில், ராஜஸ்தானை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.     

 

மலிங்கா இல்லை: இலங்கை அணிக்கு திரும்பிய மலிங்காவுக்குப் பதில் வெஸ்ட் இண்டீசின் கிருஷ்மர் சாண்டோகி இடம் பெற்றார். தவிர, கவுதம், கோரி ஆண்டர்சன் நீக்கப்பட்டு, மைக் ஹசி, ஸ்ரேயாஷ் கோபால் சேர்க்கப்பட்டனர். ராஜஸ்தானின் ரகானே, ஸ்டீவன் ஸ்மித், பிரவின் டாம்பே, பென் கட்டிங்கிற்குப் பதில் வாட்சன், ஹாட்ஜ், உன்முக்த் சந்த், அன்கித் சர்மா வாய்ப்பு பெற்றனர்.      

 

ஹசி எழுச்சி: மும்பை அணிக்காக இத்தொடரில் களமிறங்கிய முதல் நான்கு போட்டிகளில் 29 ரன்கள் மட்டும் எடுத்த மைக் ஹசி, சிம்மன்ஸ் இணைந்து துவக்கம் கொடுத்தனர். வழக்கத்துக்கு மாறாக அதிரடியான ரன்குவிப்பை வௌிப்படுத்தினார் ஹசி. இவருக்கு சிம்மன்சும் கைகொடுக்க மும்பை அணி முதல் 10 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்தது. பால்க்னர், அன்கித் சர்மா பந்துகளை சிக்சருக்கு விரட்டிய ஹசி, இத்தொடரில் முதல் அரைசதம் எட்டினார். இவருக்கு நல்ல ‘கம்பெனி’ கொடுத்த சிம்மன்ஸ், தன் பங்கிற்கு அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தநிலையில், சிம்மன்ஸ் (62), ஹசி (56) அடுத்தடுத்து அவுட்டாகினர். கடைசி நேரத்தில் சிக்சர் மழை பொழிந்த ரோகித் சர்மா (40 ரன், 19 பந்து) ரன் அவுட்டானார்.      

 

மும்பை அணி 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்தது. போலார்டு (14) அவுட்டாகாமல் இருந்தார்.   

   

விக்., மட மட...: கடின இலக்கை ‘சேஸ்’ செய்த ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். உன்முக்த் (2), வாட்சன் (5) இருவரும், ஓஜா சுழல் வலையில் சிக்கினர். இளம் வீரர் சாம்சன் (2), கிருஷ்மர் வேகத்தில் ‘சரண்’ அடைந்தார். கூப்பர் (5), அன்கித் சர்மா (4), பின்னி (2) நீடிக்கவில்லை. தனி நபராக போராடிய கருண் நாயர் (48) அரைசத வாய்ப்பை இழந்தார்.      

 

ஹாட்ஜ் 30 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த போதும், அது வெற்றிக்கு உதவவில்லை. ராஜஸ்தான் அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 153 ரன்கள் மட்டும் எடுத்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. பால்க்னர் (31), பாட்யா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

77/7     

நேற்று ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்த போது, ‘டாப் ஆர்டர்’ வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி திரும்பினர். 12.2 வது ஓவரில் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 77/7 ஆக இருந்தது, சற்று வித்தியாசமாக இருந்தது.

 

புரியாத புதிர்           

மும்பை அணி 10ல் 3 போட்டிகளில் (6 புள்ளி) மட்டும் வென்றிருந்தது. மீதமுள்ள 4ல் வென்றாலும் 14 புள்ளி மட்டும் கிடைக்கும். இதன் அடுத்த சுற்று வாய்ப்பு, ராஜஸ்தான், கோல்கட்டா, பெங்களூரு அணிகள் விளையாடும் பிற போட்டிகளின் முடிவைப் பொறுத்து முடிவாகும். இந்நிலையில், நேற்று மும்பை அணிக்கு எதிராக, ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் ரகானே, பிரவின் டாம்பே, ஸ்டீவன் ஸ்மித் என, மூவரும் நீக்கப்பட்டது ‘புரியாத புதிராக’  இருந்தது.

 

http://sports.dinamalar.com/2014/05/1400514819/MumbaiRajasthanCricketIPL.html

 

  • தொடங்கியவர்

பஞ்சாப் வெற்றி தொடர்கிறது: டில்லிக்கு பத்தாவது தோல்வி
மே 19, 2014.

 

புதுடில்லி: டில்லி அணிக்கு எதிரான ஏழாவது ஐ.பி.எல்., தொடர் லீக் போட்டியில், பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டில்லி அணி இத்தொடரில் 10வது தோல்வியை பதிவு செய்தது.      

 

டில்லியில் நடந்த ஏழாவது ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி, பஞ்சாப் அணிகள் மோதின.  ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.                       

டில்லி அணிக்கு முரளி விஜய் (5) ஏமாற்றினார். கேப்டன் கெவின் பீட்டர்சன் (49) அரைசத வாய்ப்பை இழந்தார். டுமினி (17), ஜாதவ் (0), மயாங்க் அகர்வால் (6) கைவிட்டனர்.

 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக், 69 ரன்கள் எடுத்தார். டில்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி (10), முகமது ஷமி (1) அவுட்டாகாமல் இருந்தனர்.     

 

சற்று கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் அணிக்கு மனன் வோரா (41), சேவக் (23) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அதிரடி வீரர்கள் மேக்ஸ்வெல் (14), மில்லர் (2), பெய்லி (6) மற்றும்  சகா (13) இம்முறை சோபிக்கவில்லை.     

இருப்பினும், அக்சர் படேல் (42*), ரிஷி தவான் (8*) இணைந்து அணியை வெற்றிபெறச் செய்தனர். பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.      

