Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுப்பு மூலை: புத்தாண்டுச் சந்தை நிலவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்பு மூலை: புத்தாண்டுச் சந்தை நிலவரம்

நந்தி முனி

வன்னியப்பு வருசப் பிறப்புக்கு புது உடுப்பு போடவில்லை. சித்திரை வெய்யில் உச்சியைப் பிளந்தது. கள்ளுக் குடித்தால் குளிர்ச்சியாய் இருக்குமெண்டு தவறணைக்குப் போனார். அங்க பெரிய கடை முதலாளியும் தாக சாந்தி செய்துகொண்டிருந்தார்....

முதலாளி: வாங்கே அப்பு! கன காலத்துக்குப் பிறகு.... எங்க புது உடுப்பக் காணேல்ல?

வன்னியப்பு: நந்திக்கடலால வந்தவனுக்கு வருசமும் இல்ல. பொங்கலும் இல்ல.

முதலாளி: சரிதான். வன்னியால வந்தவைக்கும் வருசமில்ல. எங்களுக்கும் வருசமில்ல. தெற்கால வந்தனுக்குத்தான் இப்ப வருசம்.

வன்னியப்பு: என்ன சொல்ல வாறியள் எனக்கு விளங்கேல்ல?

முதலாளி: இந்த முறை எங்களுக்கு யாவாரம் படுத்திட்டுது. தெற்கால வந்தனுக்குத்தான் கல்லாப்பொட்டி நிரம்பியிருக்கு.

வன்னியப்பு: அப்பிடியே கதை! அப்ப எங்கட தமிழ் கடயளில யாவாரம் நடக்கேலயே?

முதலாளி : ஓமப்பு. அவங்கட கடயள விட எங்கட கடயளில யாவாரம் குறைவுதான்.

வன்னியப்பு: அதாலதான் வீரசிங்கம் மண்டபத்தில அவங்கள் போட்ட கடய எடுக்கச்சொல்லி எங்கட யாவாரிமார் ஆர்ப்பாட்டம் செய்தவையே?

முதலாளி : ஓமப்பு. அது ஒரு பெரிய கடைத் தொகுதி. எங்கட கடயள்ள ஐஞ்சாறு பெரிய கடயளச் சேர்ந்தால் எப்பிடி இருக்குமோ அப்பிடியொரு பெரிய கடைத் தொகுதி. யாழ்ப்பாணத்தில உள்ள எல்லாப் புடவைக் கடயளயும் விட ஆகப் பெரிய கடை அது.

வன்னியப்பு: விலையும் மலிவு எண்டு சனம் சொல்லுது.

முதலாளி: ஓமோம். கொழும்பில ஹவுஸ் ஒவ் ஃபசன் எண்டதொரு கடை இருக்குத் தெரியுமே?

வன்னியப்பு: ஓமோம். கேள்விப்பட்டனான்.

முதலாளி: அந்தக் கடயில துணிமணியள் மலிவாத்தான் விக்கப்படும். ஏனெண்டா அவங்கள் துணி ஆலைகளில போய் நேரடியா மலிவாக் கொள்வனவு செய்யிறாங்கள்.

வன்னியப்பு: அப்பிடி இஞ்சயும் வித்தா நீங்கள் போட்டி போடேலாதுதானே?

முதலாளி: சரியாச் சொன்னீங்கள். வருசப்பிறப்புக்கு முதற்கிழமை மின்சார நிலைய வீதியில வாகனத்தில கொண்டு வந்து சாறங்கள் வித்தவங்கள். நாங்கள் 600 ரூபாய்க்கு மேலே விக்கிற சாறத்தை அவங்கள் 400 ரூபாய்க்கு வித்தாங்கள். அப்ப சனங்கள் ஆரிட்டப்போகும்?

வன்னியப்பு: நடமாடும் வணிபம் மட்டுமில்ல. தெற்கால வந்தவை மின்சார நிலைய வீதியில நிரந்தரக் கடயெல்லாம் போட்டிருக்கினமாமே?

முதலாளி: அந்த வீதியில மட்டுமில்ல. யாழ்ப்பாண நகரத்தில கன கடயள் அவயின்ர தான். பெரிய பெரிய முதலாளிமார் எல்லாம் சண்டையோட கடயள விட்டுட்டுப்போக, அந்த இடத்த அவங்கள் நிரப்புறாங்கள். நீங்கள் சொன்ன மின்சார நிலைய வீதியில மட்டும் மூண்டு பெரிய கட இருக்கு. ஒண்டுக்குப் பேர் ரொப்பாஸ். மற்றதுக்குப் பேர் யப்னா ரெக்ஸ். மூண்டாவது இஷாரா. இந்த முறை புதுவருச யாவாரம் அவங்களுக்குத்தான். ரொப்பாஸூக்குக் கிட்டவா கே.கே.எஸ் றோட்டில ஸ்ரைல் பார்க் எண்டொரு கடயும் இருக்கு. அதுவும் தெற்கால வந்தவையோட தொடுசலான கடதான். அங்கயும் இந்த முறை நல்ல யாவாரம்.

