Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்முனைப்பாலம் – உண்மையை அறியாத ஊடகவியலாளர்களும் அதிகாரிகளும்

Featured Replies

manmunai-bridge.jpg

 

மட்டக்களப்பு மண்முனைப்பாலம் ஜனாதிபதியால் சனிக்கிழமை திறந்துவிடப்பட்டுள்ளது, மண்முனைப்பாலம் அம்பாறையையும், மட்டக்களப்பையும் இணைக்கும் பாலம் என புது அர்த்தம் கொடுக்கப்பட்டு அப்படியே அழைப்பிதழ் மற்றும் விளம்பரபலகையும் இடப்பட்டது,

உண்மையில் மண்முனைப்பாலம் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் பாலமாகும் இவ்வாறு படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் பாலங்களாக ஏற்கனவே பட்டிருப்பு பாலம் வலையிறவுப்பாலம் என்பன இருப்பதுபோல் இந்த இரண்டுபாலங்களுக்கும் நடுப்பகுதியில் இருப்பதுதான் இந்த மண்முனை ப்பாலம.; அத்தனை பாலங்களும் படுவான்கரையையும், எழுவான்கரையையும் இணைக்கின்றனவே தவிர அம்பாரையை இணைக்கவில்லை,

படுவான்கரை மக்களின் நீண்ட கோரிக்கையாக மண்முனைப்பாலம் இருந்தது அதன்காரணமாக 1978ம் ஆண்டு அப்போது இந்துகலாச்சார அமைச்சராக இருந்த செல்லையா இராசதுரையின் முயற்சியால் இப்பாலத்திற்கான நிதிஒதுக்கப்பட்டு அடிக்கல்லும் நடப்பட்டது, ஆனால் நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாக பாலவேலைகள் நிறுத்தப்பட்டது,

2004 டிசம்பர் 26ம்திகதி ஏற்பட்ட சுணாமி கடற்கோள்அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பில் பல வெளி நாடுகள் உதவிக்காக முன்வந்தன,

அந்த நாடுகளில் ஜரோப்பிய ஒன்றியம் ஓட்டமாவடிப்பாலத்தையும் ஜப்பான்நாடு கல்லாறு, ஓந்தாச்சிமடம், கல்லடி ஆகிய மூன்று பாலங்களுடன் இன்னும் ஒருபாலம் கட்டமுடியும் எனகூறியது,
அதில் மண்டூர்பாலம் அல்லது மண்முனைப்பாலம் என இழுபறி ஏற்பட்டது, இழுபறியை தீர்கும் முகமாக மட்டக்களப்பு கச்சேரியில் 2008 நவம்பர் மாதம் மட்டக்களப்பு அரசஅதிபர் திருமதி ருபி கேதீஷ்வரன் தலைமையில் ஜப்பான் தூதுவர் ஜப்பான் அதிகாரிகள் மற்றும் மண்டுர் குறுமண்வெளி பட்டிப்பளை பகுதி பொதுமக்கள் நூறுபேர் கலந்துகொண்டு பலவாதப்பிரதி வாதங்கள் ஏற்பட்டு அங்கு சமூகம் கொடுத்த பலபொதுமக்களும் மண்முனைப்பாலத்தை முதன்மைப்படுத்தியதால் எந்தவித அரசியல் அழுத்தமும் இன்றி மண்முனைப்பாலம் கட்டுவதாக ஜப்பான் அதிகாரிகள் ஒப்புதல் கொடுத்தனர்,

இந்த காலப்பகுதியில் மட்டக்களப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக கனகசபை, தங்கேஷ்வரி, ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் ஆகிய நால்வர் இருந்தனர் ஆனால் அவர்கள் அனைவரும் மட்டக்களப்பிற்கு செல்லமுடியாதவாறு அரசபடைகளும் அவர்களுடன் இயங்கிய கருணா பிள்ளையான் ஒட்டுக்களுக்களும் கொழும்பில் இவர்களை முடக்கிவைத்தன,

