Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெற்றோருக்கு உதவிய பிள்ளைகளைப் பிடிக்க இன்டர்போல் நடவடிக்கை!

Featured Replies

kalameham.jpg

 

“எட்டே கால் இலட்சணமே, எமனேறும் பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே

கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னாய் அது”

- ஔவையார் –

(எட்டு இலக்கத்தை ‘அ’ எனவும் கால் என்ற கணக்கை ‘வ’ என்றும் தமிழ் எழுத்துக்களில் குறிப்பிடப்படும். அதன் படி எட்டே கால் இலட்சணம் என்றால் எமனுடைய வாகனமான எருமைக்கடாவாகும்.

பெரியம்மை வாகனம் என்பது மிகவம் அவலட்சணமான யாழி வாகனமாகும்.

கூரையில்லா வீடு என்பது மூளையில்லாத மனிதனைக் குறிக்கிறது.

குரலாமன் தூதுவன் என்றால் இராமாயணத்தில் இராம தூதனாக விளங்கிய அனுமான் என்ற குரங்கைச் சுட்டிக்காட்டுகிறது.

இதைத் தமிழில் வசைக் கவி எனக் கூறுவர்.

இது காளமேகம் செய்தியின் அறிமுகம்)

காளமேகம் செய்திகள்:

தயாரித்து வழங்குபவர் ‘பொய்யா மொழி’

இனி தலைப்புச் செய்திகள்!

  1. ஜனாதிபதி மாளிகையிலிருந்து நான்கு கிளிகள் தப்பிச் சென்றமை தொடர்பாக புலம்பெயர் தமிழ் புலி ஆதரவாளர்களின் சதி இருப்பதாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
  2. மன்னார் மறிச்சுக்கட்டியில் முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர் என்ற அமைச்சரின் அப்பட்டமான பொய்யை அம்பலப்படுத்தினார் இராணுவப் பேச்சாளர்.
  3. அம்பாந்தோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமோக வரவேற்பு. விளையாட்டுத் துப்பாக்கியால் பாதுகாப்பு வழங்கிய மேயர்.
  4. மீண்டும் இலங்கையில் புலிகளின் நடவடிக்கைகளை மேற்கொண்ட 40 புலம்பெயர் தமிழர்கள் இன்டர் போலின் சிவப்பு பட்டியலில்.

இனி விரிவான செய்திகள்;

ஜனாதிபதி மாளிகையில் அவர் அன்புடன் வளர்த்த ஒவ்வொன்றும் தலா ஒரு இலட்சம் பெறுமதியான நான்கு கிளிகள் காணாமல் போயிருந்தன. அவற்றில் மூன்று கிளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுவிட்டன. நான்காவது கிளியைத் தேடி பாரிய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேற்படி நான்கு கிளிகளும் புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்களின் திட்டமிட்ட சதி மூலம் கடத்தப்பட்டதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை பேசும் வல்லமை பெற்றிருந்த போதிலும் கூட நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மூலம் இவற்றிடமிருந்து ஜனாதிபதி மாளிகையின் இரகசியங்கள் பெறப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. மூன்று கிளிகளும் முழு இரகசியங்களையும் வெளியிட்டுவிட்டதால் அவை விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் நான்காவது கிளி எதையும் வெளியிட மறுத்தபடியால் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

எனினும் மீண்டும் பிடிக்கப்பட்ட கிளிகள் இரகசியப் பொலிஸாரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மாளிகைக்கு இவை ஏற்கனவே இரகசியங்களை அறிவதற்காகத் திட்டமிட்டுப் புலி ஆதரவாளர்களின் சதி மூலம் அனுப்பிவைக்கப்பட்டவையா? என்ற கோணத்திலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நான்காவது கிளியைத் தேடி தீவிரமான சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது பிடிபட்டால் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் எனவும் நம்பப்படுகிறது. மேற்படி நடவடிக்கைகளுக்கென மூன்று விசேட பொலிஸ் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மறிச்சுக்கட்டியில் முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர் என்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் கூற்றை நிராகரித்து அதன் உண்மைத் தன்மையை அம்பலப்படுத்தினார் இராணுவப் பேச்சாளர்.

