Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை மூதூர் அகஸ்தியர் ஸ்தாபனத்தின் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தம்

Featured Replies

கொடி பிடிக்கிறதை விட்டிவிட்டு இந்தியாவில் இருக்கும் பஜ்ரங்தள், சிவசேன, ஆர்எஸ் எஸ் இப்படி அமைபுகளை இந்துதுவா ரீதியில் அணுகினால் எவ்வளவோ சாதிக்கலாம். இதுவரை எம்தரப்பில் இடிக்கப்படும் கோவில்களை, கிழக்கின் நிலப்பறிப்பை பற்றி யாராவது இந்த அமைப்புகளுக்கு முறையாக சொல்லி லாபி பண்ணியிருக்கோமா? அப்படி ஏதும் செய்யாமல் அவர்கள் என்ன செய்து விட்டார்கள்? என்று கேட்பதில் நியாயம் இல்லை.

லண்டனில் எனக்குத்தெரிய எல்லா கோவில்களும் முள்ளாள் புலிப்பினாமிகளினுடயதே.

எடுத்ததுக்கெல்லாம் இந்திய இந்துத்துவத்தை ஈழத்து சைவ/இந்து சமயத்துடன் ஒப்பிடுவதையே ஒரு சிலர் செய்கிறீர்கள்.

தமிழகத்திலேயே கோவில்கள் அழிக்கப்படுகின்றன. அதற்கு petition உம் தயாரித்து கையொப்பம் வாங்கி அனுப்பினார்கள். அதற்கு என்ன செய்தார்கள்?

இந்திய இந்துத்துவம் தமிழக இந்து சமயத்தவரையே மதிப்பதில்லை. அவ்வாறிருக்கு ஈழத்தில் கோவில் இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி விடுவார்களாம். செம கொமடி. இலங்கை என்பது இந்தியாவின் கட்டுப்பாட்டை மீறி பல காலமாகி விட்டது. மோடியே நினைத்தால் கூட சிங்களத்தை மீறி எதையும் செய்ய முடியாது.

இறுதி வரிக்கு ஆதாரத்தை முன்வைத்து எழுதுங்கள். அதன் பின்னர் அதற்கு பதில் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கொடிதான் புலிக்கொடி. அதேதான் புலியின் கொடியும்..! :D அதுக்கென்ன இப்ப..!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரி விடுங்கோ - நான் சொல்வது பிழை. கொடி பிடித்து - ஆர்ப்பாட்டம் பண்ணி - போர்குற்ற விசாரணை மூலம் தனி நாடு கண்டிரலாம்.

எனக்குத்தான் ஒண்டும் புரியுதில்லை.

ஆதாரம்.- ஜெயதேவன் - சீவரட்ணம் - காஸ்றோ உறவு முறை, பிரிவுக் காரணம் என்ன என்று விடயம் தெரிந்தவர்களிடம் கேளுங்கள்.

கனகதுர்கையின் காவலர்கள் - முபுன் ஏன்ன அமைப்புகளில் இருந்தார்கள் ?

ஆச்வே முருகனைதவிர மிச்சம் எல்லாம் என்றோ ஒரு நாள், இப்போ அல்ல புலி என்று அடையாளம் படவர்களே.

இசை மறுபடியும் முதல்ல இருந்தா!

ஆளை விடுங்க சாமி - அதுதான் உங்கள் போராட்ட வழிமுறை மிகச்சரியானது கட்டாயம் இலக்கை அடைந்தே தீரும் என்று சொல்லி விட்டேனே.

ஓவர் அண்ட் அவுட்.

Edited by goshan_che

நான் என்னால் செய்யமுடியாது கொடிபிடிக்கும் கூட்டம் செய்யாட்டும் எண்டு சொல்லவில்லை. என்னால் என்ன முடியும் என்பதில் எனக்கு தெளிவு இருக்கு நான் அதை செய்கிறேன். என்னால் என்ன முடியாது என்ற தெளிவும் இருக்கு அது கொடிக்கூட்டத்தால் முடியும் எண்டு நினைக்கிறேன். அதுதான் செய்யுங்கோ எண்டு சொல்லுறேன். குதிரையை குளத்துக்கு கூட்டிப்போகதான் முடியும் தண்ணி குதிரையா பாத்து குடிச்சாதான் உண்டு.