 

11 போட்டியில் 9 வெற்றி பெற்ற பஞ்சாப், 18 புள்ளியுடன் முதல் அணியாக ‘பிளே ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.

 

http://sports.dinamalar.com/2014/05/1400523439/PunjabDelhilIPLCricket.html

  • தொடங்கியவர்

சென்னையை சமாளிக்குமா கோல்கட்டா
மே 19, 2014.

 

கோல்கட்டா: கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், இன்று நடக்கும் ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன.           

சென்னை அணி, 8 போட்டிகளில் வெற்றி பெற்று ‘பிளே–ஆப்’ வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்த உற்சாகத்தில் உள்ளது. இருப்பினும் கடந்த போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தது பின்னடைவு.

 

துவக்கத்தில் டுவைன் ஸ்மித் (449 ரன்கள்), பிரண்டன் மெக்கலம் (352 ரன்கள்) அசத்துவது  பலம். அப்பாவாக புதிய அவதாரம் எடுத்துள்ள பிரண்டன் மெக்கலம் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம். இவர் விளையாடாத பட்சத்தில் டேவிட் ஹசி மீண்டும் ‘மிடில்–ஆர்டரில்’ களமிறங்கலாம். பெங்களூருவுக்கு எதிரான கடைசி ஓவரை சொதப்பலாக வீசிய டேவிட் ஹசி, பேட்டிங்கில் ஆறுதல் தந்தார். இப்போட்டியில் அரைசதம் அடித்த சுரேஷ் ரெய்னா, இன்றும் அசத்தலாம்.     

வேகப்பந்துவீச்சில் மோகித் சர்மா (18 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். ‘சுழலில்’ அசத்த அஷ்வின் (13 விக்கெட்), ரவிந்திர ஜடேஜா (14 விக்கெட்), சாமுவேல் பத்ரீ, சுரேஷ் ரெய்னா உள்ளனர்.     

 

சொந்த மண் சாதகம்: கோல்கட்டாவை பொறுத்தவரை சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமான விஷயம். கடைசியாக விளையாடிய நான்கு போட்டியிலும் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ள கோல்கட்டா அணி, இதுவரை விளையாடிய 11 போட்டியில், 6ல் வெற்றி பெற்றது.  இன்று சென்னையை வீழ்த்தும் பட்சத்தில், முன்னதாக ராஞ்சியில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கலாம்.     

 

பேட்டிங்கில் ராபின் உத்தப்பா நம்பிக்கை அளிக்கிறார். இதுவரை 11 போட்டியில் 422 ரன்கள் எடுத்துள்ள இவரது ரன்வேட்டை இன்றும் தொடரலாம். இவருக்கு கேப்டன் காம்பிர் ஒத்துழைப்பு தந்தால் சிறந்த துவக்கம் கிடைக்கும். ஐதராபாத்துக்கு எதிராக ‘மிடில்–ஆர்டரில்’ அசத்திய மணிஷ் பாண்டே, யூசுப் பதான், டஸ்காட்டே இன்றும் கைகொடுக்கலாம்.     

 

சுழலுக்கு சாதகமான ஈடன் கார்டனில், சுனில் நரைன், சாகிப் அல் ஹசன், பியுஸ் சாவ்லா கூட்டணி, நீண்ட பேட்டிங் வரிசை கொண்ட சென்னை அணிக்கு தொல்லை தர முயற்சிக்கலாம். ஐதராபாத்துக்கு எதிராக 3 விக்கெட் கைப்பற்றி ‘வேகத்தில்’ அசத்திய உமேஷ் யாதவ் இன்றும் சாதிக்கலாம். இவருக்கு மார்னே மார்கல் ஒத்துழைப்பு தந்தால் நல்லது.

இதுவரை...           

ஐ.பி.எல்., அரங்கில் சென்னை, கோல்கட்டா அணிகள் இதுவரை 13 முறை மோதின. இதில் சென்னை 9, கோல்கட்டா 4 போட்டிகளில் வெற்றி பெற்றன.           

மீண்டும் அசத்துமா பெங்களூரு

ஐதராபாத்தில் இன்று நடக்கும் மற்றொரு லீக் போட்டியில், பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை அணியை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ள பெங்களூரு அணி, ‘பிளே–ஆப்’ சுற்றுக்காக வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ள, மீதமுள்ள மூன்று போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கிறிஸ் கெய்ல், டிவிலியர்ஸ், யுவராஜ் சிங் நல்ல ‘பார்மில்’ இருப்பது பலம். கேப்டன் விராத் கோஹ்லி, பார்த்திவ் படேல் எழுச்சி காண வேண்டும். பவுலிங்கில் மிட்சல் ஸ்டார்க், முரளிதரன் அசத்தலாம். தொடர்ச்சியாக மூன்று போட்டியில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணியின் ‘பிளே–ஆப்’ வாய்ப்பு கடினம். மீதமுள்ள மூன்று போட்டியில் வெற்றி பெற்றால் கூட, மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

 

 

http://sports.dinamalar.com/2014/05/1400514347/ChennaiKolkataIPLCricket.html

  • தொடங்கியவர்

பெங்களூரு அணி தோல்வி
மே 19, 2014.

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தியாவில் ஏழாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இன்று ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

பெங்களூரு அணிக்கு கெய்ல் (14), பார்த்திவ் (4) ஏமாற்றினர். அதிரடியாக விளையாடிய கோஹ்லி அரை சதம் கடந்தார். யுவராஜ் சிங் 21 ரன்கள் எடுத்தார். கோஹ்லி (67) இர்பான் வேகத்தில் வெளியேறினார். டிவிலியர்ஸ் (29) புவனேஷ்வர் பந்தில் போல்டானார். ஸ்டார்க் (6) ரன் அவுட்டானார். பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது. சச்சின் ரானா (12) அவுட்டாகாமல் இருந்தார்.