அண்மையில் மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள் வில்பத்து சரணாலயத்தின் காடுகளை அழித்து அங்கு ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாகப் பொதுபல சேனாவினால் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு 20 வாகனங்களில் சென்ற பொதுபலசேனாவினர் மது அருந்தி இறைச்சி உண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவாறே உடனடியாக முஸ்லிம்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறவேண்டும் என மிரட்டினர். அது ஏற்கனவே 1990க்கு முன்புவரை முஸ்லிம்கள் குடியிருந்த இடமெனவும் அங்கு குளமும் இடிந்த வீடுகளும் பாவனையற்ற கிணறுகளும் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால் அது வனபரிபாலன இலாகாவுக்குச் சொந்தமான இடமென வனபரிபாலனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அங்கு காணப்பட்ட இடிந்த வீடுகளும், பாவனையற்ற கிணறுகளும் மஹிந்த தேரர் புத்த மதத்தைப் பரப்புவதற்காக தேவநம்பிய தீசனைச் சந்திக்க வந்த போது கட்டப்பட்டவையா என்ற அடிப்படையிலான முடிவுகளைக் கொண்டுவரும் வகையில் தொல்பொருள் ஆய்வுகள் இடம்பெறவுள்ளன. மாந்தையில் இறங்கிய மஹிந்த தேரரும் அவரின் சீடர்களும் அனுராதபுரம் செல்வதற்கு முன்பாக இங்கு தங்கியிருந்ததாக தெரியவருகிறது.

அதேவேளையில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் முள்ளிக்குளம் மறிச்சுக்கட்டி ஆகிய பகுதிகளிலுள்ள முஸ்லிம்களின் 700 ஏக்கர் காணிகளை கடற்படையினர் அபகரித்து விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் அங்கு எக்காலத்திலும் முஸ்லிம்கள் குடியிருக்கவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அங்குள்ள வீடுகள் புத்த பெருமான் பிறப்பதற்கு முன்பே சிங்கள பௌத்த மக்களின் குடியிருப்பு என நம்பப்படுகிறது. எப்படியிருப்பினும் அமைச்சரின் பொய் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது.

ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் ஒவ்வொரு எறிகணைகளாலும் விமானக் குண்டுகளாலும் மக்கள் கொல்லப்பட்டபோது இலங்கை இராணுவம் ஒழுக்கமும் கடப்பாடும் மிக்கவர்கள் எனவும் அவர்கள் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லை எனவும், வெளிநாட்டு ஊடகங்களின் பொய்ச் செய்திகளை இராணுவப் பேச்சாளர்கள் அம்பலப்படுத்தியவர்கள் என்பதை எவரும் மறந்துவிட முடியாது.

அம்பாந்தோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு அமோக வரவேற்பு – விளையாட்டுத் துப்பாக்கியால் பாதுகாப்பு வழங்கிய மேயர்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று அண்மையில் மத்தள சர்வதேச விமான நிலையம் மடக்கும்பர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகம் என்பவற்றைப் பார்வையிடச் சென்றிருந்தது.

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்தித்க் கட்சி ஆதரவாளர்களால் அமோகமான முறையில் வரவேற்கப்பட்டனர். அது மட்டுமன்றி அங்கு கூடியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரால் ஏகோபித்த குரலில் வரவேற்புரைகள் வழங்கப்பட்டன. தகாத வார்த்தைகள், கொலை அச்சுறுத்தல் திட்டங்கள் எனப் பல்வேறு விதமான சுலோகங்கள் மூலம் அவர்கள் மிகவும் கௌரவமான முறையில் வரவேற்கப்பட்டனர்.