கொடியை பொறுத்தவரை நீங்களும் "புலி அழிந்தால் தமிழரும் அழிவோம்" நிலைப்பாட்டில் உள்ள ஒருவர்தான் சகோதரி. உங்களாலும் புலிகளை ஒதுக்கி விட்டு முன்னேற முடியவில்லை. கடந்த காலத்தின் கைதிகளாக, உணர்சிவசப்பட்டு நீங்கள் கொடியை விட மறுக்கிறீர்கள். சபேசன் சொல்வது போல் "மீசை வச்சா சந்த்ஹிரன், மீசை எடுத்தா இந்திரன்" எனும் உங்கள் கொடி வியாக்கியானத்தை புலிசர்ர்பிலாத தமிழரே ஏற்கதயாரில்லை, உலக நாடுகள் என்ன முட்டாள்களா ?

கொடி பிடிப்பவர்களும் தங்களால் எது செய்ய முடியும் என்ற வரையறைக்குள் தான் சிந்திக்கிறார்கள்.

யாழ் இணையத்தில் புலி எதிர்ப்பாளர்கள் பலர் உள்ளார்கள். நீங்கள் மக்களுக்கு உதவி செய்யும் நோக்கோடு புலி சார்பில்லாத அமைப்பு ஏதும் உருவாக்கினால் அவர்களும் உங்களுக்கு உதவக்கூடும். புலிகளை தான் எதிர்க்கிறோம், மக்களுக்கு உதவி செய்கிறோம் என பலர் இங்கு எழுதுவார்கள். எனவே அப்படியானவர்கள் உங்கள் பின் திரண்டு வருவார்கள்.

புலிகள் இல்லாவிட்டால் வெட்டுவோம் பிடுங்குவோம் என்று சொன்னவர்கள் யாரும் 2009 இன் பின் 5 ஆண்டுகள் ஆகியும் எதையும் செய்யவில்லை. அது கூட மக்களிடையே புலிகளை பற்றிய மதிப்பை மேலும் மேலும் உயர்த்தி செல்கிறது.

உலக நாடுகள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் தமது நலனை அடிப்படையாக வைத்து எங்களை முட்டாளாக்குபவர்கள்.

குர்திஷ் போராளிகளும் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு ஆயுத உதவி செய்து தமக்காக பயன்படுத்துகிறார்கள். புலிகளுக்கு என்றால் இன்னொரு நியாயம். புலிகளின் தேவை அவர்களுக்கு இருந்திருந்தால் புலிகள் பக்கம் நின்றிருப்பார்கள்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

யார் நான் (யூகே), அர்யூன். (கனடா), சபேசன்(கனடா?), நாந்தான் (அவுஸ்) இவ்வளோ பேரும் சேர்ந்து ஒரு வெகுசனப் போராட்டம்?

நல்ல sense of humour உங்களுக்கு.

நாங்கள் உதிரிப்பூக்கள் நாங்கள் தனி மனித முறையில்தான் ஏதேனும் செய்யலாம்.

நீங்கள் வடங்கள் - தேரையே இழுக்கும் சக்தி உடையவர்கள் - ஆனால் தேர் முட்டியை கட்டி இழுத்தே தீருவோம் எண்டு அடம் பிடிக்கிறீர்கள்.

சரி அப்போ சோழனின் பக்கவாட்டில் பாயும் புலிக் கொடியை, பாண்டியனின் மீன்கொடியை அல்லது ஒரு தனிக்கொடியை செய்து பிடியுங்கோவன். ஒரு இயக்கத்தின் கொடியில் பெயரையும் சன்னத்தையும் நீக்கிவிட்டு நான் அவனில்லை எண்டா யார்தான் நம்புவார்கள்.

ஈழத்தமிழர்களான எமக்கு உலக ரீதியில் தற்பொழுது அடையாளம் தந்த கொடி அது. போராளிகள், மக்களின் தியாகங்கள் அதில் உள்ளது. எனவே அதுவே எமது கொடியும். :)

யார் நான் (யூகே), அர்யூன். (கனடா), சபேசன்(கனடா?), நாந்தான் (அவுஸ்) இவ்வளோ பேரும் சேர்ந்து ஒரு வெகுசனப் போராட்டம்?