 

ஐதராபாத் அணிக்கு தவான் (50), வார்னர் (59) வலுவான துவக்கம் தந்தனர். நமன் ஓஜா 24 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணி 19.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்ச் (11), சமி (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/05/1400522805/BrendonMcCullumNewZealandCricketFixingICC.html

  • தொடங்கியவர்

சென்னை அணிக்கு ‘அடி’:கோல்கட்டா கலக்கல் வெற்றி
மே 19, 2014.

கோல்கட்டா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் பேட்டிங், பவுலிங்,  பீல்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் சொதப்பிய சென்னை அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ரெய்னாவின் அரைசதம் வீணானது. கோல்கட்டா அணி தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்தது.

 

ஏழாவது ஐ.பி.எல்., தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

சென்னை அணியில் டேவிட் ஹசி, பத்ரீ நீக்கப்பட்டு, ஹில்பெனாஸ், டுபிளசி மீண்டும் சேர்க்கப்பட்டனர். கோல்கட்டா அணியில் மார்னே மார்கலுக்குப் பதில், கம்மின்ஸ் இடம் பெற்றார்.

ஸ்மித் ‘அவுட்’:

சென்னை அணிக்கு பிரண்டன் மெக்கலம், ஸ்மித் ஜோடி இம்முறை சொதப்பல் துவக்கம் கொடுத்தது. சாகிப் அல் ஹசனின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கிய ஸ்மித் (5), கம்மின்ஸ் வேகத்தில் போல்டானார்.

 

இவரது இரண்டாவது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார் மெக்கலம். சுனில் நரைன் பந்தில் சிக்சர் அடித்தார் ரெய்னா. இதன் பின் இந்த ஜோடி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

 

இதனால், முதல் 10 ஓவரில் சென்னை அணி, ஒரு விக்கெட்டுக்கு 59 ரன்கள் மட்டும் எடுத்தது. பின் மெக்கலம், 28 ரன்னுக்கு ‘பெவிலியன்’ திரும்பினார்.

ரெய்னா அரைசதம்:

மறுமுனையில் சாவ்லா பந்தை ரெய்னா சிக்சருக்கு விரட்டிய போதும், அணியின் ரன் வேகம் அதிகரிக்கவே இல்லை. சாவ்லா வீசிய 14வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ரெய்னா, அரைசதத்தை எட்டினார்.

டுபிளசி (23), சாவ்லாவின் ‘சூப்பர் த்ரோவில்’ ரன் அவுட்டானார். சிக்சருக்கு ஆசைப்பட்ட ரெய்னா, 65 ரன்னுக்கு (52 பந்து) அவுட்டாகினார். சென்னை அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 154 ரன்கள் மட்டும் எடுத்தது. தோனி (21), ரவிந்திர ஜடேஜா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

இரு கண்டம்:

எளிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு காம்பிர் (21) ஏமாற்றினார். இரு முறை (6, 24 ரன்னில்) கண்டம் தப்பிய உத்தப்பா, மோகித் சர்மா மற்றும் ஈஷ்வர் பாண்டே ஓவர்களில் பவுண்டரிகளாக விளாசினார்.  இவர் 39 பந்தில் 67 ரன்கள் எடுத்த பின்பு தான் அவுட்டானார்.

அடுத்து வந்த சாகிப் அல் ஹசன், தன்பங்கிற்கு ஹில்பெனாஸ் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என, 17 ரன்கள் அடிக்க, கோல்கட்டா அணியின் வெற்றி எளிதானது.

கடைசியில் சாகிப் ஒரு ‘சூப்பர்’ பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 18 ஓவரில், 2 விக்கெட்டுக்கு, 156 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாகிப் அல் ஹசன் (46 ரன்கள், 21 பந்து), மணிஷ் பாண்டே (18) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

‘பிளே– ஆப்’ உறுதி

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் 18 புள்ளிகள் பெற்ற  பஞ்சாப், முதல் அணியாக ‘பிளே– ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதுவரை 12 போட்டிகளில் 16 புள்ளி (8 வெற்றி) பெற்ற சென்னை அணியும், ‘பிளே– ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.

ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள், அடுத்த இரு போட்டிகளில் வென்றால், 18 புள்ளிகளுடன்  அடுத்த சுற்றுக்கு தகுதி பெறலாம்.

ஐதராபாத், பெங்களூரு, மும்பை அணிகளுக்கு ‘பிளே–ஆப்’ வாய்ப்பு மிகவும் கடினம்.

 

 

http://sports.dinamalar.com/2014/05/1400514347/ChennaiKolkataIPLCricket.html

  • தொடங்கியவர்

சிங்கம்’ சிம்மன்ஸ் முதல் சதம்:மும்பைக்கு ஐந்தாவது வெற்றி
மே 20, 2014.

 

மொகாலி: ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் முதல் சதம் அடித்து அசத்தினார் லெண்டில் சிம்மன்ஸ். இவரது அபார ஆட்டம் கைகொடுக்க, மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறிய மெத்தனத்தில் விளையாடிய பஞ்சாப் அணி பரிதாபமாக வீழ்ந்தது.

