Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பினால், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை! - பிரதியமைச்சர் முரளிதரன் கூறுகிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
கூட்டமைப்பினால், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை! - பிரதியமைச்சர் முரளிதரன் கூறுகிறார். photo.png 
[Monday, 2014-04-28 07:22:32]
karuna-meeting-280414-150.JPG

தமிழ் தேசிய கூட்டமைப்பினால், தமிழ் மக்களை உசுப்பேற்றிவிட்டு உணர்ச்சியாகப் பேச மட்டுமே முடியும், அவர்களினால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் முரளிதரன் -

  

நாங்கள் கடந்த 30வருடகால யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டவர்கள். எங்களை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. நாங்கள் எதிர்ப்பு அரசியலை செய்து கொண்டு எம்மை கட்டியெழுப்ப முடியாது. இழப்புகளை எதிர்கொண்ட மக்கள் என்ற அடிப்படையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டிய கடப்பாடு உள்ளது. அதற்காக நாங்கள் பேரம்பேசும் சக்தியாக மாறும் போது தான் எமது பலத்தினை அதிகரிக்க முடியும். நாங்கள் தொடர்ந்து வீணான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டு தேவையற்றவர்கள் பின்னால் சென்றால் எமது எதிர்கால சந்ததியினரின் இருப்பு கேள்விக்குறியானதாகவே மாற்றமடையும்.

இன்று நாங்கள் எங்களது இருப்பினை தக்கவைத்துக் கொள்வதனால் இரண்டு வழிகளே உள்ளன. கல்வியை வளப்படுத்த வேண்டும். பொருளாதாரத்தினை அதிகரிக்க வேண்டும். இவை இரண்டிலும் நாங்கள் வளமிக்கவர்களாக மாறும்போது எம்மை யாராலும் அசைக்க முடியாத நிலையே ஏற்படும்.இன்று எமது சகோதர இனமான முஸ்லிம் மக்களை எமது மக்கள் உதாரணமாக கொள்ள வேண்டும்.காலத்துக்கு காலம் வரும் அரசாங்கத்தினை ஆதரித்து அவர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்கின்றார்கள். இன்று மட்டக்களப்பில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகின்றனர். ஆனால் நாங்கள் இன்னும் பின்னோக்கியே சென்றுகொண்டிருக்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ் மக்களை உசுப்பேற்றி உணர்வாக கதைப்பார்கள். அது மட்டுமே செய்யமுடியும். அவர்களினால் தமிழ் மக்களுக்கு எதுவித நன்மையும் இல்லை.எதிர்காலத்தில் நாங்கள் சிந்திக்கும் மக்களாக மாறவேண்டும். எமது குழந்தைகள் நன்றாக படிக்கவேண்டும். எமது பகுதி அனைத்து துறைகளிலும் வளமடைய வேண்டும். எமது வளத்தினைக் கொண்டு நாங்கள் அபிவிருத்தியடைய வேண்டும். இதற்கு எமக்கு பலம் தேவை அவற்றினை பெறுவது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.

 

karuna-meeting-280414-600.JPG

 

 

karuna-meeting1-280414-600.JPG

 

http://seithy.com/breifNews.php?newsID=108234&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அரசு வடமாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்காது அடிமைப்படுத்தி வைத்துள்ளது.
.

vas.jpgசிங்கள அடிப்படைவாதிகளின் சிறைக்கைதியாகியுள்ள அரசாங்கம் வட மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்காது அடிமைப்படுத்தி வைத்துள்ளது என ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வட மாகாண சபை தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதே தவிர அச்சபை இயங்குவதற்கான எந்த அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை.

வட மாகாண சபை செயலாளர் நியமிப்பில் முதலமைச்சருடன் எந்தவித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை. தீர்மானம் எடுக்கப்படவில்லை. அதேபோல வட மாகாணத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமனத்திலும் அரசாங்கம் தன்னிச்சையாகவே செயற்படகிறது. 1

3 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் மேற்கண்ட பதவிகள் தொடர்பில் மாகாண சபை முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாடு கண்ட பின்னரே அப்பதவிகள் நியமிக்கப்பட வேண்டுமென தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் இந்த வழிமுறைகள் எதனையும் பின்பற்றாமலேயே செயற்பட்டுள்ளது.