நல்ல sense of humour உங்களுக்கு.

நாங்கள் உதிரிப்பூக்கள் நாங்கள் தனி மனித முறையில்தான் ஏதேனும் செய்யலாம்.

நீங்கள் வடங்கள் - தேரையே இழுக்கும் சக்தி உடையவர்கள் - ஆனால் தேர் முட்டியை கட்டி இழுத்தே தீருவோம் எண்டு அடம் பிடிக்கிறீர்கள்.

உங்களை போராட்டம் செய்ய சொல்லி யார் சொன்னது? கோவில் கட்ட நிதி அனுப்புவது தொடர்பில் தானே புலிக்கொடி பிடிப்பவர்களை இழுத்து கதைத்தீர்கள்? சாந்தி அக்கா இருப்பது ஜெர்மனில். அவர் மூலம் உதவி செய்பவர்கள் எந்தெந்த நாடுகளில் உள்ளார்கள் என்றும் பார்த்து விட்டு கதையுங்கள். அடுத்தவனுக்கு என்றால் அட்வைஸ். தனக்கு என்றவுடன் நழுவல் போக்கு.... :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏன் சாந்தியக்கா மூலம் செய்ய வேண்டும். என் இயலுமைக்கு மேலாகவே செய்கிறேன் - நானே நேரடியாக.

நீங்கள் என்னவோ என் வங்கி கணக்கை மேற்பார்பை செய்வபர் போல என்னை குற்றம் சொல்ல்வதுதான் வேடிக்கையாய் இருக்கு.

நான் ஏன் சாந்தியக்கா மூலம் செய்ய வேண்டும். என் இயலுமைக்கு மேலாகவே செய்கிறேன் - நானே நேரடியாக.

நீங்கள் என்னவோ என் வங்கி கணக்கை மேற்பார்பை செய்வபர் போல என்னை குற்றம் சொல்ல்வதுதான் வேடிக்கையாய் இருக்கு.

சாந்தி அக்கா மூலம் உங்களை உதவி செய்ய சொல்லி யார் சொன்னது? வெவ்வேறு நாடுகளில் இருப்பவர்களை அவர் ஒருங்கிணைப்பது போல் நீங்களும் வெவ்வேறு நாடுகளில் உள்ளவர்களை ஒருங்கிணைக்கலாம் என்று சொன்னேன். நீங்கள் சொன்னது 4 பேர் தான். புலியெதிர்ப்பு கருத்து எழுதும் யாழ்கள உறவுகள் பலர் உள்ளார்கள்.

சபேசன் அண்ணா எப்ப கனடாவுக்கு போனவர்?

நீங்கள் மக்களுக்கு எதையும் செய்வதில்லை என்று நான் சொல்லவில்லை. உங்கள் தனிப்பட்ட விபரம் தராமல் நீங்களும் சிறு உதவி செய்ய தயார் என்று நிழலி அண்ணாவுக்கு ஒரு திரியில் எழுதியிருந்ததை நானும் வாசித்தேன்.

புலிக்கொடி பிடிப்பவர்களிடம் தான் ஆட்பலம் இருக்கு, எனவே அவர்கள் தான் இதையும் செய்ய வேணும் என்று சொன்னதாலேயே உங்களுக்கு ஆட்பலம் சேர்க்கும் வழிமுறையை கூறினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

துளசி - நீங்கள் எல்லாம் புலியாதரவாளர்கள் - தனி நாட்டு ஆதரவாளர்கள் - 90% க்கு மேல் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். ஒரே ஒரு முழு முதல் கடவுளை நம்புபவர்கள். உங்களுக்கு ஒரு common identity, common goal common purpose இருக்கு.

நாங்கள் அப்படியா - எனக்கு எந்த இயக்கதுடனும் ஆகாது - அர்யூன் புளொட் - மற்றயவர்கள் எப்படியோ?

நாங்கள் இணைந்து ஒரு மண்ணும் பண்ண முடியாது. தனி தனியே ஏதேனும் செய்தா உண்டு.

இதை ஏற்றுகொள்ளும் இதய சுத்தி என்னிடம் உண்டு. ஆகவேதான் புலம்பெயர் வகிபாகம் உங்களிடமே உண்டு எண்டு சொன்னேன். அதுக்காக நீங்கள் செய்வது எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதுமில்லை.

