Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற போதிலும் மனித உரிமை மீறல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது: வேலாயுதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Velayutham.jpg
நாட்டின் இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் குறித்த யுத்த குற்றங்கள் தொடர்பில் தற்போது இலங்கைக்கு எதிராக சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையிலும், நாட்டில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது என ஊவா மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.வேலாயுதம் தெரிவித்தார்.
 
இதேவேளை, இந்நாட்டின் பொருளாதாரம் ஒரு குடும்பத்தின் கைகளில் காணப்படுகிறது. மேலும் மதசுதந்திரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அவ்வரசின் தலையெழுத்தை  தலைநகரிலிருந்து மாற்ற வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
 
கொழும்பு வர்த்தகர்களுக்கிடையிலான சந்திப்பு   பிரைட்டனில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
 
இந்நாட்டில் யுத்த காலத்தின் போது பெண் சிறுவர்களென வயதெல்லை பாராமல் படுகொலை செய்தனர். இந்நிலையில் அன்று நான் இல்லாத காலத்தில் தமிழர்களுக்காக சர்வதேசம் போராடும் என விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியிருந்தார். அதன் விளைவாக தற்போது தமிழ் மக்களுக்காக சர்வதேசம் குரல்கொடுத்து வருகிறது.
 
இந்நிலையில் இலங்கைக்கு எதிராக சர்வதேசம் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அழுத்தங்கள் பிரயோகித்து வருகின்றன. தற்போது அமெரிக்கா ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை திருத்தப்பட்டு வலுவுடையதாக மாற்றியுள்ள போதிலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
 
இந்நாடு அனைத்து இனத்தவர்களுக்கும் உரித்தான நாடு. இருப்பினும் இந்நாட்டில் மதச் சுதந்திரம் முற்றுமுழுதாக நீக்கப்பட்டுள்ளது. மதச் சுதந்திரத்திற்கு எதிராக அடாவடித்தனமாக பிக்குகள் போராடி வருவதனை இவ்வரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. தற்போது பள்ளிகள், கோயில்கள் உடைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சிறுபான்மையின அரசியல் தலைமைகள் மெளனிகளாக செயற்பட்டு வருகின்றனர்.
 
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ  தேர்தல் பிரசார கூட்டங்களில் தமிழ் மொழியில் உரையாடி தமிழ் சமூகத்தை ஏமாற்றி அடிமையாக்கி வருகிறார்.  அத்துடன் தற்போது இந்நாட்டின் பொருளாதாரம் ஒரு குடும்பத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
அத்தோடு மலையகத்தில் தனி வீடுகளுக்கு பதிலாக மாடி வீடுகள் நிர்மாணித்து கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோன்று, இந்நாட்டில் சிறுபான்மையினருக்கு இடமில்லை என்று கூறிய சரத் பொன்சேகா தற்போது பிரபாகரனின் மயிரிழைக்கு கூட இவ்வாட்சியாளர் தகுதியற்றவர் எனக் கூறுகிறார். மேற்படி கருத்தினூடாக இந்நாட்டில் சரித்திரம் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.