2010 ஏப்ரல் 22ம் திகதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டடக்களப்புக்கு சுதந்திரமாக நடமாடமுடியவில்லை, அதன்பின்புதான் 2011 செப்டம்பர் ஜப்பான் தூதுவரும் இலங்கை அரசும் மண்முனைப்பாலத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர், இந்நிலையில் 2012ல் கிழக்குமாகாண சபை தேர்தல் அறிவிப்பும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் தொடங்கின, பிரதி அமைச்சர் கருணா தமது சகோதரியின் பிரசாரத்திற்காக 2012 செப்டம்பர் 03 மகிழடித்தீவுப் பக்கம் பட்டிப்பளைபிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தைக்கொண்டு மகிளடித்தீவு, முதலைக்குடா கிராம முன்னேற்றசங்க உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி அடிக்கல் நடப்பட்டது

இதன்பின் பிள்ளையான் தமதுபிரசாரத்திற்காக 2012 அக்டோபர் 06ம் திகதி அமைச்சர் பசீல் ராசபக்ஷ அழைத்து எழுவான்கரைப்பக்கம் கல்நட்டார் இதில் ஜப்பான் தூதுவர் கலந்து கொண்டார், மொத்தமாக மூன்று அரசியல் பிமுகர்கள் வௌ;வேறு தினங்களில் அடிக்கல் நட்டது உலக சரித்திரத்தில் மண்முனைப்பாத்திற்கு மட்டுமே என்பது கின்னஷ் புத்தகத்தில் பதிக்கவேண்டிய ஒன்றுதான்

உண்மையில் மண்முனைப்பாலம் எந்த அரசியல்வாதிகளின் செல்வாக்கு மூலமாக வரவில்லை சுணாமியின் காரணமாகவே மண்முனைப்பாலம் வந்தது. மண்முனைப்பாலம் கிடைத்தமைக்கு நன்றி சொல்வதானால் முதல் நன்றி சுணாமிக்கும் இரண்டாவது நன்றி ஜப்பான் நாட்டிற்கும் சொலவதுதான்சரி,

உண்மை வரலாறு தெரியாத சில ஊடகவியலாளரும் பிரதேச அலுவலர்களும் மனச்சாட்சிப்படி நடந்துகொள்ளவும் உண்மைகளை மறைக்ககூடாது .  இந்த உண்மை வரலாற்றை அறியாத அல்லது அறிந்திருந்தும் சிலசலுகைகைப்பெறுவதற்காக சில பிரதேச அதிகாரிகளும், சில ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக தவறான கருத்தை மக்களிடம் விதைக்கின்றனர்,

பொறுப்புள்ள ஊடகங்கள் உண்மையை மக்களிடம் கொண்டுசெல்லவேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறோம்

மண்முனைப்பாலம் திறந்தபின் ஏற்படப்போகும் நன்மைகளை விட தீமைகளை எதிர்கொள்ள படுவனான்கரை சமூகம் தயாரகும்படியும் வேண்டுகிறோம்
-அரியம் பாக்கியசெல்வம்-

 

http://www.thinakkathir.com/?p=57932

 

மண்முனை வாவியூடாக பயணித்தவர்களில் 30 பேர் உயிரிழப்பு

 

1972ஆம் ஆண்டு முதல் மண்முனை வாவியூடாக  படகுகளில்  பயணித்தவர்களில் 30 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மண்முனைப்பாலம் சனிக்கிழமை (19) திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'மண்முனைப்பாலம் கிழக்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாலமாகும். இந்த மண்முனை வாவியில் படகுகளில் பயணிக்கும் காலம் தற்போது நிறைவடைந்துள்ளது.

1972ஆம் ஆண்டு முதல் இந்த வாவியில் படகுகளில் பயணித்தவர்களில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒரு உதவி அரசாங்க அதிபரும் உயிரிழந்துள்ளார். இவ்வாறான துயரச் சம்பவங்களும் இந்த வாவியில் இடம்பெற்றுள்ளன.

இனிமேல் படுவான்கரையொன்றில்லை. படுவான்கரையையும் எழுவான்கரையையும் மண்முனைப்பாலம் இணைத்துள்ளதால் படுவான்கரையொன்று இனிமேல் இல்லை. 

இந்த மண்முனைப்பாலம் அமைக்கப்படாதென்றும் இந்தப் பாலத்தை எவராலும்  நிர்மாணிக்க முடியாதென்றும்  தீய சக்திகள் பிரசாரம் செய்து வேடிக்கையும் பார்த்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பொய்களை கட்டவிழ்த்துவிட்டிருந்தனர். இந்தப் பாலத்தை நிர்மாணிக்க முடியாதெனவும் விமர்சித்தனர்.

