Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பத்தில் 10 பேரைப் படையினரிடம் பறிகொடுத்தவர் ஆணைக்குழுவிடம் நீதி கேட்கிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 குடும்பத்தில் 10 பேரைப் படையினரிடம் பறிகொடுத்தவர் ஆணைக்குழுவிடம் நீதி கேட்கிறார்!  
[Monday, 2014-03-24 09:25:16]
தனது குடும்பத்தில் தாய், தந்தை உட்பட பத்து பேர் காணாமல் போயுள்ளதாக, மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்த ஒருவர் தெரிவித்துள்ளார். சத்துருக்கொண்டானில் படையினர் கூட்டத்துக்கு வருமாறு கூறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படை முகாமுக்குள் அழைத்துச் சென்றவர்கள் தொடர்பில் இதுவரையில் எதுவித தகவலும் இல்லை.இதில் எனது குடும்பத்தினை சேர்ந்த தாய்,தகப்பன் உட்பட பத்து பேர் அடங்குவதாக மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணாமல்போனவர்களை கண்டறிவதான ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்த ஒருவர் தெரிவித்தார்.
 
1990-09-09 அன்று தனது தாய், தகப்பன், தங்கை, சகோதரன், மூத்த சகோதரி அவர்களது மூன்று குழந்தைகள், அம்மம்மா, அம்மப்பா ஆகிய பத்து உறுப்பினர்கள் படையினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சத்துருக்கொண்டான் படைமுகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக குறித்த குடும்பத்தில் மிஞ்சியிருக்கும் வைரமுத்து குழந்தைவேல் என்பவர் சாட்சியமளித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் விசாரணைகளின் இறுதி நாள் விசாரணைகள் சனிக்கிழமை மண்முனை வடக்கு - மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
 
இதன்போது சாட்சியமளித்த வைரமுத்து குழந்தைவேல் என்பவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று எனது குடும்பத்தில் நான் மட்டுமே உயிரோடு உள்ளேன். எங்கள் குடும்பத்தில் இருந்த அனைவரும் காணாமல்போயுள்ளனர். காணாமல்போனவர்களில் எனது அக்காவின் குழந்தைகளான 06, 04, 02 வயது குழந்தைகளும் அடங்கியுள்ளனர். வீட்டுக்கு இராணுவம் வந்து எமது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு செல்லும் போது நான் பற்றைக்காட்டுக்குள் மறைந்திருந்தேன். அதன் காரணமாகவே நான் உயிர் தப்பினேன். அன்று இரவு சத்துருக்கொண்டான் படைமுகாமுக்குள் பெரும் கூக்குரலும் அழுகை சத்தங்களும் வெடிச்சத்தங்களும் கேட்டதுடன், சிறிது நேரத்தில் டயர் போட்டு எரிக்கப்பட்டு பெரும் தீப்பிழம்பும் தோன்றியது.
 
அந்தவேளையில் குறித்த படைமுகாமின் பொறுப்பதிகாரியாக கப்டன் காமினி வர்ணகுலசூரியவும், கேணல் சேஸ பெர்னாண்டோவும் கடமையாற்றி வந்தனர். நாங்கள் மறுதினம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கவனத்துக்கு மறுதினம் கொண்டுவந்த போதிலும் அவர்கள் படை முகாமுக்கு சென்று விசாரித்த போது தாங்கள் யாரையும் கொண்டு வரவில்லையென்று தெரிவித்துள்ளனர்.அந்த சம்பவத்தில் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மொத்தமாக 185 பேர் ஒரு நாள் கொண்டு செல்லப்பட்டு காணாமல்போயினர் எனவும் அவர் தெரிவித்தார்.
 
இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் பாதுகாப்பு குழு ஆகியவற்றில் 1996ம் ஆண்டு முறையிட்டேன் எதுவித பயனும் இல்லை. இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.கூட்டம் ஒன்றில் சம்பவம் நடைபெற்ற போது சத்துருக்கொண்டான் படைமுகாமின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய கப்டன் காமினி வர்ணகுலசூரிய கலந்துகொண்டிருந்தார். அவரிடம் எமது உறவுகள் குறித்து வினவிய போது அவர்கள் காற்றில் கலந்து விட்டதாக பதிலளித்தார்.எமது உறவுகள் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட்டு ஒரு நல்ல முடிவினை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
 
இதேவேளை குருக்கள்மடம் பகுதியில் வைத்து வாகனத்தில் வந்த தமது தந்தையார் விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்டதாகவும் அந்தவேளையில் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களாக கடமையாற்றிய கருணா, பிள்ளையான் ஆகியோரை விசாரணை செய்து தமது தந்தையின் உடல் புதைக்கப்பட்டுள்ள இடத்தினை கண்டுபிடித்து உடலை மீட்டு தமது மத அனுஸ்டானங்களுடன் நல்லடக்கம் செய்ய உதவ வேண்டும் என காத்தான்குடியை சேர்ந்த ஆதம்பாவா முகம்மட் றியாஸ் என்பவர் தனது சாட்சியத்தினை பதிவுசெய்தார்.
 
இங்கு தொடர்ந்து தனது சாட்சியத்தினை பதிவுசெய்யும்போது, 1990-07-12 திருகோணமலையில் பொலிஸாராக கடமையாற்றும் எனது சகோதரனை அழைத்துக் கொண்டு எனது தந்தையார் பொலநறுவை ஊடாக அம்பாறை சென்று அங்கு சகோதரனை முன்பாக அனுப்பிவிட்டு அம்பாறையில் வர்த்தக நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு லொறியொன்றில் காத்தான்குடிக்கு வந்து கொண்டிருந்தார்.இதன் போது குருக்கள்மடம் பாடசாலைக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி சோதனைகளை மேற்கொண்டிருந்த புலிகள் எனது தந்தை மற்றும் லொறியின் சாரதி மற்றும் நடத்துனரை கொண்டுசென்றனர்.
 
அவர்களை குருக்கள்மடம் பாடசாலைக்குள் கொண்டு சென்று அங்கிருந்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று சுட்டுக் கொன்றுள்ளனர்.எனது தந்தையை அக்காலத்தில் விடுதலைப் புலிகளின் தளபதியாக கடமையாற்றிய கருணா பிரிவே கடத்திச் சென்று சுட்டுக்கொன்றது. இதனை குருக்கள்மடத்தில் உள்ள சில தெரிந்த தமிழ் நண்பர்கள் தெரிவித்தனர்.எனவே இது தொடர்பில் கருணா, பிள்ளையானை விசாரணை செய்து சடலத்தினை தோண்டியெடுத்து இஸ்லாம் முறைப்படி தந்தையின் சடலத்தினை அடக்கம் செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
 
இதேபோன்று 1990-07-12 அன்று அகமட் லெப்பை முகமட் ஜலால்தீன் என்ற எனது தந்தை பஸ்ஸில் வந்து கொண்டிருக்கும் போது விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று சுட்டுக் கொலை செய்துள்ளதாக காத்தான்குடியை சேர்ந்த முகமட் பௌசி என்பவர் சாட்சியமளித்தார். அந்தவேளையில் எனது தந்தையுடன் சேர்த்து சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். எனது தந்தையை கடத்திச் செல்வதை எங்களது ஒன்றுவிட்ட சகோதரன் கண்டுவந்து எங்களிடம் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் வாகனங்களை மறித்து சோதனையிட்ட போதே தனது தந்தையையும் கடத்திச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
commission-240314-600.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.