மொகாலியில், நேற்று நடந்த 7வது ஐ.பி.எல்., தொடருக்கான லீக் போட்டியில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

 

மேக்ஸ்வெல் ஏமாற்றம்:

பஞ்சாப் அணிக்கு சேவக் (17) ஏமாற்றினார். இம்முறை தனது முதல் போட்டியில் விளையாடிய ஷான் மார்ஷ், மனன் வோராவுடன் இணைந்து அசத்தினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த போது மார்ஷ் (30) அவுட்டானார். ஆட்டத்தின் 11வது ஓவரை வீசிய கோபால்  ‘இரட்டை அடி’ கொடுத்தார். இவரது துல்லிய பந்துவீச்சில் மனன் வோரா (36), ‘அபாய’ மேக்ஸ்வெல் (2) வெளியேறினார். அடுத்து வந்த விரிதிமன் சகா (3), அக்சர் படேல் (6) நிலைக்கவில்லை. கேப்டன் ஜார்ஜ் பெய்லி (39) நம்பிக்கை தந்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது. ரிஷி தவான் (14), சிவம் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

சச்சின் உற்சாகம்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு மைக்கேல் ஹசி (6) ஏமாற்றினார். சந்தீப் சர்மா வீசிய முதல் ஓவரில் மூன்று பவுண்டரி விளாசிய லெண்டில் சிம்மன்ஸ், ஹென்டிரிக்ஸ், அக்சர் படேல் பந்தையும் விட்டுவைக்கவில்லை. அடுத்து வந்த அம்பதி ராயுடு (17), கேப்டன் ரோகித் சர்மா (18) நிலைக்கவில்லை. தொடர்ந்து ‘சிங்கம்’ போல சீறிய சிம்மன்ஸ், சிக்சர்களாக விளாசினார். சிவம் சர்மா பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட இவர்,  தற்போதைய ஐ.பி.எல்., தொடரின் முதல் சதம் எட்ட, மும்பை அணியின் ஆலோசகர் சச்சின் உள்ளிட்டோர் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர்.

 

பின் சிவம் சர்மா பந்தை சிக்சருக்கு அனுப்பிய போலார்டு, வெற்றியை உறுதி செய்தார்.

மும்பை அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிம்மன்ஸ் (100), போலார்டு (8) அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறிய மும்பை அணி, ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. ஆட்டநாயகன் விருதை சிம்மன்ஸ் வென்றார்.

 

முதல் வீரர்

பஞ்சாப் அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய மும்பை அணியின் சிம்மன்ஸ், ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

* இது, ஐ.பி.எல்., வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 29வது சதம். இப்பட்டியலில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 4 சதம் அடித்துள்ளார்.  கில்கிறிஸ்ட், முரளி விஜய், டேவிட் வார்னர் தலா 2 சதம் அடித்தனர். இவர்களை தவிர, பிரண்டன் மெக்கலம், ரோகித் சர்மா, வாட்சன், மைக்கேல் ஹசி, சைமண்ட்ஸ், ஜெயசூர்யா, ஷான் மார்ஷ், டிவிலியர்ஸ், மணிஷ் பாண்டே, யூசுப் பதான், மகிளா ஜெயவர்தனா, பால் வல்தாட்டி, சச்சின், சேவக், ரகானே, கெவின் பீட்டர்சன், ரெய்னா, டேவிட் மில்லர், சிம்மன்ஸ் ஆகியோர் தலா ஒரு முறை சதம் அடித்தனர்.

 

மீண்டும் ஏமாற்றம்

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) ஐந்து போட்டியிலும் தோல்வி கண்ட மும்பை அணி, வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று மீண்டும் அசத்திய மும்பை அணி, மொகாலியில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது வெற்றியை பெற்றது. சென்னை போன்ற வலிமையான அணிகளை சுலபமாக வீழ்த்திய பஞ்சாப் அணியினர், மும்பை அணிக்கு பதிலடி கொடுக்க முடியாமல் ஏமாற்றினர்.

 

http://sports.dinamalar.com/2014/05/1400606555/sehwagiplpunjab.html

 

  • தொடங்கியவர்

பிளே–ஆப் சுற்றில் கோல்கட்டா
மே 21, 2014.

கோல்கட்டா: பெங்களூருவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ’பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.

இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல்., தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடந்த லீக் போட்டியில், கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதின. கோல்கட்டா அணியில் பட் கம்மின்ஸ், பியுஸ் சாவ்லா நீக்கப்பட்டு மார்னே மார்கல், வினய் குமார் சேர்க்கப்பட்டனர். பெங்களூரு அணியில் வருண் ஆரோன், பார்த்திவ் படேலுக்கு பதிலாக அசோக் டிண்டா, யோகேஷ் டகவாலே இடம் பிடித்தனர். ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

கோல்கட்டா அணிக்கு உத்தப்பா சிறப்பான துவக்கம் தந்தார். கேப்டன் காம்பிர் (4) ஏமாற்றினார். மனிஷ் பாண்டே (13) நிலைக்கவில்லை. யூசுப் பதான் 22 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய உத்தப்பா அரை சதம் கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த சாகிப் அரை சதம் விளாசினார். இவர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. உத்தப்பா (83) அவுட்டாகாமல் இருந்தார்.

 

பெங்களூரு அணிக்கு கெய்ல் (6), யுவராஜ் (22), டிவிலியர்ஸ் (13) விரைவில் வெளியேறினர். கோஹ்லி (38), டகவாலே (45) ஆறுதல் தந்தனர். முடிவில், பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டும் எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

http://sports.dinamalar.com/2014/05/1400692367/ashokdindacricket.html

  • தொடங்கியவர்

சென்னை அணிக்கு ‘ஹாட்ரிக்’ தோல்வி: வீணானது தோனி, ஹசி அரைசதம்

மே 22, 2014.

ராஞ்சி: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்த சென்னை அணி, ‘ஹாட்ரிக்’ தோல்வியை பதிவு செய்தது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் 50வது லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேரன் சமி ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

சென்னை அணியில் ஈஷ்வர் பாண்டே, ஹில்பெனாஸ், மெக்கலத்துக்குப் பதில், பவான் நேகி, டேவிட் ஹசி, ஹாஸ்டிங்ஸ் சேர்க்கப்பட்டனர்.

