Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்குப் பல்கலையில் கைகலப்பு: ஒன்பது மாணவர் படுகாயம்

Featured Replies

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக விடுதியில் இரு மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட நிகழ்வொன்றில் மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலை மீண்டும் இவ்வாறு கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.

பல்கலைக்கழக முதலாம் ஆண்டு கலைப்பிரிவின் தமிழ் மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்த 4 ஆம் ஆண்டு சிங்கள மாணவர்கள் தடாலடியாக இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

மதுபோதையிலேயே  இந்தத் தாக்குதல் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வேளையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

தாக்கதலுக்கு பேனாக்கத்தி, மற்றும் மின் அழுத்தி என்பனவும் பாவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த ஒன்பது மாணவர்களில் ஏழு தமிழ் மாணவர்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையிலும் இரண்டு மாணவர்கள் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸாரும் அதேவேளை கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/103948-2014-03-21-02-28-54.html

  • தொடங்கியவர்

 P1310924.jpg
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக விடுதியில் இரு மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாறுமூலை வளாக தமிழ்மொழி மூல மாணவர்கள் வெள்ளிக்கிழமை(21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
P1310920.jpg
P1310919.jpg
P1310917.jpg
P1310928.jpg

 

http://tamil.dailymirror.lk/--main/104034-2014-03-21-11-06-47.html

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குப் பல்கலையில் கோஷ்டி மோதல்: 9 மாணவர்கள் வைத்தியசாலையில்!

east.jpg

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாக விடுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு இரு மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒன்பது பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

east1.jpg

காயமடைந்தவர்களில் ஏழு தமிழ் மாணவர்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையிலும் இரண்டு சிங்கள மாணவர்கள் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியொன்றில் மாணவர்களிடையே ஏற்பட்டிருந்த முறுகல் நிலை மீண்டும் தொடர்ந்து இவ்வாறு கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.

நேற்று அதிகாலை பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருந்த முதலாம் ஆண்டு கலைப்பிரிவின் தமிழ் மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்த நான்காம் வருட சிங்கள மாணவர்கள் தாக்குதலை மேற்கொண்டனர் எனக் கூறப்படுகின்றது. மதுபோதையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. தாக்குதலுக்கு பேனாக்கத்தி மற்றும் மின் அழுத்தி என்பனவும் பாவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

- See more at: http://www.malarum.com/article/tam/2014/03/21/612/கிழக்குப்-பல்கலையில்-கோஷ்டி-மோதல்-9-மாணவர்கள்-வைத்தியசாலையில்-.html#sthash.jVudRYpo.dpuf

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.