போராட்டம் என்றால் விமர்சனத்துக்கு அஞ்ச முடியாது. ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள், அல்லது வேணுமானால் நீங்கள் செய்யுங்கள் எனும் தொனியில் விமர்சனத்தை ஒதுக்கவும் முடியாது.

விமர்சிப்பது எங்கள் பேச்சுரிமை. விமர்சனத்தை எப்படி எதிர்கொள்வது, எதை ஏற்பது எதை விடுவது என்பது உங்கள் தலைமைதுவ பண்பை பொறுத்தது. ஒரு வெளிப்படையான போராட்டம் இப்படித்தான் நகரும். நகரவேண்டும்.

துளசி - நீங்கள் எல்லாம் புலியாதரவாளர்கள் - தனி நாட்டு ஆதரவாளர்கள் - 90% க்கு மேல் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். ஒரே ஒரு முழு முதல் கடவுளை நம்புபவர்கள். உங்களுக்கு ஒரு common identity, common goal common purpose இருக்கு.

நாங்கள் அப்படியா - எனக்கு எந்த இயக்கதுடனும் ஆகாது - அர்யூன் புளொட் - மற்றயவர்கள் எப்படியோ?

நாங்கள் இணைந்து ஒரு மண்ணும் பண்ண முடியாது. தனி தனியே ஏதேனும் செய்தா உண்டு.

இதை ஏற்றுகொள்ளும் இதய சுத்தி என்னிடம் உண்டு. ஆகவேதான் புலம்பெயர் வகிபாகம் உங்களிடமே உண்டு எண்டு சொன்னேன். அதுக்காக நீங்கள் செய்வது எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதுமில்லை.

போராட்டம் என்றால் விமர்சனத்துக்கு அஞ்ச முடியாது. ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள், அல்லது வேணுமானால் நீங்கள் செய்யுங்கள் எனும் தொனியில் விமர்சனத்தை ஒதுக்கவும் முடியாது.

விமர்சிப்பது எங்கள் பேச்சுரிமை. விமர்சனத்தை எப்படி எதிர்கொள்வது, எதை ஏற்பது எதை விடுவது என்பது உங்கள் தலைமைதுவ பண்பை பொறுத்தது. ஒரு வெளிப்படையான போராட்டம் இப்படித்தான் நகரும். நகரவேண்டும்.

நீங்கள் எல்லாரும் புலி எதிர்ப்பாளர்கள். தனிநாட்டு எதிர்ப்பாளர்கள். 90% க்கு மேல் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். ஒரே ஒரு முழு முதல் கடவுள் மற்றும் அவர் சார்ந்த அமைப்பை எதிர்ப்பவர்கள். உங்களுக்கு ஒரு common identity, common goal common purpose இருக்கு. :)

என்ன அர்ஜுன் அண்ணாவை பார்த்து இப்படி சொல்லி விட்டீர்கள். :D யாழில் முன்னர் இணைத்த மக்கள் நலன் சார்ந்த petition இல் அர்ஜுன் அண்ணாவும் கையொப்பமிட்டிருந்தார். எனவே மக்கள் நலன் சார்ந்து நீங்கள் சேர்ந்து இயங்கலாம்.

தாயக மக்கள் நல்லா இருக்க வேணுமென்றால் கொடிபிடிக்கும் கூட்டம் கொள்கை கோட்பாடு விருப்பு வெறுப்பு அனைத்தையும் விட்டிட்டு இயங்க வேண்டும் என்று திரிக்கு திரி மற்றவர்களுக்கு சொல்லும் உங்களால் அதே மக்களின் நன்மை கருதி உங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பால் வேறு அமைப்பை சேர்ந்த நபர்களுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை. புலிகள் மட்டும் மற்ற இயக்கங்களுடனும் அனுசரித்து போயிருக்க வேண்டும் என்றும் கூறுவீர்கள்.

இந்த திரியில் போராட்டம் பற்றி கதைக்கவில்லை. நிதி அனுப்புவது தொடர்பிலேயே கதைக்கிறோம்.

  • 1 year later...

IMG_4146_zpsyddkvic0.jpg

kankuveli%202_zpsch20otpt.jpg

kankuveli%203_zps9wrt14nv.jpg

kankuveli%204_zpscrvmsvd9.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.