ஸ்மித் நம்பிக்கை:

சென்னை அணிக்கு இம்முறை ஸ்மித்துடன், டுபிளசி இணைந்து துவக்கம் கொடுத்தார். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் ஸ்மித், மூன்று பவுண்டரிகள் அடிக்க, ஸ்டைன் ஓவரில், தன்பங்கிற்கு மூன்று பவுண்டரிகள் அடித்தார் டுபிளசி.

இவர் 19 ரன்கள் எடுத்த போது, துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். ரசூல் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்த ஸ்மித், 47 ரன்கள் எடுத்தார்.

இரண்டு அரைசதம்:

அடுத்து டேவிட் ஹசியுடன் இணைந்த கேப்டன் தோனி, துவக்கத்தில் பந்துகளை வீணடித்தார். இதன் பின் இந்த ஜோடி அதிரடிக்கு மாறியது. இர்பான் பதான் வீசிய போட்டியின் 14வது ஓவரில், தோனி ஒரு சிக்சர், ஹசி இரண்டு பவுண்டரிகள் அடிக்க, 17 ரன்கள் கிடைத்தன.

மறுமுனையில் இர்பான் பதான் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்த டேவிட் ஹசி, அரைசதத்தை எட்டினார். ஸ்டைன் வீசிய கடைசி ஓவரில், 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 24 ரன்கள் எடுத்த தோனி, அரைசதம் கடந்தார்.

சென்னை அணி 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. 4வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்த தோனி (57), டேவிட் ஹசி (50) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது.

வார்னர் மிரட்டல்:

கடின இலக்கை ‘சேஸ்’ செய்த ஐதராபாத் அணிக்கு வார்னர், ஷிகர் தவான் ஜோடி அசத்தல் துவக்கம் கொடுத்தது. ஹாஸ்டிங்ஸ் ஓவரில் ஐந்து பவுண்டரி அடித்த வார்னர், 23 வது பந்தில் அரைசதம் கடந்தார்.

ஜடேஜா, நேகி, அஷ்வின் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட இவர், 45 பந்துகளில் 90 ரன்னுக்கு அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

இதன் பின் பொறுப்பெடுத்துக் கொண்ட ஷிகர் தவான், தன் பங்கிற்கு ஜடேஜா, ரெய்னா பந்துகளில் சிக்சர் அடிக்க, அணியின் வெற்றி எளிதானது.

நமன் ஓஜா (19), பின்ச் (7) என, அடுத்தடுத்து அவுட்டான போதும், ஐதராபாத் அணி 19.4 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவான் (64), வேணுகோபால் ராவ் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

பெங்களூரு, கோல்கட்டா அணிகளுக்கு எதிராக தோற்ற சென்னை அணி, நேற்று ஐதராபாத்திடம் வீழ்ந்து, ‘ஹாட்ரிக்’ தோல்வியை பதிவு செய்தது.

http://sports.dinamalar.com/2014/05/1400782209/dhonichennaiipl.html

  • தொடங்கியவர்

மும்பை அணி அபார வெற்றி: டில்லி அணி பரிதாபம்
மே 23, 2014.

 

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய மும்பை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ‘பிளே–ஆப்’ வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. டில்லி அணி தொடர்ந்து எட்டாவது தோல்வியை பெற்றது.

 

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில், மும்பை, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் கெவின் பீட்டர்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

ஹசி அரைசதம்:

மும்பை அணிக்கு லெண்டில் சிம்மன்ஸ், மைக்கேல் ஹசி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த போது, இம்ரான் தாகிர் ‘சுழலில்’ சிம்மன்ஸ் (35) அவுட்டானார். அபாரமாக ஆடிய மைக்கேல் ஹசி, நதீம், இம்ரான் தாகிர் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்து, அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 33 பந்தில் 56 ரன்கள் எடுத்த போது ‘ரன்–அவுட்’ ஆனார்.

 

ரோகித் ஆறுதல்:

அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா, டுமினி வீசிய 11வது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி விளாசினார். ஆட்டத்தின் 15வது ஓவரை வீசிய உனத்கத், ரோகித் (30), போலார்டை (11) வௌியேற்றி ‘இரட்டை அடி’ கொடுத்தார். பின் வந்த அம்பதி ராயுடு (2), ஆதித்யா தாரே (14), ஹர்பஜன் சிங் (2), டி லாங்கே (1), பிரக்யான் ஓஜா (0), ஸ்ரேயாஸ் கோபால் (11) சொற்ப ரன்னில் நடையை கட்டினர்.

 

மும்பை அணி 19.3 ஓவரில் 173 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. டில்லி அணி சார்பில் இம்ரான் தாகிர் 3, உனத்கத் 2 விக்கெட் வீழ்த்தினர்.

பீட்டர்சன் நம்பிக்கை:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு முரளி விஜய் (8) ஏமாற்றினார். டி லாங்கே வீசிய ஆட்டத்தின் 2வது ஓவரில் மூன்று பவுண்டரி விளாசிய கெவின் பீட்டர்சன், பம்ரா பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இவர், 31 பந்தில் 44 ரன்கள் எடுத்தபோது ஹர்பஜன் பந்தில் போல்டானார். தினேஷ் கார்த்திக் (7) சொதப்பினார்.

 

டுமினி அதிரடி:

பின் இணைந்த டுமினி, மனோஜ் திவாரி ஜோடி பொறுப்பாக ஆடியது. நான்காவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த போது திவாரி (41) அவுட்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய டுமினி, கோபால், ஓஜா, ஹர்பஜன், பம்ரா பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார்.

