Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளர் குறித்து தாய்லாந்தில் நடத்தப்பட்ட இரகசிய கலந்துரையாடல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளர் குறித்து தாய்லாந்தில் நடத்தப்பட்ட இரகசிய கலந்துரையாடல்! 

[sunday, 2014-03-23 18:50:58]
Chandrika-230314-150.jpg

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்றுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், இலங்கையில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கொழும்பில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட சில வெளிநாட்டு தூதரங்களின் அரசியல் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இலங்கையின் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி சம்பந்தமாக இந்த பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்தாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படவுள்ள பொது வேட்பாளர் யார் என்பதே இதன் பிரதான கருப்பொருளாக இருந்துள்ளது.

  

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மாதுளுவாவே சோபித தேரர் ஆகிய இருவரில் மிகவும் பொருத்தமானவர் யார், இலங்கையில் செயற்படும் மாற்று சக்திகள், பிரதான அரசியல் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தும் திறமை யாருக்கு இருக்கின்றது என்பன குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை பொது வேட்பாளராக நிறுத்த இரண்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. அவரது ஆட்சிக்காலத்திலும் ஜனநாயகம் செயற்படுத்தப்படவில்லை என இந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அவரது ஆட்சிக்காலத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் செயலிழக்க செய்யப்பட்டமையை இந்த நிறுவனங்கள் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளன. தாய்லாந்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்ட மற்றும் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாட இந்த தரப்பினர் தீரமானித்துள்ளதாக தெரியவருகிறது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=106300&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.