வன்னியப்பு: வீரசிங்கம் மண்டபத்தில தற்காலிகமா போட்ட கடைக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தனீங்கள். ஆனா நிரந்தரக் கடயள எப்பிடி அகற்றுவீங்கள்?

முதலாளி: அதுதானே பிரச்சின. அவங்கட ஒவ்வொரு கடயும் குறிப்பா ஒவ்வொரு தொகுதி வாடிக்கையாளர்கள குறிவைக்குது. எங்கட கடயளில அப்பிடியொரு அமைப்பு இல்ல.

வன்னியப்பு: அதென்ன? குறிப்பான வாடிக்கையாளர்?

முதலாளி? அதென்னண்டா அப்பு, ரொப்பாஸில பெரிய பணக்காரர் தான் உடுப்பு வாங்கலாம். அங்க மினுமினுப்பான தெரிவுகள் இருக்கு. எங்கட தமிழ் கடயள விட அவங்களிட்ட தெரிவுகள் கூட. விலையும் கூட. அப்பிடித்தான் ஸ்ரைல் பார்க்கும். அதால பணக்காரர் விலை கூடினாலும் பறுவாயில்ல எண்டு தெரிவுகள் கூடின உந்த ரெண்டு கடயளுக்கும் போயினம். புலம்பெயர்ந்த காசு கூடப் புழங்கிற சனமெல்லாம் அங்கதான் போகுது.

வன்னிப்பு: அப்ப அது மேல்தட்டுச் சனங்கள குறிவைக்குது?

முதலாளி: ஓமப்பு. அடுத்தது நடுத்தர வர்க்கச் சனம். அதுகளுக்கு யப்னா ரெக்ஸ் இருக்குது. அங்கயும் தெரிவுகள் அமோகம். ஆனா விலை ரொப்பாஸ் அளவுக்கு உச்சமில்ல.

வன்னியப்பு: அப்ப அது நடுத்தர வர்க்கத்துக்குரிய கடை?

முதலாளி: ஓமோம். மற்றது இஷாரா. அது கொள்வனவு சக்தி குறைஞ்ச சனத்துக்குரிய கட. அங்க எல்லாமே அனேகமா மலிவு விற்பன தான்.

வன்னியப்பு: அப்ப உந்த நாலு கடயளுக்கும் தான் யாவாரம் எண்டு சொல்லுறீங்கள்.

முதலாளி: ஓமோம். எங்கள விட அவங்களுக்குத்தான் யாவாரம் கூட.

வன்னியப்பு: அப்ப இந்த முறை வருச யாவாரம் சூடுபிடிக்கேல்ல எண்டு வந்த செய்தி எல்லாம் முழுக்க உண்மையில்லையே?

முதலாளி: ஓமப்பு. எங்கட கடயளில யாவாரம் குறைவு எண்டதுதான் சரி. வெளியில இருந்து வந்தவனுக்குத்தான் இந்த முறை யாவாரம்.

வன்னியப்பு: அப்ப யாவாரமே நடக்கேல்லயெண்டு சொல்லேலாது.. சனங்களின்ர வாங்கிற சக்தி குறைஞ்சிட்டு எண்டதெல்லாம் உண்மையில்லையே?

முதலாளி: அதுவும் உண்மைதான். சண்டை முடிஞ்ச கையோட எதிர்பாராமல் கிடைச்ச அமைதியால சனங்களின்ர வாங்கிற சக்தி திடீரெண்டு வீங்கினது. அதுக்கு வெளிநாட்டுக் காசும் ஒரு காரணம். இப்ப அந்த வீக்கம் எல்லாம் வடிஞ்சிட்டு. உதாரணத்துக்கு முந்தி எல்லாம் வருசப் பிறப்பெண்டால் ஒரு ரெயிலர் சராசரியா நூறு லோங்ஸாவாது தைப்பான். இப்ப அப்பிடி இல்லை. ஐம்பது லோங்ஸ்கூட தைக்க வாறதில்லையாம்... ஆனா.. இது மட்டும் காரணமில்ல அப்பு. வேற காரணங்களும் இருக்கு. சனங்கள் ஒரேயடியா துணிமணியள வாங்காமல் விட்டால் அந்த விளக்கம் சரி. ஆனா சனங்கள் தெற்கால வந்தவங்களின்ர கடயள நோக்கிப் போகுதே?

வன்னியப்பு: சனங்கள் சொல்லுது அவங்கட கடயளில வரவேற்பும் உபசரிப்பும் கூடவா இருக்கெண்டு?.

முதலாளி: அதுவும் உண்ம தான். எங்கட ஆட்கள் சலிச்சுப்போச்சினம். ரொப்பாஸ், யப்னா ரெக்ஸ், இஷாரா எண்டு நான் சொன்ன மூண்டு கடயளிலயும் வாசலில நிண்டு கூப்பிட, வரவேற்க ஆள் இருக்கு. அவங்கட கடயளில தெரிவும் கூட. அதோட சனங்களின்ர கொள்வனவு சக்திக்கு தகுந்த மாதிரி அவங்கள் கட விரிச்சு வைச்சிருங்கிறாங்கள்.