அவர்கள் மடக்கும்பர துறைமுகத்தைப் பார்வையிட்டுவிட்டு வெளியேறிய போது அவர்களுக்கு மலர்மாரி பொழிந்து வாழ்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும் உரிய நேரத்தில் மலர்கள் வந்து சேராத காரணத்தால் கையில் அகப்பட்ட முட்டைகள், கற்கள் என்பன பொழியப்பட்டு வாழ்த்து மேற்கொள்ளப்பட்டது. அதே வேளையில் அம்பாந்தோட்டை மாநகர மேயர் அங்கு துப்பாக்கியுடன் விஜயம் செய்து வாழ்த்து நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு வழங்கினார்.

பொலிஸார் முன்னிலையிலேயே மேற்படி வாழ்த்து நிகழ்வு விமர்சையாக இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி மேயர் தான் விளையாட்டுத் துப்பாக்கியை வைத்துக் கொண்டே பாதுகாப்பு வழங்கிய தாகவும் ஜனாதிபதியின் புத்திரனே பாதுகாப்பு வழங்குமாறு தனக்கு பணித்தாகவும் புகழாங்கிதம் அடைந்தார்.

அது மட்டுமன்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்த பேருந்தின் கண்ணாடிகள் கல்லெறிந்து உடைக்கப்பட்டு அவர்கள் வீதியருகில் உள்ள இயற்கைக் காட்சிகளை தடங்கலின்றிப் பார்ப்பதற்கு வசதி செய்யப்பட்டது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியினர் தாங்கள் தாக்கப்பட்டதாகவும், தங்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் பொய்யான முறையில் முறைப்பாடு செய்துள்ளனர். இது ஒரு ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் இம் முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொய் முறைப்பாட்டின் பின்னணியில் இலங்கையின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாத ஏகாதிபத்திய சதி இருப்பதாக நம்பப்படுகிறது.

மீண்டும் புலிகளின் நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் 40 பேர் இன்டர் போலின் சிவப்புப் பட்டியலில் இணைப்பு!

புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புக்கள் விடுதலைப்புலிகளை மீளவும் உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு, சகோதரர்களுக்கு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாடசாலை மாணவர்களுக்கு பண உதவி செய்வது என்ற பேரில் புலிகள் அமைப்பைக் கட்டிவளர்க்க நிதி வழங்கிய விஷயம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இங்கு புலியமைப்பை வேகமாகக் கட்டி வளர்க்க தங்கள் சகோதர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்பணமனுப்பியுள்ளனர்.

விதவைகள் தங்கள் பிள்ளைகளை பலசாலிகளாக வளர்த்து போராட்டத்துக்கு அனுப்ப அவர்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளனர். முதியவர்கள் நெடுங்காலம் இருந்து பழைய கதைகளைச் சொல்லி இளைஞர்களைத் தூண்டிவிட வேண்டும் என்ற நோக்கோடு புலம்பெயர் தமிழர்கள் தங்கள் பெற்றோர்களுக்குப் பணமனுப்பியுள்ளனர்.

இவையெல்லாம் அம்பலப்பட்ட நிலையிலேயே 40 இலங்கையர்கள் இன்டர்போலில் சிவப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களைக் கைது செய்ய இவர்கள் வாழும் நாடுகள் அனுமதியளிக்க வேண்டும். ஆனால் இவர்கள் அந்த நாட்டு அரசாங்கங்களுக்கு பணம் கொடுத்து தம்வசப்படுத்தி வைத்துள்ளனர்.

எனினும் இது தொடர்பாக தீவிர இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவு அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகின்றது.

இத்துடன் எமது செய்திகள் நிறைவு பெற்றன.

காளமேகம் செய்திகள் –

பொய், புரட்டு, பித்தலாட்டம்.

பார்க்கத்  தவறாதீர்கள் – ‘காளமேகம் செய்திகள்’

http://tamilleader.com/?p=31766

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.