Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பெண்களை ஆசை வார்த்தைகூறி படையில் இணைக்க முயற்சி- அரியநேத்திரன் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

bf671e23c7daf3c36f9ff0b14b802e78.jpg

தமிழ் பெண்களை ஆசைவார்த்தை கூறி படையில் இணைக்கும் நடவடிக்கையில் சில அமைப்புக்கள் ஈடுபட்டு வருவதாக தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தில் தமிழ் பெண்களை இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் தமிழ்த் தேசியத்தில் பற்று வைத்துள்ள எமது மக்கள் அதனை புறக்கணித்து வருவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தில் இணைவதில் தமிழ் பெண்கள் பின்னடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்குள் சில புல்லுருவிகள் அமைப்புகளின் பெயரைக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவதாக கூறி இராணுவத்தினருக்கு இரகசிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், 


இதன் கீழ் பிரஜைகள் அமைப்பு என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒருவர் பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள பெண்கள் உள்ள வீடுகளுக்கு சென்று இராணுவத்தில் இணையுமாறு கூறிவருவதுடன் அவர்களுக்கு மூளைச்சலவை செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாக பெற்றோர் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இவர் தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இவர் மூலமாகவே அண்மையில் மட்டக்களப்பில் சிங்கள மக்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாக காட்டும் புகைப்பட கண்காட்சியும் நடத்தப்பட்டது.

இவ்வாறு எமது சமூகத்தின் மத்தியில் ஊடுருவியுள்ள இந்த புல்லூருவிகள் தொடர்பில் தமிழ் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளதுடன்,

இன்று சர்வதேச ரீதியில் தமிழ் மக்களுக்கான உரிமைக்குரல்கள் ஓங்கியொலிக்கும் இந்த வேளையில், இவ்வாறானவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=590192753718628265

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.