ஆனால், தற்போது இந்தப் பாலத்தின் கனவு நிறைவேறியுள்ளது. பல வருடங்களாக இந்தப் பிரதேச மக்கள் பயணிப்பதற்கு பட்ட துன்பம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த மக்களின் வாழ்வாதாரம், விவசாயம் என்பன மேம்படுவதற்கு இந்தப் பாலம் மிகவும் முக்கியமாதொரு பாலமாகும். 

இந்த மண்முனைப்பாலத்தை  நிர்மாணித்து தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை  என்றைக்கும்  எம்மால் மறக்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/107428--30-.html

 

மட்டு-புதிய மண்முனைப் பாலம்  திறந்து வைப்பு

 

DSC_0935.JPG
-தேவ அச்சுதன்
ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் மண்முனைப் பாலம் இன்றைய தினம், சனிக்கிழமை ஏப்ரல் 19ஆம் திகதி மாலை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில், ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் நொபுகிரோ றோபோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத், பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீளகுடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மண்முனைப்பாலத்திற்கு செல்லையா இராசதுரை பிரதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டதுடன் கருங்கற்களும் அங்கு கொண்டுவரப்பட்டிருந்தன. ஆனால், 1983ஆம் ஆண்டுக்கு பின் பாதுகாப்பு அமைச்சு இந்த பால கட்டுமான பணிக்கு அனுமதி வழங்காததையடுத்து இது நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் படுவான்கரையில் உள்ள பல கிராமங்கள் நன்மை அடைய உள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாதையான மண்முனை ஆற்றுக்கு மேலாக இப்பாலம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் ஜெய்க்கா நிறுவனத்திற்குமிடையில் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2012 செப்டெம்பர் 04ஆம் திகதி பட்டிப்பளை பிரதேச பதில் பிரதே செயலாளர் ந.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்றிருந்தது.

பாலத்தின் நிர்மாண பணிகள் 33 மாதங்களில் நிறைவடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்று மண்முனைப்பாலம் 210 மீற்றர் ஆகவும், இரு பக்கங்களிலும் 500 மீற்றர் அளவான மதகாகவும் (கோஸ்வே) மொத்தமாக 1210 மீற்றரில் அமைக்கப்பட்டுள்ளது.

மண்முனைத்துறை பாலத்துக்கான வேலைத்திட்ட அங்குரார்ப்பணம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் ஜப்பானியத் தூதுவர் நொபுகிரோ றோபோ கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீளகுடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றிருந்தது.

ஜப்பான் நாட்டின் நன்கொடையில் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் வகையில் மண்முனை ஆற்றுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் ஜப்பானின் 1473 மில்லியன் ரூபாய் செலவிலும் இலங்கை அரசின் 393 மில்லியன் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இயற்கை வளங்களையும் பலநூறாயிரம் ஏக்கர் நெற்காணிகளையும், தன்னகத்தே கொண்ட இப் படுவான்கரைப் பிரதேசம் பார்ப்பவர்களின் கண்களையும் மனங்களையும் கொள்ளை கொள்ளும் வனப்பு மிகு பகுதியாகப் பாணப்படுகிறது. இம் மக்களின் சமூகப் பொருளாதார கல்வி வளர்ச்சிக்கு இவ் மண்முனை போக்குவரத்துப் பாதை மிகவும் சிக்கலானதாகவே இருந்து வந்தது. இது ஒரு சவாலானதாக இருந்தமையினால் பின்தங்கிய பிரதேசம் என்று மிக நீண்ட காலகமாக முத்திரை குத்தப்பட்டிருந்தது. இது மண்முனைப் பாலத்திறப்பு காரணமாக நீங்குவதுடன் பிரதேசம் தலைநிமிர்வதற்கும் காரணமாக அமைகின்றது.
DSC_0918.JPG
DSC_0922(1).JPG
DSC_0926(1).JPG
DSC_0931.JPG
DSC_0941(2).JPG
DSC_0945.JPG
DSC_0961.JPG
DSC_0962.JPG
unnamed(59).jpg
unnamed1(7).jpg

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-11-11-34-08/107392-2014-04-19-13-31-23.html

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.