Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சம்பூர்" புலிகளின் பாரிய பலத்துக்கு அஞ்சியே நடவடிக்கை: சிறி

Featured Replies

"சம்பூர்" புலிகளின் பாரிய பலத்துக்கு அஞ்சியே நடவடிக்கை: சிறிலங்கா இராணுவம்

சிறிலங்காவின் இராணுவ-பொருளாதாரத்தை நிலை குலையவைக்கும் பலம் "சம்பூர்" விடுதலைப் புலிகளுக்கு இருந்தமையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா சமாதான செயலக இணையத்தளத்தில் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி விவரம்:

வடபகுதியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத ஆதரவை திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை மற்றும் அதற்கு அருகிலுள்ள விமானப் படைத்தளம் ஆகியவை வழங்குகின்றன.

2006 ஆகஸ்ட் 01 ஆம் நாள் சம்பூரிலிருந்து பலமுறை பீரங்கி வேட்டுக்களைத் தீர்ப்பதன் மூலம் கடற்படைத் தளத்திலுள்ள கட்டடங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சேதம் விளைவித்ததோடு, திருகோணமலையிலுள்ள கடற்படைத் தளத்தைத் தாக்குவதற்கான பலம் தமக்கிருப்பதையும் தெளிவாக நிரூபித்துக் காட்டினர்.

மேலும், ஓகஸ்ட் 12 ஆம் நாள் திருகோணமலைத் துறைமுகத்துக்கு அருகே சீனன்குடாவிலுள்ள விமானப் படைத்தளத்தை நோக்கியும் பீரங்கிக் குண்டுகளை ஏவினர்.

சம்பூரிலிருந்து நீண்ட தொலை செல்லக்கூடிய ஆயுதங்களைப் பிரயோகித்துப் பாதுகாப்புப் படையினருக்குப் பொருட்களை எடுத்துச் செல்லும் திருகோணமலை துறைமுகப் பகுதியிலுள்ள முக்கிய வழிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய விடுதலைப் புலிகளின் திறன் இத்தாக்குதல்கள் மூலம் தெளிவாகியது.

திருகோணமலையில் உள்ள இராணுவத் தளங்களின் பாதுகாப்புக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிக தூரம் தாக்கக் கூடிய ஆயுதங்கள் சந்தேகத்துக்கிடமின்றி ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளன என்பதை திருகோணமலை கடற்படைத் தளம் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் பற்றியதொரு அறிக்கையில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் பசுபிக் சமுத்திரக் கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை துறைமுகம் சிறிலங்காவின் தேசிய பொருளாதாரத்தில் முக்கியமானதொரு பங்கினை வகிக்கிறது. இலங்கையில் 40 விழுக்காடு எரிபொருள் நிலையங்களை நிர்வகிக்கும் சிறிலங்கா-இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபன நிறுவனம், திருகோணமலைத் துறைமுகத்துக்கு அருகில் உள்ள சீனன்குடாவில் இருக்கும் எண்ணெய்த் தாங்கிகளில் அதன் களஞ்சியத்தைப் பேணுகிறது.

அங்குள்ள விமானப் படைத் தளத்தை இலக்குப் பார்க்கக் கூடிய விடுதலைப் புலிகளின் திறன், இலங்கை இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய வசதியையும் இலக்குப் பார்த்துத் தாக்கி, அதனால் விளையும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் சிறிலங்காவின் பொருளாதாரத்தில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தவும் கூடும்.

திருகோணமலையில் அமைந்துள்ள பிறிமா கோதுமை மா ஆலை சிறிலங்காவின் முழுக் கோதுமை மா தேவையை நிறைவு செய்கிறது. சம்பூரில் உள்ள விடுதலைப் புலிகளின் தொலை தூரம் தாக்கக் கூடிய ஆயுதங்கள் பிறிமா ஆலையையும் அதன் களஞ்சியங்களையும் இலக்குப் பார்க்கவும் முடியும்.

திருகோணமலைத் துறைமுகம் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் காரணமாக கோதுமையை இறக்குவதற்காக போக்குவரத்துச் செய்யும் சர்வதேச கப்பல் நிறுவனங்கள் தமது தயக்கத்தையும் தெரிவித்துள்ளன.

அந்த ஆலைக்கு சேதம் ஏதும் விளைந்தால் அது நாட்டின் உணவு விநியோகத்தைப் பாரிய அளவில் பாதிக்கும்.

திருகோணமலைத் துறைமுகத்துக்குப் புறம்பாக, டோக்கியோ சீமெந்து நிறுவனம் போன்ற ஏனைய பல தொழிற்சாலைகளும் அங்கு அமைந்துள்ளன.

எனவே, சிறிலங்காவின் நன்மை கருதி, சம்பூரில் நிலைகொண்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தூர இலக்குகளைத் தாக்கக் கூடிய ஆயுதங்களை செயலழிக்கச் செய்வதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்ளத் தேவைப்படுகிறது.

சம்பூரில் இருந்து திருகோணமலை துறைமுகத்துக்கான அச்சுறுத்தலை நீக்குவதற்கு வேறு வழியில்லை என்ற நிலையில், இது தொடர்பாகத் தெளிவானதொரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று சிறிலங்கா சமாதான செயலக இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் தமிழ் ஊடகங்களின் கதையளப்பு. அவர்கள் நங்கு திட்டமிட்ட இராணுவ நடவடிக்கைகளை கிழக்கில் புலிகளை பிரதேசங்களுக்குள் துண்டாடி..பலவீனப்படுத்தி கைபற்றும் நோக்கோடு செய்கின்றனர் என்பதை தற்போது வாகரை நோக்கிய படை நகர்வுகளுக்கான முஸ்தீவு எடுத்துச் சொல்கிறது.

நாங்கள்..குண்டு வீசினால்..யுத்த நிறுத்தம் முறிப்பம் முறிப்பம் என்ற வீசினார்கள்..இடத்தை ஆக்கிரமித்தால் முறிப்பம் முறிப்பம் என்ற..ஆக்கிரமித்தார்கள்..எனி என்ன சொல்லப் போறமோ..தெரியல்ல..! மீண்டும் மக்கள் அழிவுகள் தொடங்கிவிட்டன..! :roll: :?: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"This is a severe breach of the ceasefire agreement with the Sri Lankan military taking LTTE-controlled areas," S. Puleedevan, head of the LTTE peace secretariat, told Reuters. "They are not honoring the ceasefire agreement. They are forcing it to the brink of collapse," he added. "On our side we are fully committed to it."

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

யோவ் ஜெயதேவன் என்னைய்யா யுத்தநிறுத்தம் உடையப் போகுது எண்டு அழுறீர் போல கிடக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.