 

கடைசி ஓவரில் டில்லியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டன. பம்ரா வீசிய 20வது ஓவரில், 9 ரன்கள் மட்டுமே கிடைத்தது. டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. டுமினி (45), கேதர் ஜாதவ் (7) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் டி லாங்கே 2 விக்கெட் கைப்பற்றினார்.ஆட்டநாயகன் விருது மும்பையின் மைக்கேல் ஹசிக்கு வழங்கப்பட்டது.

 

http://sports.dinamalar.com/2014/05/1400867140/husseymumbai.html

  • தொடங்கியவர்

பதிலடி கொடுக்குமா சென்னை: இன்று பெங்களூருவுடன் மோதல்
மே 23, 2014.
 

 

பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிய போதும், கடந்த 3 போட்டிகளில்(பெங்களூரு, கோல்கட்டா, ஐதராபாத்) வரிசையாக தோல்வி அடைந்து ஏமாற்றியது. துவக்க வீரர்கள் டுவைன் ஸ்மித் நல்ல அடித்தளம் அமைக்கிறார். இவருக்கு டுபிளசி, ரெய்னா கைகொடுக்க வேண்டும். டேவிட் ஹசி நம்பிக்கை தருகிறார். ‘பினிஷிங்’ பணியை கச்சிதாக செய்ய கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா உள்ளனர்.

 

பந்துவீச்சில் அஷ்வின் எழுச்சி காண வேண்டும். மோகித் சர்மா ரன்களை வாரி வழங்குவதை கட்டப்படுத்துவது அவசியம். பெங்களூருவுடன் ஏற்கனவே சந்தித்த தோல்விக்கு, இன்று சென்னை அணி பதிலடி தர வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

பெங்களூரு அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த சோகத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக துவக்க வீரர் கெய்ல் உள்ளார். 9 போட்டியில் களம் கண்டுள்ள இவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கோல்கட்டாவுக்கு எதிராக டக்வாலே, கேப்டன் கோஹ்லி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இது இன்றும் தொடரலாம்.

ரூ.14 கோடிக்கு வாங்கிய யுவராஜ் சிங்கின் பங்களிப்பு போதவில்லை. டிவிலியர்ஸ் அதிரடி காட்டலாம். பவுலிங்கில் ஸ்டார்க், முரளிதரன், சாகல் பொறுப்புடன் செயல்பட்டால் நல்லது.

 

அசத்துமா கோல்கட்டா அணி

இன்று கோல்கட்டாவில் நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. அடுத்த சுற்றில் ஏற்கனவே கோல்கட்டா அணி நுழைந்துவிட்டது. துவக்க வீரர் உத்தப்பா மீண்டும் மிரட்டலாம். கேப்டன் காம்பிர், மனீஷ் பாண்டேவும் கைகொடுத்தால் இமாலய  இலக்கை எட்டலாம். அதிரடிக்கு பெயர் போன சாகிப் இருப்பது பலம். பவுலிங்கில் ‘சுழல் மாயாவி’ நரைன் உள்ளார். வினய், மார்னேவும் எதிரணிக்கு நெருக்கடி தர வேண்டும்.

 

ஐதராபாத் அணி 6 வெற்றி பெற்று 12 புள்ளியுடன் உள்ளது. வலுவான துவக்கம் தர வார்னர், தவான் இருக்கின்றனர். பின்ச், சமி அதிரடிக்கு மாறுவது அவசியம். வேகப்பந்துவீச்சில் அசத்த ஸ்டைன், புவுனேஷ்வர் உள்ளனர்.

 

http://sports.dinamalar.com/2014/05/1400867249/dhonichennaiipl.html

  • தொடங்கியவர்

பஞ்சாப்புக்கு பத்தாவது வெற்றி: ‘நம்பர்–1’ இடத்தை பிடித்தது
மே 22, 2014.

 

 

மொகாலி: ஐ.பி.எல்., தொடரில் பத்தாவது வெற்றியை பெற்ற பஞ்சாப் அணி, ‘நம்பர்–1’ இடத்தை உறுதி செய்தது. நேற்றைய போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

 

மொகாலியில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில், பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

 

மார்ஷ் அசத்தல்:

பஞ்சாப் அணிக்கு சேவக் (18) அதிரடி துவக்கம் கொடுத்தார். மனன் வோரா (25) ‘ரன்–அவுட்’ ஆனார். விக்ரம்ஜீத் மாலிக் வீசிய 5வது ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசிய ஷான் மார்ஷ், டிவாடியா பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இவர், 40 ரன்களுக்கு அவுட்டானார்.

 

மழை குறுக்கீடு:

பஞ்சாப் அணி 13.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்த போது மழையால், ஆட்டம் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. பின் மீண்டும் போட்டி நடந்தது. விரிதிமன் சகா (27) நிலைக்கவில்லை. கடைசி நேரத்தில் இணைந்த டேவிட் மில்லர், கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஜோடி அசத்தியது. பால்க்னர் வீசிய 19வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார் பெய்லி. பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. மில்லர் (29), பெய்லி (26) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

‘ஹாட்ரிக்’ நழுவல்:

சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு கருண் நாயர் (11) ஏமாற்றினார். பின் இணைந்த அஜின்கியா ரகானே, சஞ்சு சாம்சன் ஜோடி நிதானமாக ஆடியது. ஆட்டத்தின் 9வது ஓவரை வீசிய ரிஷி தவான் இரட்டை ‘அடி’ கொடுத்தார். முதலிரண்டு பந்தில் ரகானே (23), கேப்டன் வாட்சனை (0) அவுட்டாக்கினார். மூன்றாவது பந்தை ஸ்டூவர்ட் பின்னி தடுத்தாட, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது.