தெற்கின் சிங்கள அடிப்படைவாதச் சக்திகளின் சிறைக்கைதியாக அரசாங்கம் மாறியுள்ளது. இச் சக்திகளின் ஆலோசனைகளுக்கமைய வட மாகாண சபையை அடிமைப்படுத்தி அதற்கு கட்டளையிடும் அதிகாரியின் தோரணையிலேயே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. வட மாகாணசபையை கலைக்க வேண்டுமென்ற சிங்கள அடிப்படைவாதிகளின் அபிலாஷையை பூர்த்திசெய்யும் விதத்திலேயே அதை;தும் இடம் பெறுகின்றன.

வட மாகாண சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பல முறை வலியுறுத்தியுள்ள போதும் எதுவுமொ சாத்தியப்படுவதாக இல்லை. மயற்சிகள் வெற்றியளிக்கவும் இல்லை.

இந்நிலை தொடர்வது எமது நாட்டுக்கு நல்லதல்ல.

ஏனென்றால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் அமைப்புக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசாங்கங்களிடமும் ஐ.நா. உட்பட சர்வதேச அமைப்புக்களிடமும் இலங்கை அரசாங்கம் வட மாகாண சபை தேர்தலை மட்டுமே நடத்தி உலகை ஏமாற்றியதே தவிர மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்கவில்லை பட்டியலிட்டு குற்றச்சாட்டுக்களை சமர்ப்பிக்கும்.

அவ்வாறானதொரு சூழ்நிலையில் எமக்கெதிராக என்னென்ன குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியுமென வழிதேடிக் கொண்டிருக்கும் வெளிநாடுகளுக்கு சாதகமாக அமைந்து விடும் இது நமக்கு நாமே குழி தோண்டிக்கொள்ளும் நிலைமைக்கு ஒப்பானதாகும்.

வட மாகாண ஆளுநராக இராணுவத்தை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார். இவரை வெளியேற்றி சிவிலியன் ஒருவரை நியமிக்க வேண்டும். அதனை தொடர்ந்து வலியுறுத்துகின்றோம். ஆனால் இன்னமும் சாத்தியப்படவில்லை.

பாதுகாப்புக்கெனக் கூறிக் கொண்டு வட மாகாணத்தில் இராணுவத்தினர் வகை தொகையின்றி காணிகளை கையகப்படுத்துவது கைவிடப்பட வேண்டும்.

அவ்வாறு மக்களின் காணிகளை கையகப்படுத்துவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. தேசிய பாதுகாப்புக்கென காணிகள் அடையாளம் காணப்படும் போது அது தொடர்பாக வட மாகாண சபையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாடு காண வேண்டும்.

அது மட்டுமல்லாது பெருமளவு ஏக்கர் கணக்கில் காணிகளை கையகப்படுத்துவதை கைவிட்டு அதற்கான ஒரு வரையறையை வகுத்துக் கொள்ள வேண்டும். எல்லைகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் வட மாகாண சபையோடு இணக்கப்பாடோடு செயற்பட்டு அதிகாரங்களை வழங்கி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளும் திட்டங்களை முன்னகர்த்த வேண்டும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வர வேண்டும். அதன் மூலமே தீர்வுகளை எட்ட முடியும்.

தற்போது தென்னாபிரிக்கா மத்தியஸ்தம் வகிக்க முன் வந்துள்ளதால் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டுமென்ற தீர்மானத்தை வட மாகாண சபை மேற்கொள்ளும் நிலைமையும் காணப்படுகின்றது என்றார் அமைச்சர் வாசுதேவா.

 நன்றி - வீரகேசரி    

அப்ப கூட்டமைப்பையும் 2009 போன்று அழித்துவிட்டால் போச்சு..பிறகு மிகுதி தமிழ்மக்கள் இருந்தும் பிரஜோசனம் இல்லை அவர்களையும் அழித்து பாலங்கள் மதவுகள் கட்டி சிங்கள சனத்தை வேகபாதைகளினால் கொண்டுவந்து குடியேற்றி இனவாதகொலையாளிகளின் பாராட்டுகள் பெற்று உள்ளம் குளிர்ந்து உங்கள் வாழ்க்கையை ஒருமாதிரி ஓட்டி அடிமையாக வாழ்ந்து சாவுங்க மக்காள். இதுவெல்லவோ சுதந்திரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.