வன்னியப்பு: எங்கட ஆக்களும் அப்பிடி செய்யலாம் தானே? என்ர பேரன் அண்டைக்குச் சொன்னான் கே.கே.எஸ் றோட்டில இருக்கிற ரெண்டு முஸ்லிம் சாப்பாட்டுக் கடயளிலதான் எங்கட பொடியளின்ர காசு முழுக்கச் சேருது எண்டு.

முதலாளி: உண்மதான் அப்பு. அதில ஒரு கடை அப்பத்துக்குப் பேர் போனது. எங்கட சாப்பாட்டுக் கடயளில அவ்வளவு ருசியா அப்பம் கிடையாது. மற்றக் கடயில அசைவச் சாப்பாடு அருமையா இருக்கும். அது தான் எங்கட பொடி முழுக்க அங்க அலைமோதுது.

வன்னியப்பு: எது ருசியோ, எது மினுங்குதோ, எங்க தெரிவு கூடவோ, எங்க உபசரிப்புக் கூடவோ அங்கதானே சனம் போகும்.

முதலாளி: உண்மைதான். எங்கட ஆட்களும் தங்கட யாவார உத்தியள மாத்தத் தயாரில்ல. உலகம் மாறுது. சனங்களின்ர ருசியும் மாறுது. சனங்களின்ர வாங்கும் சக்தியும் மாறுது. அரசியலும் மாறிட்டு. நாங்கள் எங்கட யாவார தந்திரங்கள மாத்தத்தானே வேணும்?

வன்னியப்பு: சரியாச் சொன்னீங்கள். கே.கே.எஸ். றோட்டில தட்டாதெரு சந்திக்குக் கிட்ட ஒரு அசைவக் கடையிருக்கு. அதுக்கெண்டு வாடிக்கையாளர் இருக்குத்தானே.

முதலாளி: முந்தி அப்பிடித்தான் இருந்தது. இப்ப நிலம மாறுது. அசைவச் சாப்பாட்டுக்கு ரவுணில கே.கே.எஸ். றோட்டில இருக்கிற முஸ்லிம் கடயள அல்லது மெயின் றோட்டில சிறைச்சாலைக்கு கிட்ட இருக்கிற முஸ்லிம் கடயத்தான் சனமும் தேடிப் போகுது.

வன்னியப்பு: தரமானதத் தேடித்தானே சனமும் போகும். தரத்தப் பேணாமல் எல்லாத்தயும் இனப்பிரச்சினயில கொண்டுபோய் முடிச்சுப்போடப் பார்க்கிறம். முஸ்லிம்கள் இல்லாத சந்தையில கனகாலமா ஏகபோகமா இருந்த எங்கட யாவாரிமார் இப்ப அவங்களோட சந்தைப்போட்டி வந்தோடன அரசியல் கதைக்கினம் போல...?

முதலாளி: சாப்பாட்டுக் கடயளுக்கு நீங்கள் சொல்லுறது பொருந்தும். ஆனா துணிக் கடயளுக்குப் பொருந்தாது. ஏனெண்டா, எங்கள விட அவங்களுக்கு கொள்வனவு சக்தியும்கூட. பின்பலமும்கூட. தொடர்புகளும் கூட.

வன்னியப்பு: அப்பிடிச் சொல்லேலாது. ஒரு காலம் தென்னிலங்கையில எங்கட கடயளும் கொடி கட்டிப் பறந்ததுதானே.

முதலாளி: அதால தானே அவங்கள் காலத்துக்குக் காலம் கலவரங்களத் தூண்டி எங்கட யாவாரத்த படுக்க வைச்சுட்டாங்கள். முந்தி எல்லாம் தங்கட நகரங்களில எங்கட முதலாளிமார் கொடி கட்டிப் பறந்தத கண்டு பொறுக்காமல் கலவரங்களச் செய்து எங்கள அங்கேயிருந்து துரத்தினவங்கள். இப்ப எங்கட நகரத்துக்கயே வந்து நிண்டு எங்கட யாவாரத்த அமத்துறாங்கள்.

வன்னியப்பு: அதுதான் மாகாண சபை ஏதோ வணிக அதிகார சபை எண்டு ஒன்ற உருவாக்கப்போகுதாமே?

முதலாளி: அவங்களும் அவங்கட வணிக அதிகார சபையும். விசரக் கிளப்பாதையுங்கோ. மாகாண சபையின்ர பிரதம செயலாளர மாத்தக்கூட வக்கில்லாத எங்கட ஆட்கள் எப்பிடி சந்தயக் கட்டுப்படுத்துவினம்?

முதலாளிக்கு வெறி ஏறத் தொடங்கிவிட்டது. காறித் துப்பிவிட்டு கோபத்தோடு எழுந்தார். வன்னியப்பு கோப்பையிலிருந்த கள்ளை மெதுவாகக் குடிக்கத் தொடங்கினார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=4502cfdd-99b5-4cc0-b8a6-b8dceaf10fb5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.