 

ஸ்டூவர்ட் பின்னி (7) வந்த வேகத்தில் நடையை கட்டினார். ரிஷி தவான் வீசிய 6வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த சஞ்சு சாம்சன், ஹென்ரிக்ஸ் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். இவர், 30 ரன்களுக்கு அவுட்டானார். ராகுல் டிவாட்டியா (16) நிலைக்கவில்லை. ஹென்ரிக்ஸ் வீசிய 17வது ஓவரில் தலா இரண்டு சிக்சர், பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்த பிராட் ஹாட்ஜ் (31), அக்சர் படேலிடம் சரணடைந்தார். கெவான் கூப்பர் (2) ஏமாற்றினார்.

 

கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டன. ஹென்ரிக்ஸ் வீசிய இந்த ஓவரில் 14 ரன்கள் மட்டும் கிடைத்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பால்க்னர் (35) அவுட்டாகாமல் இருந்தார். பஞ்சாப் சார்பில் அக்சர் படேல் 3, ரிஷி தவான், கரண்வீர் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
மும்முனைப் போட்டி

பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம், ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ராஜஸ்தான் (14 புள்ளி), ‘நடப்பு சாம்பியன்’ மும்பை (12), ஐதராபாத் (12) உள்ளிட்ட மூன்று அணிகளுக்கும் உள்ளது.

* ஐதராபாத் அணி முன்னேற, முதலில் இன்று கோல்கட்டாவை வீழ்த்த வேண்டும். அதன்பின், ராஜஸ்தான்–மும்பை அணிகளுக்கான போட்டியின் முடிவைப் பொறுத்து முடிவு செய்யப்படும். இதில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால், மும்பை, ஐதராபாத் அணிகள் வௌியேறிவிடும். ஒருவேளை மும்பை வெற்றி பெற்றால், மூன்று அணிகளும் தலா 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். இதில் ‘ரன்–ரேட்’ அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

 

* இன்று ஐதராபாத் தோல்வி அடைந்தால், நாளை நடக்கும் மும்பை–ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ‘பிளே–ஆப்’ வாய்ப்பு கிடைக்கலாம்.

 

http://sports.dinamalar.com/2014/05/1400779546/samsoncricket.html

  • தொடங்கியவர்

சென்னை அணி வெற்றி
மே 23, 2014.

பெங்களூரு: பெங்களூவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின.‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி ‘பவுலிங்’ தேர்வு செய்தார். 

 

பெங்களூரு அணிக்கு ரோசவ் (1), டக்வாலே (19) விரைவில் கிளம்பினர். விஜய் ஜோல் (13) கைவிட்டார். கேப்டன் கோஹ்லி அரை சதம் கடந்தார். யுவராஜ் 25 ரன்கள் எடுத்தார். நெஹ்ரா பந்தில் டிவிலியர்ஸ் (10), கோஹ்லி (73) அவுட்டானர். முடிவில், பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.

எட்டிவிடும் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித் (34) நல்ல அடித்தளம் அமைத்தார். ரெய்னா (18) யுவராஜ் பந்தில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் தோனி, டுபிளசி இணைந்து அதிரடி காட்டினர். டுபிளசி அரை சதம் கடந்தார். முடிவில், சென்னை அணி 17.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி (49), டுபிளசி (54) அவுட்டகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/05/1400867249/dhonichennaiipl.html

  • தொடங்கியவர்

தல தோனி சூப்பர்: சென்னைக்கு புதிய சிக்கல்

மே 24, 2014.

பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில், கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. நேற்று தனது கடைசி லீக் போட்டியில், பெங்களூருவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று பெங்களூருவில் நடந்த போட்டியில் ஏற்கனவே ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறிய சென்னை, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த பெங்களூரு அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். சென்னை அணியில் ஹாஸ்டிங்ஸ், நேகி நீக்கப்பட்டு பத்ரீ, நெஹ்ரா சேர்க்கப்பட்டனர்.

பெங்களூரு அணியில் கெய்ல், முரளிதரன், டிண்டா, நேசிம் என, நான்கு பேர்

வெளியேற்றப்பட்டு, ராம்பால், ரோசாவு, விஜய் ஜோல், ஜகாதி இடம் பெற்றனர்.

நெஹ்ரா நம்பிக்கை:

பெங்களூரு அணிக்கு துவக்கமே அதிர்ச்சி தான். நெஹ்ரா வீசிய முதல் ஓவரில், ரோசாவு (1) போல்டானார். நெஹ்ரா பந்தை சிக்சருக்கு விரட்டிய மற்றொரு துவக்க வீரர் டகவாலே, பத்ரீயின் சுழலில் மூன்று பவுண்டரி விரட்டினார்.

இவரை 19 ரன்னுக்கு, அஷ்வின் அவுட்டாக்கினார். விஜய் ஜோல் (13) நீடிக்கவில்லை. யுவராஜ் சிங் 25 ரன்கள் எடுத்து திரும்பினார்.

கோஹ்லி அரைசதம்:

அஷ்வின், பத்ரீ பந்துகளில் சிக்சர் அடித்த கேப்டன் விராத் கோஹ்லி, அரைசதம் கடந்தார். டிவிலியர்ஸ் (10), 49 பந்தில் 73 ரன்கள் எடுத்த கோஹ்லி, நெஹ்ரா வேகத்தில் போல்டாகினர்.

