Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடியவனுக்கு எதிராக அபாய அறிவிப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

nediyavan.jpg
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவனை கண்ட இடத்தில் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினூடாக (இன்டர்போல்) 'அபாய அறிவிப்பு' விடுக்க இலங்கை முயற்சித்து வருகின்றது. 

இவர் தற்போது நோர்வேயில் மறைந்திருப்பதாக இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலை அடுத்தே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க நெடியவன் முயற்சித்து வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுங்கேணியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூவரும் நெடியவனின் ஆலோசனைக்கமையவே செயற்பட்டு வந்துள்ளனர் என்றும் இலங்கை புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது. 

தாக்குதல் அல்லது குண்டுத் தாக்குதல் ஒன்றின் மூலம், இலங்கையில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பவை வெளி உலகுக்கு காட்டுவதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுள்ளனர் என்றும் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

புலிகள் இயக்கத்தை உயிர்ப்பித்து செயற்படுத்துவதற்கான நிதி திரட்டல் நடவடிக்கையின் பின்னால் நெடியவனே உள்ளார் என்றும் இவ்வாறு திரட்டப்படும் நிதியின் மூலம் புலிகள் இயக்கத்தினர் மறைந்திருப்பதற்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன என்றும் தகவல் கிடைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு மேலும் கூறியுள்ளது. 

 

புரளி மிரர்.

சர்வதேச காவல்துறை பிடியாணை என்ற சொல்லை பயன்படுத்தி சிறீலங்கா அரசும் அதன் வலைப்பின்னலில் செயற்படும் ஊடகங்களும் தமிழ் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை தோற்றுவிக்க முயல்கின்றன.
சர்வதேச பிடியாணையை பிறப்பிக்கும் சிறீலங்கா அரசின் நோக்கம் அரசியல் பின்புலம் என்பன ஐரோப்பிய நாடுகளுக்கு தெரியும்.கடந்த வருடம் என்று நினைக்கிறேன்..சர்வதேச காவல்துறை தலைவர் சிறீலங்கா போன்ற நாடுகள் தங்களது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தங்களை தவறாக பயன்படுத்த முயல்வதாக கூறியிருந்தார்.
ஐரோப்பாவை பொறுத்தவரை சர்வதேச காவல்துறை என்பது அந்ததந்த நாடுகளின் காவல்துறைக்கு பொறுப்பாக இருக்கும் உள்துறை அமைச்சின் அனுமதியின்றி ஒருவரை கைது செய்ய முடியாது.
ஒருவேளை அவ்வாறான அனுமதியுடன் கைது செய்தால் கூட அந்தந்த நாட்டு அரசாங்கள்களின் அனுமதியின்றி அவர்களை சர்வதேச காவல்துறையால் நாடுகடத்த முடியாது.
அகதிகள் பாதுகாப்பு விடயத்தில் ஐரோப்பா ஒன்றும் மலேசியாவோ அவுஸ்ரேலியாவோ அல்ல.
சிறீலங்கா அரசின் நம்பகத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு புறம்பான அரச பயங்கரவாத செயல்முறை  என்பன சர்வதேச அளவில் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சர்வதேச பிடியாணை என்ற பூச்சாண்டிக்கு நம்மர்வர்கள் அதிகம் பயப்படத்தேவையில்லை.
ஆனால் இந்தப் பூச்சாண்டியை அகதிகளின் பாதுகாப்பையும் புலம் பெயர் நாடுகளில் அவர்களுக்குவழங்கப்பட்டுள்ள சனநாயக உரிமைகளையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கு சிறீலங்கா அராங்கத்தின் அரச பயங்கரவாத செயற்பாடாக நாம் தொடர்ச்சியாக பல்வேறு மட்டங்களிலும் அம்பலப்படுத்த வேண்டும்.
தமிழ்தேசிய செற்பாட்டுக்காக உண்மையாக  நேர்மையாக உழைக்கும் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் புலத்தில் துரோகி எதிர் தியாகி  என்கிற பிழைப்புவாத அரசியலை இனியாவது விட்டுவிடுங்கள்.
நந்த கோபன் கைதுக்கு பின்பான இன்றைய சூழ்நிலையில் துரோகி பட்டம் வழங்கும் வள்ளல்களையும் இணைய புரட்சி வீரர்களை இனியாவது இனங்காணுங்கள்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை எல்லை தாண்டிய பயங்கரவாதமாக சித்திரிக்க இன்னும் பல பருதிகளை சிறீலங்கா அரசு விழுத்தும் ஆபத்து இருக்கிறது.
அதற்கான சூழ்நிலையை இந்த வள்ளல்களையும் புனைபெர்களுக்குள் ஒழிந்திருந்து புரட்சிசெய்யும் போலி தேசியவாதிகளையும் வைத்து சிறீலங்கா அரசு உருவாக்கும்.
பலம் தான் அதிகாரத்தின் அடிப்படை.
எமது இராணுவ பலம் அழிக்கப்பட்ட நிலையில் புலம் பெயர்ந்த மக்களாகிய நாம் அரசியல் பொருளாதாரம் ஊடகம் என்று அனைத்து துறைகளிலும் வேற்றுமையில் ஒன்றுமைகண்டு மேற்குலக சனநாயக வரையறைக்குள் நின்று போராடுவது தான் இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
இதை நாங்கள் செய்யத் தவறுவோமாக இருந்தால் இன்னொரு முள்ளிவாயக்காலுக்கு  நாங்கள் முகங்கொடுக்க வேண்டியிருக்கும்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.