பெங்களூரு அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. ராணா (5), ஸ்டார்க் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஸ்மித் அதிரடி:

சற்று எளிய இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு ஸ்மித், டுபிளசி ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் கொடுத்தது. இருவரும் ராம்பால், ஜகாதி பந்துகளை சிக்சருக்கு விரட்ட, சென்னை அணி 4 ஓவரில், 53 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 34 ரன்களுக்கு அவுட்டானார். ரெய்னா, 18 ரன்னுக்கு நடையை கட்டினார்.

தோனி அதிரடி:

பின் டுபிளசி, தோனி இணைந்து அசத்தினர். முதலில் நிதானம் காட்டிய தோனி போகப் போக அதிரடிக்கு மாறினார். யுவராஜ் ஓவரில் அடுத்தடுத்து 2 இமாலய சிக்சர் விளாசினார். தொடர்ந்து ஜகாதி ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். மறுமுனையில் டுபிளசி, ஜகாதி பந்தை சிக்சருக்கு அனுப்பி, அரைசதம் எட்ட, சென்னை அணி 17.4 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து, அசத்தல் வெற்றி பெற்றது.

தோனி (49), டுபிளசி (54) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்டநாயகன் விருதை தோனி தட்டிச் சென்றார்.

காத்திருக்கும் சிக்கல்

நேற்று 15.2 ஓவரில் வென்றால், கோல்கட்டா அணி இரண்டாம் இடம் பெறலாம் என்ற நிலை இருந்தது. யூசுப் அதிரடி கைகொடுக்க, வெறும் 14.2 ஓவரில் 161 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. இதனால், சென்னை அணி, இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இது, பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல்., விதிப்படி, புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடத்தில் உள்ள அணிகள் மோதும் ‘தகுதிச்சுற்று–1’ல் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறும்.

* 3, 4வது இடம் பெறும் அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனல் வாய்ப்பை பெற இயலாது. இந்த அணி, ‘தகுதிச்சுற்று 1’ல் தோற்ற அணியையும் வீழ்த்த வேண்டும்.

* இப்போது சென்னை அணி 3வது இடத்தில் உள்ளதால், இரு போட்டிகளில் வென்றால் மட்டுமே, பைனலுக்கு தகுதி பெற முடியும்.

http://sports.dinamalar.com/2014/05/1400951148/dhonichennaiipl.html

யூசுப் அதிவேக அரைசதம்: கோல்கட்டா அசத்தல் வெற்றி

மே 24, 2014.

கோல்கட்டா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் யூசுப் பதானின் அதிவேக அரைசதம் கைகொடுக்க, கோல்கட்டா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.

முதலில் ‘பேட்’ செய்த ஐதராபாத் அணிக்கு நமன் ஓஜா (26), ஷிகர் தவான் (29), வேணுகோபால் (27), ஹோல்டர் (16), சமி (29) கைகொடுத்தனர். ஐதராபாத் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது.

அதிவேக அரைசதம்:

அடுத்து களமிறங்கிய கோல்கட்டா அணிக்கு காம்பிர் (28), உத்தப்பா (41) நம்பிக்கை தந்தனர். மணிஷ் பாண்டே (2), டஸ்காட்டே (0), சாகிப் அல் ஹசன் (1) கைவிட்டனர்.

யூசுப் பதான், ரசூல் ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் விளாசினார். கரண் சர்மா ஓவரில் 2 சிக்சர் அடித்த இவர், ஸ்டைன் வீசிய 13வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி என, 26 ரன்கள் எடுக்க, 15 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இவர், 22 பந்தில் 72 ரன்கள் எடுத்தார்.

சூர்ய குமார் ஒரு சிக்சர் அடிக்க, கோல்கட்டா அணி 14.2 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிவேக ‘50’

நேற்று 22 பந்தில் 72 ரன்கள் எடுத்த கோல்கட்டா வீரர் யூசுப் பதான், ஐ.பி.எல்., வரலாற்றில் அதிவேகமாக (15 பந்து) அரைசதம் அடித்த வீரர் என்ற வரலாறு படைத்தார்.

இதற்கு முன் 2009ல் டில்லி அணிக்கு எதிராக, டெக்கான் வீரர் கில்கிறிஸ்ட், புனே அணிக்கு எதிராக பெங்களூரு வீரர் கெய்ல் (2013) என, இருவரும் 17 பந்தில் அரைசதம் அடித்திருந்தனர். உத்தப்பா (2010), ஓவைஸ் ஷா (2012), மில்லர் (2014) என, மூன்று பேர் 19 பந்தில் அரைசதம் அடித்து, மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

‘600–600’

நேற்று கோல்கட்டாவின் சாகிப் அல் ஹசன் வீசிய 14.4வது ஓவரில், ஐதராபாத் அணி கேப்டன் டேரன் சமி சிக்சர் விளாசினார்.

இது, இத்தொடரில் அடிக்கப்பட்ட 600வது சிக்சராக அமைந்தது.

* இதேபோல, நேற்று ஹோல்டர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கோல்கட்டாவின் உத்தப்பா, இத்தொடரில் 600 ரன்களை கடந்தார். இதுவரை பங்கேற்ற 14 போட்டிகளில், 5 அரைசதம் உட்பட மொத்தம் 613 ரன்கள் எடுத்துள்ளார்.

‘வில்லன்’ அனிருத்

யூசுப் பதான் ரன் கணக்கைத் துவக்காமல் இருந்த போது, கொடுத்த எளிய ‘கேட்ச்’ வாய்ப்பை, தமிழகத்தின் ஐதராபாத் வீரர் அனிருத் ஸ்ரீகாந்த் நழுவவிட்டார். வாய்ப்பை பயன்படுத்திய யூசுப் பதான், 72 ரன்கள் குவித்து, சென்னை அணிக்கு வேட்டு வைத்தார்.

http://sports.dinamalar.com/2014/05/1400948379/ShakibAlHasancricket.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.